bjp – அலுவலகம் ராசி இல்லையா அல்லது………….

தொடர் தோல்வி: பழைய அலுவலகத்துக்கு மாறும் பாஜக!

புதிய தலைமை அலுவலகம் அதிர்ஷ்டம் இல்லாததால் பழைய அலுவலகத்தில் இருந்தே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதற்கு பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் பழைய தேசிய தலைமை டெல்லியின் இதயப் பகுதியான 11,அசோகா சாலையில் நெருக்கடியான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

பல்வேறு தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாஜக தேசிய அலுவலகத்துக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

எனவே, தலைமை அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை
பாஜகவில் எழுந்தது.

இதையடுத்து, அசோகா சாலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தீன் தயாள் உபாத்யாயா சாலையில் பாஜகவின் புதிய தலைமை அலுவலகத்துக்குக் கடந்த 2016ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

பதினெட்டே மாதங்களில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான புதிய அலுவலகம்… (ஆளும் கட்சி ஆயிற்றே….!!! )

70 அறைகள் கொண்ட இந்த பிரம்மாண்ட அலுவலகத்தைக் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி மோடி திறந்து வைத்தார்.இந்த அலுவலகத்திற்கு மாறிய பின்னர் –

-புல்பூர், கோரக்பூர் மற்றும் கைரானா தொகுதி
இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றது.

– கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும்
பெரும்பான்மையைப் பெற தவறியது.

-கஷ்மீரில் கூட்டணி ஆட்சிக்கு வழங்கி வந்த
ஆதரவை திரும்பபெற வேண்டிய நிலை ஏற்பட்டதுடன்
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணியையும்
இழந்தது.

-சிவ சேனா பாஜக கூட்டணியிலும் விரிசல் ஏற்பட்டது.

எனவே, இந்த அலுவலகம் அதிர்ஷ்டம் இல்லாதது என்ற எண்ணம் அக்கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது. எனவே 2019 நாடாளுமன்ற
தேர்தலுக்கான பணிகளை பாஜக பழைய அலுவலகத்தில் இருந்து செய்ய இருக்கிறது.

இது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “புதிய அலுவலகத்திற்கு மாறினாலும் தங்களின் பழைய அலுவலகத்தை காலி செய்யாமலேயே பாஜக உள்ளது.
(நல்ல வேளையாக ….. ? )

தற்போது தேர்தல் பணிகளை இங்கிருந்து மேற்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 300 பேர் பழைய தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணியாற்றவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————-

பாஜகவுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு அலுவலகமா காரணம்….?
– என்று கேட்டு நீங்கள் வேறு எதையெதையாவது தொடர்பு
படுத்திப்பார்த்தால் – அது உங்கள் விருப்பம்…
அதற்கு நான் பொறுப்பல்ல… 🙂 🙂 🙂

இந்த இடுகையைப் பொறுத்த வரையில் நான் இங்கே தந்திருப்பது
ஒரு செய்தி மட்டுமே…..
லிங்க் ….http://minnambalam.com/k/2018/07/27/53

.
———————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to bjp – அலுவலகம் ராசி இல்லையா அல்லது………….

  1. பிங்குபாக்: bjp – அலுவலகம் ராசி இல்லையா அல்லது…………. – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.