சோழன் திரும்ப வந்ததும், காவிரி பெருக்கெடுத்த மர்மமும்…



..

..

ஒரு செய்தி படித்தேன்…
எங்கிருந்து உருவானது என்று தெரியவில்லை…
மூட நம்பிக்கை என்று புறந்தள்ளி விடலாம்…
ஆனாலும், சில உண்மைகளை தன்னகத்தே கொண்டு,
சிந்தையைக் கிளற வைக்கிறது அந்த செய்தி….

நீங்களும் தான் படித்துப் பாருங்களேன்….

————————————–

இராஜராஜ சோழன் சிலை வந்ததும், நிரம்பிய
அணைகளும் பொங்கிப் பெருகி வந்த காவேரி நீரும்… !

இராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் மறுபடி
தஞ்சைக்கு கொண்டுவரபட்டு கோவிலில் வைக்கபட்ட செய்தி
எல்லோரும் அறிந்ததே!

ஆச்சரியமாக அது அந்த கோவிலுக்குள் கொண்டுவரபட்ட
மறுநொடியில் காவேரி கண்காணிப்பு குழுவிற்கான உத்தரவு
மத்திய அரசின் அரசிதழில் வெளிவருகின்றது!

அச்சிலைகள் கோவிலுக்குள் அமர்ந்தபின் காவேரி பற்றிய நல்ல
தகவல்கள் தொடர்ந்து வருகின்றன, குழு அமைப்பது வேகமாகின்றது,
நீர் பகிர பேச்சுவார்த்தை தொடங்க இருக்கின்றது

ஆச்சரியமாக கன்னடர் பக்கமும் அமைதி, அவர்கள் அரசியல்
குழப்பத்தில் அமைதி காத்தே தீரவேண்டும்!

சிலை மீட்பும், காவேரி வருகையும் தனி தனி செய்திகளாக இருந்தாலும்
இரண்டிற்கும் இடையில் ரகசிய இழை இருப்பது சில கண்களுக்கு
தெரிகின்றது, இரண்டுமே தஞ்சை நோக்கி ஒரே நேரம் வருவது
தற்செயலாக இருக்க முடியாது

உண்மையில் ( 50 ஆண்டுகளுக்கு முன்னர்…) இராஜ ராஜ சோழனின்
சிலை களவாடபட்ட பின்பே காவேரியில் மாபெரும் சிக்கல் வெடித்தது,
அது கண்டுபிடிக்கபட்டபின் மீட்பு போராட்டம் வலுத்தது

இப்பொழுது சிலையோடு காவேரியும் திரும்பி இருக்கின்றது!

தஞ்சை பெரிய திருக்கோயில் ஆலயம் மகா மர்மமானது,
ஆளும் திமிரிலோ இல்லை அதிகார தோரணையிலோ
யார் வந்தாலும் அவர்கள் பதவி இழப்பர்
இல்லை உயிரையும் இழப்பர்!

எகிப்து பிரமீடுகளின் தீரா மர்மம் போலவே தஞ்சை கோவிலின்
சூட்சூமமும் மகா மர்மமானது, அதை முழுக்க விளங்கியவன்
யாருமில்லை. விளங்கிகொண்டவன் வெளி சொல்வதுமில்லை!

இதனால்தான் நாயக்க, மராட்டிய‌ மன்னர் காலங்களிலே அது
புறந்தள்ளபட்டு மர்மக் கோவிலாக பார்க்கப்பட்டது!

இவ்வளவிற்கும் நாயக்கர்களும், மராட்டியர்களும் தீவிர
இந்துமத பக்தர்கள், மதத்தை காக்கவே அரசு அமைத்து
போராடியவர்கள், அவர்களே அஞ்சி ஒதுங்கியிருக்கின்றார்கள் என்றால்
அதில் உள்ள சில சூட்சும விவகாரம் அப்படி இருந்திருக்கின்றது!

காரணம் அக்கோவிலை நிர்மாணித்த கரூருரார் சித்தர்
அதனை காக்க சில வரம் கொடுத்தார் என்பார்கள்.

அதாவது அக்காலத்தில் ஒரு மன்னன் வென்றால் முதலில்
கொள்ளையிடுவது ஆலயமே!

இதனால் அங்கு அரச தோரணையோடு வரும் யாரும் அழியட்டும்
என்றொரு சாபத்தை அவர் நிறுத்தி இருப்பதாக சொல்வார்கள்!

மற்றபடி நான் சாதாரண மனிதன், நீயே நிரந்தர கடவுள் என மனதார
எண்ணிக்கொண்டு உள்செல்லும் தலைவர்களுக்கு எந்த ஆபத்தும்
நேர்ந்ததில்லை!

அங்கு உட்செல்லும்பொழுது மன்னனே ஆயினும் மகுடம் கழற்றி
வைத்து பதவியின்றின்றி உட் செல்லவேண்டும் என்பது அக்கால விதி,

ஆண்டவன் முன் அனைவரும் ஒன்றே என்பதுதான் அந்த
பிரக்தீஸ்வரனின் விருப்பம்!

அதை மீறி – நான் அதிகாரம் மிக்கவன் என தனித்து செல்லும் யாரும்
அந்த அதிகாரத்தை இழப்பர், நாயக்கர் காலம் முதல் இக்காலம் வரை
அதுதான் நடக்கின்றது!

இவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன‌!

எப்படியோ நம்மை ஆண்ட இராஜ ராஜ சோழனின் சிலை தஞ்சை
ஆலயம் அடைந்தவுடன், தஞ்சையின் ஒரே சொத்தான காவேரியும்
அதை நோக்கி வந்தது மகிழ்ச்சியே!


..

நிச்சயம் இவை சாதாரண சிலைகளாக இருக்க முடியாது.
இது இருக்குமிடம் செழிக்கட்டும் என்ற ஒரு வித‌ சக்திகொண்ட

சிலைகளாக இருக்கலாம். மாவீரன் இராஜராஜன் சோழன்
புகழ் ஓங்குக.

——————————————–

பின் குறிப்பு –

இந்த சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்னர்
( தஞ்சை பெரிய கோயிலிலிருந்து …) திருடு போயின. இப்போது
குஜராத்திலுள்ள ஒரு தனியார் மியூஸியத்திலிருந்து கைப்பற்றப்பட்டன
என்று பிடிஐ செய்தி சொல்கிறது.

சில கேள்விகள் எழுகின்றன –

சிலைகள் களவு போன காலம் சரியாகத் தெரியுமா…?
அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது யார்…?
(ஆளும் கட்சிப் பிரமுகர்கள் ( so called ) தானே கோவில் ட்ரஸ்டில்
இருந்திருப்பார்கள்…!!! அவர்களுக்குத் தெரியாமலா நடந்திருக்கும்…? )

சிலைகள் மீட்பு மன்னன் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
அவர்கள், 3 மாதங்களுக்கு முன்னர் தான் இந்த திருட்டைப்பற்றிய
வழக்கே பதிவு செய்யப்பட்டது…. வழக்கு பதிவு செய்யப்பட்ட
90 நாட்களுக்குள் சிலைகள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டு விட்டன
என்று கூறி இருக்கிறார்….

அப்படியானால், இத்தனை வருடங்களாக, இந்த சிலைத்திருட்டு பற்றி
வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லையா…? என்ன காரணம்…?

இப்போது சிலகள் கைப்பற்றப்பட்ட இடமான, குஜராத் தனியார் –

மியூசியத்திற்கு சொந்தக்காரர் யார்…?
அவர்களது ரிக்கார்டுகளில் இந்த சிலைகள்
எப்படி, யார் மூலம் அவர்களிடம் வந்தன.. ?
அவற்றிற்காக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது…?
யாருக்கு கொடுக்கப்பட்டது..?
போன்ற விவரங்கள், ஆவணங்கள் அவசியம் இருக்கும்…

ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் அவர்கள் இந்த விவரங்களை
வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள்
விடுப்போம்…. தமிழகம் இவற்றை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது போல் தமிழகத்தின் எத்தனயோ புராதன கோயில்களிலிருந்து
எவ்வளவோ மதிப்பு வாய்ந்த சிலைகள் திருடு போயிருக்கின்றன…
இதில், சர்வதேச சிலைத்திருடர்களுக்கு இருக்கும் அதே அளவு பங்கு,
லோக்கல் அரசியல்வாதிகளுக்கும் இருந்திருக்கும்….
இன்னும் எவ்வளவு வெளிவர காத்திருக்கின்றனவோ…?

இந்த விஷயத்தில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும்
ஐ.ஜி. பொன் மாணிகவேல் அவர்களுக்கு இந்த வலைத்தள நண்பர்களின்
சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to சோழன் திரும்ப வந்ததும், காவிரி பெருக்கெடுத்த மர்மமும்…

  1. sundarappsdba's avatar sundarappsdba சொல்கிறார்:

    பொன்.மாணிக்கவேலருக்கு வாழ்த்துக்கள்.

    ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம், ஆனால் தஞ்சை பெரிய கோவிலைப் பற்றிய உங்கள் கருத்துதான் மூட நம்பிக்கையாக எனக்குப் படுகின்றது.

    மூட நம்பிக்கைகளை தவிர்க்கவும்.

    • bosepeace's avatar bosepeace சொல்கிறார்:

      வேப்பமரத்துபேய், புளியமரத்துபேய் என பல மூட நம்பிக்கைள் தாத்தா பாட்டி காலத்து கதைகள் குழந்தைகளுக்காக சாெல்லப்பட்டது. அறிவியலின் படி இம்மரங்கள்வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு வாயுவால் குழந்கைள் சுகவீனம் அடையக்கூடாதென.
      ஒரு நல்ல விசயத்திற்காக காவிரி வந்த சந்தாேசத்திற்காக காெண்டாடுவாேம்.

  2. பிங்குபாக்: சோழன் திரும்ப வந்ததும், காவிரி பெருக்கெடுத்த மர்மமும்… – TamilBlogs

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    தஞ்சை அரசன் ராஜராஜ சோழன் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்ல முடியவில்லை (இந்தச் சிலை அல்ல. அது வேறு ஒன்று). தொல்லியல்துறை அனுமதிக்கவில்லை என்று படித்தேனே.

    நீங்களே பழைய பெருவுடையார் கோவில் படமொன்றைப் பதிந்திருந்தீர்கள். அதில் கோவில் சுவர்கள் எப்படி புதர் மண்டிப் போயிருந்தது, கோவிலும் பாழ்பட்டிருந்தது என்பது தெரியும். இப்போது கோவிலுக்குள் இருந்த கிணறு (அந்தப் படம் பிரகாரம்) ஏதோ காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கிறதாம்.

    இந்த வருஷ பஞ்சாங்கத்தில், நல்ல மழை பெய்யும் என்று போட்டிருந்ததாமே. சிலை வந்ததற்கும் காவிரி நிரம்புவதற்கும் ஏன் முடிச்சுப் போடவேண்டும்?

    கா.மை. சாரின் பதிவை, அரசியலாக்காமல் விடலாமா?
    ‘நீதி கேட்டு நெடும் பயணம்’ (அதாவது திருச்செந்தூர் முருகனின் வைர வேலை, ஆர்.எம்.வீரப்பன் அபேஸ் செய்ததாகக் கூறி) திருச்செந்தூரிலிருந்து சென்னை வரை சென்ற கருணாநிதி, பிறகு 1989ல் முதலமைச்சரான பின்பு, அல்லது அப்போது தேசத்துக்கு எதிராக சதி செய்ததால் பதவி நீக்கப்பட்டாலும், பிறகு 1996ல் முதலமைச்சரானபோது,அந்த வைரவேலை மீட்டாரா இல்லை இடம் மாற்றிவிட்டாரா என்று உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      வைரவேலுடன், இன்னும் சில பொருட்களும் காணாமல் போனவை பட்டியலில் சேர்ந்துகொண்டது தான் மிச்சம்…!

      இன்றைய தினம், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகிய இருவரைப்பற்றியுமான – பல அந்தரங்கமான செய்திகளை
      அறிந்தவர் திரு.ஆர்.எம்.வி. ஒருவர் தான்… ஆனால் அவரோ வாயே திறக்க மாட்டேனென்கிறார்.
      ஒருவேளை எதாவது எழுதி வைத்து, அவர் தனது காலத்திற்கு பிற்பாடு, வெளியிடச் சொல்லி இருக்கிறாரோ என்னவோ..!

      அவர் நினைத்தால், நிறைய சுவாரஸ்யமான சங்கதிகள் வெளிவரும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        ஆட்டோ சங்கர் (கொலைகளுக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டவன்), சிறையில் இருந்தபோது ‘தன் வரலாறு’ எழுதி, நக்கீரனில் வந்து அது பின்னர் புத்தகமாக வெளிவந்தது. அதில் அவனுக்கும் ஆர்.எம்.வீக்குமான சந்திப்பு பற்றியும் எழுதியிருக்கிறான். எல்லா அரசியல்வாதிகளும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் போலிருக்கிறது.

  4. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    கா.மை சார்… உங்களுக்கு ஒரு கேள்வி. (மற்றவர்களும் சொல்லலாம்).

    சிற்பக் கலையில் மிகச் சிறந்தது தமிழ்நாடு, இங்குள்ள சிற்பிகள் மிகத் திறமையானவர்கள் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம்.

    நான் ரோம, கிரேக்க சிற்பக் கலையினைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தவன். அவர்கள், ஒரு அரசனின் சிலையை பளிங்கில் வடித்தால், அது அந்த அரசனைப் போலவே இருக்கும். பல நூற்றாண்டுகளாக அவர்கள் வடித்த சிற்பங்கள் அத்தகையது.

    ஆனால் தமிழகத்தில் ஏன், சிற்பிகள், எந்த அரசர்களையும் வாழ்வின் ரூபத்தில் சிற்பமாக்கவில்லை? திறமைக்குறைவா அல்லது சிற்ப சாஸ்திரத்தில் அவ்வாறு செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறதா? (ராஜராஜன் சிலையும், அவரது பல படங்களும், ஏன் தேவிமார்களும் தனித்து இனம் காண்பதுபோல் செய்யப்படவில்லையே.. இருவரின் உருவங்களுக்கும், கோவில்களில் உள்ள தெய்வச் சிலைகளின் உருவங்களுக்கும் அவ்வளவாக வேறுபாடே இல்லையே. இதனையே ராஜேந்திர சோழன் உருவங்கள் என்றோ, நடராஜரின் உருவம் என்றோ சொன்னால், இருக்கமுடியாது என்று நம்மால் சொல்லமுடியாதே. அது ஏன்?)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      தமிழன்,

      இந்த சந்தேகம்-கேள்வி ஏற்கெனவே எனக்கும் உண்டு.
      விடைக்கு உங்களை மாதிரி நண்பர்களைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்… 🙂 🙂

      கூடவே இன்னொரு சந்தேகமும்….
      பெரும்பாலான சிலைகளில், அவர்கள் ஆடை என்று ஒன்று உடுத்தியிருக்கிற மாதிரியே இல்லை… அது ஏன்..?
      உடைகளை வைத்து அந்த காலத்திய நாகரிகத்தை புரிந்து கொள்ளலாமென்று பார்த்தால், அதற்கும் வழியே இல்லை.

      பார்ப்போம்… வேறு யாராவது கிடைக்கிறார்களா என்று … சந்தேகத்தை தெளியவைக்க…!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

        இதுல எனக்கு வேறு ஒன்று தோன்றுகிறது. பெரும்பாலான சிற்பங்களில் மேலாடை பெண்களுக்குக் கிடையாது. அதனால் இப்போது உள்ளதுபோல் ‘அதைக் கவர்ச்சி’யாக்கும் எண்ணம் அப்போது இருந்ததில்லையோ, அது இயல்பானதுதானோ என்று தோன்றும். அதுபோல், சட்டை போடாது, வெறும் மாலைகள் மட்டும் அணிந்தவாறும் ஆண்கள் உருவம் இருக்கும்.

        In this context நீங்கள், தென் தமிழகத்தில்/மலையாளதேசத்தை ஒட்டி இருந்த பகுதியில், ‘மேற் சீலை’ அணியும் போராட்டத்தையும் நினைத்துப்பார்க்கலாம். சில நூறு வருடங்களுக்கு முன்பு, மேற்சீலை யாருமே அணிந்திருந்ததில்லையோ என்றும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

        திருப்பதியில் நான் பார்த்த கிருஷ்ணதேவராயா, மற்றும் அவரது இரு பத்தினிகளின் ஆளுருவச் சிலைகளில் யாருக்கும் மேலாடை பார்த்ததில்லை (இப்போது புடவை மட்டும் வேஷ்டி கட்டிவிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்). இது பதினேழாம் நூற்றாண்டு மரபு. அரசகுல மகளிருக்கே இதுவென்றால், சாதாரண மக்களுக்கும் இதுதான் வழக்கமாக இருக்கும். இதன் தொடர்புடைய ஒரு செய்தி, கேரளாவில், நம்பூதிரிகளின் மனைவிமார்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். அவர்களுக்கு அதனால் ‘அந்தர்ஜனம்’ என்ற பெயருண்டு.

      • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

        இதில் இன்னொன்றும் எழுத நினைக்கிறேன். நான் பார்த்த பெரும்பாலான சிற்பங்கள் (வெளிநாட்டில், லூவ்ரி மியூசியத்தில் மற்ற இடங்களிலும்), மேலாடை இல்லாமல்தான் இருந்தன. (ஆண்களுக்கு ஆடைகள் இல்லாத சிற்பங்கள் ஏராளமாக இருந்தன). வேறு ஒரு கண்டெக்ஸ்டில் நான் அனுப்பிய படங்கள், தளத்தில் வெளியிடத் தகுந்தவையாக இல்லை என்று நீங்கள் சொன்ன ஞாபகம். இது ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கலாச்சாரம். அதேசமயம் சில சிற்பங்கள் உடைகளுடன் இருந்தன. இதைப்போலவே ஓவியங்களும். (நீங்கள் வெளியிடமாட்டீர்கள் என்பதால் அனுப்பவில்லை).

        மைக்கல் ஆஞ்சலோ(? அல்லது அதற்கு முன்பே) இத்தகைய ஆடையில்லா சிற்பங்களை ஒவ்வொரு தூணிலும் வாடிகனில் நிறுவியிருந்தார் என்றும், சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டில், போப்பின் உத்தரவின் பேரில், மர்மப்பகுதிகள் உடைக்கப்பட்டு அதன்மேல் மலர் போன்று ஒன்றை ஒட்டிவைத்தார்கள் என்பது வரலாறு. (எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறதோ?… அதே சமயம், வள்ளுவர், குறளில், ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று சொல்லியிருக்கிறார் என்பதும் உற்று நோக்கத் தக்கது)

  5. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    கோவில்களில் பல நிலையில் கலவி கொள்ளும் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. ஆகவே, அந்த காலத்தில் மக்கள் பொது இடங்களில் கலவி கொண்டார்கள் என்று சொல்லலாமா…?

    இது தேவை இல்லாத ஆராய்ச்சி.

    சிலைகளை கொண்டு சமுதாய நாகரீகங்களை ஆராய்வது இதுவரை வரலாற்றில் நடந்திராத ஒன்று.

    மலையாள தேசத்தில் குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் ‘மேற் சீலை’ அணிய தடை விதிக்கப் பட்டிருந்தது. ‘முலை வரி’யும் விதிக்கப் பட்டிருந்தது.

    அது அந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் கொடுமை.

    அதை எதிர்த்து அந்த பெண்கள் போராடியதில் இருந்து அது நடைமுறை இல்லை, அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதை அறியலாம்.

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      //கோவில்களில் பல நிலையில் கலவி கொள்ளும் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. ஆகவே, அந்த காலத்தில் மக்கள் பொது இடங்களில் கலவி கொண்டார்கள் என்று சொல்லலாமா…?//

      ஒழுங்காக யோசிக்கத் தெரிந்தவர்கள் இப்படி கேட்க மாட்டார்கள்.

      //இது தேவை இல்லாத ஆராய்ச்சி.//

      அப்படி நினைப்பவர்கள் ஒதுங்கி நிற்கலாம்.

      //சிலைகளை கொண்டு சமுதாய நாகரீகங்களை ஆராய்வது இதுவரை வரலாற்றில் நடந்திராத ஒன்று.//

      இது அரைகுறையாக சரித்திரம் படித்து, தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினத்துக்கொண்டிருப்பவர்கள் சொல்வது.

  6. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    தமிழகத்தில் சிலைகள் கருங்கல்லில் செய்யப்பட்டன .
    கருங்கல்லில் துணி என்று காட்டுவது கடினம்.
    இத்தாலியில் Carrerra Marble என்ற பளிங்கு உண்டு .
    இதைத்தான் மனித , கடவுள் உருவங்களுக்கு பயன்படுத்தினர் .
    இதில் துணி போன்றும் காட்ட இயலும் .

    இதனால்தான் நம் ஊர் சிலைகள் இடுப்புக்கு மேல் ஆடை இல்லாமல்
    இருக்கின்றன.

    மதுரையில் மன்னர் திருமலை நாயக்கரின் சிலை
    ஒரு சில கோவில்களில் பார்க்கலாம் .அவரை போலவே இருக்கும் .

  7. yarlpavanan's avatar yarlpavanan சொல்கிறார்:

    அருமையான தகவல்
    நல்லது நடக்கும்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கந்தசுவாமி,

      நீங்கள் தந்திருக்கும் தகவல்களுக்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.