உலகுக்கே வழிகாட்டும் மகத்தானதொரு போராட்டம்…


Farmers long march moving from Mulund towards Mumbai. Will stay at Somaiya ground in Sion on Sunday. Express photo by Deepak Joshi
Mumbai 11th March 2018

Farmers protest march from Nashik on the way to Mumbai arrives at Thane at late evening on Saturday. Express photo by Janak Rathod, 10th March 2018, Mumbai.

உலகுக்கே வழிகாட்டும் மகத்தானதொரு போராட்டம்…

பெரும்பாலும் படிப்பறிவில்லாத கிராம, வனவாசி -விவசாயிகளைக் கொண்ட, மஹாராஷ்டிராவின் 40,000 -க்கும் மேற்பட்ட ஒரு உறுதிமிக்க கூட்டம்…

நாசிக்’ல் துவங்கி, மும்பை நகரம் வரை – சுமார் 180 கிலோ மீட்டர் தூரம்,
6 நாட்கள், இரவும் பகலுமாக – ஆண்களும், பெண்களுமாக -இளைஞர்களும், முதியவர்களுமாக – கடும் வெய்யிலிலும், இருட்டிலும் நடந்து,

தங்களால் யாருக்கும் எந்தவித தொந்திரவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, வழி முழுவதும், சாலையில் ஒரு பக்கத்தில் மட்டும் பயணித்து, மறுபக்கம் போக்குவரத்து அமைதியாக நடைபெற உதவி,

பகலில் மும்பைக்குள் வந்தால், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால், இரவு போக்குவரத்துகள் அடங்கிய பிறகு ஊருக்குள் நுழைந்து,

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதால், தேர்வுக்குப் போகும்
மாணவர்கள் பாதிப்படையக்கூடாதே என்று, அருகிலுள்ள மைதானத்தில்
முடங்கிக்கொண்டு, பதினொன்றரை மணிக்கு மேல் சாலைகளில்
இறங்கிய கரிசனம்-

தங்களின் அமைதியான, வலுவான, ஒருமித்த மனதுடன் கூடிய – உடலை வருத்திக்கொண்டு நடத்திய இந்த போராட்டத்தின் மூலம் –

மும்பை மக்களின் பேராதரவையும், அன்பையும், வரவேற்பையும் பெற்றது. மும்பையின் புகழ்பெற்ற “டப்பாவாலா”க்களின் யூனியன் இவர்களுக்கு தேவையான உணவை, நகரம் முழுவதிலுமிருந்து சேகரித்து வழங்கி உபசரித்தது….

இடது கம்யூனிஸ்ட் கட்சியால் முனைந்து துவக்கப்பட்டு,
அத்தனை மக்களின் அன்பையும், (பாஜகவை தவிர) மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெற்ற இந்த விவசாயிகளுக்கு கிடைத்த பேராதரவைக் கண்ட மஹாராஷ்டிர அரசு –

வேறு வழியேயின்றி, நேற்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி,
அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை 6 மாத அவகாசத்திற்குள்
நிறைவேற்றி வைப்பதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்தது….

தங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதன் விளைவாக, எந்தவித அமர்க்களமும், கொண்டாட்டமும் இன்றி, நேற்றே விசேஷ ரயில்கள் மூலம் தங்கள் ஊர் திரும்பிச் சென்றிருக்கிறார்கள் இந்த விவசாயிகள்….

ஒற்றுமையாக –
லட்சியத்தில் குறியாக –
அமைதியாக –
மக்கள் துணையுடன் தொடர்ந்து போராடினால் –

-எப்பேற்பட்ட அரசையும் வழிக்கு கொண்டு வரமுடியும் என்பதை உலகுக்கே நிரூபித்துக் காட்டிய இந்த படிக்காத, பட்டிக்காட்டு மக்களுக்கு – நமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to உலகுக்கே வழிகாட்டும் மகத்தானதொரு போராட்டம்…

  1. BVS's avatar BVS சொல்கிறார்:

    இந்தியாவில் ஜனநாயகத்தை எந்த “சக்தி”யாலும் அழிக்க, ஒழித்துக்கட்ட முடியாது
    என்பதை இந்த போராட்டமும், அதற்கு மக்கள் தந்த மகத்தான ஆதரவும்
    நிரூபித்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கொரு ஜல்லிக்கட்டு போராட்டம்.;
    மஹாராஷ்டிராவிற்கொரு விவசாயிகள் போராட்டம்.

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
    தங்கள் எதிர்கால போராட்டங்களை எப்படி எடுத்துச்செல்ல வேண்டும்;
    எப்படி எடுத்துச் செல்லப்பட்டால் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற முடியும்
    என்பதை இது விளக்குகிறது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல்
    நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்படும் போராட்டங்களை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். அதை எந்த அரசாங்கமும் புறக்கணிக்க முடியாது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      எக்கச்சக்கமாக மதுவருந்தி, போதையில் குளியல் தொட்டியில் விழுந்து
      இறந்த ஒரு நடிகைக்காக நாள் கணக்கில் ஒப்பாரி வைத்த நமது
      தொலைக்காட்சிகள்-

      இப்படி படிப்பறிவில்லாத பட்டிக்காட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கூடி,
      அமைதியாக, தங்களைத் தாங்களே வருத்திக்கொண்டு நிகழ்த்திய இந்த
      போராட்டத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் –

      வருந்தத்தக்கது… வெட்கப்படத்தக்கது…

      தாங்கள் பணத்தின் பின்னால், விளம்பரத்தின் பின்னால் அலைபவர்கள் தான்
      என்பதை மீண்டும் மீண்டும் நமது தொலைக்காட்சி மீடியாக்கள் நிரூபிக்கின்றன.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்தப் படங்களையும், அந்த நபரையும் பார்ப்பதற்கு மனதில் ஒருவித உணர்வு வருகிறது. எளிய மனிதர்கள் எத்தனை கோடி.. அவர்களையும் மனதில் வை என்று சொல்கிறது.

    போராட்டம் பாராட்டத்தக்கது. பொதுமக்களைப் பாதிக்காத நேர்மையான போராட்டம் எதற்கும் மக்கள் ஆதரவு உண்டு என்பதையும் காட்டுகிறது. ‘அறம்’ என்பதை ஆயுதமாகக் கொண்டு வரும் எவரையும் எதுவும் புறக்கணிக்கமுடியாது. கவனிக்கவிட்ட செய்தியைப் பகிர்ந்ததற்கு நன்றி கா.மை சார்.

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இந்த போராட்டம், பேரணி தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டத்தின் தொடர்ச்சியாக அதன் உந்துதலாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

    அவர்களுக்கும் விரைவில் வெற்றி கிடைக்கும்.

    எப்படி…?

    அவர்கள் தனியாக போராடாமல் மற்ற மாநில விவசாயிகளையும் மேலும்
    கம்யூனிஸ்ட்களையும் எதிர் அரசியல் கட்சிகளையும் தமக்கு ஆதரவாக களத்தில் நிற்கச் செய்தால்…!

    முக்கியமாக‌ இவர்கள் கைக்கொண்ட வழிமுறையை பின்பற்றி மக்களின் ஆதரவையும் பெற்றால்…!

    வெற்றியடைய வாழ்த்துவோம்.

  5. seshan's avatar seshan சொல்கிறார்:

    After Thandi March, this Red March will remains in the memory. one more sathya graha silent war. tip of the volcano eruption stage…..hope it will get the needed result.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்களுக்கு,

      நேற்று காலை நாம் இந்த பதிவில் வருத்தப்பட்டு எழுதி இருந்தோம்…
      “மீடியாக்கள்” இந்த போராட்டத்திற்கு, அது கடைபிடித்த அற்புதமான வழிமுறைகளுக்கு – உரிய மதிப்பு கொடுக்கவில்லையென்று.

      இன்று காலை வெளிவந்திருக்கும் (ஆங்கில) ஹிந்து நாளிதழ்,
      தன் தலையங்கத்திலேயே,
      இந்த போராட்டத்தை பாராட்டி கௌரவப்படுத்தி இருக்கிறது.

      -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.