…
…
எனக்கு மிகவும் பழக்கமான, நான் பல வருடங்கள் வாழ்ந்த இடத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பாக நிகழ்ந்துள்ள ஒரு சோகமான சம்பவம் இது…
கீழேயுள்ள செய்தியை (தொலைக்காட்சியிலும்…) பார்த்தவுடன்
(இரவு 12.00 மணி ), அந்த கொடுமையையும், துக்கத்தையும், கோபத்தையும் – தாங்க முடியாமல் தான் இதை எழுதுகிறேன்..
————————–
தமிழ் ஹிந்து -செய்தி –
வாகன சோதனையில் எட்டி உதைத்த ஆய்வாளர்;
மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணி பலி,
கணவர் படுகாயம்: 3000 பேர் சாலை மறியலால்
ஸ்தம்பித்தது திருச்சி நெடுஞ்சாலை
Published : 07 Mar 2018 22:01 IST
————-

…
திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை காவலர் எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார்.
கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3000 பேர் சாலை மறியல் செய்ததால் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது.
இன்று மாலை திருச்சி துவாக்குடி அருகே வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்த உஷா மற்றும் ராஜா தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உஷா கர்ப்பிணியாக இருந்தார். அதனால் வாகனத்தை ராஜா மெதுவாக ஓட்டி வந்துள்ளார்.

…
அப்போது திருச்சி கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சிலர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராஜா, உஷா – தம்பதிகள் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர். ராஜா ஹெல்மட் அணியவில்லை.
இதனால் பயந்துபோன அவர் அதை தவிர்ப்பதற்காக சென்றபோது ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்ட ஊர்க்காவல் படையினர் விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். இதில் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜாவின் மோட்டார் பைக் சாலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சாலையில் விழுந்த உஷா மீது பின்னால் வந்த வேன் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் கீழே கிடந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.
எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர்கள், ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கொந்தளித்து திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலால் பல மணி நேரமாக போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கிறது….
———————————————————————————
எப்பேற்பட்ட கொடுமை இது.
5 வயதுச் சிறுமியை கற்பழித்தவன், 8 கொலை பண்ணியவன், வங்கிகளை கொள்ளையடித்தவன் எல்லாரும் சமுதாயத்தில் சுதந்திரமாக உலா வருகையில் – அவர்களை பிடிக்கவோ, சிறையில் அடைக்கவோ கவலைப்படாத ஒரு அரசு இயந்திரம் –
ஒரு அப்பாவி இளம்பெண், அதுவும் 3 மாத கர்ப்பிணிப்பெண், எந்தவித தவறும் செய்யாமலே இப்படி அற்பாயுளில் கொடூரமாக நடுவீதியில் உயிரை விடுக்கூடிய சூழ்நிலையை உண்டுபண்ணி இருக்கிறார்களே – இதற்கு யார் பொறுப்பு…?
வண்டிக்கு இன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் –
ஆர்.சி.புக் கையில் இல்லையென்றால் –
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லையென்றால் –
ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம்…
வண்டி ஓட்டுபவர் ஹெல்மட் அணிந்திருக்க வேண்டும் என்பது அரசாங்க சட்டம்… உண்மை தான். ஆனால், இந்த சட்டம் எதற்காக.. கொண்டு வரப்பட்டது…?
ஓட்டுபவரின் உயிரைக் காப்பாற்றவா அல்லது எடுக்கவா…?
வண்டியில் பின்சீட்டில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்து
ஓட்டிச்செல்லும்போது, அதை இன்னொரு வண்டியில் துரத்திக்கொண்டு
வந்து ஓடும்போதே காலால் எட்டி உதைப்பது எவ்வளவு கொடூரம்…?
Highways-ல், ஒரு நெடுஞ்சாலையில் இப்படி செய்தால் வண்டி
தடுமாறி விழும் என்றோ, இடைவெளியில்லாமல் பறந்துகொண்டிருக்கும்
வண்டிகளால், அவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்றோ உணர முடியாத
அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் போய் விட்டதா…?
ஹெல்மெட் போட வேண்டும் என்கிற விதியை தளர்த்தினால் தான் என்ன…? ஓட்டுபவரின் பாதுகாப்பிற்காக தானே இந்த விதி வலியுறுத்தப்படுகிறது…
வண்டி ஓட்டுபவருக்கு – அவர் உயிரின் மேல் இல்லாத அக்கறையா அரசுக்கும், காவல்துறைக்கும் வந்து விட்டது…?
ஹெல்மட் அணிவதில் உள்ள சிக்கல்கள், பிரச்சினைகள்
அனைவருக்கும் தெரியும்… இருந்தும் இதை இவ்வளவு சீரியசாக வலியுறுத்துவானேன்..?
இந்த சம்பவத்தோடு இனியாவது இந்த அவலம் நிற்கட்டும்.
ஹெல்மட் கட்டாயம் என்கிற விதியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…
நீதிமன்ற உத்தரவு தான் அடிப்படை காரணம் என்றால் – இந்த சம்பவத்தையே உதாரணம் காட்டி, நீதிமன்றத்தில் இதற்கு விலக்கு பெற வேண்டும். ஹெல்மட் அணிவதா வேண்டாமா என்பதை ஓட்டுபவர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விட வேண்டும்.
மக்களுக்காகத்தானே சட்டங்கள்….?



எந்த அரசியல் கட்சியும் இந்த ஹெல்மட் கொடுமையை பற்றி கவலைப்படுவதும் இல்லை. பேசுவதும் இல்லை. நீங்களாவது இந்த கொடுமையை எழுதினீர்களே.
அரசாங்கம் இந்த கோரிக்கையை உடனடியாக கவனிக்க வேண்டும்.
மக்களுக்காகத்தானே சட்டங்கள்….?
ஐய, என்ன ஒரு அறியாமையில் இருக்கிறீர்கள்.
அதைவைத்து பணம் பறிக்கத் தான்.
அந்த தம்பதியினருக்கு என்ன ஒரு தைரியம் இருந்தால் ஹெல்மெட்டும் போடாமல் ‘ஐயா’வை ‘கண்டு’க்காமலும் போவார்கள். அப்புறம் அவர்கள் உயிர் வாழ தகுதியுள்ளவர்களா?
எந்நாடே…இறைவா….காப்பாற்று.
ஹெல்மெட் சட்டத்தை நீக்கிவிட்டால் போலிஸ்காரர்கள் இவ்வாறு நடக்கமாட்டர்கள் என்பதற்கு எந்த உத்தரவாமில்லையே சார். நாளையே ஒன்வேயில் தவறி வந்த ஒருவரின் வாகனத்தை உதைக்கமாட்டர்கள் என்பது என்ன நிச்சயம்?
ஒருவர் வாகன சட்டத்தை மீறினால் அவரது வாகனத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும். நிறுத்தாமல் செல்லும் வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து அவருக்கு கடுமையான பைன் போடவேண்டும். இதுதான் முறையாக இருக்கும். அதைவிடுத்து இருசக்கன வாகனத்தை எட்டி உதைப்பது அறிவுடைமை அல்ல.
இனி ஒரு போலிஸ்காரரும் உதைக்காத வகையில் இந்த போலிஸ்காரருக்கு கொலை மற்றும் கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக ஆயுள்தண்டனை தந்தால்தான் சரியாக இருக்கும். ஆனால் தமிழகத்தின் என்கவுண்டர் கொலை செய்த போலிஸே தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. இந்த போலிஸ்காரருக்கு அதிகபட்சம் டிரன்ஸபர் செய்து முடித்துவிடுவார்கள். நாமும் மறந்துவிட்டு வேறு பிரச்சனைக்கு ஓடிவிடுவோம். தமிழ்நாட்டில் மக்கள் உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பு!
இந்த விடயத்திற்கு தொடர்பில்லாமல், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விடயம் என்னவெனில், கர்ப்பிணிகள் மற்றும் பிடித்து உட்கார வலுவற்ற குழந்தைகளை இரு சக்கரவாகனத்தில் வைத்து பயணிப்பது கடும் ஆபத்தான விடயம். எல்லோராலும் எல்லா சமயத்தில் ஆட்டோவில்/ டாக்ஸியில் பயணிப்பது சாத்தியமற்றதுதான். ஆனாலும் இருசக்கர வாகனத்தை தவிர்ப்பது முயற்சிப்பது நல்லது… உயிர் போனால் வராது!
டூ வீலர்களில் ஆக்ஸிடெண்டுகள் பெரும்பாலும் ரோடுகள் மோசமாக இருப்பதினாலும் மற்றும் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காததினாலுமே ஏற்படுகின்றன. கவனக்குறைவாக வண்டி ஓட்டுவதினாலேயே அதிகமான ஆக்ஸிடெண்டுகள் நிகழ்கின்றன. எனவே காரணங்களை ஆராய்ந்து ஆக்ஸிடெண்டுகளைக் குறைக்க முயலவேண்டுமே தவிர விபத்து நடந்த பின் ஏற்படும் விளைவுகளைக் காண்பித்து பயமுறுத்தி தேவையில்லானவற்றை பயன்படுத்தச் சொல்வது அறிவீனம். நமது நாட்டில் டூ வீலர் என்பது ஒரு அத்தியாவசியமான தேவை என்று ஆகிவிட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வுமுறையில் தவிர்க்க முடியாதது. டூ வீலரில் பின் இருக்கையில் பெண்கள் ஒரு பக்கமாக அமர்ந்து செல்வதும் குழந்தைகளை முன் பக்கம் அமரச்செய்து ஓட்டுவதும் ஆபத்து நிறைந்ததுதான். ஆயினும் நமது வாழ்வின் சூழ்நிலையில் இது மிகத்தேவையானதாக உள்ளது. இதற்கு மாற்று ஏதேனும் உண்டா? இதனைத் தடை செய்ய முடியுமா? கவனமாகவும் நிதானத்துடனும் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்தும் வண்டி ஓட்டுவதால் மட்டுமே விபத்துகளைத் தடுக்க முடியும். நமது நாட்டின் சீதோஷ்ண, சமூகச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற விதி நீக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து. மற்றபடி ஹெல்மெட் அணிவது விபத்து நடக்கும்போது நம்மைப் பாதுகாக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சட்டம் போட்டுத்தான் இதனை அனுசரிக்கச் செய்ய வேண்டும் என்பதில்லை. இந்த விதியினால் சம்பந்தம் இல்லதவர்கள் பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. எங்கோ ஏற்படும் ஒருசில நிகழ்வுகள் ஒரு நடைமுறை மாற்றத்திற்குக் காரணமாக சொல்லப்படக் கூடாது. ஹெல்மெட் இல்லாததினால் ஏற்படும் மரண விபத்தில் அந்த விபத்திற்கான காரணத்தினை ஆராய்ந்து அதனை நீக்க ஆக்க பூர்வமான நடவடிக்கை இதுவரையிலும் எங்காவது எடுக்கப்பட்டுள்ளதா? இதுபோன்று சட்டம் போடுவது அல்லது ஸ்பீடு பிரேகர்களைப்போட்டு அனைவரையும் சிரமத்திற்கு உள்ளாக்குவது என்பதே நடைமுறையாக உள்ளது. பெரும்பாலான விதிகள் பொதுமக்களின் தவறுகளையே காரணமாகக் கூறி அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்க முனைகின்றனவே அல்லாமல் அரசோ அல்லது நிர்வாகமோ அதன் காரணத்தை நீக்க முயலுவதில்லை என்பதே உண்மை. இந்தச் சட்டம் ஒரு கண்துடைப்பே. இதனை ஆதரிப்பவர்கள் தம்மை அதிமேதாவிகளாகவும் சமூக அக்கறை உள்ளவர்களாயும் காண்பித்துக்கொள்வதற்காகவே அவ்விதம் செய்கிறார்கள் என்பது நிதரிசனமான உண்மை.
Definitely he should be punished as a murderer.
But a small concern from Sri Lanka regarding wearing helmets. Here also it is must to wear a helmet and we shall be fined up-to 1000lkr for not wearing helmet. There may be some small issues such as hair falling. I don’t see any other major complaints from here being similar climate as TN. And also I survived an accident 4 months back with the help helmet.
ஹெல்மெட் போட வேண்டும் என்கிற விதியை தளர்த்தினால் தான் என்ன…? ஓட்டுபவரின் பாதுகாப்பிற்காக தானே இந்த விதி வலியுறுத்தப்படுகிறது…
வண்டி ஓட்டுபவருக்கு – அவர் உயிரின் மேல் இல்லாத அக்கறையா அரசுக்கும், காவல்துறைக்கும் வந்து விட்டது…?
ஹெல்மட் அணிவதில் உள்ள சிக்கல்கள், பிரச்சினைகள்
அனைவருக்கும் தெரியும்… இருந்தும் இதை இவ்வளவு சீரியசாக வலியுறுத்துவானேன்..?
இந்த சம்பவத்தோடு இனியாவது இந்த அவலம் நிற்கட்டும்.
ஹெல்மட் கட்டாயம் என்கிற விதியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…
//வண்டி ஓட்டுபவருக்கு – அவர் உயிரின் மேல் இல்லாத அக்கறையா அரசுக்கும், காவல்துறைக்கும் வந்து விட்டது…?//
சக்திவேல்.. இந்த உங்கள் கருத்து என் மனதில் தாக்கம் ஏற்படுத்திவிட்டது. உங்களைப்போல் பலர் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்.
அ. ஒரு மனிதனுக்கு அவனுடைய உடம்பு, குடும்பம் இவற்றின் மீது இல்லாத அக்கறையா மற்ற மனிதர்களுக்கு? ஏன் ‘டாஸ்மாக்’ கடை கூடாது, மது விலக்கு வேண்டும் என்று கத்துகிறார்கள்?
ஆ. பெரும்பான்மை மக்களுக்கு இல்லாத அக்கறையா, தேர்தலில் தோல்வியுற்ற, மக்களின் ஆதரவைப் பெறாத பாமக, வி.சி., புதிய தமிழகம், கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகளுக்கு? ஏன் அவர்கள் மக்கள் பிரச்சனையைப் பேசவேண்டும்?
இ. சிகரெட்டின் விளைவுகளைப் பற்றி ஏன் அரசாங்கம் காசு செலவழித்து விளம்பரப்படுத்தவேண்டும்? மக்களுக்கு அவர்கள் உயிர் மீது இல்லாத அக்கறையா?
ஈ. அடுத்த நாடான இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இல்லாத அக்கறையா தமிழக அரசியல்வாதிகளுக்கு, ஈழத்தின்மேல். வாயைப் பொத்திக்கொண்டு இருக்கட்டும் தமிழக அரசியல் தலைவர்கள்.
ஐ. திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு இல்லாத அக்கறையா அரசாங்கத்துக்கு. எதற்கு திருமணங்கள் ரெஜிஸ்டர் செய்யப்படவேண்டும்? அதனால் ரெஜிஸ்டிரார் அலுவலகங்கள் லஞ்சம் வாங்கும் அலுவலகங்கள் ஆகிவிட்டன. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு.
இன்னும் பல இதைப்போன்ற பொன்மொழிகளை உங்களைப் போன்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். வாழ்க உங்கள் சமூக அக்கறை.
தமிழன்,
என்ன ஆயிற்று உங்களுக்கு…?
ஏன் இப்படி விதண்டாவாதம் பேசுகிறீர்கள்..?
எப்போதும் காரிலும், விமானத்திலும் பயணம் செய்துகொண்டிருப்பதால் – உங்களுக்கு இந்த விஷயத்தில் அனுபவம் இருக்க வாய்ப்பு இல்லை என்பது புரிகிறது.
ஆனாலும் கூட நீங்கள் இந்த மாதிரியெல்லாம் நெகடிவ்வாக யோசிப்பீர்கள் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவதும் –
ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதும் ஒன்றாகி விடுமா..?
லைசென்சை வலியுறுத்துவது பாதையில் செல்லும் மற்றவர்களின்
பாதுகாப்பை உறுதி செய்ய என்பது உங்களுக்கு தெரியாதா…? பின் ஏன்
இந்த விதண்டாவாதம்…?
//வண்டி ஓட்டுபவருக்கு – அவர் உயிரின் மேல் இல்லாத அக்கறையா அரசுக்கும், காவல்துறைக்கும் வந்து விட்டது…?//
இந்த கருத்தை சொன்னவர் சக்திவேல் அல்ல. முதலில் மேலே இடுகையில் நான் சொன்னதைத்தான் அவர் திரும்பச் சொல்லி இருக்கிறார்…
GULF situation -க்கும் தமிழ்நாடு சூழ்நிலைக்கும் என்ன சம்பந்தம் ?
எதையும் எதையும் ஒப்பிடுகிறீர்கள் ..?
இங்கே ஹெல்மெட் போடுவதில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன
என்று உங்களுக்கு தெரியுமா…? அதை வைத்து எவ்வளவு பேர் மிரட்டி
காசு சம்பாதிக்கின்றனர் என்று தெரியுமா..?
நண்பர் செல்வதுரை முத்துக்கனி இந்த விஷயத்தை ஓரளவு
சரியாகவே analyse செய்திருக்கிறார் –
—————————————————————
டூ வீலர்களில் ஆக்ஸிடெண்டுகள் பெரும்பாலும் ரோடுகள் மோசமாக இருப்பதினாலும் மற்றும் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காததினாலுமே ஏற்படுகின்றன. கவனக்குறைவாக வண்டி ஓட்டுவதினாலேயே அதிகமான ஆக்ஸிடெண்டுகள் நிகழ்கின்றன.
எனவே காரணங்களை ஆராய்ந்து ஆக்ஸிடெண்டுகளைக் குறைக்க முயலவேண்டுமே தவிர விபத்து நடந்த பின் ஏற்படும் விளைவுகளைக் காண்பித்து பயமுறுத்தி தேவையில்லானவற்றை பயன்படுத்தச் சொல்வது அறிவீனம்.
நமது நாட்டில் டூ வீலர் என்பது ஒரு அத்தியாவசியமான தேவை என்று ஆகிவிட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வுமுறையில் தவிர்க்க முடியாதது. டூ வீலரில் பின் இருக்கையில் பெண்கள் ஒரு பக்கமாக அமர்ந்து செல்வதும் குழந்தைகளை முன் பக்கம் அமரச்செய்து ஓட்டுவதும் ஆபத்து நிறைந்ததுதான். ஆயினும் நமது வாழ்வின் சூழ்நிலையில் இது மிகத்தேவையானதாக உள்ளது. இதற்கு மாற்று ஏதேனும் உண்டா? இதனைத் தடை செய்ய முடியுமா?
கவனமாகவும் நிதானத்துடனும் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்தும் வண்டி ஓட்டுவதால் மட்டுமே விபத்துகளைத் தடுக்க முடியும்.
நமது நாட்டின் சீதோஷ்ண, சமூகச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற விதி நீக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து. மற்றபடி ஹெல்மெட் அணிவது விபத்து நடக்கும்போது நம்மைப் பாதுகாக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
சட்டம் போட்டுத்தான் இதனை அனுசரிக்கச் செய்ய வேண்டும் என்பதில்லை. இந்த விதியினால் சம்பந்தம் இல்லதவர்கள் பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. எங்கோ ஏற்படும் ஒருசில நிகழ்வுகள் ஒரு நடைமுறை மாற்றத்திற்குக் காரணமாக சொல்லப்படக் கூடாது.
———————————————————————
வருந்துகிறேன்…
எப்படித்தான் ‘ஹெல்மட்’ அவசியமில்லை என்ற கருத்து இங்கு எழுதுகிறார்களோ. ஆச்சர்யம். ‘ஹெல்மட்’ உலகில் எங்கும் தேவை. எவரோ சிலர்தானே இறக்கிறார்கள் என்று இன்ஷுரன்ஸ் எடுக்கவேண்டாம் என்று நினைப்பார்கள் போலிருக்கு. ‘ஹெல்மட்’ அவசியமில்லை என்று சொல்லும் தகுதி, ஆக்சிடன்ட் மருத்துவமனை மருத்துவர்கள்தான் சொல்லத் தகுதியானவர்கள். ஆக்சிடன்ட் எதையும் பார்க்காதவர்களுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?
அடுத்து, அவனவனுக்கு எப்படி ரோடில் வண்டி ஓட்டுவது என்பது தெரியாதா, எதற்கு லைசன்ஸ், பயிற்சி என்ற கண்டிஷன்ஸ், அவனவனுக்கு அவன் உயிரைப் பற்றிய மதிப்பீடு இருக்காதா, எதற்கு ‘தற்கொலை’க்கான சட்டம், அவனவனுக்கு எதற்கு கருணைக் கொலை செய்கிறோம் என்று தெரியாதா, அதற்கு எதற்கு சட்டம் … என்று எல்லாச் சட்டங்களும் தேவையில்லை என்று எழுதுவார்கள் போலிருக்கிறது.
//‘ஹெல்மட்’ அவசியமில்லை என்று சொல்லும் தகுதி, ஆக்சிடன்ட் மருத்துவமனை மருத்துவர்கள்தான் சொல்லத் தகுதியானவர்கள். ஆக்சிடன்ட் எதையும் பார்க்காதவர்களுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்? //
மீண்டும் மீண்டும் தவறான கோணத்திலேயே யோசிக்கிறீர்கள் – எழுதுகிறீர்கள்…
ஹெல்மெட் அவசியம் இல்லை என்று இங்கு யார் கூறினார்கள்…?
நடந்தது என்ன ?
ஒருவர் தன மனைவியுடன் பைக்கில் போன பொழுது காவல் துறை அவரை துரத்தி உள்ளது.
காவலர் ஓங்கி உதைத்ததில் பெண் மரணம் அடைந்தார் .
கேள்வி 1
ஏன் நிற்காமல் போனார் ?
அந்த இடத்தில கிட்டத்தட்ட ஐந்து ஆறு இடங்களில் காவல் துறை நிற்கிறார்கள் .
ஒவ்வொரு இடத்திலும் நிற்க வேண்டுமா ?
கேள்வி 2
இறந்தவர் யார் என்பது கூட அவர்களுக்கு தெரியாது .
உடனே மக்கள் ஒரு 3000 பேர் கூடி விட்டனர் – ஏன் ?
அவர்கள் எல்லோரும் பாதிப்பு அடைந்து கொதிப்பில் இருந்தனர் .
இது தொடர்ந்து நடந்து வந்த ஒன்று .
கேள்வி 3
ஹெல்மெட் ஏன் அவசியம் ?
இதற்கு யாரும் இது வரை சரியான பதில் சொல்லவில்லை .
ஒரு வேளை , ஒருவர் பறந்து போய் தலை குப்புற விழுந்தால்
அப்பொழுது தலையில் அடி படலாம் .
ஹெல்மெட் போட்டால் தலையில் அடி படாது .
ஆனால் ஆள் காலி – கழுத்து உடைந்து விடும் .!
Based on Facts – பைக் விபத்தில் எங்கு அடிபடுகிறது ?
This should be taken from trauma care data ! Not mere supposition
or magisterial pronouncements from court .
கேள்வி 4
ஒரிஜினல் லைஸென்ஸ் வேண்டுமாம் – எதுக்கு ?
வேறென்ன – பிடுங்கிக் கொள்ளத்தான் – ரூ 2000 கேட்கிறார்கள்
தமிழன் மற்றும் புதியவன் சொன்னதில் என்ன நேர்மாறான கருத்துன்னு தெரியலை.
பதில் 1:
ஆமா , ஆறு இடத்திலும் நிக்கணும். மடில கனமில்லைன்னா நிக்கலாம்.
பதில் 2:
அப்படியா? 3000 பேரிடமும் கருத்து கேட்டிங்களா?
பதில் 3:
மண்டைல இருக்கற மூளைய நிறைய பேர் பயன்படுத்தலைனாலும், அடிபட்டா ரத்தம் கட்டி மரணம் நிச்சயம். ஒருவர் பறந்து போய் தான் விழணும்னு அவசியம் இல்லை, சைடுல விழுந்தாலும் தலைலபட்டா மோட்சம் தான். அதை தடுக்க தான் ஹெல்மட் அவசியம்.
90% விபத்து மரணங்கள் தலையில் ஏற்படும் காயங்களால் தான் நிகழ்கின்றன என trauma care data புள்ளி விபரம் சொல்கின்றன.
பதில் 4:
சரி, இந்தா இது ஒரிஜினல், இது காப்பி! பாத்துக்க!னு நீட்ட வேண்டியது தானே? பர்ஸுல வெச்சுக்க கனமா இருக்குமோ?
இப்போ ஹெல்மட் போட்டா என்ன குறைஞ்சு போச்சு? இதுல தட்ப வெட்ப நிலை எங்க இருந்து வந்தது? துபாயில் உயிருக்கு ஒரு மதிப்பு, சென்னைல வேற மதிப்பா? காவலர் செயல் ஒரு போதும் நியாயம் ஆகாது. ஆனா நிறுத்தாம போன கணவன் செயல் எந்த வகையில் சேர்த்தி?
அப்புறம் சைனாவை பாருங்கள்! சிங்கப்பூரை பாருங்கள்!னு பதிவு போட வேண்டியது. அங்கயும் இத மாதிரி யாராவது வி.வாத பதிவு போடறாங்களான்னு அறிய ஆவல்.
இந்த பதிவு தான் விதண்டாவாதத்தின் உச்சம். ஆனால் எதிர்பார்த்தது தான்.
//இந்த சம்பவத்தோடு இனியாவது இந்த அவலம் நிற்கட்டும்.
ஹெல்மட் கட்டாயம் என்கிற விதியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…//
மீண்டும் தவறான கோணத்திலேயே யோசிக்கிறீர்கள் – எழுதுகிறீர்கள்…
ஹெல்மெட் அவசியம் இல்லை என்று இங்கு யார் கூறினார்கள்…?
கா.மை, உங்க பதிவுல நீங்க உதிர்த்த முத்து தானே இது?
// ஹெல்மெட் அவசியம் இல்லை என்று இங்கு யார் கூறினார்கள்…?
கா.மை, உங்க பதிவுல நீங்க உதிர்த்த முத்து தானே இது?
இது முட்டாள்தனத்தின் உச்சம் காவிரிமைந்தன் சார் திரும்ப திரும்ப சொல்கிறார்
ஹெல்மட் வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. ஆனால் கட்டாயப்படுத்தாதீர்கள் என்று. இடுகையில் எங்கேயாவது ஒரு இடம் காட்டுங்கள்
பார்க்கலாம் வேண்டாம் என்று அவர் சொல்வதை ?
“அறிவுகெட்ட முண்டங்கள் ஜாக்கிரதையாக வண்டியோட்டினால்
ஹெல்மட்டுக்கு அவசியம் எங்கே வந்தது ?” என்று இப்போது நான் கேட்கிறேன்.
நீங்க ஹெல்மட் போட்டுக்கிட்டு ஒங்க உயிரை பத்திரமா புடிச்சு வெச்சுக்குங்க.
அடுத்தவன் உயிரை ஏன் வாங்கரீங்க ?
நண்பர்களுக்கு,
விவாதம் பாதை தவறிப்போவதாக தோன்றுகிறது.
இருந்தாலும், பின்னூட்டங்கள் எதையும் நான் நீக்கவில்லை….
தயவுசெய்து, இன்னும் கொஞ்சம் பக்குவமான வார்த்தைகளை
பயன்படுத்துமாறு அனைவரையுமே கேட்டுக்கொள்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்