…
…

…
தங்களைத் தாங்களே கிண்டல் செய்துகொள்வது என்பது அபூர்வமான ஒரு குணம். அதுவும் தங்கள் தோற்றத்தையே கிண்டல் செய்துகொள்ள
அசாத்தியமான தன்னம்பிக்கை வேண்டும் …!!!
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள், தங்களது பர்சனாலிடி (தோற்றம்) குறித்த விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். முடிந்த வரை கவர்ச்சிகரமாக தோற்றமளிப்பதோடு, தங்கள் பலவீனங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கவும் முயன்று முயற்சி எடுப்பார்கள்.
நான் சென்னையில் இருக்கும், கடந்த 12-13 ஆண்டுகளாக மறைந்த
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் கலந்து கொண்ட, சென்னையில் நடந்த
பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் நான் நேரில் கலந்து கொண்டிருக்கிறேன்….
அவரது உடையை பற்றி சொல்லவே வேண்டாம். எப்போதுமே அந்த
மிலிடரி க்ரீன் – பேண்ட்,ஷர்ட்…! பல சமயங்களில் நாம் மறந்திருந்தாலும் கூட, அவரே கிண்டலாக நினைவுபடுத்துவார்…
தனது “முட்டை” கண்கள், மொட்டைத்தலை குறித்து….!!!
அதே போல், ரஜினிகாந்த் கூட தனது வழுக்கைத்தலை, நரைத்த முடி
ஆகியவற்றை மறைத்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை.
இன்னமும் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட தோற்றத்துடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது அபூர்வமே.
அதோடு நில்லாமல், தன்னுடைய தலை, தோற்றம் – தனக்குப் போய் ஐஸ்வரியா ராய் போன்றவர்கள் ஜோடியாக நடிப்பது – குறித்து அவரே கிண்டலாக கூறிய ஒரு வீடியோவை பார்க்க நேர்ந்தது…
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் ..
கீழே பதிக்கிறேன்….
…
.
———————————————————————————————————



தேவையில்லாத இமேஜை இருவரும் விரும்புவதில்லை. பெரியவர்கள் பெரியவர்கள்தாம். ரஜினி, சோ இருவரில், ரஜினி, தான் இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படியே மேடையிலும் தோன்றுவார். சோ அவர்கள், அவர்களுக்கே உரித்தான உடையுடன் எந்த மாற்றமும் இல்லாமல் ஆரம்பம் முதல் தோன்றுவார். இருவரையும் நினைவுபடுத்தியதற்கு நன்றி.
ஐஸ்வர்யா ராய் பற்றி எழுதியது எனக்கு வேறு எண்ணத்தைத் தோற்றுவித்தது. நாம பொதுவா, இந்த இந்த சின்ன வயசு நடிகைகளுடன் ஆடிப் பாடி நடிக்கிறார்களே இந்த நடிகர்கள் என்று கொஞ்சம் பொறாமைப் படுவோம் (அல்லது வயிற்றெரிச்சல் படுவோம்). யோசித்துப் பாருங்கள், சின்ன வயது (அதிலும் மகள் அல்லது சில சமயங்களில் பேத்தி வயது) நடிகைகளுடன் நடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்துபார்த்தால்தான் தெரியும். அந்த மன நிலையை நடிப்பின்போது கொண்டுவருவதற்கு மிகவும் கஷ்டப்படவேண்டும். அதிலும் காதல் காட்சிகளில், படம் பார்ப்பவர்களை ஒன்றவைக்கவேண்டுமானால், அது எவ்வளவு கடினம்? (அவங்க நடிக்கும்போது, நிறையபேர் அவர்களைச் சுற்றி இருப்பார்கள். அதுவே எவ்வளவு கடினம் என்பதை நாம் பார்த்தால்தான் தெரியும். இயல்பா, மனைவியோட அன்பா, பிறர் முன்னால இருப்பதே கடினம்). எந்தத் தொழிலும் கஷ்டமானது. அதில் பொறாமைப் படுவதற்கு ஒன்றுமே இல்லை.
பிங்குபாக்: “துக்ளக்” ஆசிரியர் சோ, ரஜினிகாந்த் – பொதுவான ஒரு குணம்…!!! – TamilBlogs