ஜஸ்டிஸ் லோயா மரணம் – மீண்டும் குறுக்கீடு ….! BBC-க்கு பேட்டி கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி …!



பாஜக தலைவர் அமீத் ஷா சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு… தொடர்ச்சியாக மீடியா கவனத்தில் இருக்கும் வழக்கு.. ஆனாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஏதேதோ தாறுமாறான “செயல்கள்” நிகழ்கின்றன / நிகழ்த்தப்படுகின்றன.

மும்பை உயர்நீதிமன்றத்தில், என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட
ஷோரபுதீன் ஷேக்கின் சகோதரர், அது குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட
முக்கியமான போலீஸ் உயர் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டதை
எதிர்த்து அப்பீல் செய்திருக்கிறார்.

அந்த அப்பீலை 3 வாரங்களுக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி திருமதி ரேவதி மோஹித்-தெரெ – அந்த வழக்கில்
சிபிஐ பொறுப்புணர்வு இன்றி நடந்து கொள்வது குறித்து கடும் கண்டனம்
தெரிவித்திருக்கிறார். விடுதலை செய்யப்பட்டவர்கள் குறித்த பழைய ஆவணங்களை எல்லாம் தனது கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி மீண்டும் மீண்டும் உத்திரவிட்டார். ஆனால், சிபிஐ அவர் கேட்ட ஆவணங்களை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தியது – மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்டது….தாமதப்படுத்தியதன் பின்னணி என்னவென்று இப்போது புரிகிறது….நீதிபதியே மாற்றப்பட்டு விட்டார்.

சிபிஐ ஆவணங்களை சமர்ப்பிப்பதை தவிர்ப்பதை நீதிபதி கண்டித்ததுடன்,
வழக்கை தொடர்ச்சியாக தினசரி விசாரணைக்கும் எடுத்துக் கொண்டார்…. பிராசிகியூஷன் தரப்பு சாட்சிகள் அநேகம் பேர் பிறழ் சாட்சியங்களாக மாறுவது குறித்து சிபிஐ-யிடம் கேள்விகள் எழுப்பினார்….

இன்னொரு முக்கிய திருப்பமாக, அந்த வழக்கு குறித்த செய்திகளை மீடியாக்கள் வெளியிடக்கூடாது என்று முன்னதாக அதே நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையை இவர் விலக்கி, இனி செய்தியாளர்கள் வழக்கு நடப்புகளை வெளியிட எந்த தடையும் இல்லை என்று அறிவித்தார்….!!!

ஒரு நீதிபதி, அதுவும் இந்த வழக்கில் இவ்வளவு வேகம் காட்டலாமா……?

கடந்த திங்கள்கிழமை, வழக்கமான routine transfer என்கிற பெயரில்,
அந்த நீதிபதி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு வேறு
பொறுப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன…!!!

மீண்டும் புதிய நீதிபதி, மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்.
அவருக்கு, முந்தையவர்களின் அனுபவங்கள் தெரியும்… எனவே.
இவராவது, புத்திசாலித்தனமாக செயல்படுவாரென்று சம்பந்தப்பவர்கள்
நினைத்திருக்கக்கூடும்.

————————————————

இது ஒரு பக்கமிருக்க –

மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற நீதிபதி
அபய் திப்சே என்பவர் ஜஸ்டிஸ் லோயா மர்ம மரணம் குறித்து, BBC செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்….

ஷொராபுதீன் ஷேக் வழக்கில் மூன்று முறைகேடுகள் நடைபெற்று இருக்கின்றன என்று அந்த நீதிபதி குற்றம் சாட்டுகிறார்.

அவர் அளித்த பேட்டி குறித்து –
BBC செய்தியிலிருந்து சில பகுதிகள் கீழே –
—————————

நீதிபதி லோயாவின் செல்பேசி அழைப்புகளின் பதிவையும் ஆராய வேண்டும் என்று கூறுகிறார் அபய் திப்சே.

பிபிசி மராத்தி சேவையின் அபிஜித் காம்ளேவிடம் பேசிய அவர் வழக்கில், மூன்று முறைகேடுகள் இருப்பதாக கூறுகிறார்.

“விசாரணை நீதிமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவது முறையல்ல. அவருக்குப் பல ஆண்டுகள் பிணை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லையென்றால் அவர்களால் எளிதாகப் பிணை வாங்கியிருக்க முடியும். அவர்களின் பிணை வேண்டுகோள் பல முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லையென்று சிறப்பு நீதிமன்றம் கூறியது உள்ளது,” என்று அவர் கூறினார்.

அந்த வழக்கு குறித்து செய்தி வெளியிட ஊடகங்களை தடை செய்தது
இரண்டாவது முறைகேடு என்கிறார் அந்த ஓய்வு பெற்ற நீதிபதி. “எந்த வழக்கும் நியாயமாக விசாரணை செய்யப்பட அதை வெளிப்படையாக நடத்த வேண்டும்.

ஊடகங்கள் செய்தி வெளியிடத் தடை வேண்டும் என குற்றம்
சாட்டப்பட்டவர்களே வேண்டுகோள் விடுத்ததும், அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும் வியப்பளிக்கிறது என்கிறார் அபய் திப்சே.

குஜராத் மாநிலத்தில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு வழக்கு விசாரணை
மாற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கடைசிவரை அதே நீதிபதி தொடர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டது.

ஆனால், இந்த வழக்கில் முதல் நீதிபதியின் பதவிக்காலம் முடியும் முன்பே லோயா நியமிக்கப்பட்டார். முதல் நீதிபதி ஏன் மாற்றப்பட்டார் என்று தெளிவுபடுத்த வேண்டும்,” என்று மூன்றாவது முறைகேடு பற்றி அவர் கூறுகிறார்.

நீதிபதி லோயாவின் மரணம் பற்றி பேசும் அவர், “அந்த மரணம்
இயற்கையானதா இல்லையா என்று எதுவும் சொல்ல மாட்டேன். எனினும் , அதில் சில சந்தேகங்கள் உள்ளன. பல சட்ட வல்லுநர்கள் இதில் விசாரணை கோருகின்றனர். எனவே அதை தெளிவுபடுத்த ஒரு விசாரணை வேண்டும்,” என்கிறார் அவர்.

————————————

ஷொராபுதீன் ஷேக் வழக்கு என்றால் என்ன?

ஷொராபுதீன் ஷேக் குஜராத்தில் 2005இல் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக குஜராத் காவல் துறை கூறுகிறது. எனினும், அது போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2010-இல் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஷொராபுதீன் ஷேக்கின் சகோதரர் ரபாபுதீன் ஷேக்கின் வழக்கறிஞர் விடுதலை செய்ததற்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளார்.சுமார் 30 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

( http://www.bbc.com/tamil/india-43180886 )

————–

ஆனால், இவையெல்லாம் தலைப்புச் செய்திகளாகி விடக்கூடாது என்று தான் “விமான நிலையத்திலேயே சுற்றிவளைப்புகள்” போன்ற செய்திகள் முக்கியச்செய்திகளாக ஆக்கப்படுகின்றனவோ …?

————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஜஸ்டிஸ் லோயா மரணம் – மீண்டும் குறுக்கீடு ….! BBC-க்கு பேட்டி கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி …!

  1. பிங்குபாக்: ஜஸ்டிஸ் லோயா மரணம் – மீண்டும் குறுக்கீடு ….! BBC-க்கு பேட்டி கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி …! – TamilBlogs

  2. kalakarthik's avatar kalakarthik சொல்கிறார்:

    அண்ணா
    உங்கள் பதிவுகளை தவறாமல் படிக்கிறேன்.ஆனால் அவை பற்றி நான் அறிந்ததுகுறைவு என்பதால் மறுமொழி இட தயக்கம்.
    அன்புடன்
    கார்த்திக்அம்மா

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கார்த்திக் அம்மா,

      நான் உங்கள் நலன் விசாரிக்கத்தான் விரும்பினேன்.
      நீங்கள் எழுதவில்லையே என்கிற கவலை வேண்டாம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இப்போவே, அந்த வழக்குன்னா என்ன ஏது என்று நீங்கள் விளக்கம் கொடுக்கவேண்டியிருக்கிறது. இதெல்லாம் என்றைக்கு நீதிமன்றங்கள் விவாதித்து, என்றைக்கு தீர்ப்பெழுதி, என்றைக்கு என்றைக்கு…. ஒன்றுக்கும் பதில் கிடையாது.

    கண்ணுக்கு முன்னால் கேபிள் பதித்து கொள்ளையடித்த கேஸே 4 வருடங்களாக கிடப்பில் இருக்கிறது. 2ஜியில் கொள்ளை நடைபெறவில்லை (அதற்கான ஆதாரங்களை துரதிருஷ்டவசமாக சிபிஐ தாக்கல் செய்யவில்லை), பசி தேர்தல் வழக்கில் தகிடு தத்தம் என்று பல்லாயிரக்கணக்கான முக்கிய ஊழல் வழக்குகளே தூங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் ஜஸ்டிஸ் லோயா வழக்கு மாத்திரம் கிடுகிடு என்று நடந்துவிடுமா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      கேபிள் வழக்கைப் பற்றி, புகார் கொடுத்த திரு.குருமூர்த்தி அவர்களே, தாமதத்தையும், அக்கறையின்மையையும் பற்றி எதுவும் பேசாமல் வாய் மூடி மௌனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது….

      பொதுவாகவே, இந்த மாதிரி வழக்குகள், சம்பந்தப்பட்டவர்களை பயமுறுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று தோன்றுகிறது. இல்லையெனில், 400 கோடி புகாருக்கு திருவாளர் ர.ச.பிரசாத் ஒண்ணே முக்கால் கோடிக்கு வழக்கு போடுவாரா…? அதையும் திரு.குருமூர்த்தி அவர்கள் பார்த்துக்கொண்டு கண்டும் காணாமலும் இருப்பாரா…?

      சில பேரை அரசியலுக்கு அப்பாற்பட்டு, நியாயத்திற்கு துணை நிற்பவர்கள் என்று நினைத்தேன்….
      ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது…

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    இந்தியா சுதந்திர நாடு – இங்கு மக்களாட்சி நடைபெறுகிறது .
    நிசமாகவா ?
    இங்கு இன்னும் வெள்ளைகாரத் துரைத்தனம்தான் நடக்கிறது .
    இந்தியா இன்னும் சுதந்திரம் அடையவில்லை .

    போலீஸ் ஆக்ட் 1860 – இன்னும் நடைமுறையில் இருக்கிறது .
    முன்னால் ICS – They are not Indians nor servants என்று அர்த்தம் .
    இன்று வெறுமே பெயர் மட்டும் மாற்றம் .

    நீதி மன்றங்கள் – வெறுமே வாய்தா வாங்க மட்டுமே – நீதி கிடையாது !

    இப்ப சொல்லுங்க – ஏன் குற்றங்கள் இருக்காது ?.

    இந்தியா மக்குகள் பெயரில் நடக்கும் அதிகார ஆட்சி !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.