நிதியமைச்சருக்கும், பிரதமருக்கும் உள்ள பொறுப்பு இவ்வளவு தானா…?


பஞ்சாப் வங்கி மோசடி பற்றி நீண்ட நாட்களாக மௌனச்சாமிகளாக
இருந்த நிதியமைச்சரும், பிரதமரும் – ஒரு வழியாக வாய் திறந்து
விட்டனர்…

நிதியமைச்சர் 10-15 நாட்களுக்குப் பிறகு பொங்கி எழுந்து “ஆடிட்டர்கள்
என்ன செய்து கொண்டிருந்தார்கள்..?” என்று கேட்கிறார்….

// PNB fraud: Arun Jaitley bashes
regulators and auditors
for overlooking Rs 11,400-crore scam //

-நிதியமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை என்று கேட்டவர்களுக்கு வாயைத் திறந்து ஆடிட்டர்களை கிழி கிழியென்று கிழித்து விட்டார்.. இத்தோடு தீர்ந்தது அவர் பொறுப்பு.

அடுத்து பிரதமர்… ஏகப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்,
மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்கிடையே அவர் இதைப்பற்றி பேசியதே
பெரிய விஷயம்…. என்ன சொல்கிறார் பிரதமர்…?

“பொதுப்பணத்தை கொள்ளை அடித்தவர்களை சும்மா விட மாட்டோம்..”

// Narendra Modi breaks silence over PNB scam,
promises strict action against fraudsters
who ‘loot public money’//

-இவர் பொறுப்பும் இத்தோடு தீர்ந்தது… ஆச்சு, அடுத்து கர்நாடகாவில்
எட்டியூரப்பாவை “முக்யமந்திரி” ஆக்க பிரச்சாரத்திற்கு போக வேண்டும்…

இந்த நாட்டு மக்கள் அரசு வங்கியில் இருந்தால் பத்திரமாக இருக்குமென்று மத்தியஅரசை நம்பி டெபாசிட் செய்த –

பதினொன்றாயிரத்து நானூறு கோடி + புதிதாக கிளம்பி இருக்கும்
இன்னும் சில ஆயிரம் கோடி ரூபாய்கள் – கொள்ளையடிக்கப்பட்டதற்கு
நிதியமைச்சரும், பிரதமரும் எடுத்துக்கொள்ளும் அக்கறை இவ்வளவு தான்.

நான் எழுதினால், பாஜக நண்பர்கள் எனக்கு இதே வேலையாகி
விட்டது என்று குறைப்பட்டுக் கொள்வார்கள்…

இதோ தினமணி நாளிதழ் தனது தலையங்கத்தின் மூலம்
கேட்கிறது…. யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்…?

————————————————–

தெரியாமலா நடக்கிறது?
By ஆசிரியர் | Published on : 24th February 2018 01:37 AM

|

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி நடத்தியிருக்கும் மோசடி இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக வங்கித் துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்திய வங்கிகளில் ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு பிரச்னைகள், மோசடிகள், ஊழல்கள் அம்பலமாகி வருகின்றன. இப்போது அந்த வரிசையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் சேர்ந்துகொண்டிருக்கிறது.

அதிகரித்து வரும் வங்கி மோசடிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இப்போதைய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிக்கு முன்னால் 2012 – 13 முதல் 2016 -17 வரையிலான காலகட்டத்தில் இந்திய வங்கிகளில் ஏறத்தாழ ரூ.69,770 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான் இழப்பில் இயங்கும் வங்கிகளின் செயல்பாடுகளை
மேம்படுத்தவும், வாராக் கடன்களால் பாதிக்கப்பட்டிருக்கும் 21 பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்றவும் –

————–
மக்கள் வரிப்பணத்திலிருந்து
ஒரு லட்சம் கோடி ரூபாயை அளித்து உதவுவதற்கு மத்திய அரசு ஒரு
திட்டத்தைக் கடந்த மாதம் அறிவித்தது.
————–

நீரவ் மோடி மோசடியின் தொடர்பாக 10 அதிகாரிகள் இடை நீக்கம்
செய்யப்பட்டிருக்கிறார்கள். சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அளவிலான மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் பணிபுரியும் ஊழியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.

இதற்காக அந்த ஊழியர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் புதியதா என்றால், அதுவும் இல்லை. புரிந்துணர்வு கடிதங்களின் மூலம் பல்வேறு வங்கிகளில் மோசடி நடந்திருக்கும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி நீரவ் மோடி தொடர்பான இந்த மோசடியும் ஏழு ஆண்டுகள் எந்த விவரமும் தெரியாமல் இயங்கி வருகிறது என்று சொன்னால், அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இது குறித்த உயர்அதிகாரிகளுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை
என்பது உண்மையானால், அவர்கள் அந்தப் பதவியில் இருப்பதற்கே
தகுதியற்றவர்கள் என்பதுதான் உண்மை.

————–

இந்த பிரச்னையில் வங்கி நிர்வாகம், வங்கியின் உடைமைதாரரான இந்திய அரசு, வங்கியின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள ரிசர்வ் வங்கி என்று அனைவருமே குற்றவாளிகள்.

————–

வங்கியின் இயக்குநர்கள் குழு, கணக்குத் தணிக்கையாளர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா அரசு வங்கிகளிலும் மேலிருந்து கீழே வரை பரவலாகக்
காணப்படும் பொறுப்பின்மைதான் இதுபோன்ற வங்கி மோசடிகளுக்கு
அடிப்படைக் காரணம்.

இந்திய வங்கிகளில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு கடன் வழங்குவதற்கு, பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

அப்படியிருக்கும்போது, ரிசர்வ் வங்கி எந்த வெளிநாட்டிலும் இல்லாத
புதுமையான ‘புரிந்துணர்வுக் கடிதம்’ என்கிற வழிமுறையை
அறிமுகப்படுத்துவானேன்?

இந்தியாவிலுள்ள ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலவரம்புடன்
வழங்கப்படும் புரிந்துணர்வுக் கடிதத்தின் அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் இந்த முறையின் அடிப்படை.

அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த நபர் வாங்கிய கடனை திருப்பித்
தராவிட்டால், புரிந்துணர்வு கடிதத்தின் அடிப்படையில் கடன் கொடுத்த
வெளிநாட்டு வங்கிக்கு கடிதத்தை வழங்கிய வங்கி, அந்த பணத்தை
கொடுத்தாக வேண்டும்.

இதுபோன்ற கடிதத்தை தங்களது செல்வாக்கால் பெற்று அதன் மூலம்
குறைந்த வட்டியில் கடன் பெற்று வெளிநாடுகளிலிருந்து பொருள்களை
இறக்குமதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி உதவ வேண்டிய அவசியம் என்ன?

பரவலாக அடித்தட்டு மக்களுக்கு வங்கிச் சேவைகள் போய்ச்சேரவில்லை
என்பதால் 1969 ஜூலை மாதம் 14 பெரிய தனியார் வங்கிகள் இந்திரா
காந்தி அரசால் தேசியமயமாக்கப்பட்டன. 1980-இல் மேலும் ஆறு
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

இப்போது நாட்டில் ஏறத்தாழ 80 விழுக்காடு வங்கிச் சேவைகளை அரசு
வங்கிகள்தான் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், நீரவ் மோடி மோசடியைத் தொடர்ந்து இனிமேலும் வங்கிச் சேவையை அரசு நடத்த வேண்டுமா, தனியார் மயமாக்கிவிடக் கூடாதா என்கிற கேள்வி பரவலாகவே எழுப்பப்படுகிறது.

—————-
அரசு வங்கிகளில் ஏறத்தாழ ரூ.9,50,000 கோடி ரூபாய் அளவில் வாராக்கடன் காணப்படுகிறது. இந்த கடனுக்கெல்லாம் காரணம், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள். அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும்
எடுக்கப்படுவதில்லை. கடன் தள்ளுபடி, சலுகைகள், வட்டி தள்ளுபடி
என்று அவர்களைக் கெஞ்சிக் கூத்தாடி அரசு வங்கிகள் பணத்தைத் திரும்பப் பெற எத்தனிக்கின்றன.

————–
அதே நேரத்தில், சாமானிய குடிமகன் வாகனம் வாங்குவதற்கோ, கடன்
அட்டைக்காகவோ வங்கியில் கடனைச் செலுத்தத் தவறினால் அவர்கள் மீது சட்டம் பாய்கிறது என்பது மட்டுமல்ல, பத்திரிகைகளில் அவர்களது படம் வெளியிடப்பட்டு அவமானப்படுத்தபடுகிறார்கள்.

——————–

அத்துடன் நின்றுவிடவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களும், நீரவ் மோடிகளும் வங்கிகளில் மோசடி செய்வதால் ஏற்படும் இழப்பை சாமானியன் வரிப்பணத்தால் அரசு ஈடுகட்ட முற்படுகிறது.

———————

விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் வெறும் அடையாளங்கள்தான்.
இவர்களைப் போல பலர் எல்லா அரசு வங்கிகளையும் சூறையாடிக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஏற்படும் இழப்பை சாதாரண
வாடிக்கையாளர்களை தண்டித்து, வங்கிகள் ஈடுகட்ட முற்படுகின்றன.

———————

மக்களின் சேமிப்பும், மக்களின் வரிப்பணமும் வங்கிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களால் சுரண்டப்படுவதை தடுப்பது எப்படி?

இதற்கான விடை அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் அரசு வங்கிகளின்
நிர்வாகத்திற்கும் தெரியும். நமக்குத்தான் தெரியவில்லை!

———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to நிதியமைச்சருக்கும், பிரதமருக்கும் உள்ள பொறுப்பு இவ்வளவு தானா…?

  1. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    No doubt that Sridevi’s sudden death is a shock to Indian film mass. But I have a doubt why
    this is shown in all TVchannels (both national and local) through the day & night for 3 days
    continiously. If I think that this may be due to divert peoples’ mind on speaking about PNB fraud,
    will that be wrong?

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      ஒவ்வொரு Breaking News-க்கும் பின்னால் ஏதோ ஒரு சதி மறைந்திருக்கிறது. இப்போதிருக்கிற மத்திய அரசு காலங்களில் அது அதிகமாக இருக்கிறது.

      கடவுள் தான் எம் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

  2. John's avatar John சொல்கிறார்:

    Audit of banks should be brought under the perview of CAG.CA s are incompetent.

    • Tamilian's avatar Tamilian சொல்கிறார்:

      They do not have any idea about banking. It is easy to hood wink them . Bank Internal auditors could do a better job. Here the fault lies on the branch who kept the culprits in the same seat for 7 years. Next, the Swift audit and Nostro account audit should have been thorough. We can point out mistakes after the event.

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    இதற்கு தொடர்புடைய ஒரு விவரமான செய்தி தமிழ் ஹிந்து’வில் இப்போது
    வெளிவந்திருக்கிறது. உங்கள் மற்றும் அனைவரின் பார்வைக்காகவும் கீழே தருகிறேன்;

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புதுறையின் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பெங்களூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 10 நாட்களில் நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் சேர்ந்து 30 வங்கிகளில் ரூ. 22 ஆயிரத்து 606 கோடி கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். அதேபோல சாமானிய மக்களின் சேமிப்பு ரூ.5 ஆயிரம் கோடி பொன்சி திட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    ஊழல் குறித்து பேசும் பிரதமர் மோடி, இந்த கொள்ளை மற்றும் தப்பித்தல் குறித்தும் வாய் திறந்து பேச வேண்டும்.

    வங்கிகளின் ஒட்டுமொத்த இடர்தாங்கும் மேலாண்மை பிரிவு, மோசடிகளை கண்டறியும் பிரிவு, முறைப்படுத்தும் பிரிவு ஆகியவை மோடி அரசில் சமரசம் செய்யப்பட்டு இந்த ஊழல்கள் நடந்துள்ளன.

    சட்டத்துக்கு புறம்பாக நடத்தல், கொள்ளையடித்தல், தப்பித்தல் ஆகியவை இந்த ஆட்சியில் சிறப்பாக நடந்து வருகிறது. மாபெரும் ஊழல் கலாச்சாரமும், அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு தொழில்அதிபர்கள் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ சுரண்டல் முறையும் பாஜக ஆட்சியில் நடந்து வருகிறது. இதை மோடி பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

    நிரவ் மோடி, மெகுல் சோக்சி மோசடி குறித்து முன்கூட்டியே பிரதமர் அலுவலகம், அமலாக்கப்பிரிவு அலுவலகம், கார்ப்பரேட் அமைச்சகம், பாஜக ஆளும் மஹாராஷ்டிரா, குஜராத் அரசுகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவர்களின் இருவரின் ஊழல் தொடர்பாக விரிவான புகார்கள் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட பின்பும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    இந்த ஊழல் குறித்து வாய்திறக்காமல் மவுனமாக இருக்கும் மோடிக்கு சில கேள்விகளை முன்வைக்கிறோம். கன்னட மக்களிடம் வாக்குகள் கேட்கும் முன் இதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

    1. மோடி அரசின் கீழ் நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் எப்படி வங்கி முறையை ஏமாற்றினார்கள்?

    2. எப்படி ஒட்டுமொத்த வங்கி முறையை இருவரும் ஏமாற்றினார்கள்? வங்கியில் உள்ள 4 அடுக்கு கணக்குதணிக்கை முறையை மீறி எப்படி இந்த ஊழல் நடந்தது?

    3. நிரவ்மோடி, மெகுல் சோக்சி மீது எழுத்துப்பூர்வமாக புகார்கள் அளித்தும் பிரதமர் அலுவலகம், அமலாக்கப்பிரிவு, குஜராத், மாஹாராஷ்டிரா அரசு ஆகியவை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

    4. மெகுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியவை பாதுகாப்பது யார்?

    5. மெகுல் சோக்சி, நிரவ் மோடி ஆகிய குற்றவாளிகளை பிரதமர் மோடிக்கு தெரியுமா?, அவ்வாறு அறிமுகம் இருந்தால், ஏன் அதைக் கூற மோடி அரசு மறுக்கிறது?

    6. ஏராளமான மக்களை ஏமாற்றி, புகார்கள் தரப்பட்டும், 2017ம் ஆண்டு வைப்ரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை ஏன் அழைப்பு விடுத்தீர்கள்?

    7. நிரவ் மோடியுடனும், மெகுல் சோக்சியுடனும் பாஜக தலைவர்கள் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது?

    இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

    http://tamil.thehindu.com/india/article22868285.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    K.M.sir,

    Here is one more Gift to the Nation ;

    ரூ. 5,280 கோடி ஸ்வாகா

    டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி முறைகேடு புகார் வெளியாகியுள்ள நிலையில், புதிதாக இப்போது மற்றொரு வங்கி மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது. நீரவ் மோடி வழக்கு குறித்து விசாரித்தபோது, விசாரணை அமைப்புகள், அவரது உறவினரான மேகுல் சோக்சி வீடுகளிலும், அவரின் கீதாஞ்சலி குரூப் நகைக்கடைகளிலும் ரெய்டு நடத்தின. அப்போது, பல ஆவணங்களை பறிமுதல் செய்தன.

    அப்போது கீதாஞ்சலி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. முதலீடு என்ற பெயரில் 31 வங்கிகளில் மொத்தம் ரூ.5,280 கோடியை வங்கிகளில் பெற்ற இந்த நிறுவனம், அதை திரும்ப செலுத்தவில்லை என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. தங்களது தகுதி அளவுக்கும் மீறி கீதாஞ்சலி நிறுவனம் இந்த கடன்களை பெற்றுள்ளது. எனவே இதை மேகுல் சோக்சி திரும்ப செலுத்தாமல் விட்டால், வங்கிகள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிவரும்.

    31 வங்கிகளின் கூட்டமைப்பில் ஐசிஐசிஐ வங்கிதான் லீடு வங்கி என்ற பொறுப்பில் உள்ளதாம்.
    2016ல் கீதாஞ்சலி ஜூவல்லரி வாங்கிய கடன் நிலவரம்:
    பஞ்சாப் நேஷனல் வங்கி: 587 கோடி
    ஐசிஐசிஐ வங்கி: 405 கோடி
    கார்பொரேஷன் வங்கி: 297 கோடி
    பேங்க் ஆப் பரோடா: 265 கோடி
    சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா: 206 கோடி
    சிண்டிகேட் வங்கி: 231 கோடி
    கனரா வங்கி: 195 கோடி
    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 176 கோடி

    Read more at: https://tamil.oneindia.com/news/india/another-loan-worth-rs-5-280-crore-not-repaid-gitanjali-31-banks-312781.html

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மணி,

    போதுமே…!!!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  6. பிங்குபாக்: நிதியமைச்சருக்கும், பிரதமருக்கும் உள்ள பொறுப்பு இவ்வளவு தானா…? – TamilBlogs

  7. Tamilian's avatar Tamilian சொல்கிறார்:

    சாதாரணமாக ஒரு ஆள வங்கியை கடன் எனகிற பெயரில் ஏமாற்ற ஒரு வங்கியின மிக முக்கியமான மேல அதிகாரி வழியாகவோ அல்லது அரசியல்வாதி மூலமாகவோ மிக மேலமட்டத்தில அழுத்தங்கள் அஅளிக்கப்பட்டு
    கடனை பெறமுயலவார. நிறைய அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பர. சாதாரணமாக ஏற்கனவே கடன் பெற்று NPA ஆக இருக்கும் நிலையிலுள்ள நிறுவனத்திற்கு புதிய பெயரில் கணக்குகள் துவங்கி கடன் பெற முயல்வர். இதற்கு அதன் அரசியல் தொடர்புகளை பயன்படுத்துவர்.

  8. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    Because mallaya and neerav modi give large donations to Congress and BJP DURING ELECTIONS. they have been allowed to escape. But bank clerical staff all over india, who dont have the power to sanction these big loans are compulsorily transferred for no fault of theirs.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.