திரு.கட்கரி அவர்களின் இலாகாவில் லஞ்சம் … அமெரிக்க கோர்ட்டில் ஒப்புதல்…!!!



இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கொடுத்ததாக சிடிஎம் ஸ்மித் என்கிற அமெரிக்க நிறுவனம், அமெரிக்க நீதிமன்றமொன்றில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பணப்பரிமாற்றம் அந்த அமெரிக்க நிறுவனத்தின் இந்திய கிளையின் நிதி இயக்குநர் கோபகுமார் வழியாக நடந்ததாகத் தெரிகிறது.

அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இதனை அந்த அமெரிக்க நிறுவனம் “அனுமதிக்கப்படக்கூடிய வியாபார செலவுகள்” என்று வர்ணித்துள்ளது.

இந்த விஷயம் வெளியானதையொட்டி, மத்திய விஜிலன்ஸ் கமிஷன்,
இதை முழு அளவில் விசாரிக்குமாறு சி.பி.ஐ. நிறுவனத்திடம் கூறியதன் பேரில், சிபிஐ தனது நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.


துவக்ககட்ட விசாரணையில், இல்லாத சில கற்பனை காண்டிராக்டர்களை போலியாக உருவாக்கி, செய்யாத சில காரியங்களை செய்ததாகக் கூறி,
அதன் மூலம் நெடுஞ்சாலைத்துறை கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்ட சிடிஎம் ஸ்மித் இந்திய கிளையின் அதிகாரிகள்,

அதே பணத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு,
காண்டிராக்டு பெற லஞ்சமாக கொடுத்ததாக தெரிய வந்துள்ளது….!

சப்-காண்டிராக்டர்கள் பெயரைச் சொல்லி வாங்கிய பணத்தோடு நிற்காமல், போலியான வேலைக்கான சர்வீஸ் டேக்ஸ் மூலம் பெற்ற பணத்தையும் சேர்த்து லஞ்சம் கொடுக்க பயன்படுத்தியதாகத் தெரிகிறது….

சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்படும்போது தான் மற்ற விவரங்கள் தெரிய வரும்.

இது குறித்த செய்திகளின் லிங்க் –

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/et-effect-cbi-registers-fir-against-nhai-officials-american-firm-in-1-18-million-graft-case/articleshow/62860413.cms

——————————————————————————————————-
பின் குறிப்பு –

இந்த செய்தியோ, இடுகையோ அமைச்சரின் மீது எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை… ஆனால்,

– இல்லாத சப்-காண்டிராக்டர்களை இருப்பதாக கணக்கில் காட்டுவதும்,
செய்யாத வேலைகளை செய்ததாகச் சொல்லி பணம் பெறுவதும், அந்த பணத்தையே லஞ்சமாக கொடுத்து, பெரிய பெரிய காண்டிராக்டுகளை முறைகேடான முறைகளில் பெறுவதும் –

இந்த அமைச்சரின் இலாகாவில் இன்றும் தொடர்கிறது என்கிற உண்மையை தான் இந்த இடுகை வெளிப்படுத்துகிறது….!!!

அமெரிக்க கோர்ட்டில் வெளிப்பட்ட உண்மையால், இந்த ஒரே ஒரு ஊழல், லஞ்ச விவகாரம் மட்டும் வெளிப்பட்டிருக்கிறது.

இன்னும் வெளிவராத, தொடர்ந்து கொண்டிருக்கும் விவகாரங்கள்
எத்தனையோ….?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திரு.கட்கரி அவர்களின் இலாகாவில் லஞ்சம் … அமெரிக்க கோர்ட்டில் ஒப்புதல்…!!!

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகள், சட்டம், அதிகாரிகள் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள். This also shows quality of people in America, as compared to India. சும்மா, நாம ‘இந்தியர்கள்’ என்று பெருமை பேசினால் போதாது. நமக்கு (பெரும்பான்மையினருக்கு) மனசாட்சி என்று ஒன்று கிடையாது, சோம்பேறிக்கூட்டம், லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிக்கிடக்கும் சமூகம் என்று சொன்னால் அதில் உண்மை இல்லாமலில்லை.

    உலகின் மிகப்பெரிய ஜன’நாயக நாடு என்பதால் மட்டும் பெருமை வந்துவிடாது. அந்த அரசைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் எந்த அளவு புத்திசாலிகள் என்று பார்த்தால், நாம் 200-500 ஆண்டுகள், மேற்கத்தைய நாடுகளைவிடப் பின்’தங்கியிருக்கிறோம்.

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த செய்தியை தொடர்ந்து சென்று வேறு இடங்களில் இன்னமும் விரிவாக படித்தேன். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்திருப்பது சுமார் 2 முதல் 4 சதவீதம் வரை என்கிறார்கள்.

    suppose 2 % = 8 கோடி என்றால், 100 % – அதாவது இவர்கள் லஞ்சம் கொடுத்து பெற்ற ப்ராஜெக்ட்-காண்டிராக்டின் மொத்த மதிப்பு சுமார் 400 கோடி என்றாகிறது.

    ஆக, 400 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நெடுஞ்சாலைத்துறை ப்ராஜெக்டுகளை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமே பெற்று விட முடிகிறது.

    அப்படியானால், மந்திரிகள் அளவில் லஞ்சம் கொடுத்தால், எத்தனை கோடி
    ப்ராஜெக்டுகளையும் சுலபமாகப்பெற முடியும்…

    காண்டிராக்டர்கள் அதை முயற்சி செய்யாமலா இருந்திருப்பார்கள்…?
    மந்திரிகளும் என்ன சந்நியாசியா – வேண்டாம்.. சீ.. தள்ளிப்போ..
    என்று சொல்ல …?

    எந்த அரசு வந்தாலும், லஞ்சத்தை ஒழித்து விட்டதாக சொல்வதை
    எந்த அளவிற்கு நம்பலாம் என்பதற்கு இந்த சிடிஎம் ஸ்மித் ஒரு எடுத்துக்காட்டு…!

  3. DeathBirthRaceR's avatar DeathBirthRaceR சொல்கிறார்:

    கட்காரி – சாலையோரமரம் நடும் திட்டம் – இதையெல்லாம் பிறந்த தேசபக்திக்கு செயல்புரிந்தாரா நம்பிக்கையாக சொல்லும் வாக்கை பயன்படுத்திகொள்ளாத பாமர கூட்டம் உள்ளவரை உலகம் இப்டிதானய்யா – நானே நம்பிக்கை திறமைக்கு ரொம்ப விலை கொடுத்தவன் எளிமைக்கும் 👍

  4. tamilalagu's avatar tamilalagu சொல்கிறார்:

    sir ,
    can you write an article about problem in punjap bank, as we are unable to understand the problem

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      நிச்சயம் அடுத்தது அந்தச் செய்திதான். விஜய் மால்யா, நீரவ் மோடி (அதுக்கு முன்னால இன்னொரு ஐபில் லலித் மோடி) வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள், பாஜக அரசில்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.