…

…
நேற்று திருவாளர் சு.சு. போட்ட ட்விட்டரிலிருந்து புதிய
வதந்திகள் கிளம்புகின்றன…

திரு.ஸ்டாலினும், திரு.தினகரனும் சேர்ந்து கூட்டணி அமைத்து, எடப்பாடியாரின் ஆட்சியை கவிழ்த்து விட்டு, புதிய, திமுக+திவாகரன் அதிமுக கூட்டணி ஆட்சியை
அமைக்கப்போகின்றன என்று….
செய்தித்தாள்கள் வதந்தியை பெரிதாக்குகின்றன –
// திமுக- காங்கிரஸ்- முஸ்லிம் லீக் கட்சிக்கு
98 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போதைய நிலையில்
தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களும் எதிர்க்கட்சிகளும்
இணைந்தால் பெரும்பான்மைக்கு தேவையான
117 எம்.எல்.ஏக்கள் எளிதாக கிடைத்துவிடும். //
// இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும்
டிடிவி தினகரனும் இணைந்து சில நாட்களில் கூட்டணி
ஆட்சி அமைப்பார்கள் என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான
சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பரபரப்பான தகவலை
பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஸ்டாலின் தரப்பும் தினகரன் தரப்பும் பேசி வருவதாக கூறப்படுகிறது.//
இது திருவாளர் சு.சு.வேண்டுமென்றே கிளப்பி விடும் புரளி
என்பதை இரண்டு முக்கிய காரணங்கள் விளக்கி விடும்…
1) அதிகாரபூர்வமாக, தினகரன் குழு, ஆளும் அதிமுகவிலிருந்து
பிரிய வேண்டுமானால், அதற்கு குறைந்த பட்சம் மூன்றில்
ஒரு பங்கு உறுப்பினர்கள் தினகரன் பின்னால் சேர வேண்டும்…
அதாவது குறைந்த பட்சம் 45 எம்.எல்.ஏ.க்கள். தற்போதைய
சூழ்நிலையில் அது நடக்க வாய்ப்பு இல்லை. குறைந்த பட்சம்
மூன்றில் ஒரு பங்கினர் பிரியாவிட்டால், கட்சித்தாவல் தடை
சட்டத்தின்படி அவர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை
இழப்பார்கள்.
2) தினகரன் குழுவினரின் ஆதரவோடு, திரு.ஸ்டாலின் ஆட்சி
அமைக்க முன்வந்தால், அது திரு.ஸ்டாலின் அவர்களின்
அரசியல் தற்கொலைக்கு ஈடாகும். இதை ஸ்டாலின் அவர்கள்
நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதனால் தான் அவர் திமுக
சார்பாக “நம்பிக்கை இல்லா தீர்மானம்” கூட கொண்டு வராமல்,
எடப்பாடி அரசே “நம்பிக்கை தீர்மானம்” கொண்டு வரவேண்டும்
என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்…
உண்மை நிலவரம் இப்படி இருக்க, திருவாளர் சு.சு.
இப்படி புரளி கிளப்ப காரணம் என்ன….?
பாஜக தலைமையின் சார்பாக சென்னையில் எடப்பாடி மற்றும்
ஓபிஎஸ் ஆகியோரின் இணைப்பை முனைந்து செயல்படுத்தி
வரும் சென்னை ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் மீது,
தன்னை ஒதுக்கி விட்டு, அவருக்கு பாஜக டெல்லி தலைமை கொடுத்து வரும் முக்கியத்துவம் காரணமாக திருவாளர் சு.சு.வுக்கு ஏற்பட்டுள்ள “கடுப்பு+எரிச்சல்” மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
நிஜத்தில், திருவாளர் சு.சு.வின் இந்த புதிய புரளிக்கு வேறு
எந்தவித அடிப்படையும் இல்லை என்றே சொல்லலாம்..!!!
ஆனால், திருவாளர் சு.சு. இத்தகைய வதந்தியை
கிளப்புவதன் மூலம்,
தன்னால், மாற்று ஆட்சியை அமைக்க இயலும் என்று ஆசை
காட்டி, திருவாளர் தினகரன், தங்கள் பக்கத்திற்கு இன்னும் கொஞ்சம் எம்.எல்.ஏக்களை இழுக்க உதவுகிறார்…
சு.சு.வின் நோக்கங்களில் அதுவும் ஒன்றாக கூட இருக்கலாம்.
இந்த திரு.சு.சு.வின் ட்விட்டர் குறித்து தினகரன் அவர்களின்
re-action –
// தேனியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கட்சிக்கு எது சரியோ அதை
செய்ய சசிகலா எனக்கு அதிகாரம் தந்துள்ளார்.
சுப்பிரமணிய சுவாமி நான் மதிக்கிற தலைவர்களில் ஒருவர்.
மிகவும் துணிச்சலாக கருத்துகளை தெரிவிப்பவர். தனக்கு சரி
எனப்படுவதில் உறுதியுடன் இருப்பவர். தமிழகத்தின் நலனை
கருத்தில் கொண்டு சு.சுவாமி கருத்து தெரிவித்திருப்பார்.
அதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு நான் ஜோதிடரோ அல்லது
அரசியல் நிபுணரோ அல்ல. அது அவரது சொந்த கருத்து என்றார் தினகரன்.// 🙂 🙂



உங்களுடைய ரீசனிங் சரியாகத்தான் இருக்கிறது.
1. அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள், திமுகவை ஆதரிப்பது என்பது அதிமுக எம்.எல்.ஏக்களாலேயே ஜீரணிக்கமுடியாத ஒன்று (இங்கு நான் வாடகை மனிதர்களான வெற்றிவேல், நாஞ்சில் சம்பத் போன்றவர்களைப் பற்றிப் பேசவில்லை. தங்க தமிழ்ச்செல்வனுக்கு உள்ளூர் பாலிடிக்ஸில் ஓபிஎஸ் அவர்களை வெறுக்கலாம்).
2. சாதியை முன்னிருத்தி யாரும் தமிழக முதல்வராக ஆக இயலாது. ஜெ. இருந்தபோதே, தேவர்கள்/முக்குலத்தோர் அதிமுகவை ஆதரிக்கிறார்கள் என்று பெரிய வதந்தி பரவியது. அதனால் சசிகலா/மன்னார்குடி கும்பலுக்கு முதலைமைச்சர் பதவி என்பது கனவுதான்.
3. ஸ்டாலின் மிக மிக அவசரப்படுகிறார். அவர் தலைமையில் இன்னும் திமுக வெற்றிபெறவில்லை என்ற பழிச்சொல்லிலிருந்து தப்பிக்க.
சுப்பிரமணியம் சுவாமி, அவருடைய ட்வீட்களையும், அவரது கடந்த நிலைப்பாடுகளையும் பழைய பேப்பர்களின்மூலம் படித்தால், அவர் ஏன் ‘யாருக்குமே நம்பிக்கை இல்லாதவராக’ ஆகிப்போனார் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். சு.சுவாமி எப்போதுமே பெருச்சாளிதான், அதனால் அரசு/முக்கியக் குழு என்ற கட்டுச்சோற்றில், சு.சுவாமி எப்போதுமே சேர்க்கப்பட மாட்டார். (இங்கு அவர் Delhi Arm Twisting என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளார். இப்படி வெளிப்படையாக பாஜக பிரமுகர் சொல்லுவது, நேரடியாக பிரதமரையும் கட்சித் தலைவரையும் தாக்குவதற்கு ஒப்பாகும்.-However பாஜகவின் பங்கு எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்-சு.சுவாமி, ஓய்வுபெற்ற கட்ஜுவின் பேச்சுக்களுக்கு உள்ள மதிப்பைத்தான் இப்போதும் பெறுவார்)
நான் நினைப்பது சரியானால், ‘திராவிடச் சிந்தனை’ என்ற குடையின்’கீழ் திருமா, வைகோ போன்றவர்கள் (ராமதாஸ் இல்லாத அன்புமணியும் இப்படி முடிவெடுக்கலாம்) ஸ்டாலினை முதல்வராக ஆக்குவதில் கொண்டுபோய்விடுவார்கள் (as against what they were spending their energy so far)
திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் லேடஸ்ட் ட்வீட் –
// I advise EPS if he does not want to facilitate DMK in power to accept Sasikala as leader and be grateful for being made CM by AIADMK.
3:46 AM – 28 Aug 2017
————————————–
SO SORRY DOCTOR S.S…. You are TOO LATE…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சு.சுவாமிக்கு என்று ஒரு destructive mind உண்டு. ‘என்னை ஆட்டைக்குச் சேர்த்துகலையா…. உங்களுக்கு எதிராக, நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எல்லாக் கெடுதல்களும் பண்ணுகிறேன்’ என்பது. அவர் யாருக்கும் ‘நேர்மையான’ ஆளாக இருந்ததில்லை. அதனால்தான் இயற்கை, அவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது. இல்லாவிட்டால், அவரது அனுபவத்திற்கும் படிப்புக்கும், “உதவி ஜனாதிபதி” அல்லது மத்திய மந்திரி என்ற அந்தஸ்திலேயே வைத்திருந்திருக்கும். அவர் யாருக்கும், அவர் மனசாட்சி உள்பட யாருக்கும் விசுவாசமானவராக இருந்ததில்லை.
நேற்று கட்சியில் சேர்ந்த கிரண்பேடி இன்று கவர்னர். ஆரம்பத்திலே இருந்தே கட்சியில் இருக்கும் சு.சுவாமி இப்போது ட்வீட் அட்மினிஸ்டிரேடர்.
காடுகள்ல, இரண்டு மான்கள் சண்டை போட்டுக்கொண்டால், அதனால் சிங்கத்துக்கோ புலிக்கோ லாபம்தான். சிங்கத்தைக் குறை சொல்லி என்ன பிரயோசனம்? ஓபிஎஸ்ஸையும் ஈபிஎஸ்ஸையும் பலவீனப்படுத்துகிற மன்னார்குடி கும்பலைத்தானே குறை சொல்லவேண்டும்.
தினகரன் நிச்சயமாக ஸ்டாலினுக்கு வலை வீசுகிறார். அவரது நடவடிக்கைகள், பேச்சுகளிலிருந்து அது தெரிகிறது. எப்படியாவது புதிய ஆட்சியில் தன்னுடைய influence இருக்க வேண்டும் என்பது அவரது தீவிர எதிர்பார்ப்பு.
ஆனால், ஸ்டாலின் நிச்சயம் வெளிப்படையாக தினகரனுடன் சேர மாட்டார். அதிமுக அணிகள் தங்களுக்குள்ளாகவே முட்டி மோதிக்கொண்டு ஆட்சி கவிழ வேண்டும் என்பதே அவர் ஆசை.
சு.சு. உதவி செய்வாரா?
தன் சித்தியை/சின்னம்மாவை சிறைக்கு அனுப்பிய சு.சுவாமியை இப்போது
கொண்டாடுகிறார் டினகரன். அப்படியென்றால் என்ன அர்த்தம் ?
என் நீங்க குருமூர்த்தி என்று பெயரை சொல்ல வேண்டியது தானே….
இவர்கள் இருவரும் சேர்ந்து விடக்கூடாது என்று நீங்கள் ஆசைப்படுகீறீர்கள்…அப்படித்தானே
இன்னுமா உங்களுக்கு சந்தேகம் ?