உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி பாடிய “ஆவாரா” இந்தி பாடல்…!!! (என் விருப்பம் – 11 )


இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் எனக்கு
ஒரு பாடல் வீடியோவை மெயிலில் அனுப்பி இருந்தார்.
என் ரசனைகள் குறித்து நன்கு தெரிந்தவர் அவர்.

உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி பாடும் ஒரு பழைய இந்தி
பாடல் பார்… என்று எனக்கு எழுதி இருந்தார்.

அதில் கோட்,சூட் போட்ட ஒருவர் இந்தி நடிகர் ராஜ்கபூரின்
மிகப்புகழ் பெற்ற பழைய பாடலான (முகேஷ் பாடியது)
“ஆவாரா ஹூன் ” பாடும் நிகழ்வு இருந்தது.

வெளிநாட்டுக்காரர் ஒருவர், அதுவும் ஒரு நாட்டின் ஜனாதிபதி
– நம்ம ஊர் பாடலை பாடுவதை பார்க்க எனக்கு ஒரே
ஆனந்தம். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
இடுகையில் போட வேண்டும் என்று நினைத்தேன்….

ராஜ்கபூர் அந்த காலத்தில் (1960 -களில் ) ரஷ்யாவில்
மிகவும் புகழ் பெற்றிருந்தார். அந்த காலத்து ரஷ்யர்கள்
இந்தியாவில் – நேருஜியையும், ராஜ்கபூரையும் மட்டுமே
அறிந்திருந்தனர் – விரும்பினர். ரஷ்யாவின் ஒரு பகுதியாக
இருந்த உஸ்பெகிஸ்தானில் ராஜ்கபூர் பாடல் பிரபலமாக
இருந்தது எனக்கு ஆச்சரியமாக இல்லை.

ஆனால், திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது. பாடுபவர்
முகத்தில் தெரிந்த innocence…
ஒரு அரசியல்வாதியின், அதுவும் ஒரு நாட்டின்
ஜனாதிபதியின் முகம் அவ்வளவு அப்பாவித்தனமாக
இருக்குமா…?

உடனே வலைத்தளத்திற்கு சென்று உஸ்பெகிஸ்தான்
ஜனாதிபதியின் புகைப்படத்தை தேடினேன். அவர் முகம்
வித்தியாசமாக இருந்தது… குழப்பம்…
பின் ஒரு வேளை இது you-tube- ல் இருக்கிறதா பார்ப்போம்
என்று தேடினேன்… கிடைத்தது….

அங்கேயும் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி பாடும் பாடல்
‘ஆவாரா ஹூன்’ என்று தான் தலைப்பிடப்பட்டிருந்தது.
குழப்பம் நீடிக்க, இன்னும் சில வீடியோக்களை பார்த்த பிறகு
தெரிந்தது – இதை பாடியவர் ஜனாதிபதி அல்ல…
உஸ்பெகிஸ்தானில் மிகவும் பிரபலமான
Bobomurod Hamdamov என்கிற வேறொரு பாடகர்

முதலில் ஜனாதிபதி ( …!!!) பாடும் பாடல் –
அதன் பிறகு கீழே ஒரிஜினல் பாடகர் பாடும் இன்னொரு
பாடல்….

https://youtu.be/rps-IzeGaas

….

Mera Joota Hai Japani (REMIX) – Uzbek Singer Bobomurod
Hamdamov

https://youtu.be/yEYMbofPL6s

கீழே ரஷ்ய மக்கள் ராஜ்கபூருக்கு காட்டும் அன்பையும்,
வரவேற்பையும் பிரதிபலிக்கும் ஒரு குறு வீடியோ –

Rare footage – Raj Kapoor – Uzbek (USSR) singing Rafi & Mukesh

————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி பாடிய “ஆவாரா” இந்தி பாடல்…!!! (என் விருப்பம் – 11 )

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    சில சமயம் youtube-ல் இதுபோல் நடக்கிறது.

    உங்கள் விருப்பம் எப்போதுமே அருமை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.