யாருக்கு மகிழ்ச்சி…பெருமை…. பாரம்பரிய நகர அறிவிப்பில் -?


இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக குஜராத்
மாநிலத்தின் அகமதாபாத் நகரம் யுனெஸ்கோவால், தேர்வு
செய்யப்பட்டிருப்பதாகவும்,

அதில் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சி அடைவதாகவும்
சில ‘பெரிய மனிதர்கள்’ ட்விட்டர் மூலம் மகிழ்ச்சி
தெரிவித்திருக்கிறார்கள்….



அஹமதாபாத் 600 ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான்
உருவான ஒரு நகரம்…

அதைவிட புராதனமான,
அதைவிட கலாச்சார, சரித்திர பெருமை உடைய,
அதைவிட உலகப்புகழ் பெற்றவை
இந்த இந்திய நகரங்கள் –
( இதைத்தவிர – இன்னமும் சிலவும் இருக்கின்றன…)

வாரணாசி ( காசி )-
-கௌதம புத்தர், புத்த மதத்தை கி,மு.528 -ல்
அதாவது சுமார் 2545 வருடங்களுக்கு முன் இங்கு தான்
ஸ்தாபித்தார் என்று சரித்திரம் கூறுகிறது ( புராணங்களை
இங்கு விட்டு விடுவோம்…)

உஜ்ஜயின் –
கி.மு.6-வது நூற்றாண்டிலேயே (அதாவது 2600 ஆண்டுகளுக்கு
முன்னரே ), இந்த நகரம் இருந்ததாக சான்றுகள்
கிடைத்திருக்கின்றன…. (கவி காளிதாசனையும், சாகுந்தலத்தையும் மறந்து விடுவோம்….)

மதுரை –
கடைச் சங்க காலத்திய தமிழ் நகரம் –
மெகஸ்தனீசும், குப்தர் காலத்து சாணக்கியரும்,
3-வது நூற்றாண்டிலேயே ( 2300 ஆண்டுகளுக்கு முன்னர்)
தங்கள் எழுத்துக்களில் மதுரையை பற்றி கூறி
இருக்கிறார்கள்.

பாட்னா (பாடலிபுத்திரம்)-
கி.மு.490-ல், அதாவது சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர்,
மகத மன்னர்களால் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற
மௌரிய சாம்ராஜ்யம் வளர்ந்தது இங்கு தான்…

தஞ்சாவூர் –
பண்டைய சோழ நாட்டின் தலைநகர் –
ஆட்சியில் இருப்பவர்கள் மறந்து விட்டாலும் கூட,
உலகம் நினைவில் வைத்து போற்றும், 985-ஆம் ஆண்டு
கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் இருப்பது இங்கு தான்…

அயோத்தி –
இன்றைய விஷயங்களை தள்ளி விடுவோம். புராணங்களையும்
மறந்து விடுவோம்…. கி.பி.6-ம் நூற்றாண்டில் குப்தர்களின் காலத்திய நகரம் இது. காளிதாசன் “ரகுவம்சம்” பாடிய ஊர்….

காஞ்சிபுரம் –
மௌரியர் காலத்திய பட்டயங்களில் ( கி.மு.320 -128 )
காஞ்சியின் பெயர் காணப்படுகிறது. கி.பி.6-ம் நூற்றாண்டில்
பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியதற்கு சான்றுகள்
இருக்கின்றன…( மாமல்லபுரத்தை மறந்து விடுவோம்…!!! )


இந்த “அஹமதாபாத்” அறிவிப்பினால் –
குஜராத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடையலாம்…
“பக்தர்”களும் பெருமகிழ்ச்சி அடையலாம்.,
ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்…!!!

ஆனால் –

– எங்களை மறந்தது எப்படி
என்று மேற்படி ஊர்களைச் சேர்ந்தவர்கள்,
மேற்படி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கேட்கக்கூடும்…

– அவர்கள் விஷயம் புரியாதவர்கள்… கேட்கலாம்…!

– ஆனால் நமக்கு புரிகிறது …..
எப்படி, ஏன் – கிடைத்தது என்று…!!!
எனவே நாம் அப்படியெல்லாம் கேட்கமாட்டோம் …

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

42 Responses to யாருக்கு மகிழ்ச்சி…பெருமை…. பாரம்பரிய நகர அறிவிப்பில் -?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சரியான கருத்து. அஹமதாபாத் மிகச் சமீபத்தில் (600 ஆண்டுகளுக்குள்) பெயரிடப்பட்ட நகரம். நீங்கள் குறிப்பிட்ட நகரங்களில் இப்போதும் காணப்பெறும் பழைய கலைவடிவங்கள் உள்ளன.

    மதுரை 3-வது ‘நூற்றாண்டு-இல்லை கி.மு என்று வந்திருக்கவேண்டும். மிகப் பழைய வெளி நாட்டு நூல்களில் மத்ரா என்று குறிப்பிடப்படுகிறது மதுரை.

    காஞ்சி, உஜ்ஜயினி, காசி(வாரணாசி), மதுரா (வட மதுரை), பாடலிபுத்திரம், மதுரை போன்றவை மிகத் தொன்மையானவை. தஞ்சையில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடமே (பெரியகோவில்) இருக்கிறது. சமீபத்தில் படித்ததில், குஜராத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். இப்போது குஜராத்தில் உள்ள நகரத்தைத் தொன்மையானதாக அறிவிக்கச் செய்கிறார்கள் (ஐ நாவுக்கோ அல்லது இதற்கு ஆதரவு தெரிவித்த தேசங்களுக்கோ இந்தியாவின் வரலாறு தெரியுமா என்பதே தெரியவில்லை). இன்னும் கொஞ்ச வருடத்தில் இந்தியாவின் தொன்மையான மொழி, சமஸ்கிருதம், குஜராத்தி……… என்று வரிசைப்படுத்தி கடைசியாக, இந்தியாவில் தமிழ் என்ற மொழியில் பேசும் மக்களும் வசிக்கிறார்கள் என்று வரலாறைத் திரிக்காமல் இருந்தால் சரிதான்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ‘Proud Moment for Every Indian’ என்று அமித் ஷா அவர்கள் சொல்கிறார்கள். எப்படி இப்படி வெட்கமில்லாமல் சொல்லமுடிகிறது? அவருடைய தலைவரே, பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி சென்றுவந்தார். காஞ்சீபுரம், ‘நகரேஷு காஞ்சி’ என்று பெயர் பெற்ற மிகத் தொன்மையான நகரம். இடங்கள் என்று பார்த்தால் ராமேஸ்வரமும் தொன்மையானது.

    பேய்……… பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

  3. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam சொல்கிறார்:

    இருபது வருடங்களாக எடுத்த முயற்சி என்று சொல்லப்படுகிறது. இதற்கும் இப்போது பிஜேபி அரசு ஆள்வதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐ.நா. எடுத்த முடிவு! அவங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. பரிந்துரைகளை இந்தியாவிலிருந்து அனுப்பி இருக்கலாம். கிட்டத்தட்ட 20 நாடுகள் இந்தத் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. துருக்கி, போர்ச்சுகல், தென்கொரியா,ஜிம்பாப்வே, க்யூபா போன்றவை கூட ஆதரவு கொடுத்திருக்கின்றன. 🙂

    • சேதுராமன்'s avatar சேதுராமன் சொல்கிறார்:

      சிலர் சகட்டுமேனிக்கு எதற்கெடுத்தாலும் முட்டாள்தனமாக ஆதரவு
      கொடுப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.
      //இதற்கும் இப்போது பிஜேபி அரசு ஆள்வதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை//
      எவர் சொன்னது அப்படி ? எப்படி உங்களுக்கு தெரியும் சம்பந்தம் இல்லையென்று ? நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கிறீர்களா ?
      தேர்ந்தெடுப்பது unEsco சார்பாக இருக்கலாம். முடிவு செய்வது அவர்களாக இருக்கலாம். ஆனால்,
      ஒரு நாட்டின் சார்பாக அதன் “heritage cities” எவை என்று UnescO-வுக்கு
      பரிந்துரை செய்வதில் மத்திய அரசுக்கு பொறுப்பிருக்கிறதா இல்லையா ?
      காசியைவிட, உஜ்ஜையினை விட, காஞ்சியை விட, மதுரையைவிட,
      தஞ்சையைவிட,அயோத்தியை விட, பாடலிபுத்திராவை விட
      “அஹமதாபாத்” இந்தியாவின் சிறந்த தொன்மையான நகரம் என்று
      முதலில் நீங்கள் நம்புகிறீர்களா ?
      இறைவா – என்று தணியும் இந்த அடிமைகளின் மோகம் ?

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Geetha Sambasivam,

    நண்பர் சேதுராமன் முந்திக் கொண்டு விட்டார். நான் இன்னும்
    கடுமையாகச் சொல்லி இருப்பேன்.

    இப்படி எழுத வெட்கமாக இல்லை உங்களுக்கு…?

    // துருக்கி, போர்ச்சுகல், தென்கொரியா,ஜிம்பாப்வே, க்யூபா போன்றவை கூட ஆதரவு கொடுத்திருக்கின்றன//

    முதலில் நீங்கள் ஏற்கிறீர்களா…? ஆதரிக்கிறீர்களா ..?

    இவர்கள் ஆதரவு கொடுக்கும் நிலை எப்போது வரும்…?
    இங்கிருந்து பட்டியல், பரிந்துரை போன பிறகு தானே –
    அவர்கள் YES or NO சொல்ல முடியும் ?

    பட்டியலை அனுப்பியது யார்…? அப்போது, உரிய முறையில் அதை மத்திய அரசு பரிசீலித்திருக்க வேண்டாமா…? மாநில அரசு நேரடியாக unesco -வுக்கு அனுப்ப முடியுமா…?

    இரண்டு குஜராத்தியர்கள் சேர்ந்து – இந்தியாவின் சரித்திரம், பூகோளம் அத்தனையையும் மாற்றி விட முடியுமா ?

    வெட்கக்கேடு… அதற்கு ஜால்ரா போடவும் ஏகப்பட்ட பேர் இருப்பது தான் இந்த முறைகேடுகளுக்கெல்லாம் அடிப்படை.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Geetha Sambasivam's avatar Geetha Sambasivam சொல்கிறார்:

      :)))))) New Delhi, Mumbai ஆகியன கூட இந்தப் பட்டியலில் இருந்த நகரங்கள். டெல்லி நகரம் இந்திரப் பிரஸ்தம் என்ற பெயரில் மஹாபாரத காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படுவது! :)))) ஆனாலும் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதை மோதி அரசு தான் தேர்ந்தெடுத்தது எனச் சொல்வது உண்மை என நீங்கள் நம்புகையில் அப்படி இல்லை என நம்புவதற்கு எனக்கும் உரிமை உண்டு. இதற்கு வெட்கம் ஏன் என்றும் தெரியவில்லை! ஜால்ரா போடுவதும் இல்லை. இத்தனைக்கும் நான் மதுரைக்காரி! எனக்கு மதுரையின் மேல் இருக்கும் பற்று என்னைப் பற்றி அறிந்தோர்க்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை முதல்முறையாக இந்திய நகரம் ஒன்று யுனெஸ்கோவால் ஏற்கப்பட்டுள்ளது என்பதே முக்கியமான விஷயம்!

      • Geetha Sambasivam's avatar Geetha Sambasivam சொல்கிறார்:

        நீங்களோ, அல்லது திரு சேதுராமன் அவர்களோ எத்தனை கடுமையாகச் சொல்லி இருந்தாலும் அது உங்கள் கருத்து என நான் பதில் கூறாமலே போய்விடுவேன். உங்கள் கருத்து என்னை என்ன செய்யும்? :)))))

        • Geetha Sambasivam's avatar Geetha Sambasivam சொல்கிறார்:

          //இரண்டு குஜராத்தியர்கள் சேர்ந்து – இந்தியாவின் சரித்திரம், பூகோளம் அத்தனையையும் மாற்றி விட முடியுமா ?//

          நீங்களே கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள்! இவர்கள் இருவரும் சேர்ந்து மாற்றி இருக்க முடியாது என! அப்படி இருக்கையில் என்ன வருத்தம்? :)))))

          • சேதுராமன்'s avatar சேதுராமன் சொல்கிறார்:

            //இரண்டு குஜராத்தியர்கள் சேர்ந்து – இந்தியாவின் சரித்திரம், பூகோளம் அத்தனையையும் மாற்றி விட முடியுமா ?//

            நீங்களே கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள்! இவர்கள் இருவரும் சேர்ந்து மாற்றி இருக்க முடியாது என! அப்படி இருக்கையில் என்ன வருத்தம்? :)))))//

            ரொம்ப புத்திசாலித்தனமாக பதில் சொல்லி விட்டதாக நினைத்துக் கொள்ள
            வேண்டாம். “இருவரும் சேர்ந்து மாற்றி இருக்க முடியாது என” காவிரிமைந்தன் கூறவில்லை… நீங்கள் உங்கள் வசதிக்கு மாற்றிக் கொள்கிறீர்கள். இது புரட்டல் அரசியல்வாதிகள் செய்யும் வேலை.
            உங்களுக்குஎதற்கு ?

            கா.மை. சொன்னது –
            இரண்டு குஜராத்தியர்கள் சேர்ந்து – இந்தியாவின் சரித்திரம், பூகோளம் அத்தனையையும் மாற்றி விட முடியுமா ?

        • சேதுராமன்'s avatar சேதுராமன் சொல்கிறார்:

          எங்கள் கருத்து உங்களை ஒன்றும் செய்யாது;
          ஆனால் உங்கள் கருத்து தவறானது என்பதை
          மற்றவர்களுக்கு புரியச்செய்யும்.

      • சேதுராமன்'s avatar சேதுராமன் சொல்கிறார்:

        // என்னைப் பொறுத்தவரை முதல்முறையாக இந்திய நகரம் ஒன்று யுனெஸ்கோவால் ஏற்கப்பட்டுள்ளது என்பதே முக்கியமான விஷயம்!//

        50-வதாக வந்தவனுக்கு முதல் பரிசு கொடுத்தாலும் அதை ஏற்றுக்
        கொள்வீர்களா ?

  5. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam சொல்கிறார்:

    உலகப் பாரம்பரியக் களத்தில் தமிழ்நாட்டின் புராதனக் கோயில்கள் அனைத்தும் ஏற்கெனவே உள்ளன. கீழே பட்டியல் தந்திருக்கிறேன். சோதித்துத் தெரிந்து கொள்ளலாம். நன்றி விக்கிபீடியா!

    ஆக்ரா கோட்டை (1983)[1]உத்தரப் பிரதேசம்
    அஜந்தா குகைகள் (1983)[2] மகாராட்டிரம்
    சாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள்[3]மத்தியப் பிரதேசம்
    சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா[4] குஜராத்
    சத்திரபதி சிவாஜி முனையம் (முன்னதாக விக்டோரியா முனையம்)[5] மகாராட்டிரம்
    கோவாவின் மாதாக்கோயில்களும் கன்னிமாடங்களும்[6]வெல்ஹா கோவா (பழைய கோவா), கோவா
    எலிபண்டா குகைகள்[7]மகாராட்டிரம்
    எல்லோரா குகைகள்[8]மகாராட்டிரம்
    ஃபத்தேப்பூர் சிக்ரி[9]|உத்தரப் பிரதேசம்
    அழியாத சோழர் பெருங்கோயில்கள்[10]தமிழ்நாடு
    ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள்[11] பெல்லாரி மாவட்டம், கருநாடகம்
    மாமல்லபுர மரபுச்சின்னங்கள்[12] மகாபலிபுரம், தமிழ்நாடு
    பட்டடக்கலுவிலுள்ள நினைவுசின்னங்கள்[13] பட்டடக்கல், கர்நாடகம்
    உமாயூனின் சமாதி[14]தில்லி
    ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)[15] ஜெய்ப்பூர், இராசத்தான்
    காசிரங்கா தேசியப் பூங்கா[16] அசாம்
    கேவலாதேவ் தேசியப் பூங்கா[17] பரத்பூர், இராசத்தான்
    கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள்[18]மத்தியப் பிரதேசம்
    மகாபோதி கோயில், புத்த கயா[19]பீகார்
    மானசு வனவிலங்கு காப்பகம்[20]|அசாம்
    இந்திய மலைப்பாதை தொடருந்துகள்[21] |டார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லா
    நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா[22] சமோலி மாவட்டம், உத்தராஞ்சல்
    குதுப் மினார் வளாகம்[23] தில்லி
    செங்கோட்டை வளாகம்[24]தில்லி
    பீம்பேட்கா பாறை வாழிடங்கள்[25] மத்தியப் பிரதேசம்
    சுந்தர வனத் தேசியப் பூங்கா[26] மேற்கு வங்காளம்
    கொனார்க் சூரியன் கோயில்[27]பூரி மாவட்டம், ஒடிசா
    தாஜ் மகால், உத்தரப் பிரதேசம்[28]
    இராணியின் கிணறு, குஜராத்[29]
    மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (2012)[30]

    சோழர்காலத்துக் கோயில்கள் 10 தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்திய மலைப்பாதைகளுக்காக நீலகிரி மலையும் தேர்வு செய்யப் பட்டுள்ளது. மஹாபலிபுரம் உலகப்பாரம்பரியச் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தான் இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    • சேதுராமன்'s avatar சேதுராமன் சொல்கிறார்:

      பாரம்பரிய களத்தில் உள்ளது எல்லாம் எங்களுக்கு தெரியும்.

      ‘”இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோவால், தேர்வு
      செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட
      வேண்டுமென்றும்” உங்கள் தலைவர் பூரிதம் அடைந்திருக்கிறாரே
      அதைக்குறித்தது தான் இந்த கட்டுரை. பாரம்பரிய களத்திற்கு வந்ததெல்லாம், இவர்கள் பாட்டன் காலத்திலேயே நடந்து விட்டது.

      • சிவா's avatar சிவா சொல்கிறார்:

        ஆமாம் மோடிதான் இதை செஞ்சார். அதுக்கு இப்ப என்ன? அந்தாளு ஸ்டேடுக்கு ஏதாவது எக்ஸ்ராவா செய்யணும்னுதான் நினைப்பார். பின்ன நம்ம ஊர் சிதம்பரம் மாதிரி சொந்த தொகுதிக்குகூட ஒண்ணுமே செய்யமா இருக்க சொல்லறீரா? தமிழ்நாட்டுல எத்தனையோ ஊர் இருக்கு, அது ஏன் ஜெயலலிதா சீறிரங்கத்துக்கு மட்டும் சிறப்பு செய்தார்னு எப்பவாவது கேட்டீங்களா? ஏன் ஜெயலலிதா காலத்துல சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லைன்னு கேட்டீங்களா? அரசியல்வாதிகள் தங்களின் தொகுதி, ஊர், மாநிலம் இதுக்கு எக்ஸ்ராவா செய்வாங்க இது நடைமுறைதானே?

        2010 மோடி முதல்வராக இருந்த போது ஒரு பைல் ரெடி பண்ணி அகமதாபாத்துக்கு போராட ஆரம்பித்தார். ஜெயலலிதா என்ன செய்தார்ன்னு அவங்க கட்சிய கேளுங்க. ஏன்னா டில்லி, பம்பாய், காசி ன்னு பிறநகரங்களின் அரசியல்வாதிகள் அவர்களின் ஊருக்கு போராடியிருக்கிறார்கள். மும்பைகாக அமிதாப்கூட போராடினார்.ஆனா ஜெயலலிதா அரசு என்ன செய்தது என அவங்கள (அதிமுகவை) கேளுங்க முதல்ல!

  6. indian's avatar indian சொல்கிறார்:

    we need to criticize BJP for each & everything thing.There is a pleasure in it….
    Even if there is no indian city listed by UNESCO, then also we need to criticize BJP for there carelessness….

    Note: Please don’t stamp me as BJP “Bhakth”, because i am your side only.

  7. சேதுராமன்'s avatar சேதுராமன் சொல்கிறார்:

    இந்தியன்,

    அந்த அற்ப புத்தி அரசியல்வாதிகளுக்கே பொருந்தும்.
    காவிரிமைந்தன் மிக நேர்மையாக குறை சொல்ல வேண்டியவிஷயங்களுக்கு
    தான் விமரிசனம் செய்கிறார். கிண்டலாக பின்னூட்டம் போடுகிறீர்களே
    அவர் குறைகண்டதில் என்ன தவறு கண்டீர்கள் அதையும் சொல்லுங்களேன்.

    • indian's avatar indian சொல்கிறார்:

      From my understanding, there might be a list of indian cities might have been given to UNESCO, and finally based on the vote count from the all the members, they have elected the ahamadabad.
      If modi had given only one city name(i.e ahmadabad), then we can attack him.
      But its different…
      Please help me, how we attack the BAKTH team now

  8. kausikan1967's avatar kausikan1967 சொல்கிறார்:

    Sir, For your information please : பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் கைது

    • indian's avatar indian சொல்கிறார்:

      your commnet will be removed soon, as i still unable to find out a way how to scold modi with this news…
      So your comment is worthless….

    • பைரவன்'s avatar பைரவன் சொல்கிறார்:

      .பெரிசு, இந்த மேட்டர நல்ல கவனி இல்லைனா வயசான காலத்துல ஜெயிலுக்கு போனா தாங்க மாட்ட. உடம்புக்கு ஏதாவது ஒண்ணுன்னா கவர்மென்டு டாக்டருதான் கவனிப்பாரு… கவர்மென்டு ஆளுங்க எப்படி வேலை பாப்பீங்கன்னுதான் ‘ரிடையர்டு கவர்மென்டு’ உனக்கு நல்லவே தெரியும். ஏதோ மோடி அது இதுன்னு எழுதி ஹிட் வாங்கறத வாங்கு. துக்ளக் ஜூவி -யை திருடி பிடிஎப் போடுறத உட்று..

      • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

        பைரவன்,

        நீங்கள் ஏன் இப்படி தரக்குறைவாக எழுதுகிறீர்கள் ?
        நீங்கள் காவிரிமைந்தன் சாரால் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டீர்கள் ?

  9. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    நிறைய பேர் பத்திரிகைச் செய்தியைப் படிக்காமலேயே பின்னூட்டம் இடுகின்றனர். அந்தப் பொறியாளன், Tamilrockers செய்கிற மாதிரின்னு நினைச்சுக்கிட்டு, பத்திரிகை முழுக்க ஸ்கான் செய்து, ஆன்லைன்ல படிக்க வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தான். இது, பாண்டிச்சேரில, சினிமா திருட்டு விசிடியை விற்பனை பண்ணுவதுபோல. ஆனால் பத்திரிகை முதலாளிகள் சினிமா தயாரிப்பாளர்களைவிட பவர்ஃபுல். அதிவுமில்லாம அவர்களுக்கு நிறைய மேலிட கனெக்‌ஷன் இருக்கும். அதுனால அவனை ஜெயில்ல வச்சுட்டாங்க.

    சட்டம், Tamilrockersல படம் டவுன்லோடு பண்ணிப்பார்ப்பவர்களுக்கும், திருட்டு விசிடில பார்க்கிறவங்களுக்கும் இதே தண்டனையைத்தான் கொடுக்கச் சொல்லியிருக்கு.

    கருத்துக்கு பதில் கருத்து எழுதுங்க. கா.மை அவர்கள் அவருடைய நிலையை எழுதப்போகிறார். தரம் தாழ்நது எழுதி என்ன சாதிக்கப்போகிறோம்?

    • பைரவன்'s avatar பைரவன் சொல்கிறார்:

      அடுத்தவன் எழுதுன கட்டுரை அப்படியே அனுமதி பெறாமல் எடுத்து பிளாக்கில் போடுவது மட்டும் சரியான காரியமா? ஒரு பத்திரிக்கை முழுவதுமோ பகுதிகளாவோ மறுபிரசுரம் செய்வது குற்றமய்யா குற்றம். இது எதிர்த்து எழுதின தரம் தாழ்ந்து எழுதுவதா?! நீங்க அரசியலவாதிகள் திருடனுங்கன்னு எழுதுன நாங்க மட்டும் விரல் சப்பிகிட்டு படிக்கணுமாக்கும்!

    • பைரவன்'s avatar பைரவன் சொல்கிறார்:

      பிளாக்கர்கள் எழுதுவதை முன்பு பத்திரிகையாளர் சுட்டு வெளியிட்டதும் உண்டு. அதுவும் தவறுதான். ஆனால் அது நின்றுவிட்டது. ஆனா காமை எழுதுவதை எந்த பத்திரிக்கைகாரனும் சுட முடியாது.. ஏன்னா அவரின் பெரும்பாலான பதிவுகள் ஏற்கனவே பத்திரிக்கை செய்திகளை சுட்டதுதான்..

      • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

        பைரவன்,

        //ஏன்னா அவரின் பெரும்பாலான பதிவுகள் ஏற்கனவே பத்திரிக்கை செய்திகளை சுட்டதுதான்.//

        செய்திகளை வைத்து, அதன் அடிப்படையில் கட்டுரை எழுதுவது
        எப்படி தவறூ ஆகும் ?

        • பைரவன்'s avatar பைரவன் சொல்கிறார்:

          அடுத்தவரின் கட்டுரைக்கு சுட்டி கொடுக்கலாம். அல்லது சில வரிகளை எடுத்தாண்டு கட்டுரை எழுதலாம் ( உடனே பாதிக்கட்டுரையை சுட்டுவிடக்கூடாது)

          ஆனால் முழுக்கட்டுரை எனும் பொழுது எழுதியவரின் அல்லது பத்திரிக்கை (எவரிடம் காப்பிரைட்ஸ் உள்ளதோ அவரிடம் ) அனுமதி பெற்று மட்டுமே முழுகட்டுரையை பிரசுரிக்க வேண்டும். இதுதான் சரி… தார்மீக சட்ட ரீதியில் சரி!

          ஆனால் இங்க பல கட்டுரைகள் அப்படியே சுடப்பட்டவை ( உ-ம்) http://tinyurl.com/ybgtwsvc
          http://tinyurl.com/ya8vhyaz
          http://tinyurl.com/ydcvz7kq

          • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

            பைரவன்,

            நீங்கள் கூறும் 3 கட்டுரைகளிலும், அந்த கட்டுரைகளை எழுதியது யார், எந்த பத்திரிகையில் வெளிவந்தது என்கிற விவரங்களை அவர் வெளிப்படையாக
            தந்திருக்கும்போது, இதை சுடப்பட்டவை என்று நீங்கள் கூறுவது நியாயம் அல்ல.
            உண்மையை மறைத்தால் தான் தவறு. வெளிப்படையாக கூறி,
            அந்த விஷயங்களை விவாதத்திற்கு கொண்டு வருவதில் என்ன தவறு ?
            எத்தனை வருடங்களாக நீங்கள் காவிரிமைந்தனை படித்து வருகிறீர்கள் ?
            கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அநியாயமாக ஒருவர் மீது குற்றம் சொல்வது நியாயமா ?

          • பைரவன்'s avatar பைரவன் சொல்கிறார்:

            மிஸ்டர் இளங்கோ, நீங்க காப்பிரைட் சட்டத்தை நன்றாக படிப்பது நல்லது. நீங்கள் Plagiarism மற்றும் Copyright மீறல் இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். காமை செய்வது Plagiarism அல்ல, ஆனால் Copyright infringement!

            காபிரைட் சட்டம் செக்சன் 63 படி, மற்றவர் பிரிண்ட் செய்ததை காபி எடுத்து விநியோகம் செய்தால் 6 மாதம் முதல் 3 வருட சிறை , ரூ5000 – 3 லட்சம் அபராதம்.

            உங்களுக்கு புரியற மாதிரி விளக்கவேண்டும் என்றால் திருட்டு விசிடியில் பட குழு கிரடிட்டுகள் இருக்கும் அதனால் அது சரி என ஆகாது. பிடிஎப் போட்ட பொறியாளரின் பிடிஎப்-பிலும் யார் கட்டுரையை எழுதியது என ஆசிரியர் பெயர் இருக்கும், அதனால் அது சரியாகிவிடாது.

            அடுத்தவர் படைப்பை முழுவதுமாகவோ பகுதிகளாகவோ மறுபிரசுரிக்க கூடாது,காப்பி எடுத்து இலவசமாகவும் விநியோகிக்க கூடாது. நீங்கள் ஓரிஜினல் ஓனருக்கு கிரடிட் கொடுத்தாலும் அது தவறு. ஓனரின் அனுமதி அவசியம். இல்லாவிடில் சில வரிகளை எடுக்கலாம் அல்லது லிங்கு கொடுத்து விகடனில் துக்ளக்கில் காசு கொடுத்து படிக்கவிட்டு பின் விவாதிக்கலாம். ஆனால் அவன் காசுக்கு விற்பதை இங்கு ஓசியில் போடக்கூடாது. மீறினால் எப்போது ஆப்பு வரும் என தெரியாது. ஓசியில் பிடிஎப் பத்திரிக்கைகள் பல வருடமாக கிடைக்குது ஆனால் இப்போதுதான் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

            நான் ஊதற சங்கை ஊதிவிட்டேன் அம்புட்டுதான்!

          • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            பைரவன்,

            நீங்கள் யார் என்பதை இப்போது தான் உணர்ந்து கொண்டேன் –
            என் பழைய நண்பரே…!!!

            உங்கள் ஆலோசனைக்கும்,
            காப்பிரைட் சட்ட விதிகளை காப்பாற்றுவதில் உங்களுக்கு இருக்கும்
            அக்கறைக்கும் மிக்க நன்றிகள்….

            ஆனாலும், ஒரு சிறிய சந்தேகம். இவ்வளவு விஷயம் தெரிந்த
            நீங்கள், இதுநாள் வரை எழுதிய பின்னூட்டங்களில்,
            தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தியது ஏனோ…?

            உங்கள் முந்தைய பின்னூட்டங்கள் சில நீக்கப்பட்டன என்பது உண்மையே.
            ஆனால், அதற்கான காரணங்கள் என்ன என்பதும் உங்களுக்கே தெரியும்.

            Anyway – எல்லாவற்றிற்கும், (பழைய நட்பு உட்பட ) நன்றி.

            -வாழ்த்துகளுடன்,
            காவிரிமைந்தன்

  10. avudaiappann's avatar avudaiappann சொல்கிறார்:

    anti modi and anti b j p expression…..please avoid

  11. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    மிரட்டல்கள் ….?

    • பைரவன்'s avatar பைரவன் சொல்கிறார்:

      ஆமாம்யா .. அண்ணன் மோடிய மிரட்டுறாரு…. பக்தாள் எல்லாம் சேர்ந்து அண்ணன மிரட்டுறாங்க.. அடப்போங்கய்யா! சட்டத்தை அண்ணன் மீறினாலும் மோடி மீறினாலும், இப்ப இல்லைனா எப்பவாவது ஆப்பு உண்டு!

  12. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    இப்பவே இப்படி.
    இன்னும் தமிழ்நாட்டுல ஜனாதிபதி ஆட்சி வந்துட்டா எப்படி இருக்கும் ?

    கே.எம்.சார், எதுக்கும் ஜாக்ரதையா இருங்க.
    நல்லவங்களுக்கு காலமில்லை.

  13. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    75-வயதிற்கு மேல்,
    எதிர்பார்ப்பு என்ன இருக்கப்போகிறது…?

    “கடமையை செய்யத்தான் உனக்கு அதிகாரம் ….
    அதன் பலன்களின் மீது அல்ல”

    – என்று கீதையில் கண்ணன் சொன்னான்.

    இருக்கின்ற வரையில்,
    இயன்ற வரையில்,
    என் கடமை என்று, நான் நினைப்பதை செய்கிறேன்….
    எந்த பலனையும் நான் எதிர்பார்க்கவில்லை…

    விளைவுகள் – எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்…
    அதன் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
    நடப்பது நடக்கட்டும்…

    பயணத்திற்கு – எப்போதும்
    நான் தயாராகவே இருக்கிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  14. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    What benefits will flow out of this – There are so many other cities and places which could have got this tag —

    • indian's avatar indian சொல்கிறார்:

      That doesnt matter to us.
      We just scold BJP,this is the right topic for us….
      Today i didnt get my bus in the morning, and it missed me.
      MODI have to answer ……

  15. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    One more thing about this nomination –ASI nominated Ahmedabad city in 2010 when UPA was in power —

  16. பைரவன்'s avatar பைரவன் சொல்கிறார்:

    ஆனால் இந்த பதிவு இதுவரையில் காமையில் பதிவுலக வாழ்வில் ஒரு மைல்கல்… இதுவரைக்கும் எந்த பின்னூட்டத்தை நீக்காமல் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுத்திருக்கிறார்.

    முன்பு எதிர்கருத்து போடுபவர் ரெகுலர் பின்னூட்டக்காரர் இல்லாவிடில் உடனே நீக்கிவிட்டு பிளாக் பண்ணிவிடுவார்… இந்த விடயத்தில் காமை, மோடி, ஜெயா அல்லோரும் ஒண்ணுதான்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.