சிறையில் சந்தித்த சீனிவாசலு ரெட்டி – முடிவுகள் எங்கே எடுக்கப்படுகின்றன…?

இரண்டு அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின்
டெல்லி பிரதிநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறையால்
தமிழக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது..
கிரிமினல் புகார்… முதலில் 3 நாட்களுக்கு முன்னர்
ஈமெயில் மூலமாகவும், நேற்று முன் தினம் நேரிலும் –

பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அரசு
அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும்,
ஆதாரங்களை அழித்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்
கீழ் குற்றங்கள் இழைத்ததாகவும் புகார்….

இதை கிட்டத்தட்ட நிரூபிக்கும் வகையில் வீடியோ
ஆதாரங்கள் ஏற்கெனவே செய்தி தொலைக்காட்சிகளில் சம்பவ
தினத்தன்றே வெளிவந்து விட்டன.

இதற்குள்ளாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள் ராஜினாமா செய்யும்படி கோரப்பட்டிருக்க
வேண்டும்…… தவறினால், அமைச்சர்கள் பதவியிலிருந்து
டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்… இவை எதுவும்
நடக்கவில்லை…

இந்த நடவடிக்கைகளை உறுதிசெய்ய வேண்டிய
பொறுப்பில், கடமையில் இருப்பவர் எங்கேயோ மும்பையில்
உட்கார்ந்து கொண்டிருக்கிறார்…. அவரிடமிருந்து எந்தவித
response -உம் இதுவரை இல்லை.

இன்னமும் F.I.R. கூட பதிவு செய்யப்பட்டதாக
தெரியவில்லை.

இவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லையென்று
யாரை கேட்பது…?

இதற்கு பங்களூரு சிறையிலிருந்து ஒப்புதல் வர வேண்டுமா
அல்லது யாராவது இங்கிருந்து மும்பைக்கு காவடி
தூக்கிச் செல்ல வேண்டுமா – தெரியவில்லை…!!!
அதையாவது, யாராவது சொன்னால் தேவலை…!

அதற்குள் ஒரு பத்திரிகைச் செய்தி ….
முக்கியமான விஷயங்களில் தமிழக அரசு எடுக்கும்
முடிவுகளின் பின்னணியில் பங்களூரு சிறை முக்கிய
பங்கு வகிக்கிறது என்கிறது இந்த ரிப்போர்ட்….

தமிழகத்தின் தலையெழுத்து…
இன்னும் எத்தனை காலம் இந்த அவலங்கள் எல்லாம்
நீடிக்கப்போகின்றன …?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சிறையில் சந்தித்த சீனிவாசலு ரெட்டி – முடிவுகள் எங்கே எடுக்கப்படுகின்றன…?

  1. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    அய்யா …. ! சிறையில் இருந்து ஒரு ஆட்சி … ?
    மத்தியில் இருந்து ….. ? இந்த ” இடுகை” க்கு தொடர்பற்ற ஒரு செய்தி : — தினமணி ஆசிரியர் கேட்கிறார் : // மோடி அரசா இப்படி…? // http://www.dinamani.com/editorial/2017/apr/13/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2683450.html … என்று …. இப்படித்தான் எப்பவுமே … என்பது அவருக்கு தெரியாதா … ?

    // ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்பது மட்டும் அல்ல . சர்வாதிகாரப் போக்குக்கும் வழி கோலும் // என்று பட்டும் படாமலும் எழுதுகிறார் ….! விரிவாக எழுத ஒரு தயக்கம் போலும் … ?

    தமிழ்நாட்டின் அவலமான நிலைகுறித்தோ — விவசாயிகள் டெல்லி போராட்டம் குறித்தோ — பெட்ரோல் – டீசல் ” தினசரி விலை நிர்ணயம் ” பரிசோதனையாக — ஐந்து மாநிலங்களில் அமுலுக்கு வரப்போவது குறித்தோ — என்ன கவலை …. ? கேட்டால் ஊரோடு ஒத்து { ஊதுங்கள் } போங்கள் என்று அறிவுரைதான் — ஜனநாயகமா …?

  2. Surya's avatar Surya சொல்கிறார்:

    Can we have an article on the farmers protest at Delhi? There are some news that some farmers union is not supporting Ayyakannu led protest.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    தினமணி தலையங்கம் – பார்வைக்கு கொண்டு
    வந்ததற்கு நன்றி. இது இன்னும் பரவலாக போக வேண்டிய
    செய்தி. நான் தனி இடுகை போடுகிறேன்… விவாதிப்போம்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எனக்கும் இப்படி நடப்பதையெல்லாம் படிக்க எரிச்சலாத்தான் இருக்கு. ஒரு ஆளுமை மறைவது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியதுபோல் இருக்கிறது. நிர்வாகமும் பங்கப்பட்டிருக்கிறது. நமக்கு வேறு என்ன வாய்ப்பு? நிச்சயமாக ஸ்டாலின் கும்பல் இல்லை. தினகரன் & கோ, வெளிப்படையான கொஞ்சம் மாட்டிக்கொள்ளும் திருடர்கள் என்றால், ஸ்டாலின் & கோ, அமுக்குப்போன்ற கொள்ளையர்கள். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிப்பது சாத்தியமற்றது. (கலைஞர் தொலைக்காட்சி 200 கோடி ஸ்டாலினிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டாலினைக் காக்க பலர் மாட்டிக்கொண்டனர்). ஏகப்பட்ட பேப்பர்கள் முன் தேதியிட்டுத் திருத்தப்பட்டது என்றெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      இந்த கொள்ளைக்கூட்டம் போனால் – மாற்று –
      திரு..ஸ்டாலின் தலைமையிலான அந்த கூட்டம் தான்
      என்று ஏன் நினைக்கிறீர்கள்…..? எனக்குத் தெரிந்து,
      மக்கள் திமுகவை ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் இல்லை ..

      இந்த கொள்ளைக்கூட்டம் போய் து.மு., பொ.மு,,
      எ.வ.வே., நே. போன்றோர்
      அடங்கிய அந்த கொ.கூட்டம் வருவதில் என்ன அர்த்தம்…?

      இன்னும் 7-8 மாதங்கள் கழித்து தேர்தல் வந்தால், அதற்குள்
      வேறு வகையான மாற்று குழுக்கள் உருவாவதற்கான சூழ்நிலை
      இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • மானுடன்'s avatar மானுடன் சொல்கிறார்:

        சசிகலா என்கிற நபர் ஜெயலலிதாவின் தொடர்ச்சி தான். இன்றைக்கு நடக்கிற எல்லாமே நேற்றும் நடந்தவைதாம்.ஜெயலலிதா இருந்திருந்தால் மறைக்கப்பட்டிருக்க கூடிய எல்லாமே இப்போது வெளிவருவதும் விமர்சிக்கப்படுவதுமான ‘செலக்டிவ் அம்னீஷியா’ எப்படி நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதும் பெரிய விஷயமில்லை.ஆச்சர்யப்படுவதும், பொங்கி எழுவதுமான உங்கள் நாடகம் அதற்கேற்ற ரசங்களுடன் நடந்தேறட்டும்.
        “எலி செத்த வாடை வந்தாலும் சகித்துக் கொள்வோம். கருவாடு எனக்கு பிடிக்காது” இது தான் காவிரி மைந்தன்

        • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

          மானுடன்

          காவிரிமைந்தன் சசிகலா கும்பலை சாடினால் உங்களுக்கு ஏன் எரிகிறது ?
          தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறீர்களா ?

  5. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    காமராஜ் அவர்களுக்குப் பிறகு, அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. அதற்கு மக்களும் ஓரளவுக்குக் (அல்லது முழுவதுமாக) காரணகர்த்தா. நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து அண்ணா வந்தார். அவர் அறிஞரானார். அவருடைய வழித்தோன்றல் கருணானிதி எப்படி பதவிக்கு வந்தார், எப்படி முறைகேடுகளை ஆரம்பித்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். எம்ஜியார் அவர்கள், அந்த அண்ணாவின் தம்பிகளின் ஒரு பகுதியைக்கொண்டுதான் கட்சி ஆரம்பித்தார். மக்கள் தரம் தாழத் தாழ, அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களின் தரம் தாழத்தான் செய்யும்.

    அப்போ, இருப்பதில் யார் ஓரளவு பரவாயில்லை என்றுதான் பார்க்க இயலும். கடந்த 50 ஆண்டுகளாக எப்படி அரசியல் இருந்தது என்று பார்த்தால் இது தெரிந்துவிடும்.

    கருணானிதி அண்ணாவின் தளபதிகள் துணையோடு ஆட்சிக்கு வந்தபோது, முடிந்தவரை ஊழல்களை ஆரம்பித்தார். தனக்குப் போட்டியாகக் கருதியவர்களை நீக்கினார். திமுகவின் 60 சதவிகித வாக்குகள் எம்ஜியார் பிரிந்ததும் திமுகவுக்கு 20, அதிமுகவுக்கு 40 என்று மாறியது. (BIRDS EYE. I KNOW EXACT DIFFERENCES AND WHAT LEAD TO DMK’s DOWNFALL). கருணானிதி அவரது பேச்சுக்காக மட்டுமே விரும்பப்பட்டார். அவரது ஊழலுக்காக அவரை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. கருணானிதி, தன்னுடைய நலத்துக்காக எந்தச் சமரசத்தையும் செய்துகொள்ளத் தயாராக இருந்தார் (திமுக, காங்கிரஸ் கூட்டணி, 50% பங்கு, சர்க்காரியா அறிக்கை கிடப்பில் வைப்பு)

    எம்ஜியார், தமிழக நல்வாழ்வுக்கான எந்தத் திட்டங்களிலும் சமரசம் செய்துகொண்டதில்லை. விடுதலைப் புலிகள் விஷயத்திலும் ஈழத் தமிழர்களின் நலனுக்கேற்றபடி முடிவெடுத்தார். ராஜீவ்காந்தியிடம் கடுமையாக வாதிட்டு, மறைமுகமாக ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு முடிந்த அளவு பணவுதவியும் செய்தார்.

    எம்ஜியார் இருந்தவரை, கருணானிதியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதன்பின் கருணானிதி ஆட்சிக்கு வந்தார். அப்போது ஆரம்பித்து எல்லாவித ஊழல்களையும் செய்து, அவரை ஆதரித்த கட்சி முக்கியஸ்தர்கள், மாவட்டச் செயலாளர்கள் போன்றோரையும் செய்யவைத்து, எல்லோரும் சேர்ந்து சொத்து சேர்த்தனர். கருணானிதி குடும்பம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாகின.

    ஆரம்ப ஜெ. ஆட்சி, வெறும் காட்சியாகவும், ஊழல்கள் நிறைந்ததாகவும் இருந்தன. மக்கள் அவருக்குத் தோல்வியைக் கொடுத்து கருணானிதியை மீண்டும் கொண்டுவந்தனர். திமுகவினரின் அடாவடி, நிலம் பறிப்பு போன்றவற்றால், திரும்பவும் ஜெ.வுக்கு ஆட்சியைக் கொடுத்தனர். அப்போது ஜெ. கொஞ்சம் இந்துத்வா, கொஞ்சம் கண்டிப்பு என்று ஆட்சியை BETTERஆக நடத்தினார். அவருடைய கண்டிப்பு (முடிவுகள்) ஒவ்வொரு SECTIONஐயும் பாதித்தனர் (மற்றவர்களுக்கு அது நியாயமாகத் தோன்றியது). அதனால் ஒட்டுமொத்தமாக பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு தோல்வி கிடைத்தது. அதைப் புரிந்துகொண்டு அவரது முடிவுகளை மாற்றிக்கொண்டார். அடுத்த 2 வருடங்கள் நல்ல ஆட்சியாகத்தான் நடந்தது.

    2006ல், அவர் வெற்றி பெறுவார், அல்லது நிறைய இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், 80 இடங்கள் பெற்று தோல்வியுற்றார். (கூட்டணியோடு. வாக்கு விகிதத்தில் பெரிய மாற்றமில்லை).

    கருணானிதி அடுத்த 5 வருடங்களைக் காட்சியாகவும், தனது சொந்த, குடும்ப நலனுக்காக, தமிழக நலனை முழுவதுமாக COMPROMISE செய்தும், எந்த முடிவிலும் ‘நல்லா நடிக்கறார்’ என்று மக்கள் வெறுப்படையும்படியாக நடந்துகொண்டதும், பல பல விஞ்ஞான ஊழல்களுக்கு வித்திட்டும், மத்தியில் காங்கிரஸோடு திமுக, யார் நிறைய கொள்ளையடித்தது என்று தெரியாதபடி கொள்ளையடித்ததும், அடுத்த ஆட்சி ஜெ.வுக்குக் கிடைக்க காரணமாயிற்று.

    ஜெ. மூன்றாவது ஆட்சியில் கொஞ்சம் கூட, மக்களைப் பாதிக்கும் முடிவுகளை (அதாவது மக்கள் வெறுப்படையும்) எடுக்கவில்லை. அதனால், எத்தகைய கூட்டணி எதிராக இருந்தபோதும் நான்காவது முறை மக்கள் அவருக்கு ஆட்சியைக் கொடுத்தனர். இந்தச் சாதனையை எம்ஜியாருக்கு அடுத்தது செய்தது ஜெ.

    விமரிசனம் என்று எல்லோரையும் எல்லா விஷயத்துக்கும் செய்வது கடினம். யார் மக்களைப் பாதிக்கும் செயல்களையும், தமிழக நலனுக்கு எதிராகச் செய்கிறார்களோ, அதனை உடனே விமரிசிக்கிறது தளம். அதற்காக தேவையில்லாதவைகளை விமரிசனம் செய்ய ஆரம்பித்தால் ஒரு நாளைக்கு 50 பதிவுகளாவது வரவேண்டும். அது சாத்தியமில்லாதது.

    இப்போதும், கா.மை. சார், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, இப்போதுள்ள மன்னார்குடி மாஃபியாவைவிட பெட்டர் என்றுதான் கருதுகிறார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இப்போதும் ஸ்டாலின் மாறவில்லை, திமுகவில் அப்படி அவர் மாறுவதும் கடினம்.

    மானிடன் சொல்லும் கருத்து எனக்கு ஏற்புடையது அல்ல. அவருடையது தனி நபர் விமரிசனம்.

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தமிழன்,

    // விமரிசனம் என்று எல்லோரையும் எல்லா விஷயத்துக்கும்
    செய்வது கடினம். யார் மக்களைப் பாதிக்கும் செயல்களையும்,
    தமிழக நலனுக்கு எதிராகச் செய்கிறார்களோ, அதனை உடனே
    விமரிசிக்கிறது தளம்.//

    சரியாகச் சொல்கிறீர்கள்.
    உங்கள் பின்னூட்டம் /அலசல் மிக நன்றாக இருக்கிறது ..

    ஒரே ஒரு குறை –

    // இப்போதும், கா.மை. சார், ஸ்டாலின் தலைமையிலான
    ஆட்சி, இப்போதுள்ள மன்னார்குடி மாஃபியாவைவிட பெட்டர்
    என்றுதான் கருதுகிறார். //

    இங்கு என் நிலையை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை
    என்று தோன்றுகிறது. திமுக ஆட்சிக்கு வருவதை நான் நிச்சயம்
    ஆதரிக்கவில்லை… என்னால் ஆதரிக்கவும் முடியாது.

    ஆனால், அதே சமயம் தொப்பி கும்பல் உடனடியாக
    பதவியிழப்பு செய்யப்பட வேண்டியதும் அவசியம்.
    இல்லையேல் தமிழ்நாட்டையே நாசமாக்கி விடுவார்கள்.

    ஏற்கெனவே அரசின் மீது மக்களுக்கு மரியாதை குறைந்து கொண்டே
    போகிறது… எங்கு பார்த்தாலும் போராட்டங்கள்…மறியல்கள், குமுறல்கள்.
    மக்களின் பிரச்சினைகளை யாரும் கவனிப்பதில்லை.
    இதற்கு ஒரு மாற்று அவசியம் தேவை.
    இந்த ஆட்சி தொலைந்தால், எதாவது ஒரு மாற்று உருவாகலாம்…!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.