…
…
நேற்று திருப்பூரில் நடந்த சம்பவம் தமிழகத்தை
மீண்டும் தலைகுனிய வைக்கிறது.
ஒரு பெண்ணை அடிக்கும் உரிமையை எந்த சட்டமும்,
எவனுக்கும் கொடுக்கவில்லை. அது எப்பேற்பட்ட
கொம்பனாக இருந்தாலும் சரி, இந்த செயல்
சட்டத்தை மீறிய செயலே….
இந்த வீடியோ ஒன்று போதும்… உடனடியாக
அந்த நபரை suspend செய்யவும், உள்ளே தள்ளவும் கூட…
அந்த ஆசாமி வரும் வேகத்தையும் நடந்துகொண்ட
விதத்தையும் பார்த்தால் சித்தம் பிறழ்ந்தவரோ
என்று தோன்றுகிறது. அந்த புகைப்படத்தையும்,
வீடியோவையும் பாருங்கள்…
அங்கே அப்படி ஒன்றும் பெரிய கூட்டம் இல்லை….
சட்டவிரோதமாக யாரும் கலவரம் செய்யவில்லை…
எங்கள் பகுதியில் சாராயக்கடையை புதிதாக திறக்காதே
என்று அமைதியாக போராடுகிறார்கள். அதற்காக
ஏன் அந்த நபர் அவ்வளவு டென்ஷன் ஆகிறார்….?
அவ்வளவு பலமாக அந்த பெண்மணியை அறைகிறார்…
அவரது அதிருஷ்டம் … மக்கள் உடனடியாக ரீ-ஆக்ட்
செய்யவில்லை….
அந்த நபரை பிடித்து மனநோய் மருத்துவ மனையில்
compulsory யாக இரண்டு மாதங்கள்
வைத்து shock theraphy கொடுக்க வேண்டும்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள
சாராயக்கடைகளை மூட வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின்
உத்திரவு….
ஏற்கெனவே, படிப்படியாக சாராயக்கடைகளை மூடுவதாக
தனது தேர்தல் அறிக்கையில் ஒப்புக்கொண்டு தான் இந்த
அரசு பதவிக்கு வந்துள்ளது… எனவே இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொண்டு – மூடிய கடைகளை, மூடியதாகவே
இருக்க விட்டு விட வேண்டும்.
பதிலுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட, மக்கள் வசிக்கும் இடங்களில்
புதிது புதிதாக சாராயக்கடைகளை திறந்தால், இந்த தடவை
நிச்சயமாக மக்கள் பொறுத்துக்கொள்கிற நிலையில் இல்லை…
மிக மோசமான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும்.
அற்ப சொற்ப மெஜாரிடியில் ஊசலாடிக்கொண்டிருக்கும்
அரசை வீட்டுக்கு அனுப்ப வேறு பெரிய பிரயத்தனங்கள்
எதுவும் தேவை இல்லை….
ஆளும் கட்சி, இன்னும் கொஞ்ச நாட்களாவது
ஆட்சியில் இருக்க வேண்டுமென்றால், உடனடியாக
இத்தகைய முயற்சிகளை கைவிட வேண்டும். புதிதாக
எங்கும் சாராயக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று
வெளிப்படையாக உத்தரவாதம் கொடுத்து அறிவிப்பு
வெளியிட வேண்டும்.



கா.மை சார், இதனை இரண்டுவிதமாக நான் பார்க்கிறேன்.
1. பொதுவா, வலிமையுள்ளவனிடம் அடங்கிப் போவதும், எளிமையானவனிடம் அதிகாரத்தைக் காண்பிப்பதும் எல்லோருக்கும் உள்ள குணம்தான். இங்கு போலீஸ் அதிகாரி, எளியவர்களிடம் இப்படிப்பட்ட ரௌடியிஸத்தைக் காண்பிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒருவேளை, தன் வீட்டில் தன் மனைவி தன்னை மரியாதையாக நடத்தாமல் கிள்ளுக்கீரையாக நடத்துவதால், இந்த அதிகாரி, கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி இந்தப் பெண்ணை அடித்தாரான்னு தெரியலை.
2. போலீஸ் அதிகாரிகள் பெரும்பாலும், அளவுக்கு அதிகமான பணிச்சுமை உடையவர்கள். அதிலும், எவனெவனுக்கோ சல்யூட் அடிக்கவும், நேர்மையாகப் பணிபுரியமுடியாமலும், உயர் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு பணிபுரியும் சூழலில் உள்ளவர்கள். அவர்களுக்கு ‘TRAVEL ALLOWANCE’ போன்ற பல உரிமைகள் மிகுந்த காலம் தாழ்த்தித்தான் கிடைக்கின்றன. இதனால், வேலை செய்யும் சிலர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள் மத்தியிலும் இவர்களுக்குக் கொஞ்சம்கூட மதிப்பு கிடையாது. அதுபோன்ற ஒன்று இவரை உணர்ச்சிவசப்படவைத்து இப்படி நடந்துகொள்ளவைத்திருக்கிறது. இப்படி ‘மன’நிலையினால் BEHAVE பண்ணியிருந்தால், அவரைப் பற்றி மிகவும் பரிதாபப்படுகிறேன்.
போலீஸ் அதிகாரி, ‘சித்தம் பிறழ்ந்தவரோ’ என்று கேட்டிருக்கிறீர்கள். சமீபத்தில் ஒரு மந்திரி (கூவாத்தூரில் அடைத்துவைக்கப்பட்டிருந்தவர்), போதையில் ‘சசிகலாவை ஆதரித்து கன்னா பின்னா என்று செய்தியாளர்களிடம் பேசியபோது திடுக் என்றிருந்தது. ஒரு மந்திரி இப்படியா பேட்டை ரௌடியைவிடக் கேவலமாக இருப்பார் என்று தோன்றியது. தலைவர்கள் எவ்வழி.. அதிகாரிகள் அவ்வழி.
அன்புள்ள காவிரி மைந்தன் அய்யா,
இந்த கோவத்திற்கும் தாக்குதலுக்கும் காரணம், அங்கு அகஸ்மாத்தாக வந்து மாட்டிக்கொண்ட சூலூர் அதிமுக எம் எல் ஏ கனகராஜ் { இவர் டி டிவி அணிக்கும், ஓபி எஸ் அணிக்கும் இடையே ஊசலில் இருப்பவர், இவரை பத்திரமாக தன் அணியில் நீடிக்க வைக்க சகல முயற்சிகளிலும் இருக்கிறார், தினகரன்.} அவர் வேறு ஏதோ கூட்டம் என்று நினைத்து வந்து விட்டார், சம்பவ இடத்தில் இருந்து 2,3 தடவைகள் கிளம்ப முயற்சித்தார். அங்கிருந்த பெண்கள் அவரை விட வில்லை. இந்த சகோதரி தான் முன்னால் இருந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் எம் எல் ஏ இறங்கி சென்று காவல்துறையில் பேசி விட்டு வந்தார், அதன் பிறகே தடியடி நடத்தப்பட்டு, அந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அனைத்து அராஜகங்களும் நடந்தன. காவல் துறையை ஏவிய எம் எல் ஏ, பற்றி ஒரு பத்திரிக்கையும் மூச்சு விட வில்லை. நல்ல ஊடக தர்மத்தை காப்பாற்றுகிறார்கள்.
ஓ….இது புதிய தகவலாக உள்ளது.