…
…
சில மாதங்களுக்கு முன்னர் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும்
சாந்தி சோஷியல் சர்வீஸ் பற்றி இந்த வலைத்தளத்தில்
எழுதி இருந்தேன்.
தற்போது, கோவையிலிருந்து நண்பர் அப்பண்ணசுவாமி அவர்கள்
இந்த சமூக சேவை அமைப்பு மேற்கொண்டிருக்கும், இந்த காலகட்டத்திற்கு
மிகவும் அவசியமான மற்றொரு சேவையையும் துவக்கி இருப்பதாக
தகவல் அனுப்பி இருக்கிறார்…..
நண்பர் அப்பண்ணசுவாமியின் கடிதத்திலிருந்து –
———————
கோவை சாந்தி சோசியல் சர்வீஸின் ஒரு மகத்தான மனிதாபிமான
செயலைப் பற்றி இங்கு இந்த மின்னஞ்சல்மூலம் தெரியப்படுத்துவதில்
மனம் மகிழ்வுறுகிறது. நேரில் பார்த்த எனக்கு இவ்வளவு மகிழ்ச்சியென்றால்,
அதை அனுபவித்தவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகியிருக்கும்
என்பதை தாங்கள் நேரில் அனுபவித்தால் தான் தெரியும்.
தற்போது பொதுத்துறை வாங்கி atm களில் பெரும்பாலானவை மூடியே கிடக்கின்றன.
ஆனால், இத்தொண்டு நிறுவனத்தில் 4 கார்டு ஸ்வாய்ப்பிங் மெஷின்களின் மூலம்
24 மணி நேரமும் பொதுமக்களுக்கு ஒரு டெபிட் கார்டுக்கு அதிகபட்சம் 2000
ரூபாய்கள் எடுத்துக்கொள்ளவ வசதி செய்துள்ளார்கள். இந்த சேவை விடுமுறை
நாட்களின்றி 24 மணி நேரமும் செயல்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 1000 க்கு அதிகமானோர் எந்தவித கஷ்டமுமின்றி
பயனடைகிறார்கள். சுமார் 20 லட்ஷத்திற்கு மேல்
பட்டுவாடா செய்யப்படுகிறது,
——————
சாதாரணமாக ஓரளவு வசதியும், ஆர்வமும் உள்ள எந்த நிறுவனமும்
இத்தகைய மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள முடியும்…..
மக்களின் துன்பத்தை போக்குவது –
அனைத்து தர்மங்களிலும் சிறந்தது அல்லவா…..?
————————————–
இந்த சமயத்தில் நான் ஏற்கெனவே விமரிசனம் தளத்தில்
எழுதியிருந்த சாந்தி சோஷியல் சர்வீஸின் சேவைகளை மீண்டும் ஒரு முறை
நண்பர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
அப்போது இந்த இடுகையை பார்க்கத் தவறியவர்களுக்கு இது உதவும்….
————————–
k.d., p.c., k.c.- ஆகியோர் பிறந்த மண்ணில் தான் இப்படியும் ஒரு அதிசயம்….!!!
Posted on மார்ச் 3, 2016 by vimarisanam – kavirimainthan
———-

.
சில நாட்களாக தொடர்ந்து எதிர்மறையான செய்திகளையே
படித்து நொந்து கொண்டிருந்ததற்கு மாற்றாக இன்று ஒரு
நல்ல தகவலை பரிமாறிக்கொள்ள நினைக்கிறேன்.
( நன்றி – நண்பர் திரு.அப்பண்ணசுவாமி…! )
k.d., p.c., k.c. ஆகியோர் பிறந்த இதே தமிழ் மண்ணில்
பிறந்த ஒரு அதிசய மனிதரைப்பற்றியும், அவரது
பணிகளைப் பற்றியும் இங்கு ஒரு சிறிய அறிமுகம் செய்ய
விரும்புகிறேன்.
இந்த விளம்பரத்தை அந்த வள்ளல் விரும்ப மாட்டார் என்றாலும்,
இதைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்வதன் மூலம் –
அவரளவிற்கு முடியாதென்றாலும்,
தங்களால் இயன்ற அளவில் சிறிய உதவிகளையாவது
பிறருக்கு செய்ய வேண்டும், செய்ய முடியும் – என்கிற
எண்ணமும், நம்பிக்கையும், ஆர்வமும் – இதைப் படிக்கும் நண்பர்களுக்கு உருவாகும் என்பதால் தான் இந்த இடுகை –
தன் வாழ்நாள் முழுவதும், உழைத்து உருவாக்கிய ஒரு
தொழில் நிறுவனத்தில் தன் பங்குகளை விற்று, அதன் மூலம்
கிடைத்த தொகையை ( தோராயமாக – இருநூறு கோடி –
ஆமாம் இருநூறு கோடி தான்…! ) கொண்டு ஒரு
தொண்டு நிறுவனத்தை, அறக்கட்டளையை – உருவாக்கி,
கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தன்னாலியன்ற
வகையில் உதவி வருகிறார் அந்த வள்ளல்
அவரது தொண்டு நிறுவனத்தின் மூலம், வசதியற்ற –
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக அவர் உருவாக்கியுள்ள
சில வசதிகள் –
கோவையைச் சுற்றியுள்ள சுமார் 100 அரசு பள்ளிகளின்
infrastructure பணிகளை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு
செய்து தந்தது – தொடர்ந்து தருவது….
ஒரு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மற்றும் ஒரு ஆண்கள்
உயர்நிலைப்பள்ளியை முற்றிலுமாக தத்து எடுத்துக்கொண்டு,
அவற்றிற்கு தேவையான அனைத்தையும் செய்து தருவது –
மேலும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் –
விசேஷமாக, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா –
விசேஷ மருத்துவ பரிசோதனை வசதிகள் –
மருந்துக்கடை –
ரேடியோலஜி சர்வீஸ் –
டயலிஸிஸ் –
ரத்த வங்கி –
கண் பரிசோதனை – கண் கண்ணாடி –
உணவு விடுதி –
முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் இலவச உணவு –
தரமான, லாப நோக்கில்லாத பெட்ரோல் பங்க் –
இறுதியாக –
அமைதியாக போய்ச்சேர – LPG மயான வசதி –
கீழ்க்கண்ட புகைப்படங்கள் அவற்றின் தரத்தை
உங்களுக்கு உறுதி செய்யும் –










இதில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் –
இத்தனை உதவிகளைச் செய்யும் அவர், எந்த இடத்திலும்
தன் பெயரையோ, புகைப்படத்தையோ போடக்கூடாது
என்றும் – தன் தொண்டு நிறுவனம் வெளியார் யாரிடமும்
எந்தவித பண உதவியையும் (நன்கொடையை) ஏற்காது
என்றும் ( அனைத்து செலவையும் தாமே ஏற்பதாகவும் )
அறிவித்திருப்பது தான்.
இந்த வள்ளல் நீண்ட நெடுங்காலம் நல்ல உடல்நலத்துடனும்,
மனநிறைவோடும் வாழ வேண்டும் என்றும்,
இவரைப் பார்த்து, இவரைப்போல் இன்னும் பல தொண்டு
உள்ளங்கள் உருவாக வேண்டும் என்றும்
இறைவனை வேண்டுவோம்.
—————–
பின் குறிப்பு – அவர் என்ன தான் விளம்பரத்தை
வேண்டாதவராக இருந்தாலும் கூட, நாம் பிறந்ததன் அர்த்தம் என்ன என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும்-
கோவை சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்
நிறுவனர் திரு.சுப்பிரமணியம் அவர்களை –
உங்களுக்கு அறிமுகப்படுத்தாமலிருக்க என் மனம்
இடம் கொடுக்கவில்லை.



தினமும் 20 லட்ச ரூபாய் விநியோகம் செய்யுமளவிற்கு அவருக்கு எங்கிருந்து புது நோட்டுகள் கிடைக்கின்றன. பெட்ரோல் பங்க் போன்ற வியாபாரஸ்தலம் என்றால் விற்பனையான தொகையை இவ்வாறு சரிக்கட்டலாம். இவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் என்கிறீர்கள். எப்படி???
—
Jayakumar
petrol bunks are dispensing cash – Similarly it is likely that the ban might have entered into some arrangement with the NGO –
பெட்ரோல் பங்கில் வரும் பணம், மருத்துவம் பார்க்கவருவோரிடம் பெறும் பணம், கேண்டீன் மூலம் வரும் பணம் இவற்றை பங்க்கில் நேரடியாக டெப்பாசிட் செய்வதற்கு பதிலாக ஸ்வைப்பிங்க் மெஷின் மூலம் டெப்பாசிட் செய்கிறார்! அண்மையில் பெட்ரோல் விலை ஏறிய போது பழைய ஸ்டாக் இருக்கும் வரை பழைய விலைக்கே விற்றார்! பாராட்டப்பட வேண்டிய விஷயம்!!
சந்தேகம் என்பது தமிழ்நாட்டுத்தமிழரிடம் காணப்படும் ஒரு வியாதி. எதிலும் சந்தேகம் எதற்கும் சந்தேகம்.யார் மனச்சுத்தமாக என்ன செய்தாலும் பாராட்டமாட்டார்கள்.அதிலும் சந்தேகப் படுவார்கள்.இவர்களை யாராலும் திருப்திப் படவைக்க முடியாது. இது ஒரு சாபக்கேடு.
The swiping machines more appropriately the POS machines are likely to replace the ATMs in due course – – The cost of maintaining the ATMs is also going up – Some of the ATMs still run on windows XP which is no more supported by Microsoft – –
போற்றுதலுக்குஉரியவர்
போற்றுவோம்
மிகக்குறைந்த செலவில் மருத்துவ வசதிகள்! consultation, Diagnostic lab, MRI, Ultrasonic scanning, 20% தள்ளுபடி விலையில் மருந்துகள்! ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச உணவு! தினமும் ரூபாய் 20-க்கு தரமான மதிய உணவு! குறைந்த விலையில் சிற்றுண்டி வகைகள்! இப்படி ஏராளம்! விளம்பரமில்லாமல் இதைச்செய்ய நல்ல மனம் வேண்டும்!
கோவை சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்
நிறுவனர் திரு.சுப்பிரமணியம் அவர்களை போன்ற தொண்டு மனம் படைத்தோர் பல்கி பெருக இறைவனை பிராத்திக்கிரேன்..