…
…
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்….?
மூன்று வெவ்வேறு ஆளுமைகள் –
வெவ்வேறு திசையில்,
வெவ்வேறு கோணங்களில் பயணித்தவை –
ஆனால், வெவ்வேறு காரணங்களால்,
தமிழக மக்கள் மனதில் நிலைத்து நிலைகொண்டு விட்ட மாமனிதர்கள் –
பெரியார் ஈவேரா அவர்களும்,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் மறைந்த தினம் 24 டிசம்பர்…
மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மறைந்த தினம் 25 டிசம்பர்….
நமது மனதில் நீங்கா இடம் பெற்று விட்ட இந்த
தலைவர்களுக்கு விமரிசனம் தள நண்பர்களின் சார்பாக
நமது அஞ்சலி…..







எவ்வளவோ நினைவு கூற செய்திகள் இருந்தாலும் ஒரு இளவரசரின் பார்வையில் மக்கள் திலகம் : — // எம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் //
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.
அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!
– தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை ) https://lordmgr.wordpress.com/
திரு செல்வராஜன்.
அளவுக்கதிகமான அடிமைதனமான சிந்தனை தங்களது.
தமிழ்நாட்டுத் தமிழர்களில் நூற்றுக்கு தொன்னூற்றிஒன்பது வீதத்
தமிழர்கள் அடிமைமனப்பான்மையுடன்தான் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமை வாழ்கை வாழ்ந்ததால் இந்நிலை.சுதந்திரம் அவர்களை மாற்றவில்லை.அரசியல் வாதிகளும் அதற்கு இடம் அழிக்கவில்லை