ஜெ. அவர்களின் மரணத்துக்கு அப்போலோவிற்கு முந்திய மருந்துகளும் ஒரு காரணமா….?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, அவர் அப்போலோ மருத்துவ
மனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக மருத்துவ சிகிச்சை அளித்த
டாக்டர் ஒருவர் முதல் முறையாக பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார்….

முன்னதாக, NDTV தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் பர்கா தத்
அவர்கள் கூறியதாக ஒரு ட்விட்டர் செய்தி வெளிவந்தது நண்பர்களுக்கு
நினைவிருக்கலாம். அதில், அவர், அப்போலோவில் சேர்க்கப்படும் முன்னரே

சர்க்கரை நோய்க்காக ஜெ.அவர்களுக்கு தவறான மருந்துகள்
கொடுக்கப்பட்டிருந்ததாக அப்போலோ மருத்துவர்களிடமிருந்து தனக்கு
கிடைத்த தகவல்கள் கூறுவதாக சொல்லி இருந்தார்….

இப்போது ஜெ. அவர்களுக்கு, அவர் அப்போலோவில் சேர்க்கப்படும் முன்பு
சட்டமன்ற தேர்தல் சமயத்தில், தொடர்ந்து இரண்டு மாதங்கள் தான்
அக்குபஞ்சர் சிகிச்சை கொடுத்ததாகவும், அப்போது அவரது மெடிக்கல்
ரெகார்டுகளை பார்க்க நேர்ந்ததாகவும் டாக்டர் சங்கர் கூறுகிறார்…..

அளவிற்கு மீறி ஸ்டிராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டதும்,
அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் என்று
இந்த டாக்டர் சங்கர் கூறுகிறார்.

அப்போலோவில் சேர்க்கப்படும் முன்னர், ஜெ.அவர்கள் என்னென்ன
நோய்களால் அவதியுற்று வந்தார் என்றும், அதற்கு என்னென்ன மருந்துகள்
அவருக்கு கொடுக்கப்பட்டன என்றும், அந்த மருந்துகளை அவருக்கு
கொடுக்க ஆலோசனை கூறிய டாக்டர் யார் என்றும்,
அந்த மருந்துகளின் பின் விளைவுகளால் ஜெ.அவர்களின் நோய் முற்றக்கூடிய
ஆபத்துகள் இருந்தனவா என்பது குறித்தும் –

சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து உரிய விவரங்களைப்பெற்று வெளியிட
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாக்டர் சங்கர் அவர்களின் பேட்டி கீழே –

doctor-1

doctor-2

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஜெ. அவர்களின் மரணத்துக்கு அப்போலோவிற்கு முந்திய மருந்துகளும் ஒரு காரணமா….?

  1. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // சசி விரட்டப்பட்டதற்கு மோடி தந்த அட்வைஸ் காரணமா?! By: Sutha Published: Wednesday, December 21, 2011, 15:41 [IST]
    Read more at: http://tamil.oneindia.com/news/2011/12/21/tamilnadu-why-did-jaya-oust-sasikala-conspiracy-theories-aid0091.html — இது ஒரு பழைய செய்திதான் என்றாலும் – தற்போது டாக்டர் சங்கர் அவர்களின் பேட்டியை படித்தவுடன் நினைவுக்கு வந்த முன்னர் நடந்த ஒரு சம்பவம் …..

    அப்போது திரு மோடிஜியால் அங்கிருந்து ஜெயாவை கவனித்துக் கொள்ள அனுப்பப்பட்ட ஒரு நர்ஸ் முன்னாள் முதல்வரிடம் கூறியது : — // ஜெயலலிதாவிடம் பேசிய அந்த நர்ஸ், உங்களுக்கு தரப்படும் மருந்துகளுக்கு நேர்மாறான உணவு வகைகளை உங்களுக்குக் கொடுத்து வருகிறார்கள் என்று கூறவே ஜெயலலிதா ஷாக் ஆகி விட்டாராம். அதன் பிறகுதான் சுதாரித்த ஜெயலலிதா சசி உள்ளிட்டோரை கண்காணிக்க ஆரம்பித்து தற்போது கையும் களவுமாக பிடித்து வெளியேற்றியுள்ளார். // …

    இந்த பழைய செய்தியும் — தற்போதைய டாக்டரின் பேட்டியும் – ” பலவித சந்தேகங்களை ” நமக்கு ஏற்படுத்துவது இயல்பு தானே … ? இதே சந்தேகம் இப்போது மோடிஜிக்கும் ஏற்பட்டிருக்குமா …. ?

  2. Raja's avatar Raja சொல்கிறார்:

    Sir, Please leave it these rumours. Amma’s health affected by mr gunna verdict .every one’s imagine make new story even her niece give media interviews. Amma avoids her for last 14yrs because of her attitude she play major role to continue rumours

  3. seshan's avatar seshan சொல்கிறார்:

    Sir, you may like this video

    Some what remember with the Ms.Jayalalitha interview with karan.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.