
கேரள மாநிலம் –
( எட்டாம் நூற்றாண்டில் ஏது கேரளம்…?
எனவே தமிழ்நாட்டின், )
இன்றைய எர்ணாகுளத்தின் அருகே,
ஆலவாய் என்னும் கிராமத்திலிருந்து
சுமார் ஆறு மைல் தூரத்தில் “காலடி” என்கிற
சிறிய கிராமம். அங்கே வாழ்ந்து வந்த வித்யாதி ராஜா
என்பவருக்கு சிவகுரு என்று ஒரு மகன் இருந்தார்.
அவர் மனைவி ஆர்யாம்பாள்.
அவர்களுக்கு திருமணம் ஆகியும் வெகு ஆண்டுகளாக
குழந்தைப்பேறு யில்லை என்கிற கவலை. ஆகவே
அதற்காக அருகே உள்ள திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில்
48 நாட்கள் விரதம் இருந்து தினசரி வழிபாடு செய்தனர்.
ஒரு நாள் சிவன் அவர்கள் கனவில் தோன்றி நீண்ட
ஆயுளுடைய நிறைய பிள்ளைகள் வேண்டுமா? அல்லது
சகல ஞானமும் கொண்ட ஆனால் குறுகிய ஆயுளை
உடைய ஒரே பிள்ளை வேண்டுமா என்று கேட்க,
தம்பதிகள் குறுகிய ஆயுள் இருந்தாலும் ஞானம் உள்ள
குழந்தையையே வேண்டினர். கிபி 788, நந்தன ஆண்டு,
வைகாசி மாதம், சுக்கில பட்சம், பஞ்சமி திதி தினத்தன்று
திருவாதிரை நட்சத்திரத்தில் ஆர்யாம்பாள் ஒரு ஆண்
பிள்ளையை பெற்றெடுத்தார். ஈசனின் அருளால் பிறந்த
குழந்தைக்கு ஈசனின் பெயரான சங்கரன் என்று பெயர்
சூட்டினர்.
சங்கரருக்கு நான்கு வயதான போது அவரது தந்தை
சிவகுரு மண்ணுலகை விட்டு நீங்கினார். தாயாரால்
வளர்க்கப்பட்ட சங்கரருக்கு அவருடைய ஏழாம் வயதில்
உபநயனம் செய்வித்து அவரை அக்கால வழக்கப்படி
குருகுலத்திற்கு அனுப்பி ஹிந்து மதத்தின் புனித
நூல்களை பயிலச் செய்தார்.
அவர் அவ்வாறு ஒரு நாள் ஒரு ஏழை பெண்மணியின்
வீட்டிற்குச் சென்று பிஃக்ஷ கேட்க நேரிட்டது.
அன்று துவாதசி. தன்னிடம் ஒன்றும் இல்லாத
காரணத்தினால் அந்த எளிய பெண்மணி தான் உண்ண
எடுத்து வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை
மனப்பூர்வமாக சங்கரருக்கு கொடுத்தார்.
அப்போது சங்கரர் உள்ளம் குளிர்ந்து செல்வத்தின்
கடவுளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியை வேண்டி கனகதாரா
ஸ்தோத்திரம் என்கிற ஸ்லோகத்தை பாட, அப்போது
ஸ்ரீ லக்ஷ்மி தேவி அருளால் அந்த எளியவளின்
கூரை வீட்டின் மீது தங்க நெல்லிக்கனிகள் மழையாக
பொழிந்தது.
————
கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் கேட்டிருக்கிறீர்களா…
அதுவும் கவிஞர் கண்ணதாசனின் சொல்லாற்றலுடன்…?
——-
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம்போல நிற்கின்ற திருமால் உந்தன்
நேயத்தால் மெய்சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்
மாலவன் மீதுவைத்த மாயப்பொன் விழியிரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுக்
கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே”
…..
…..
—————–
சங்கரர் தான் உலகிற்கு வந்த செயலை நிறைவேற்ற
வேண்டிய வேளை நெருங்கியது. அவருடைய தாயார்
உலக வழக்கிற்கேற்ப தன் மகனுக்கு உரிய வயதில்
திருமணம் செய்விக்க எண்ணினார்.
ஆனால் தான் அவதரித்த நோக்கம் வேறு என்று
சங்கரருக்கு தெரிந்திருந்ததால் அவர் ஒரு யுக்தியைக்
கையாள நேர்ந்தது..
ஒரு முறை பூர்ணா நதியில் தன் தாயுடன் சென்று
குளிக்கச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை
அவர் கால்களைக் கவ்வி நீரினுள் இழுக்கத் துவங்கியது.
அப்பொழுது சங்கரர் தன் தாயிடம் தான் ஆபத் சந்நியாசம்
பெற வேண்டி அனுமதி கேட்டுப் பெற்றார். வேறு
வழியின்றி அவ்வம்மையாரும் அனுமதி அளித்த பின்னர்
குளிக்க ஆற்றில் இறங்கிய சங்கரர் சன்னியாசியாகி
வீடு திரும்பினார்.
அவர் தம் தாயாருக்கு ஒரு சத்தியம் செய்தார்.
அவர் தாயார் உலகைத் துறக்கும் காலம் வந்த பொழுது
தாம் எங்கிருந்தாலும் தன் தாயிடம் வந்து தம் தாயின்
இறுதிச் சடங்குகளைச் செய்து மகனாகத் தன் கடமையை
நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
தனக்குரிய உடமைகளை தன் உறவினர் வசம்
ஒப்புவித்துவிட்டு, தன் தாயாரைப் பார்த்துக் கொள்ளுமாறு
சொல்லி, தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி
பயணிக்கத் துவங்கினார்.
தன் பயணத்திற்கிடையே, தாயின் இறுதிக் காலம்
நெருங்கியபோது, தன் வாக்குறுதியை காப்பாற்ற
மீண்டும் வந்து, சந்நியாசியாக இருந்தாலும்,
தன் தாயின் இறுதிச் சடங்குகளை செய்தார்…
அந்தக்கால பாரதம் முழுவதும் கால்நடையாகவே
யாத்திரை செய்து, தனது 32-வது வயதில் கேதார்நாத்’தில்
சமாதி அடைந்தார்.
தான் வாழ்ந்த அந்த குறுகிய காலத்தினுள் –
4 முறை பாரதம் முழுவதும் கால்நடையாகவே
வலம் வந்த சங்கரர் “அத்வைத”த்தை போதித்தார்…
கிழக்கே கோவர்தன மடம்
தெற்கே சிருங்கேரி சாரதா மடம்
மேற்கே துவாரகை காளிகா மடம்
வடக்கே ஜோஷி மடம்
என்று நான்கு வேதங்களை சிறப்பிக்கும் வண்ணம்
நான்கு மடங்களை நிறுவினார்….
இன்றளவும் அவை நான்கும் இயங்குகின்றன…..
சங்கரர் எழுதி அருளிய பாடல்களிலேயே
மிகவும் புகழ் பெற்றது ” பஜகோவிந்தம்” –
தமிழில் கேட்போமா…?
அதையும் கவிஞரின் சொற்களில் –
“பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை
பாடிடுக மூடமதியே
பாடுவதில் தீர்ந்துவிடும் பழிபாவம் அத்தனையும்
பரந்தாமன் சொன்னவிதியே
பாடுவதை விட்டுவிட்டுப் பாணினி இலக்கணத்தைப்
பற்றுவதில் நன்மைவருமோ
பாய்விரித்த வேளைதனில் காலனவன் சந்நிதியில்
பாணினியம் காவல்தருமோ”
” காவியுடை மொட்டையொடு
கையிலொரு பாத்திரமும்
காட்டுவது என்ன துறவோ
கண்ணியமும் இல்லையதில்
புண்ணியமும் இல்லைவெறும்
கட்டைகளின் வேஷமல்லவோ
கோவணமும் நீள்சடையும்
கோஷமிடும் வாய்மொழியும்
கோமுனிவன் ஆக்கி விடுமோ
கும்பியை நிரப்பவொரு
செம்பு சுமப்பார் அவர்க்கு
கோவிந்தன் காட்சி வருமோ”
“தாய்வயிற்றிலே பிறந்து
தானிறந்து மீண்டும் மீண்டும்
தாய்வயிற்றிலே பிறக்கிறேன்
தாரணிக்குளே இருந்து
வான்வெளிக்குளே பறந்து
தாரணிக்குளே நடக்கிறேன்.
ஓய்விலாத என்பிறப்பு
மீண்டும் மீண்டும் யார்பொறுப்பு
உன்னையன்றி வேறு காண்கிறேன்
ஊரிலுள்ள ஜீவனுக்கு
நீகொடுத்த வாழ்க்கையென்று
உன்னிடத்தில் என்னை வைக்கிறேன்’
—————————————————————–
பின் குறிப்பு –
என்ன திடீரென்று ….
இதெல்லாம் – ஏன் இப்போது என்கிறீர்களா…?
நாளை சொல்கிறேனே…!!!



சங்கரர் காலம் குறித்து உங்களுடன் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் பதிவு அருமை. எழுதிய காரணம் குறித்து அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி. 🙂
கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டத்தில் // சங்கரர் காலம் குறித்து உங்களுடன் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் // …. என்று குறிப்பிட்டு இருக்கிறார் — ஆதி சங்கரரின் காலம் குறித்து பலருக்கும் ஓரளவு தெளிவு கிடைக்க // முகப்பு » வரலாறு
ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை
December 15, 2010
– கந்தர்வன் // என்பவரின் கட்டுரையை படிக்க … http://www.tamilhindu.com/2010/12/dating-adi-sankara-history-a-view/ ….. சொடுக்கவும் …. !!!
தமிழ் இந்து தளத்தின் தொடர் வாசகி என்னும் முறையில் இந்தக் கட்டுரையை நான் ஏற்கெனவே படித்துள்ளேன். அதோடு நண்பர் கிருஷ்ணகுமாரும் சொல்லி இருக்கிறார். 🙂 மற்றபடி உங்கள் பகிர்வுக்கும், பதிலுக்கும் நன்றி. 🙂
மார்க்கண்டேயர் பிறப்பும் — ஆதி சங்கரர் பிறப்பை போலவே இருப்பது — என்ன ஒரு ஒற்றுமை …. !!!
// மார்க்கண்டேயர்….
திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார்.
அவரது கடும் தவத்தில் ஈசனும் மனமுருகி அவர் முன் தோன்றினார். அவரிடம் குழந்தை வரம் கேட்டார் மிருகண்டு மகரிஷி.
அந்த வரத்தை கொடுத்த சிவபெருமான், அத்துடன் ஒரு நிபந்தனையையும் விதித்தார். குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த நிபந்தனை.
முட்டாளாக 100 வயது வாழ்வதைவிட நிறைந்த அறிவுடன் குறைவான ஆயுள் வாழ்வதே சிறந்தது என்று முடிவெடுத்த மிருகண்டு மகரிஷி, குறைந்த ஆயுளுடன் மெத்த அறிவு கொண்ட குழந்தையைக் கேட்டார். அதற்கு சிவபெருமான், நீ வேண்டியபடியே மகன் பிறப்பான். அந்த குழந்தை 16 ஆண்டுகளே உயிர் வாழும் என்று அருளிவிட்டு மறைந்தார். //… மேலும் மார்க்கண்டேயர் பற்றி தெரிய — http://munnarmvs.blogspot.in/2011/06/blog-post_9772.html —- சொடுக்கி அறியவும் …. !!!
மொழிபெயர்ப்பு யாருடையது? நான் கேட்டவரையில்,
“மறுபடிப் பிறப்பு மறுபடி மரணம் மறுபடித் தாயின் மடியே சரணம்
இதில் நாம் யாரே ….. நமைக் காப்பாரே… முராரே’ என்று கே ஜே யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டுள்ளேன் (புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனே…. யின் மொழிபெயர்ப்பு). அது கண்ணதாசன் அவர்கள் எழுதியது என்று நினைத்தேன்.
அது சரி.. எட்டாம் நூற்றாண்டில் தமிழ்’நாடு மட்டும் எங்கிருந்தது? எனக்குத் தெரிந்து பாரதி எழுதிய ‘தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா’வில்தான் முதல் முதலில் ‘தமிழ்’நாடு’ என்று பெயர் இருந்தது. சேர, சோழ, பாண்டிய, ஹொய்சாள… போன்ற தேசங்கள்தானே இருந்தன அப்போது
சகோ தயவு செய்து சிலம்பு படிக்கவும்
சேரன் வடக்கே படையெடுத்த பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/162013-sp-1624968512/25142-2013-10-09-11-24-38
Please tell me your opinion
http://gsr-gentle.blogspot.ae/2010/12/indian-future-currency.html
ஜிஎஸ்ஆர் எழுதிய எதிர்காலத்தில் பணம் எப்படி இருக்கும்?
இதை முழுவதுமாக படித்தால் நிச்சியம் என்னை பற்றி என்னை நினைப்பீர்கள் ஆம் தற்போது இந்திய பிரதமர் மோடியின் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு என் கனவுகளின் ஒரு தொடக்கம் தான், ஆம் இப்பொழுது நடந்திருக்கும் இந்த பணம் செல்லாது என்கிற அறிவிப்பை குறித்து அதனை ஒத்ததாக கடந்த DEC 24, 2010 அன்று நான் எழுதிய பதிவை படித்து பாருங்கள்.
எதுவாக இருந்தாலும் அவசியம் ஒரு பதில் அனுப்புங்கள் ப்ளீஸ்..
வணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் பணம் எனும் அத்யாவசிய தேவையை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த விரும்பும் வசதிகளுக்கேற்ப பணத்தின் தேவை கூடியோ அல்லது தேவைக்கோ தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நாம் முன்னோர்கள் உப்யோகித்த நாணயமும் நாம் இப்போது உபயோகிக்கிற நாணயமும், முன்னோர்கள் உபயோகித்த பணத்திற்கும், நாம் இப்போது உபயோகித்து கொண்டிருக்கும் பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அதில் நம் நாகரிகத்தின் வளர்ச்சியும் நம் சிந்தனையின், அறிவு கூர்மையின் வளர்ச்சியையும் ஒத்ததாக தான் வடிவமைப்பு இருந்திருக்கிறது ஆனால் நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போவது எதிர்காலத்தில் பணத்தின் அடையாளம் எப்படி இருக்கும் அல்லது அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றிய எனது சிந்தனை மட்டுமே இது மற்றவர்களோடு ஒத்து போகவேண்டுமென்பதில்லை.
நாம் இப்போதே பணத்தை கண்ணில் பார்க்கும் வாய்ப்பை குறைத்து கொண்டே வருகிறோம் அதற்கு இப்போதுள்ள கணினி வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் வலுச்சேர்க்கிறது உதராணமாக நீங்கள் ஒரு அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவணங்களில் வேலை பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் வேலைக்கான கூலி நேரடியாக வங்கியில் செலுத்தி விடுகிறார்கள் அதன் பின் தேவைப்படுபவர்கள் பணத்தை கையில் எடுக்கிறார்கள் இன்னும் சிலர் பற்று அட்டை (Debit Card) வழியாக பொருள்கள் வாங்குகிறார்கள் செலுத்த வேண்டிய தொகையை வங்கி கணக்கில் இருந்தே செலுத்தி விடுகிறார்கள் ஒரு வகையில் இதை பாதுகாப்பாக உணர்கிறார்கள் இன்னும் சிலர் கடன் அட்டை வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பணத்தை அலைபேசி வழியாக செலுத்துபவர்களும் இருக்கிறார்கள் இந்த வகையினரும் பணத்தை கையில் வைத்திருப்பதை விரும்பவில்லை ஆனால் இதில் நான் சாதரண தொழிலாலர்களை இந்த வகையில் உட்படுத்த முடியாது அதற்க்கு தான் நாம் மேலே சொன்ன 20 வருடங்கள்.
இனி எப்படி சில ஆண்டுகளில் பணம் மொத்தத்தையும் நிறுத்தி வெறும் எண்கள் வரும் என்பதை பார்க்கலாம் இப்படியாக நடக்கும் போது நிச்சியம் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை கருப்பு பணம் லஞ்சம் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் இந்தியாவில் இருந்து கருப்பு பணமாக ஒரு பைசா கூட வெளியில் செல்லமுடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் புதிய நியமங்கள் கொண்டுவரவேண்டும், அதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருக்கின்றன நமது இந்தியாவில் இப்போது அமுலுக்கு கொண்டு வந்திருக்கும் அடையாள அட்டையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி வரும், அதை இப்போதே இன்போசிஸ் நிறுவணத்தினர் அரசின் உத்தரவின் பேரில் சில மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ஆனால் அதையும் நிறைய மேம்படுத்த வேண்டி இருக்கும்.
முன்பு ஒரு முறை வருடமோ யாருடையை ஆட்சி என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை 1000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமாக் புழக்கத்தில் இருந்த போது அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்தது அதில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து தங்களிடம் இருக்கும் 1000 ரூபாயை வங்கியில் ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி ஒரு தேதியையும் அறிவித்த்து அந்த தேதிக்கு பின்னால் அந்த பணத்தின் மதிப்பு வெறும் பூஜ்யம் என்பதை தெளிபடுத்தி ஆனையிட்டது அரசு எதிர்பார்த்தது போலவே கறுப்பு பணம் அரசுக்குள் வந்துவிட்டது அப்படி செலுத்தாதவர்களின் பணம் வெறும் பேப்பராக மாற்றிவிட்டிருந்தது.
இனி இந்தியனுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் அடிப்படை தகவல்கள், சொந்த விபரங்கள், சொத்து விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், மருத்துவ விபரங்கள் இன்னும் பிற இத்யாதிகள் அடங்கியதாக இருக்கும் அதன் வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிவரும், கடைக்கு சென்று விளக்கெண்ணைய் வாங்குவதென்றாலும் தீப்பெட்டி வாங்குவதென்றாலும் ஒவ்வொரு பரிமாற்றமும் அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டையில் இருக்கும் வங்கி கணக்கின் வழியாகவே மேற்கொள்ளப்படும், இந்த அடையாள அட்டை இல்லாமல் எந்த ஒரு வங்கி கணக்கோ, பணப் பரிவர்த்தனையோ அல்லது வேறு தகவல்களோ பரிமாற்றம் செய்யமுடியாத வகையில் இருக்கும்.
ஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் உரிய விலை கொடுக்காமல் நிலத்தை வாங்க முடியாது அப்படி நிலம் வாங்கும் போது அதற்கான பரிவர்த்தனை அரசின் அடையாள அட்டையின் வழியால் நடைபெறுவதால் உங்களால் அரசுக்கான வரியை ஏய்ப்பு செய்ய முடியாது அப்படி செய்ய நினைத்தாலும் அரசுக்கு கண்டுபிடிப்பதில் எந்த பிரச்சினையும் வராது இதனால் சில இடங்களில் கருப்பு பணம் சேர வழியில்லை.
மொத்த பண பரிவர்த்தனையும் வங்கியின் வழி மேற்கொள்வதால் கள்ளப்பணம் வெளியிட முடியாது காரணம் பணத்திற்கான வடிவம் காணமல் போய் அரசால் நியுமரிக் எண்கள் வழங்கப்பட்டிருக்கும் அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் நியுமரிக் எண்ணில் இடைச்செறுகலாக ஒரே எண்ணில் மீண்டும் ஒரு எண்ணை உட்செலுத்த முடியாது சரி புதிதாக எண்களை வழங்க நினைத்தாலும் அரசின் இயந்திரங்கள் அதை அனுமதிக்காது யோசித்து பாருங்கள் அரசியல்வாதியோ பெறும் பண முதலைகளோ அரசை ஏமாற்றி பணத்தை வெளியில் கொண்டு செல்லமுடியுமா?பணத்தை வேறு ஒரு நாட்டு பணமாக மாற்ற நினைத்தாலும் அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியுமா?ஆக பணம் என்பது வெறும் எண்களாகவும் கண்களில் பார்க்க முடியாததாகவும், நம்முடைய பணம் வெளி நாட்டில் இருந்தால் பத்திரங்களாக மாறியிருக்கும் ஆக இதன் வழியாக வெளிநாட்டில் இருந்து அந்நிய நாட்டு பணத்தையும் அரசின் அனுமதி இல்லாமல் உள்ளே கொண்டு வரமுடியாது!
சரி நம் அடையாள அட்டை காணமால் போய்விட்டது அல்லது அடுத்தவர்களால் களவாடப்பட்டது என்றாலும் நமக்கு பாதிப்பு இருக்காது காரணம் அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு நம் கண், கைரேகை மற்றும் கூடுதலாக கடவுச்சொல்லும் பயன்படுத்தினால் மட்டுமே நம் தகவல்கள் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதாக இருந்தால் திருடுவது எளிமையான விஷயமா? இதையும் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
இனி எப்படி இதன் வளர்ச்சியும் சாதகமும், பாதகமும் இருக்குமென்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஆனால் இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள். என்ன நண்பர்களே இது சாத்தியமில்லை என நினைக்கிறீர்களா? அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் இவையெல்லாம் சாத்தியப்படும் போது நாம் நிச்சியமாய் எவராலும் அசைக்க முடியாத வல்லரசாய் இருப்போம்.
அன்புடன்
ஜிஎஸ்ஆர்
http://gsr-gentle.blogspot.com
நல்ல விரிவான பதிவு.Participatory note ஐ பற்றியும் கூற கேட்டுக்கொள்கிறேன்
நண்ப gsr,
கொஞ்ச நாட்கள் கழித்து, நிதானமாக
உங்கள் கட்டுரையை விவரமாக படித்து,
அது பற்றி எழுதுகிறேன்.
உடனடியாக கருத்து சொல்ல முடியாததற்காக
மன்னிக்கவும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Why there is no continuity yet to this episode? Is there any problem?