..
..
இரண்டு நாட்களுக்கு முன்னர் காஞ்சீபுரம் கலெக்டர்
திருமதி கஜலட்சுமி அவர்களின் செயலாற்றலைப் பற்றி
இங்கே எழுதி பாராட்டு தெரிவித்திருந்தோம்.
அவரைப் போல, இன்னும் ஒரு கலெக்டரைப் பற்றியும்
தெரிய வந்தது. அந்த செய்தியையும் நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிருஷ்ணகிரி மாவட்ட
கலெக்டர் திரு.கதிரவன் அவர்களைப் பற்றி, அண்மையில்
வெளிவந்த ஒரு செய்திக் கட்டுரை கீழே –
மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகத்தில் இவர்களைப்போன்ற
அதிகாரிகளின் எண்ணிக்கை இன்னும் பெருக வேண்டும்.
புதிது புதிதாக பணியில் சேரும் ஐஏஎஸ் அதிகாரிகள்
திரு.கதிரவன் போன்ற அதிகாரிகளை முன்னுதாரணமாக
எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்…..
..





நான் நினைப்பது… ஐ.ஏ.எஸ் தேர்ச்சிக்கு வெறும் அறிவுத்திறமையை மட்டும் அளவுகோலாக வைக்காமல், எவ்வளவு நல்லது செய்யவேண்டும் என்ற மன’நிலை candidateக்கு இருக்கிறது, அந்த பொசிஷனைவைத்து என்னவெல்லாம் நல்லது எளிய மக்களுக்குச் செய்யலாம், இவர் செய்யும் மன’நிலை கொண்டவரா என்பதையெல்லாம் அளவுகோலாக வைக்கலாம். இல்லாட்டா, அறிவுத்திறமையை வைத்து எவ்வளவு சுருட்டலாம், எப்படி பெரிய பதவிகளுக்கு வந்து அடிப்பொடிகளாக இருந்து பணம் பண்ணலாம் என்பதிலேயே இவர்களின் பதவிக்காலம் முடிந்துவிடும்.
பாராட்டுக்குத் தகுதி உள்ளவரைப் பாராட்டியதற்கு நன்றி.
நண்ப தமிழன்,
// ஐ.ஏ.எஸ் தேர்ச்சிக்கு வெறும் அறிவுத்திறமையை மட்டும்
அளவுகோலாக வைக்காமல், எவ்வளவு நல்லது செய்யவேண்டும்
என்ற மன’நிலை candidateக்கு இருக்கிறது, அந்த பொசிஷனை
வைத்து என்னவெல்லாம் நல்லது எளிய மக்களுக்குச் செய்யலாம்,
இவர் செய்யும் மன’நிலை கொண்டவரா என்பதையெல்லாம்
அளவுகோலாக வைக்கலாம் //
நீங்கள் கூறுவது மிகச்சரி.
ஐஏஎஸ் தேர்வுக்கு வரும் வேட்பாளர்களை
நேர்முகத் தேர்வு செய்யும் கமிட்டிக்கு,
அரசாங்கத்தால் -பேட்டியின் போது இந்த
விஷயத்தையும் மனதில் கொள்ளுங்கள் என்று
தெளிவாகச் சொல்லப்பட வேண்டும்.
நல்ல, சேவை மனப்பான்மையுள்ளவர்களை
தேர்ந்தெடுக்க இது மிகவும் உதவும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்