
இன்று காலை தொலைக்காட்சி செய்தி சேனல்களில் –
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி
பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட
மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
– என்கிற செய்தி வெளிவந்த 5-வது நிமிடத்தில்,
50,000 மக்களைத் திரட்டி தளபதி ஸ்டாலின் அவர்கள்
கோவையில் மேற்கொண்ட கடும் போராட்டத்தின்
காரணமாகவே மத்திய அரசின் இந்த உத்திரவு
வந்திருக்கிறது
– என்று கலைஞர் செய்தியில் செய்தி வெளிவந்தது….!
——————————–

மாலையில், மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கப்பட்ட
ஐந்தாவது நிமிடம் கலைஞர் செய்தியில் திரு.ஸ்டாலின்
அவர்களின் அறிக்கை வெளி வந்தது…
” என்னால் தான், நான் தொடர்ந்த சட்டபோராட்டத்தின்
விளைவாகத்தான் மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம்
இடிக்கப்பட்டது..”
————————-
துடிப்பாகவும், வேகமாகவும் செயல்படும் திரு.ஸ்டாலின்
அவர்களுக்கு நமது வாழ்த்துக்க்ள்.
பின் குறிப்பு –
செய்தியாளர்கள் தயவுசெய்து ஸ்டாலின் அவர்களிடம்
கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டு விடாதீர்கள்… அதே
அவசரத்தில், அதே வேகத்தில் –
“அதுவும் நான் தான் – அதுவும் என்னால் தான்”
என்று கூறி விடப்போகிறார்….!!!
1) காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு எடுக்க
அனுமதி கொடுத்தது யார்…?
2) கொங்கு மாவட்டத்தில், விவசாய நிலங்களூடே
எரிவாயு கொண்டு போக “கெயில்” ( gail ) குழாய்களை
பதிக்க அனுமதி கொடுத்தது யார்…?



தளபதி, மவுலிவாக்கம் கட்டிட
இடிப்புக்கு காரணமாக அல்ல,
தாமதத்திற்கு தான் காரணமாக இருந்தார்.
2014, நவம்பர் 14-ந்தேதியே இந்த கட்டிடத்தை
பாதுகாப்பின்மை காரணமாக இடிக்க முதன் முதலாக
உத்திரவிட்டவர் காஞ்சீபுரம் கலெக்டர் தான்.
அதன் பின்னர் தளபதி இஸ்டாலின் நீதிமன்றத்திற்கு
சென்றதாலே தான் உயர்நீதிமன்றம் இடிப்பதற்கான
உத்திரவிற்கு தடை பிறப்பித்தது. பிறகு வழக்கு
நீண்டுகொண்டே போய் இறுதியாக உச்சநீதிமன்றம்
இடிக்க உத்திரவு கொடுத்தது.
எனவே தளர்பதி, தாமதத்திற்கு வேண்டுமானால்
சொந்தம் கொண்டாடலாம்.
திரு ஸ்டாலின் அவர்கள் சி.பி.ஐ .விசாரணைக்கோரி வழக்கு தொடர்ந்தது ” கன மழையினால் தானே இடிந்து விழுந்த கட்டடத்திற்கு தான் ” — தற்போது இடிக்கப்பட்டதற்கும் அவருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்பது தான் உண்மை — என்ன இருந்தாலும் ” நைனாவின் ” சுறு சுறுப்புக்கு இவர் ஈடு கொடுக்க முடியாது — எந்த திட்டமாக — அரசின் உத்திரவாக இருந்தாலும் தான் கொண்டு வந்தது — தான் இட்ட உத்திரவு என்று சொந்தம் கொண்டாடுவதில் – தகப்பன் தான் கில்லாடி — இவர் தற்போது அதே பாணியில் பயிற்சி பெற ஆவலோடு முயற்சி செய்கிறார் — அவ்வளவுதானே … ? …
அய்யா … வேற ” மீத்தேன் — கெயில் ” என்று ஞாபக படுத்துகிறார் — அதுவும் நம்ம மீடியாக்களை நம்பி — கேட்டுட– கீட்டுடா ..? போறாங்க — அப்படியே கேட்டாலும் அதுக்கு வேற ஒரு சப்பைக்கட்டு — அப்பா பாணியில் கைவசம் ரெடியா இருக்கும் … அப்படித்தானே … ?
மவுலிவாக்கம் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது ஜூன் 28 , 2014 …
ஜூலை 3 , 2014 தமிழக அரசாங்கம் ரகுபதி கமிஷனை அமைத்தது
ஜூலை 12 ம் தேதி .2014 ..
சி பி ஐ விசாரணை செய்யவேண்டும் என்று தி மு க ஆளுநரிடம் மனு கொடுத்தது … அது குப்பைக்கு போனது
ஆகஸ்ட் 2 2014 அன்று சி பி ஐ விசாரணை செய்யவேண்டும் என்று
தி மு க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஆகஸ்ட் 25 , 2015 தமிழக அரசாங்கம் நியமித்த ரகுபதி கமிஷன் – அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்
ஆகஸ்ட் 31 , 2016 மவுலிவாக்கம் கட்டிடம் நவம்பர் 2 அன்று இடிக்கப்படும் என்று காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு
நவம்பர் 2 2016 , மவுலிவாக்கம் கட்டிடம் 3 வினாடிகளில் இடிப்பு .
இந்தத் தாமதமே திருவாளர் மு கருணாநிதி அன் கோவினால் தானே.. இந்த அழகில் தி மு க வின் நீண்ட சட்டப்போராட்டத்தினால் கட்டிடம் இடிக்கப் பட்டதுன்னு எந்த அடிப்படையில ஸ்டாலின் பேட்டி கொடுக்கறார்?
இந்தப் பேட்டி குடுத்ததா டிவியில வெளியானப்போ அவர் வேலூரில் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தார். அது ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட ஒரு வீடியோ. அந்தக் கட்டடம் எப்போது இடிக்கப்பட்டாலும் உடனே ஒளிபரப்பப்படவேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்ட நமக்கு நாமே ஸ்டையில் ரெக்கார்ட்டட் வீடியோ. அம்புட்டுத்தான் மேட்டர்.
இதே வேகத்துல ‘இரங்கல் செய்தியை’ இரண்டு நாள் முன்னதாகவே ஒளிபரப்பிவிடப்போகிறார், ‘நமக்கு நாமமே’ தலைவர்.
” Namakku NAMAME” -announced by Mr Stalin