சபாஷ் நாயுடு குடும்பம்
இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
இங்கத்திய பொருளாதாரம் முதலாளித்துவமா…?
அல்லது பொதுவுடைமையா…?
அல்லது ……?
கீழ்க்கண்ட செய்தியை படித்து விட்டு யோசிக்கலாம்…!!!
ஆந்திர பிரதேச முதல்வர் cum தெலுகு தேச கட்சியின்
நிறுவனத் தலைவர் திருவாளர் சந்திரபாபு நாயுடு….
தெ.தே.கட்சியின் செயலாளர் அவரது மகன் லோகேஷ்…!
இரண்டு நாட்கள் முன்பு, அவர்களது குடும்ப சொத்து
விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன –
விவரம் –
திருவாளர் / திருமதி –
சந்திரபாபு நாயுடு –
சொத்து மதிப்பு – 3.73 கோடி ரூபாய்
கடன் – பரோடா வங்கியில் கடன் 3.06 கோடி ரூபாய்…
ஆக நிகர சொத்து -வெறும் 67 லட்சம் ரூபாய் தான்…!!!
மனைவி திருமதி புவனேஸ்வரியின்
சொத்து மதிப்பு 33.66 கோடி ரூபாய்.
அதில், தங்க நகைகளின் மதிப்பு, 1.27 கோடி ரூபாய்.
“நோ” கடன்……!!!
மகன் லோகேஷ் நாயுடுவின்
சொத்து மதிப்பு – 15.5 கோடி ரூபாய்…
“நோ” கடன்..!!!
இவரது மனைவி பிராம்ணி
சொத்து மதிப்பு – 5.38 கோடி ரூபாய்…
“நோ” கடன்…!!!
பிராம்ணி, லோகேஷ் ஆகியோரின் மகன் –
அதாவது ச.பா.(ஷ்). நாயுடுவின் பேரன் –
18 மாத வயதேயான,
இன்னும் பேசவே வராத – தேவன்ஷ் நாயுடுவின்
சொத்து மதிப்பு – 10 கோடி ரூபாய்…..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இவர் பெயரில் “நோ” கடன் (நல்ல வேளை) ….!!!
இந்த “அற்புத குடும்பத்தின்” மேற்படி
சொத்து விவரங்களை 2 நாட்கள் முன்னால்
அறிவித்த திரு.லோகேஷ் நாயுடு
கூறியதாவது –
” இந்தியாவிலேயே ( முதல்முறையாக…) –
கடந்த ஆறு ஆண்டுகளாக, எங்கள் குடும்பத்தின்
சொத்து மதிப்பை, நாங்களாவே முன்வந்து
தெரிவிக்கிறோம். நாட்டில் வேறு எந்த குடும்பமும்,
இப்படி தெரிவிக்கவில்லை. அரசியல்வாதிகள்,
எல்லாரும் எங்களை போல் ( ? ), ஆண்டுதோறும்
தங்களின் சொத்து மதிப்பை தெரிவித்தால்,
ஊழல் என்ற பேச்சுக்கு இடமிருக்காது….”
சபாஷ் நாயுடு…. 🙂 🙂 🙂
இவர்களைப் பார்த்து பெருமைப்படுவதா….?
அல்லது பொறாமைப்படுவதா…?



18 மாதத்தில் 10கோடி ரூபாய் சம்பாத்தியம் அசூர சாதனைதான் இதற்காக மத்திய அரசு பாராட்டு பத்திரம் வழஙக வேண்டும் ஐயா இவன், மன்னிக்கவும் இவர் வரும் 18-வது வயதில் எவ்வளவு சம்பாரிப்பார் ?
கில்லர்ஜி,
விளையும் பயிர்…
முளையிலேயே தெரிகிறதே…..!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நிறுவனத தலைவர் இவரது மாமனார் திரு.ராமாராவ் இல்லையா?
ஸ்ரீநிவாசன் முருகேசன்,
நீங்கள் சொல்வது தான் சரி….தவறி எழுதி விட்டேன்…!
மாமனாரிடமிருந்து கட்சியையே தட்டிப்பறித்தவர் அல்லவா
நாயுடுகாரு….!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
the chief minister is the poorest in the family —