
Col. Dharmendra Yadav embraces an Imam at Rainpora in Anantnag District during Operation “Calm Down” of the Indian Army…
காஷ்மீரில் – வரவேற்கத்தக்க ஒரு புதிய முயற்சி
இந்திய ராணுவத்தால்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரிவினைவாத
ஆதரவாளர்களின் போராட்ட நிலை காரணமாக காஷ்மீரின்
பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்திரவு போடப்பட்டு மக்களின்
இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிகள், கடைகள், மார்க்கெட்டுகள் – அனைத்தும் அடைக்கப்பட்டு,
பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
கடந்த டிசம்பரில் காஷ்மீர் சென்று திரும்பியபிறகு,
நான் அங்கு நேரில் கண்டு, பேசிப்பார்த்த வரையில் அங்கு நிலவிய
மக்களின் பொதுவான மனநிலையைப் பற்றி எழுதியிருந்தேன்.
இந்திய எதிர்ப்பு நிலை மற்றும்
பாகிஸ்தான் ஆதரவு நிலை போராட்டங்கள் எல்லாம்
நகரப்பகுதிகளில் தான் காணப்படுகின்றன.
மாவட்டங்களின் உட்பகுதிகளில், கிராமப் பகுதிகளில் –
பெரும்பாலான மக்களிடையே
குறிப்பிடத்தகுந்த அளவில் ஆதரவு நிலை,
எதிர்ப்பு நிலை என்பதெல்லாம் எதுவும்
அவர்களைப் பொருத்த வரை நிம்மதியான வாழ்க்கையும்,
அன்றாடப் பிழைப்புக்கான தொழில், வேலை வாய்ப்புகளும் மட்டுமே
வேண்டியிருக்கிறது என்று.
அந்த உண்மையை புரிந்து கொண்ட இந்திய ராணுவம் ஒரு
புதிய அணுகுமுறையை மேற்கொள்ளத் துவங்கி இருக்கிறது.
இந்த அணுகுமுறை உருவாகக் காரணம் ராணுவத்தினரா அல்லது
அரசியல் தலைமையா என்பது தெரியவில்லை.
தெற்கு காஷ்மீரில், கிராமங்களின் ஊடே அடர்ந்து பரவி,
கிராம மக்களுடன் தாங்களும் அச்சமின்றி,
அவர்களுக்கும் அச்சம் ஊட்டாமல் –
நெருங்கிப் பழகி, அவர்களுக்கு உதவியாக –
பள்ளிகளை நடத்துவது, மருத்துவ உதவிகளைச் செய்வது,
கடைகளை திறந்து நடத்துவதில் உதவுவது, அவர்கள் அன்றாட
வாழ்க்கையை சிரமமின்றி நடத்த நட்புடன் பழகி உதவிசெய்வது,
கிராமத்து சிறார்களுடன் பழகி விளையாடுவது –
என்று ராணுவம் ஒரு புதிய பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது.
கர்னல் தர்மேந்திர யாதவ் என்கிற ராணுவ அதிகாரியின்
நடவடிக்கைகளைப்பற்றி ஒரு செய்திக் குறிப்பு வெளியாகி இருக்கிறது.
தான் சந்திக்கும் கிராமத்து மக்களை எல்லாம் “கட்டி அரவணைத்து ”
நட்புடன் அவர்களின் தேவையை கேட்டறிகிறார்.
கிராமத்து சிறுவர்கள் அவரது ஜீப்பைக் கண்டவுடன் ஆர்வத்துடன்
அவரைச் சூழ்ந்து கொண்டு, “ஆர்மி அங்கிள்” என்று அழைக்கின்றனர்…
வித்தியாசமான இந்த அணுகுமுறை, காஷ்மீர் மக்களிடையே
படிப்படியாக, அமைதியையும் – மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்
என்று வேண்டுவோம்.
கீழே – இது குறித்த செய்தி ஒன்று –




பாராட்டுவதில் என்ன கஞ்சத்தனம் ஐயா?
அரசியல் தலைமை சொல்லாமல்
இராணுவ தலைமை யா இத்தகைய முடிவுகளை எடுக்க முடியும்?
மோடியையோ,பாரிக்கரையோ நேரடியாக பாராட்டலாமே?
நண்ப விவேக் காயாமொழி,
எனக்கேது கஞ்சத்தனம்…?
நீங்கள் சொல்லியா நான் இந்த பாராட்டு இடுகையை எழுதினேன்…?
ராணுவம் ஏற்கெனவே சில தடவை, இத்தகைய
நல்லெண்ண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது…
எனவே, ராணுவத்தலைமையா இத்தகைய முடிவுகளை எடுக்க முடியும் –
என்று கேட்க முடியாது… அதற்கும் வாய்ப்பு இருக்கிறது,,!
யார் முடிவெடுத்திருந்தாலும், ராணுவத்தைப் பொறுத்தவரை
இது அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறான பொறுப்பு…
அதை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, அவர்களை நிச்சயம்
பாராட்டியே ஆக வேண்டும்.
இருந்தாலும் – உங்கள் திருப்திக்காக,
மோடிஜிக்கும் நமது வாழ்த்தும், பாராட்டுகளும்…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Respected KM sir,
Thanks for sharing your wishes to ModiJi. I am sure it is not like Karuna sending speedy recovery wishes to JJ. 🙂
regards
Srini
The army also conducted health camps in some places —
பாராட்ட தக்க நிகழ்வு
உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சனையில் — கர்னாடக அரசின் மீது கடும் எச்சரிக்கை — மத்திய அரசு இந்தமாதம் 4- ம் தேதிக்குள் ” காவிரி மேலாண்மை வாரியம் ” அமைக்க உத்திரவு — சித்த ராமையா அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு — மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது — தேவ கௌடா உண்ணாவிரதம் — பிரதமர் அவசர ஆலோசனை — வன்முறையை எதிர்த்து இரு மாநில எல்லையில் ” உண்ணாவிரதம் இருப்பேன் ” உமாபாரதி அறிக்கை — காவிரித் தாயே .. குழம்பி விடுவாரோ … ?
செல்வராஜன்,
மத்திய அரசு – சுப்ரீம் கோர்ட் சொன்ன கெடுவிற்குள்,
தற்போதைக்கு, சுமாரான ஒரு மேலாண்மை வாரியத்தை
அமைத்து விடும் – சந்தேகம் இல்லை.
(சித்தராமையா ) கூட்டம் – நீர் விடாதே என்று தான் கூறும்.
ஆனால், அவர் இந்த தடவை அத்தகைய முடிவை ஏற்க
பயப்படுவார் என்றே நினைக்கிறேன்…
(நான் நினைக்கும் ஒரு possibility யை அவருக்கு யாராவது
எடுத்துச் சொல்வார்கள் என்று நம்புகிறேன்…
இந்த தடவையும் உத்திரவை நிறைவேற்ற மறுத்தால் –
சுப்ரீம் கோர்ட் அவருக்கு எதிர்காலத்தில் அரசியல் சட்டபூர்வமான
பதவி எதையும் வகிப்பதற்கு தடை விதிக்கக்கூடும்…!
மீண்டும் எந்த காலத்திலும் – முதல்வர் என்ன எம்.எல்.ஏ. கூட – ஆக முடியாது.)
தேவகவுடா உண்ணாவிரதம் – நல்லது.
இப்போது ” காலவரையற்ற ”
என்று அறிவித்திருக்கிறார். அதை “சாகும் வரை” என்று
அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
உமா பாரதி – ஏற்கெனவே மோடிஜியிடமிருந்து
வாங்கி கட்டிக் கொண்டிருப்பார்…
காவிரித்தாய் – இந்த தடவை வென்று காட்டுவார்.
தங்கு தடையின்றி இனி தமிழகத்தில் ஓடி, விளையாடி –
நம்மை வாழ வைத்து மகிழ்வார்…!!!
நல்லதே நடக்கும் – நம்புவோம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
காவிரி மேலாண்மை அமைக்க வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. மோடி அவர்களின் அரசு, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுபோல்தான் செயல்படும். இது அரசியல் பிரச்சனை ஆகிவிட்டதால். ஆனாலும், உச்ச நீதிமன்றத்தின் பொறுமை வியக்க வைக்கிறது. It sends wrong signal to the country. உச்ச நீதிமன்றத்தின் மாண்பை establish பண்ணவேண்டியது மத்திய அரசின், உச்ச நீதிமன்றத்தின் கடமை. பார்ப்போம் நீதிமன்றம் என்ன செய்கிறது என்று.