சொரணையற்ற தமிழக அரசியல்வாதிகளே, விவசாய சங்கத்தலைவர்களே, – சு.சுவாமிக்கு உங்கள் பதில் என்ன…?

 

தவிக்கும் தமிழக விவசாயியும் அத்தனையையும் உறிஞ்சும் கர்னாடகாவும்

தவிக்கும் தமிழக விவசாயியும் அத்தனையையும் உறிஞ்சும் கர்னாடகாவும்

சொரணையற்ற தமிழக அரசியல்வாதிகளே,
விவசாய சங்கத்தலைவர்களே,
– சு.சுவாமிக்கு உங்கள் பதில் என்ன…?

swamy

பற்றி எரிந்து கொண்டிருக்கும் காவிரி நதி நீர்
பிரச்சினையை தலைநகர் சென்னையிலேயே வந்து நேற்று –
செய்தியாளர்களிடையே, நேரடியாகவே – கிண்டலும்,
கேலியும் செய்து விட்டுப் போய் விட்டார் சு.சு.

” காவிரி தண்ணீருக்காக கத்திக் கொண்டிருப்பதற்கு
பதிலாக கடல் நீரை குடிநீராக்கி விவசாயத்திற்கும்,
குடிநீருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் ” -என்று…..

சொன்னதை மீண்டும் தனது ட்விட்டரிலும் பதிவிட்டு,
உறுதி செய்து விட்டார் திருவாளர் சு.சு….

s-1

சொரணை கெட்ட தமிழக அரசியல்வாதிகளே,
விவசாயிகள் சங்கத்தலைவர்களே – இவருக்கு உங்கள்
பதில் என்ன…? அவர் சொல்லி விட்டுப்போய்
20 மணி நேரங்களுக்கு மேலாகியும் ஒருத்தரும்
இது குறித்து வாயே திறக்கவில்லையே – ஏன்…?

ஊருக்கு ஒரு, கட்சிக்கு ஒரு – விவசாயிகள் சங்கத்
தலைவர் இருக்கிறார் எனவே, அவர்கள் அத்தனை
பேரையும் என்னால் சொல்ல முடியவில்லை…

அரசியல் தலைவர்களை –

திருவாளர்கள் –
கருணாநிதி அவர்களை,
ஸ்டாலின் அவர்களை,
டாக்டர் ராமதாஸ் அவர்களை,
டாக்டர் அன்புமணி அவர்களை,
திருமாவளவன் அவர்களை,
திருவாளர் ஜி.கே.வாசன் அவர்களை –
வலது, இடது கம்யூனிஸ்ட் தலைவர்களை,

-சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று விடாமல்
கூக்குரல் இட்டுக்கொண்டிருக்கிற அத்தனை பேரையும்
கேட்கிறேன்… டாக்டர் சு.சு. சொன்னதற்கு நீங்கள்
அத்தனை பேரும் இன்னும் ஏன் மவுனம் காக்கிறீர்கள்…?

காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்பதில் இங்கு
எந்த கட்சிக்காவது மாற்றுக் கருத்து இருக்கிறதா…?
கருத்து ஒற்றுமை இல்லையென்றால் தானே சர்வகட்சி
கூட்டம் தேவை…? அத்தனை பேருக்கும் ஒரே கருத்து தான்
என்றால் பிறகு எதற்கு சர்வகட்சி கூட்டம்….?

டெல்லிக்கு ஓசியில் டிக்கெட் எடுத்து, மோடிஜியுடன்
க்ரூப் போட்டோ எடுத்துக் கொள்ளவா…?
பிரதமரிடம் கோரிக்கை வைத்து இதுவரை சாதித்தது
எதாவது உண்டா…? மவுனத்தைத் தவிர வேறு எந்த
பதிலையாவது அவர் தந்திருக்கிறாரா…?

காவேரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றுங்கள்
என்று கர்நாடகா அரசுக்கு உத்திரவு போட, மனமும்,
துணிச்சலும், மத்திய பாஜக அரசுக்கு இருக்கிறதா…?

அப்புறம் எதற்கு டெல்லிக்கு காவடி….?

சூடு சொரணை இருந்தால் – இங்கிருந்தே காட்டுங்கள்
பார்க்கலாம் உங்கள் பலத்தை, உங்கள் எதிர்ப்பை…..

சாம்பிளுக்கு திருவாளர் சு.சுவாமியின் ட்விட்டர் பதிவிலேயே
சென்று சொரணையுள்ள ஒரு தமிழன் போட்டிருக்கும் பதிவை கீழே பாருங்கள்….

s-2

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to சொரணையற்ற தமிழக அரசியல்வாதிகளே, விவசாய சங்கத்தலைவர்களே, – சு.சுவாமிக்கு உங்கள் பதில் என்ன…?

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மிக முக்கியமான இன்னொரு வசைத்தலைவர்
    பெயர் விடுபட்டு விட்டது…
    சர்வ கட்சி, சர்வ கட்சி என்று இங்கு எள்ளுருண்டை மாதிரி
    துள்ளிக்குதிப்பதன் மூலம் டெல்லியில் நடப்பது
    தங்கள் ஆட்சி தான் என்பதிலிருந்து மக்களை திசை திருப்ப
    இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

    இங்கே ஏன் இவர்கள் துள்ளிகுதிக்க வேண்டும்….
    போய் பங்களூருவிலும், டெல்லியிலும் குதிக்க வேண்டியது தானே…? .
    இரண்டு கர்னாடகாவை சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர்களும்
    வெளிப்படையாகவே தமிழ்நாட்டிற்கு எதிராக பேசுகிறார்களே –
    மத்திய மந்திரிகள் இப்படி நடந்து கொள்ளலாமா ..?
    அதை ஏன் இவர்கள் கேட்பதில்லை…?

  2. Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

    This time, it seems people are not that serious
    about this development in Karnataka. The agigators
    are not able to draw crowd. Hardly 100 heads can be counted.
    They are involving urchins also who just laugh and dance
    around.
    kalaignar tv is seriously trying to show a negative picture.
    They are unable to suppress their disappointment on seeing
    water coming in kaveri.

  3. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    The Karnataka government has decided to release water despite agitations —

  4. mani's avatar mani சொல்கிறார்:

    mr karunanidhi who raises his voice even for petty and small issues remain mum. why dont he condemn subramania samy’s comment about tamilnadu in cauvery issue. where is mr ramadoss?

  5. Kamal's avatar Kamal சொல்கிறார்:

    Passing by after a long time. Happy that you have identified finallh who are the major political leaders of TN.
    கருணாநிதி அவர்களை,
    ஸ்டாலின் அவர்களை,
    டாக்டர் ராமதாஸ் அவர்களை,
    டாக்டர் அன்புமணி அவர்களை,
    திருமாவளவன் அவர்களை,
    திருவாளர் ஜி.கே.வாசன் அவர்களை –
    வலது, இடது கம்யூனிஸ்ட் தலைவர்களை,

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      YES My Dear Friend Kamal –

      //-சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று விடாமல்
      கூக்குரல் இட்டுக்கொண்டிருக்கிற அத்தனை பேரையும்//

      Hope now you properly understand….

      -with all best wishes,
      Kavirimainthan

  6. Satheesh Kumar's avatar Satheesh Kumar சொல்கிறார்:

    சுவாமி சொல்லி இருப்பது பாசிடிவ் ஆட்டியூட். இத்தனை வருடங்களாக ஆண்ட கட்சிகள் உருப்படியாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் நமக்கு இன்று இந்த பிரச்சனையே வந்திருக்காது. திமுகவாவது பரவாயில்லை 3 திட்டங்களை செயல்படுத்தினார்கள். அதன் மூலம் கடல் நீரை குடிநீராக்கி நீர் பிரச்சனையை அகற்றினார்கள். ஆனால் கடந்த முறை ஆட்சியில் இருந்த அதிமுக மத்திய அரசு கொடுத்த 1000 கோடி ரூபாய் மெகா கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை (நெமிலியில்) வேண்டாம் என்று திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். தமிழகத்தின் எதிர்காலம் என்பது வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் தான் இருக்கவேண்டும். இப்படி உப்பு சப்பு இல்லாமல் எல்லாவற்றையும் சென்செஷன் ஆக்கிக்கொண்டிருந்தால் கஷ்டம் நமக்கு தான்.

    • reader's avatar reader சொல்கிறார்:

      உதார்சுவாமி இதையேன் கருனாடாகாவுக்குப் பரிந்துரைக்கக்கூடாது. அரபிக்கடல் நீரை நன்நீராக்கி மேலிருந்து விட்டால் செலவு குறையுமல்லவா? ஏஞ்சொல்றேன்னா, சுவாமி கீழேருந்து மேல கர்நாடகாவுக்கும் ஏத்தலாம்ங்கறாரு. ஒருவேள வங்காளவிரிகுடா வத்திப் போச்சின்னா கருநாடகாவுக்கு என்ன பதில் சொல்றதுங்கற கவலைதான்.

  7. k7's avatar k7 சொல்கிறார்:

    Readers, if you still believe this writer, we are fools, he is supporting jaya only her caste.. i read his article for last 3 years daily.. but during the election only i understood his real color.
    i believe him like a senior person in my family.. but now i feel like a fool.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      Mister K-7….?

      உங்கள் பங்களூரு mail ID சொல்கிறது
      உங்கள் பின்னணியை ….

      முட்டாள்தனமாக இங்கே “ஜாதி”யை இழுக்க வேண்டாம்.
      திருவாளர் சு.சுவாமி எந்த ஜாதி என்று நினைக்கிறீர்கள்…?
      நீங்கள் சொல்வது போல் இருந்தால் –
      அவரைப்பற்றி நான் ஏன் இவ்வளவு எழுத வேண்டும்..?

      நான் யார் என்பதை நான் மட்டுமே அறிவேன்.
      இங்கு கருத்து – பதில் கருத்து – அவ்வளவே.

      இந்த வலைத்தளத்தில் ஜாதி பற்றிய எந்த சச்சரவும்
      இடம் பெறாது என்று ஏற்கெனவே பலமுறை கூறி இருக்கிறேன்.
      இனியொரு முறை இதே போல் பின்னூட்டம் வந்தால் –
      இங்கு இடம் பெறாது என்பதை உணரவும்.

      இந்த தளத்தின் வாசக நண்பர்கள் பக்குவம் உள்ளவர்கள்.
      உங்களைப் போல் “i feel like a fool ” அல்ல –

      பல வருடங்களாக இந்த தளத்தை
      விரும்பி படிப்பவர்கள் அவர்கள்.
      உங்களை விட அவர்களுக்கு
      என்னைப்பற்றி நன்கு தெரியும்.

      நீங்கள் சொல்லித்தான் என்னைப்பற்றி
      புரிந்துகொள்ள வேண்டும் என்கிற
      அவசியம் இல்லாதவர்கள்…

      போய் வேறு எங்காவது உங்கள் “ஜோலி”யை பாருங்கள்.

      -காவிரிமைந்தன்

    • Karthik R's avatar Karthik R சொல்கிறார்:

      Strongly disagree Mr.k7

    • Inder's avatar Inder சொல்கிறார்:

      Strongly agree Mr.k7

  8. ravi's avatar ravi சொல்கிறார்:

    சொத்து குவிப்பு வழக்கும், 2 ஜி , மன்னார்குடி , கேடி கூட்டம் இருக்கும் வரை ஸ்வாமியை ஒன்றும் செய்ய முடியாது … காம்ரேடுகள் அடுத்து வரும் முல்லை பெரியார் விஷயத்தில் அமுங்கி விடுவார்கள்..

  9. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    இன்று சொரணைக்கெட்டு கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசிய — டிவிட்டரில் பதிவிட்ட சு.சுவாமி ஒரு பக்கம் — அதே வரிசையில் தமிழக அரசியல்வாதிகள் ஒரு பக்கம் — அதுமட்டுமின்றி கர்நாடக விவசாயிகள் போராட்டம் — எப்போதும் போல — ” வாட்டாள் நாகராஜ் ” என்கிற வெட்டி ஆசாமி மறுபக்கம் என்று உச்ச நீதிமன்ற உத்திரவுக்கு எதிராக கிளம்பி –இருக்கும் இந்த நேரத்தில் — ஒரு செய்தி :– // வாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. ! //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/when-mgr-met-vatal-nagaraj-262178.html — இதைப் படித்து — அன்று எப்படி வாட்டாள் நாகராஜை வார்த்தையால் அடித்து பணிய வைக்க முடிந்தது — என்பது விளங்கும் … !!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      இன்றைய சூழ்நிலையில் இந்த
      வாட்டாள் நாகராஜ் செய்திக்கு
      இன்னும் அதிக முக்கியத்துவம்
      கொடுக்கப்பட வேண்டுமென்று நினைக்கிறேன்.

      இதை தனியே இடுகையாக பதிவிடுகிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  10. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    1. I worked many years in big desalination plants. It is a very costly project. In my opinion Tamilnadu Govt could not bear it unless otherwise it is run on commercial basis. Are we ready to pay? Whether Su. Swamy will arrange free funds ?
    2. So far Tamil Nadu opposition leaders did not condemn Karnataka CM as far as I read.
    3. Instead of all party meetings, opposition parties can arrange public meetings to condemn Karnataka politicians .

  11. ravi's avatar ravi சொல்கிறார்:

    என்ன தண்ணீர் இல்ல… குடிக்கத் தண்ணீர் இல்லையா… தோட்டத்தில் விவசாயம் பண்ண முடியவில்லையா? விவசாயம் செய்யாமல் டவுனையே சுற்றிக்கொண்டிருந்தால் கையில் எப்படிக் காசு இருக்கும்? விவசாயிகள் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள். பவானியில் இருக்கும் விவசாயிகளைப் போய் பாருங்கள். சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயிகளைப் பாருங்கள். வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள்; வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள்; ஃபைனான்ஸ் செய்கிறார்கள்; லாரி வைத்திருக்கிறார்கள்; விவசாயம் சார்ந்த பல தொழில்கள் செய்கிறார்கள். ஆனால், ஒரு சென்ட் நிலம் கூட இல்லாதவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். ஊடகங்களில் தங்கள் பெயர் வரவேண்டும் என்ற விளம்பரத் துக்காகப் போராடுகிறார்கள். அரசையும், நம்மையும் இவர்கள் ஏமாற்றுகிறார்கள்

    சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன்
    ஹுஹும் !! சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை ..

  12. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    அய்யா என்ன செய்யலாம்/செய்ய முடியும் நீங்களே சொல்லுங்கள்.எனக்கு தெரிந்து ஜெ அவர்கள் கர்நாடகத்தை/மத்திய அரசின் கையாலாகத தனத்தை எதிர்த்து உண்ணா விரத போராட்டம் நடத்தினால் தமிழ்நாடளவில் மிகப்பெரிய எழச்சி ஏற்படும் .இந்தியாவே திரும்பி பார்க்கும்.காவிரி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் வரை குறைந்த பச்சம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலாவது உண்ணாவிரதத்தை கைவிடக்கூடாது.

    • ravi's avatar ravi சொல்கிறார்:

      அப்படியே கொஞ்சம் காவிரி , கொள்ளிடம் இரண்டிலும் மணல் அள்ளுவதை கொஞ்சம் நிறுத்த சொல்லுங்களேன் .. இதற்கு மத்திய அரசு எல்லாம் வேண்டாம்,.மாநில அரசு ஒன்றே போதும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.