.
.
எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்கா சென்று திரும்பிய பிறகும்
உடல்நலக்குறைவுடன் தான் இருந்தார். முழுமையாக
அவரால் செயல்பட முடியவில்லை… இருந்தாலும்,
தன் குறைகளை, பலவீனங்களை மற்றவர் முன் அவர்
காட்டிக்கொள்ள விரும்பியதில்லை – என்கிறார்
நடிகர் சிவகுமார் அவர்கள்.
அண்மையில் ஒரு பேட்டியில், எம்.ஜி.ஆர். அவர்களின்
கடைசி மாதங்களில் தான் அவரைச் சந்தித்தபோது
நிகழ்ந்த சில சம்பவங்களை விளக்குகிறார் திரு.சிவகுமார்.
அதனை படித்திருக்க வாய்ப்பில்லாத
வாசக நண்பர்களின் பார்வைக்காக
கீழே பதிப்பித்திருக்கிறேன்….







மக்கள் திலகம் அவர்கள் வருடத்தில் முதல்மாதம் ஜனவரி — 17-1-1917 ” செவ்வாய்கிழமை ” பிறந்தார்….. அதேபோல் வருடத்தில் கடைசிமாதம் டிசம்பர் — 23-12-1987 ” செவ்வாய்கிழமை ” இரவு மறைந்துள்ளார்…… 1987 -ம் வருட கடைசி டிசம்பர் மாதத்தில் காலம் சென்ற இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய முழு உருவச்சிலை தமிழக அரசின் சார்பில் ” கத்திப்பாரா ” என்ற சந்திப்பில் சென்னையில் உருவாக்கிய பிரமாண்டமான விழாவில் — அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தலைமையில் சிலை திறப்பு விழா நடந்தது….. ” இதுவே மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்ட கடைசி விழா ” ஆகும்…. விழா நடந்த தேதி 22.12.87 மாலை விழா முடிந்தது….. வள்ளல் மறைந்தது 23.12.1987 இரவு…. அவருடைய வாழ்க்கையே ஒரு ” மரணமில்லா பெருவாழ்வு ” தான்… !!! ..