.
.
திருவாளர் ஜக்கிஜி அவர்களைப் பற்றி தொடர் இடுகைகள்
எழுதியபோதே நாம் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் –
யார் எந்த அளவுக்கு முயன்றாலும் இவரை இம்மியளவு கூட
அசைக்க முடியாது…..என்கிற உண்மை.
அதை மீண்டும் நிரூபிக்க இரண்டு விஷயங்கள் –
ஒன்று – இத்தனை புகார்களும், கண்டனங்களும்,
போராட்டங்களும் நடந்த கோவை மாநகரிலேயே
ஜக்கிஜி இன்று பந்தாவாக ஒரு “கிராம-ஒலிம்பிக்ஸ்”
( அவரே சொன்னது…) நடத்துகிறார்….!!!
அரசு அதிகாரிகளால், இவரை ஒன்றும் கேட்க இயலாது…
ஏனென்றால், அரசியல்வாதிகள் இவர் பாக்கெட்டுக்குள்
என்று சொன்னோம் …
எடுத்துக்காட்டு –
இன்றைய “கிராமோத்சவம்” நடைபெறும் “நகர” நிகழ்வுக்கு
முன்னிலை வகித்து நடத்திக் கொடுக்கப்போகிறவர்கள் –
மாண்புமிகு பாஜக புதுவை கவர்னர் கிரண் பேடி,
மாண்புமிகு பாஜக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை
அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரதோர் ஆகியோர்….!!!
அப்புறமென்ன – அரசு மரியாதைகளுடன் இன்று
கோவையில் ஜக்கிஜி ராஜ்ஜியம் தான்….!!!
அது குறித்த விளம்பரம் கீழே –

இரண்டு –
நேற்றிரவு(சனிக்கிழமை) தந்தி தொலைக்காட்சியில்
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே,
திருவாளர் ஜக்கி வாசுதேவ் அவர்களை பேட்டி கண்டார்.
விடாக்கண்டன்-கொடாக்கண்டன் கதை
கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
பாவம் – ரங்கராஜ் பாண்டே சளைக்காமல் கேள்விகளை
கேட்டுக் கொண்டே இருந்தார்….
“அத்தனைக்கும் ஆசைப்படு” owner – அத்தனைக்கும்
பதில் சொல்லி சமாளித்துக் கொண்டே இருந்தார்…
பாண்டே அவர்களால், எத்தனை முயன்றும் உண்மைகளை
வெளிக்கொண்டு வர முடியவில்லையே என்று
சலித்துக் கொள்ள வேண்டாம்…
அவரது முயற்சிகளுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” – என்பது போல்,
பதில் சொல்லியவரின் முகபாவங்கள் – அத்தனை
உண்மைகளையும் வெளியே காட்டி விட்டன என்றே
நான் நினைக்கிறேன். இந்த கருத்தை மனதில்
ஊன்றிக்கொண்டு பார்த்தால் மற்றவர்களும் அப்படித்தான்
உணர்வார்கள் என்றும் எண்ணுகிறேன்.
தந்தி டிவியில் நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்காக
கீழே அதே நிகழ்வின் பதிவு –



“Don’t be excessively concerned about anything – that itself is a sickness” – Sadhguru
I can now visualize KM sir’s reaction… 🙂
Pranams
Srini
Thank you Srini.
My re-action –
” சிலர் சிரிப்பார் – சிலர் அழுவார்….
நான் – சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…”
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஜக்கி சொன்னது,
” கட்டுமான உரிமம் பெறுவதில் சில தவறுகள் தெரியாமல் நடந்திருக்கலாம்”
நீங்கள் ஈஷா மைய நிறுவனர் பற்றி என்ன நிரூபிக்க வருகறீர்கள்.அவர் ஏமாற்றுகாரர் என்றால் இதே தமிழத்தில் அவரை விட ஏமாற்றுகாரர்கள் ஆயிரம் பேர் உள்னர்.மத மோசடிகாரர் என்றா அல்லது இளம் பெண்களை வசியம் செய்து சன்யாசிகள் ஆக்கிவிடுகிறார் என்றா( பாவம் பெண்கள் பெற்ற கவனம் இளம் ஆண்களுக்கு கிட்டவில்லை)எதுவுமே அதீதம் அடையும் போது சலித்துவிடும் ஈஷா பற்றிய உங்களது விமர்சனங்களும் அப்படிதான். ஏனைய எந்த மதங்களிலும் இளம் பெண்கள் சன்யாசிகள் ஆக்கப்படுவதில்லையா. ஒரு கன்யாஸ்திரியின் வாக்குமூலமான ஆமென் ஸிஸ்டர் ஜெமி என்ற காலசுவடு பதிப்பகத்தின் நூலினை நீங்கள் வாசிக்கும் போதுதான் ஒரு நணயத்தின் இன்னொரு பக்கம் தெளிவாகும். எனவே ஜகி பற்றிய உங்களது கருத்துக்கள் ஒவ்வாமை என்ற கண்னாடி அணிந்து பார்ப்பதால் வருவது எனவே அதனை சிறிதுகாலமாவது கழட்டிவைப்பது நல்லது.இரண்டாவது ரங்கராஜ் பாண்டே நேர்காணல் என்பது முழுக்க முழுக்க டிஆர்பி ரேட்டிங்கை மனதில் வைத்து கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி உண்மையிலேயே அவர் நேர்பட பேசுபவராக இருந்தால் முடவனை பேசவைக்கும் குருடனை நடக்கவைக்கும் பாதிரிகளை அழைத்துவந்து துளைத்தெடுக்கட்டும் பார்க்கலாம் அதேபோல் ஒரு தெரசாவால் புற்றுநோயை குணப்படுத்தி புனிதராக முடியுமென்றால் அதையும் கேள்விகளுக்கு உட்படுத்தாமல் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் பிரச்சனை ஜகியிடம் இல்லை என்பது மட்டும் நன்றாக புரிகிறது.
வெ.க.சந்திரசேகரன்,
ஊரில் ஆயிரம் அயோக்கியர்கள் இருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றி எல்லாம் கூறாமல் இவரைப்பற்றி
மட்டும் நான் குறை கூறுவது தவறு என்று
எனக்கு சொல்ல வருகிறீர்களா…?
அல்லது இவர் மீது குறை எதுவுமே இல்லை என்று
சொல்கிறீர்களா…?
மற்ற அயோக்கியர்களை எல்லாம் நான் ஏற்றுக் கொண்டு
விட்டேன் என்று நீங்களாக எப்படி முடிவுக்கு வரலாம்…?
யாராக இருந்தாலும், அயோக்கியர் – அயோக்கியர் தான்.
பின் இவரைப்பற்றி மட்டும் ஏன் எழுதுகிறீர்கள் என்று
கேட்கிறீர்களா…?
இவர் அதிகம் பாதிப்பதால்,
இவர் தமிழ்நாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்துவதால்,
இவரது நாடகங்கள் எனக்கு நேரடியாக தெரிய வருவதால்….
சிலவற்றை கண்கூடாகப் பார்த்தும் இருப்பதால் –
இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்.
ஆமாம் நான் இவரைப்பற்றி எழுதுவதில்-
உங்களுக்கு என்ன கஷ்ட – நஷ்டம்….?
உங்களுக்கு வேறு யாரைப்பற்றியாவது தெரியுமென்றால்,
தாராளமாக எழுதுங்களேன்….!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Nice interview by Mr Pandey