.
.
இரண்டு நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி மற்றும்
தமிழ்நாட்டில் சில மருத்துவக் கல்லூரிகளில் வருமான
வரித்துறையினரால், நிகழ்த்தப்பட்ட “ரெய்டு”கள் பற்றிய
ஒரு இடுகை இந்த தளத்தில் வெளி வந்தது.
அது தொடர்பாக கிடைத்த சில மேலதிக தகவல்களை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக,
கீழே பதித்திருக்கிறேன்.
அதையொட்டி, இங்கு சில கேள்விகள் –
– இத்தகைய ரெய்டுகளில் கைப்பற்றப்படும் ஒட்டு மொத்த
பணமும், அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு
தேசியமயமாக்கப்பட்டு (?) விடுகிறதா அல்லது
உரிய வருமான வரியை, தண்டனையுடன் பிடித்தம்
செய்து கொண்டு மீதியை உரியவர்களிடமே
திரும்பக் கொடுத்து விடுகிறார்களா…?
– இந்த பணம் தனக்கு உரியது என்று சொந்தம் கொண்டாடி
திரும்ப பெற்றுக் கொள்பவர்கள் மீது, வரி வசூல் செய்வதை
தவிர கிரிமினல் வழக்கு எதாவது தொடரப்படுகிறதா…?
( இன்று வரை அப்படிப்பட்ட செய்தி எதுவும் வந்ததில்லை…!)
– இந்த மாதிரி கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள்
மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி,
நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகும் கூட –
செய்தி எதுவும் வெளியிடக்கூடாது என்று அரசாங்க சட்டம்
எதாவது நடைமுறையில் இருக்கிறதா…?
– குறைந்த பட்சம், வேண்டாத வதந்திகள் பரவுவதை
தவிர்க்கவாவது இத்தகைய செய்திகளை வெளியிடுவது
அவசியம் என்று தோன்றவில்லையா…?
வருமான வரித்துறையில், செய்தி தொடர்பாளர்கள் என்று
யாராவது இருப்பார்களே – அவர்கள் யாராவது இது குறித்து
விளக்கம் அளிப்பார்களா…?





கடவுள் தான் காப்பற்ற வேண்டும். வாங்கினார்கள். சரி. கொடுத்தவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் அதையும் வெளியே கொண்டு வர வேண்டும்.
இந்த ரைட்க்கு போய் ஒரு இடுகையை வேஸ்ட் பண்ணிவிடடீர்களே.ரைட் பண்ணுவதே பணத்தை எல்லாரும் பிரித்துக்கொள்ளத்தான்.இதனால் நாட்டிற்க்கோ நாட்டு மக்களுக்கோ எந்த பயனும் இல்லை. இது ஒரு மூன்று நாள் செய்தி.அதன்பின்னால் யாருக்கும் எந்த விவரமும்தெரியாது
அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வி மற்றும் அனைத்து மக்களுக்கான தரமான மருத்துவம் இவற்றை இலவசமாக்கினால் ஒழிய இத்தகைய குற்றங்களை ஒழிக்க முடியாது.