
திருமதி மேனகா காந்தி, தனது கணவரின் பெயரிலான Sanjay gandhi welfare trust -க்கு 11 லட்ச ரூபாய் நன்கொடை பெறும் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம்…. இவரது அமைச்சர் பதவி எதற்கு பயன்படுகிறது என்பதை இந்த புகைப்படம் விளக்குகிறது….. Pavan khetan and family donated 11 lac rs chq for animal saving to smt. Maneka gandhi for Sanjay gandhi welfare trust at NSCI club worli in facilitation function of Maneka Gandhi Mumbai. Express photo by Dilip Kagda Mumbai-01/11/2015.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரகம்,
பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளைக் கொல்வதற்கு
சில மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியதை குறைகூறி
மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர்
திருமதி மேனகா காந்தி பேசி இருக்கிறார்.
இப்படியெல்லாம் பேசுவதே சிலருக்கு பேஷனாகி விட்டது.
மனித உயிர்கள் பலியாவதையும், ஏழை விவசாயிகளின்
பயிர்கள் நாசப்படுவதையும் தடுப்பதற்காக தான்
இத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்துவித சாதக, பாதகங்களையும் நன்கு ஆலோசித்த
பின்னர் தான் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இத்தகைய
அனுமதியை வழங்கியுள்ளது.
வெறி நாய்களால் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகியும், அரசால் எந்தவித தீவிர நடவடிக்கையும்
எடுக்க முடியாமல் இருப்பதற்கு இவரைப்போன்றவர்கள்
தான் முக்கிய காரணம். குழந்தைகளின் துயரத்தைவிட,
மனித உயிர்கள் பலியாவதை விட –
விலங்கின ஆர்வலர் என்கிற தன் இமேஜ் தான்
இவருக்கு முக்கியம்…!!!
( விலங்கின ஆர்வலர் என்கிற இமேஜ் – இவருக்கு
எதற்கு பயன்படுகிறது என்பதை மேலேயுள்ள
புகைப்படத்தின் கீழ் உள்ள வாசகங்களை பார்த்தால் புரியும்….!!!)
லைசென்ஸ் இல்லாமல் அலையும் தெரு நாய்களையும்,
வெறி நாய்களையும் அழிக்கவும் மத்திய அரசு விரைவில்
உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.
அரசியல் சட்ட விதிகளின்படி, அமைச்சரவை என்பது
கூட்டுப்பொறுப்பு உடையது. ஒரு அமைச்சகம் எடுத்த
முடிவை இன்னொரு அமைச்சர் குறைகூற முடியாது.
– கூற விரும்பினால், முதலில் தனது மந்திரி பதவியை
ராஜினாமா செய்து விட்டு வெளியே வர வேண்டும்.
அடிக்கடி இப்படி எதாவது உளறல்களில் ஈடுபடுவது
திருமதி மேனகா காந்திக்கு வழக்கமாகி விட்டது.
இவரெல்லாம் மந்திரியாகவில்லை என்று யார் அழுதார்கள்…?
கட்சிக்கு கூடத்தான் இவரால் என்ன பயன் ..?
பிரதமர் இவரைப் போன்ற உதவாக்கரைகளை சீக்கிரமாக
வெளியே அனுப்புவது நல்லது.



Instead of killing the animals they should find some other way to protect both the crops and the animals — If the crops are damaged the whole toil of the farmer goes waste —
முன்பு ” ஜல்லிகட்டு மேலை நாட்டு விளையட்டு ” என்றும், உச்சநீதிமன்றம் தடை விதித்தது சரி என்றும் கூறினார் … தற்போது …. இப்படி … ! இந்த மத்திய அமைச்சர்களே சில நேரங்களில் ” அவர்களுக்குள்ளேயே ” எதையாது கூறி வருவது — வேடிக்கையானது …. அடுத்து நம்ம — பொன்.ராதாகிருஷ்ணன் : — // பொன். ராதாகிருஷ்ணனின் திடீர் ராஜினாமா பேச்சுக்கு காரணம் என்ன தெரியுமா?
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pon-radha-will-resign-colachel-project-255646.html .. // என்றொரு செய்தி — அடுத்து இன்னொரு செய்தியில் :– // ரூ.570 கோடி விவகாரம்… மத்திய அரசின் நடவடிக்கை என்ன?… பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rs-570-crore-seized-incident-pon-radhakrishnan-255508.html ..// பொன்.ரா. அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் — ஏற்றுக் கொள்ள கூடியதா … ?
Why this doubt about Rs 570 even after clarifications from SBI —
http://www.thehindu.com/elections/tamilnadu2016/tn-election-officials-stop-three-containers-carrying-rs-570-crore-near-tirupur/article8599430.ece
What is not understandable is 1)Why such a huge money was being transported by road and not by rail 2) why this was done during election when every vehicles are likely to be checked —
குளைச்சல் துறைமுக விஷயத்தில் பொன்னார் ராஜினாமா செய்வேன் என்று ஆவேசம். ஏழை விவசாயிகளை விட வனவிலங்குகளின்மேல் அக்கறை கொண்டு மேனகா ஆவேசம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வியது. உபியில் ராஜ்நாத் சிங்களவரிடையே வருண்காந்தியை முதலமைச்சர் வேட்பாளராக ஆக்குவதற்கு மிகுந்த ஆதரவு. பிரதமர் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போகிறார். இந்த எல்லாச் செய்திகளும் தொடர்புள்ளவையே. அதனால்தான் ஆவேசங்கள் அதிகமாகிவிட்டன.
விலங்கு அக்கறையாளர்கள், தெருநாய் பாதுகாவலர்கள் எல்லோரும் நியாயவான்கள், Genuine என்று யாராவது நம்புகின்றீர்களா? அவர்கள் சுத்த வெஜிடேரியன்களாக இருந்தால்மட்டும்தான் இதைச் சொல்ல லாயக்கு. இல்லாட்டா இதுகளெல்லாம் வெட்டிக்கூட்டம். சிக்கன் பிரியாணியைச் சாப்பிட்டுக்கொண்டே புலாலுண்ணாமையைப் பற்றி அறிவுறுத்துபவர்களுக்கும், டாஸ்மாக்கின் வாடிக்கையாளராக இருந்துகொண்டே மதுவிலக்கைப் பற்றிப் பேசுபவர்களுக்கும், சிகரெட் ஏஜென்சியில் ஏகப்பட்டது சம்பாதித்துக்கொண்டு மக்கள் நலனைப்பற்றி ஆவேசமாகப் பேசுபவர்களுக்கும், இந்த புலாலுண்ணும் விலங்கு அக்கறையாளர்களுக்கும் வித்தியாசம் கிடையாது
correct
ராஜநாத் சிங்கைவிட என்று வாசியுங்கள். Auto text என்னைவிடப் புத்திசாலியாகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு சமயத்தில் காலைவாரிவிடுகிறது
I look at a different angle of Pon.Ra’s speech of kolachal harbor. That is recently we are seeing in
print media that both admk and bjp are coming together. Then MK’s statement about Maduravoil
and chennai harbor elevated corridor. To counter that this Kolachal statement might have come..
Also two more things: Tamilisai’s praise about JJ’s recent approaches and her visit to
Delhi on 14-6-16.
Well all know that modi ji has firmly decided to drop/ include
certain ministers……..
So these ministers become nervous
at the slightest provocation…….
Soon we find more such outbursts
And we would enjoy ……these things
Every now and then there is the rumour about cabinet reshuffle. One thing is certain. Nobody can push the PM to do this or that. There will be a reshuffle if reports are to be believed. If that happens some minor changes can be expected. I don’t think Pon Radhakrishnan will be removed. The P M is back from tour and speculations are bound to be floated .
வெறி நாய்களால் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகியும், அரசால் எந்தவித தீவிர நடவடிக்கையும்
எடுக்க முடியாமல் இருப்பதற்கு இவரைப்போன்றவர்கள்
தான் முக்கிய காரணம். குழந்தைகளின் துயரத்தைவிட,
மனித உயிர்கள் பலியாவதை விட –
விலங்கின ஆர்வலர் என்கிற தன் இமேஜ் தான்
இவருக்கு முக்கியம்…!!!