
டெல்லியில் டாக்டர் சு.சுவாமி. செய்தியாளர்களிடம் பேசியதாக
விகடன் செய்தி நிறுவனம் கீழ்க்கண்ட செய்தியை இன்று மாலை
வெளியிட்டுள்ளது.
——————————————-
பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் அனைத்தும்
குப்பை தொட்டிக்கு தான் செல்கின்றன என பாஜக மூத்த தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருக்கு கடிதம்
எழுதுவதில் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால்
அவரது எண்ணப்படி அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும்
குப்பைக்கு தான் செல்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய
சொல்லியும் அவர் கடிதம் எழுதி வருகிறார்.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக அவர் எழுதிய கடிதமும்
குப்பை தொட்டிக்கு தான் செல்லும்.
——————————————————-
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இவருக்கு பிடிக்காதவராக,
வேண்டாதவராக இருக்கலாம்.
ஆனால் அதற்காக தமிழகத்தின்
பிரச்சினைகளைப்பற்றிய
முக்கியத்துவத்தை உணராமல்,
இந்த அதிபுத்திசாலி உளறுவது –
அவரது அறியாமையையும், வாய்க்கொழுப்பையும்,
மண்டைக்கனத்தையும் தான் காட்டுகிறது…..
பிரதமருக்கு, முதல்வர் எழுதும் கடிதங்கள் குப்பைக்கூடைக்கு
தான் போகின்றன என்று எந்த தகுதியில் இவர் சொல்கிறார்…?
இந்த ஆசாமியின் வாய்க்கொழுப்பும், உளறல்புத்தியும்
தெரிந்து தானே பிரதமர் இன்னமும் இவரை அமைச்சரவையில்
சேர்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்…
தன்னை அதிமேதாவியாக கருதிக்கொண்டு சு.சுவாமி உளறுவது
வர வர எல்லை மீறிக் கொண்டிருக்கிறது.
இவரை பிரதமர் அடக்கி வைக்கவில்லையென்றால்,
விரைவில் பிரதமருக்கும் சு.சுவாமியால் தர்மசங்கடங்கள்
உருவாவது உறுதி…!
ஆமாம் – ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவியை விட்டு
விலக்கும்படி தொடர்ச்சியாக சு.சுவாமி பிரதமருக்கு கடிதம்
எழுதிக் கொண்டே இருக்கிறாரே .. லேட்டஸ்டாக இன்று….
அந்த கடிதங்களுக்கு கிடைத்த மரியாதை என்ன –
அந்த கடிதங்களின் மீது பிரதமர் எடுத்த நடவடிக்கை என்ன
என்பதை சு.சுவாமி விளக்குவாரா ….?
அல்லது குறைந்தபட்சம் அவையெல்லாம்
யாருடைய குப்பைக்கூடைக்கு
போகின்றன என்பதையாவது அவர் அறிவாரா …?
செய்தியாளர்களுக்கு அதையும் விளக்குவாரா …?



DR SWAMYS criticism against MR RAGURAM RAJAN governor reserve bank of india
need not be brushed aside
The fact is that MR MODI AND MR JAITLEY are still to find
a suitable person in the rbi governors post
Contrary to much expectations RAGURAM JI
has not been delivering goods
Modiji and arun ji knows thoroughly
about the little performance of
our rbi governor…….
THEY WOULD DECIDE SOON
நேராக பிரதமருடன் உட்கார்ந்து விவரமாக விவாதித்து
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை,
அதிதீவிரமான, தேசத்துரோகம் உட்பட குற்றச்சாட்டுகளை
அள்ளி வீசி கடிதம் எழுதி,
அதை பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பும்
சு.சுவாமி திமிர் பிடித்த arrogant என்பதில் சந்தேகமே இல்லை.
சு.சு.வின் இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவர்கள்
கண்மூடித்தனமான அவரது தீவிர ரசிகர்களாக மட்டுமே
இருக்க முடியும்.
அது சரி … ! இவர்எழுதிய பல கடிதங்களும் — வைத்த கோரிக்கைகளும் பின் பக்கம் துடைக்க தான் போகிறதா — ? அக்டோபர் 2014 – ல் இவர் ஈழ தமிழர் இல்லாதொழித்த ராஜபக்சே வுக்கு ” பாரத ரத்னா ” விருது வழங்க வேண்டும் என்று மோடிஜிக்கு எழுதிய கடிதம் — என்னவானது .. ? கருப்பு பணம் — ராமர் கோயில் விவகாரம் — நிதியமைச்சர் பற்றி தொடர் கருத்து — ரபேல் விமானம் — இன்னும் எவ்வளவோ கோரிக்கைகளும் — எங்கே போகின்றன … ? இது ஜெயாவின் தனிப்பட்ட நலனுக்காக எழுதப்பட்ட கடிதங்களா … ? இதற்கு இங்குள்ள பல கட்சி தலைமைகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் … ?
//அல்லது குறைந்தபட்சம் அவையெல்லாம்
யாருடைய குப்பைக்கூடைக்கு
போகின்றன என்பதையாவது அவர் அறிவாரா …?
செய்தியாளர்களுக்கு அதையும் விளக்குவாரா …?// – நெற்றியடி!!
நண்ப இ.பு.ஞானப்பிரகாசன்,
உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்