ஜெ. வெற்றி பற்றி – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!!

j vetri attai pada cartoon

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஜெ. வெற்றி பற்றி – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்….!!!

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    உண்மை இருக்கும் போல் தோன்றுகிறது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      பரமசிவம்,

      கலைஞரை பிடிக்காதவர்களில் சிலர் , வேறு alternative இல்லை
      என்பதால் அதிமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் என்பதும்
      உண்மையே…!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    மழை விட்டபின்னும் தூ(ற்)றல் நின்றபாடில்லை போலிருக்கே!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அவசரப்படாதீர்கள் ரிஷி….
      அடுத்த இடுகையையும் பாருங்கள்…. 🙂 🙂

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    துக்ளக்கின் விமரிசனம் உண்மைதான். எம்ஜியார் காலத்திலும் சர், ஜெ காலத்திலும் சரி, குறைந்தது 20 சதவிகிதமாவது (100ல், 41ல் இல்லை) அதிமுகவுக்கு வரும் வோட்டு/ஆதரவில், கருணானிதியை வெறுப்பவரிடமிருந்து வரும் வோட்டு/ஆதரவு. கருணானிதி, தன் செய்கை, அறிக்கை மூலமாக, அந்த 20% வெறுப்பாளர்களைத் தக்கவைத்துக்கொண்டார். அது நிச்சயமாக ஜெவுக்கு உதவியுள்ளது. வேறு வாய்ப்பு இப்போது இல்லை என்பதும் உண்மையே.

    கா.மை. அவர்கள் தேர்தல் முடிவுகளை இன்னும் அலசவில்லையே. தேதிமுகவின் வாக்கு வங்கி குறைந்ததற்கான காரணம் திருமாவளவன் அவர்களைச் சேர்த்துக்கொண்டதுதான் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், அவருக்கு வரும் வாக்கு (அது தேதிமுக நிலைப்பாட்டால், தற்போது அதிமுகவைப் பிடிக்காதவர்கள் வாக்கும்கூட) திமுகவுக்குச் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால், திமுக அணிக்கு இவ்வளவு வாக்கு வருவதற்குக் காரணம் இல்லை. இன்னொரு காரணம், நிறைய விளம்பரம் (கருத்துத் திணிப்பு) காரணமாக, திமுகாதான் ஆட்சிக்கு வரும் என்று நினைத்து வந்த ஓட்டுக்களும் இருக்கலாம். எல்லோரும் அதிமுக ஆட்சியின் அவலங்களாகப் பட்டியலிட்டு மக்களிடம் சென்று சேர்த்ததால், சில சதவிகிதம் அதிமுகவுக்கு பாராளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் மற்றவர்களுக்கு வாக்களித்திருக்கலாம். காசு, பணம் ஒரு பெரிய காரணம் இல்லை. ஒரத்தனாட்டில், திமுக 500 ரூபாய், அதிமுக 200 ரூபாய் கொடுத்தது என்று சிலர் சொன்னார்கள். இருவரும், (வேட்பாளரைப் பொறுத்து) பணம் செலவழித்திருப்பார்கள். ஆனால், அதனால் பெரிய தாக்கம் இருந்தது என்று தோன்றவில்லை. (‘நொண்டிக்குச் சறுக்கினது சாக்கு என்பதுபோல்தான் இத்தகைய குற்றச்சாட்டுக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்). அன்புமணி அவர்கள் எப்போதும் ஜாதீயப் பின்புலத்திலேயே இருந்திருக்கிறார். அதனால் என்னதான் பசுத்தோலைப் போர்த்திக்கொண்டாலும், அது புலி என்று எல்லோருக்கும் தெரியும். தமாகாவை ஜெ. சேர்த்துக்கொண்டிருந்தாலும், ஒரு மாறுதலும் வந்திருக்காது. அவர்களுக்கு வாக்குவங்கி இல்லை என்றே நான் நம்புகிறேன். வாசன் வெளியேறியது (தமாகா அனைவரும்) அவர்களின் சுய நலத்தினால். அதற்கு மக்கள் ஆதரவு என்றும் கிடைக்காது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நெல்லைத்தமிழன்,

      நிறைய தொலைக்காட்சி விவாதங்களில் இதை அலசி விட்டதால்,
      நாமும் செய்தால் சுவைக்காது என்று தான் விட்டு விட்டேன்.

      நீங்கள் தான் அமர்க்களமாகச் செய்திருக்கிறீர்களே…!

      மக்கள் நல கூட்டணியாக இருந்த சமயத்தில், அது alternative front ஆக
      வருமென்கிற அளவிற்கு நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தது.

      கடைசியில், திருவாளர்கள் விஜய்காந்த்தும், வைகோவும்
      நிகழ்த்திய கோமாளிக் கூத்துகளில் எல்லாம் அடித்துக் கொண்டு
      போய் விட்டது.

      கலைஞர் உண்டாக்கிய “மாயா பஜார்” –
      திமுக ஆட்சியை பிடிக்கப் போகிறது என்கிற தோற்றம்.

      இந்த தோற்றம் வலுப்பெற்றவுடன்,
      ஜெ.வை பிடிக்காத அத்தனை பேரும் திமுகவுக்கு
      ஓட்டு போட்டு விட்டனர்.

      விளைவு – அறுவர் கூட்டணியின் உழைப்பை,
      திமுக அறுவடை செய்து விட்டது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    உங்கள் அடுத்த இடுகை பார்த்துக் கருத்திட்டேன். இப்போது இடுகையே இல்லை என்று காண்பிக்கிறது. Check செய்யவும்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நெல்லைத்தமிழன்,

      நான் அடுத்த இடுகை என்று சொன்னது –
      ” தேர்தல் முடிவுகள் – “துக்ளக்” ஆசிரியர் “சோ” தலையங்கம்….!!!”
      தலைப்பிலுள்ள இடுகையைத்தான்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.