காஷ்மீர் பயணத்தின்போது ராணுவத்தினர் …..

gulmarg-3

திரும்பவும் ஸ்ரீநகரில் கலவரம்..
உண்மையில் ஜம்மு காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருக்கும்
இந்திய ராணுவத்தினர் படும் சங்கடங்களை நேரில் பார்ப்பவர்கள்,
நிச்சயமாக நமது ராணுவத்தினரின் மீது அளவற்ற பாசம்
கொள்ளத்தான் செய்வார்கள்.

கொடுமையான பருவநிலை ஒருபக்கம்.
வசதிகள் மிகவும் குறைவான பணிச்சூழ்நிலை இன்னொரு பக்கம்.
யார் நல்லவர், யார் கெட்டவர் என்று லேசில் கண்டுபிடிக்க
முடியாத ஒரு மக்கள் கூட்டத்தினூடே 24 மணி நேரமும் பணி….

நான் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது,
ஒரு ஏர் இந்தியா விமானம் வந்திறங்கியது. சுமார்
150 ராணுவத்தினர் வந்து இறங்கினர். ஸ்ரீநகரின் பல்வேறு
பகுதியில் ஈடுபடுத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள்.
அந்த விமானம் மீண்டும் பதான் கோட் கிளம்பியபோது,
சாதாரண பயணிகளுடன் 20 ராணுவத்தினரையும் சுமந்துகொண்டு
சென்றது.

இப்படி எல்லைப்புறத்தில், சிவில் விமானங்களில் சில சமயம்
ராணுவத்தினரும் பயணம் செய்ய வேண்டிய அவசியம்
ஏற்படுகிறது….

இன்று எனக்கு ஒரு நண்பரிடமிருந்து
forward mail ஒன்று வந்தது. அதனை கீழே வடித்திருக்கிறேன்.
எனக்கு ஏற்படும் உணர்வுகள் இதனை
படிப்பவர்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

————————————-

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத்
தேடி அமர்ந்தேன்.. விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு
ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை
சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க
ஆரம்பித்தேன்..

எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு
எல்லையில் பாதுகாப்பு பணி …

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.. அப்பொழுது ஒரு அறிவிப்பு..
மதிய உணவு தயார்..
சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க…பின்னால்

ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்..

நீ சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க

முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி..அங்கு
இறங்கி உண்ணலாம் ..விலை குறைவு..
ஆமாம்..உண்மை..

இதை கேட்ட பொழுது…. மனம் வலித்தது..
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான
பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை
கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்..
அவள் கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும்
என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..

நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்..
அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி,
நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்.. இந்தாருங்கள்..என் பங்கு
ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து ,
என் கைகளை பிடித்து குலுக்கி, நான் முன்பு ஏர் போர்ஸ்
பைலட்டாக இருந்தேன்..ஒரு நாள் எனக்கும் ஒருவர் உணவு
வாங்கி கொடுத்தார். இது ஒரு கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி
இந்த விமானம் பயணிப்பது..என்று சொல்லி சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம்
கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..

விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்..
இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில
நோட்டுக்கற்றைகளை திணித்தார்…

இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..

ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்..
போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள்
எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..

காரில் ஏறி அமர்ந்தேன்.. ஒரு ஆத்ம திருப்தி..

இவர்கள் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு..
உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை காக்கிறார்கள்..
இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை…
இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறது.

வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர்
நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி, கோடி கணக்கில்
பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,
ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்
மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கோடி கணக்கில்
பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,
இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை
என்ற வேதனை என்னை தாக்கியது….

—————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to காஷ்மீர் பயணத்தின்போது ராணுவத்தினர் …..

  1. Antony's avatar Antony சொல்கிறார்:

    Of course, the way of writing is heart touching. But, I could not enjoy or feel for them as I had witnessed the other cruel side of this army. Sorry for the first negative comment on your blog KM.

    • Mahesh Thevesh's avatar Mahesh Thevesh சொல்கிறார்:

      இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய ராணுவம் புரிந்த அட்டுழியங்களையும், கொலைகளையும் மற்றும் கற்பழிப்பு களையும் நாங்கள் இன்னும் மறக்கவில்லை.கடசித்தமிழன் தமிழ்
      ஈழத்தில் வாழும்வரை இந்தியாவையும் இந்திய இராணுவத்தை
      யும் மன்னிக்க மாட்டான்.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        நண்ப அந்தோனி, மஹேஷ் –

        “அதை”யும் “இதை”யும் இணைத்து
        குழப்பிக் கொள்ள வேண்டாம் நண்பர்களே.
        “அது ” ஒரு தனித்த சம்பவம். அதனை கண்டித்து நானே
        இந்த தளத்தில் எழுதி இருக்கிறேன்.

        இங்கு நான் குறிப்பிட்டிருப்பது தான் இந்திய ராணுவத்தினரின்
        பிரத்தியட்ச நிலை. எல்லையில் இருக்கும் ராணுவத்தினரில்
        கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் தமிழர் என்பதை
        நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலும், நான் அனுபவத்தில்
        உணர்வதைத்தான் இங்கு எழுதுகிறேன்.

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

  2. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    “இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து
    கொண்டுதான் இருக்கிறது.” absolutely right .

  3. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    A very touching blog you have written Mr kamaiji –One point you made every one will agree ,that army men cannot distinguish who is a good person and who is bad among the crowd –The same problem was faced by the Americans when they fought in Vietnam —
    One day I was travelling in a train –There were very young army personnel sitting in some seats -Their allotted coach was full — In the next station a big crowd entered the compartment –Without waiting for a moment they all got up and stood near the foot board and engaged in conversation — They were perhaps headed for a far away post in some border –

    We people sitting so far away do not seem to realise the sacrifice these army men do to make our life easier —They deserve the highest pay –But for them……….

  4. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. உண்மை நிலவரமும் கூட. எனது வட இந்திய பணிக்காலத்தில் நானும் கவனித்துள்ளேன். எனினும், இப்போது அவர்களின் நிலைமை, அதுவும் காஷ்மீர் பகுதிகளில், மிகவும் கொடுமையானது.
    எனது முக நூல் மூலம் எனது நண்பர்களுடன் பகிர அனுமதி கொடுத்தால் பகிர்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப பரமசிவம்,

      நல்ல விஷயம் தானே… தாராளமாகச் செய்யுங்கள் நண்பரே.

      இந்த தளத்தில் நான் எழுதும் இடுகைகளை,
      நண்பர்கள் யார் விரும்பினாலும்,
      எங்கே வேண்டுமானாலும் தாராளமாக மறு பதிவு செய்யலாம்.
      என்னுடைய முன் அனுமதி தேவையே இல்லை.
      எனக்கு தகவல் தெரிவித்தாலே போதுமானது…!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    எங்கே செல்கின்றாய் – குமரிபையன் — என்ற தலைப்பில் :–
    ——————————————————
    எங்கே செல்கின்றாய்..? அப்பா..
    என்னைவிட்டு எங்கோ செல்கின்றாய்..?
    எங்கென்று சொல்வாயோ..?
    என்காதில் சொல்லிவிட்டு செல்வாயோ..?

    நாடியே செல்கின்றேன்..! மகளே….
    நல்ல வீரனாய் செல்கின்றேன்..!
    தொல்லைகள் இல்லாமல் நாட்டின்
    எல்லையில் காவலாய் நிற்கின்றேன்..!

    என்றைக்கோ வருகின்ற ஒருயுத்தம்
    எழுப்புமாம் குண்டுகளின் சத்தம்
    எப்போது வருமென்று நித்தம்…! அப்பா…
    எண்ணத்தில் சாகிறாயே மொத்தம்…?

    நீ அமைதியாய் துயிலுரும்போது
    நான் விழிதிறந்து நின்றுக்காப்பேன்
    நானுன்னோடு விளையாடி இருந்தால்
    நம்முன் வாராதோ பொல்லாத யுத்தம்..?

    எதிரிகள் உனைதாக்க வந்தால்
    என்முகம் நினைத்திடு உள்ளால்
    எமானாக மாறுவாய் நீ தன்னால்
    எங்களை காக்க முடியுமே உன்னால்..!

    எங்கெங்கு நான் சென்றபோதும்
    எனதங்கங்கள் எனை மறக்ககூடும்
    உன்தளிர் முகமுத்தங்கள் ஓதும்
    உள்ளே அப்பாவின் நினைவோடு ஓடும்..!

    முத்தங்கள் கன்னத்தில் தருவேன்
    முத்துபோல் எண்ணத்தில் வருவேன்
    அப்பா.. அருகிலே சற்றுவந்து நில்லு
    அன்புடன் விடை தாரேன் செல்லு..!

    கண்ணீரில் சொல்கிறாய் கண்ணே
    கடுமனத்தோடு செல்கிறேன் பொன்னே
    எப்போதும் நீ இருகிறாய் உள்ளே
    என் உயிராய் நினைக்கிறன் உன்னை…!
    ———————————————————–
    எல்லையில் காவல் காக்கும் இராணுவ வீரர்களுக்கு இந்த வரிகள் சமர்ப்பணம்.
    –குமரிபையன் —- என்பவர் எழுதிய ஒரு கவிதை — நண்பர்களின் பார்வைக்கு …. !!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      மிக எளிமையான, அழகான கவிதை.
      முடிந்தால், எழுதியவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவியுங்களேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

        நீ அமைதியாய் துயிலுரும்போது
        நான் விழிதிறந்து நின்றுக்காப்பேன்
        நானுன்னோடு விளையாடி இருந்தால்
        நம்முன் வாராதோ பொல்லாத யுத்தம்..? சூப்பர் வார்த்தைகள் … !

        எதிரிகள் உனைதாக்க வந்தால்
        என்முகம் நினைத்திடு உள்ளால்
        எமானாக மாறுவாய் நீ தன்னால்
        எங்களை காக்க முடியுமே உன்னால்..! … அய்யா .. நீங்கள் முன்பு ஒரு இடுக்கையில் எழுதிய … // மலை முகடுகளில், சிகரங்களின் நடுவே கூட,
        சிறிய ஷீட் கொட்டகை அமைக்கப்பட்டு, இயந்திர துப்பாக்கி
        சகிதமாக ஜவான்கள் இரவும் பகலும் காவல் புரிகிறார்கள்.
        கொட்டும் பனியில், sub-zero temperature –
        உறைநிலைக்கும் கீழே மைனஸ் 6 முதல் 8 டிகிரி வரையிலான
        இரவு நேரங்களில் காவல் புரியும் இந்த ராணுவ வீரர்களை
        பார்க்கும்போது – நாட்டைக் காக்கும் பணி எத்தனை சிரமமானது
        என்பதும், ” நாம் அமைதியாகத் தூங்க வேண்டி,
        இந்த ஜவான்கள் எத்தகைய இன்னல்களை எல்லாம் சந்திக்க
        வேண்டி இருக்கிறது என்பது சுள்ளென்று உரைக்கிறது. ” …// இதே .. வார்த்தைகளை கவிதையில் காணுவது — என்ன ஒரு ஒற்றுமை … !! அந்த இடுக்கை :– // காஷ்மீரை தவிர்த்து விட்டு பதான்கோட்டை ஏன் …….?
        Posted on ஜனவரி 5, 2016 by vimarisanam – kavirimainthan // நண்பர்கள் முடிந்தால் படித்து பார்க்கவும் … !!!

  6. வெ.க.சந்திரசேகரன்'s avatar வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

    எல்லை புறங்களில் பணிபுரியும் வீரர்கள் தனது குடும்பங்களிலிருந்து விலகி வெகுதூரத்தில் கடுமையான பணி சூழலில் பணிபுரியும் வேளையில் அவர்களின் மனஅழுத்தம் கடுமையான ஒன்று அதன் காரணமாக சில வேளைகளில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவது உண்மை என்றாலும் சில அத்துமீறல்கள் காரணமாக ஒட்டுமொத்த வீரர்களையும் குறைசொல்ல முடியாது. இலங்கையில் இந்திய அமைதிபடையி்னரின் அடாவடியை விட சொந்த சகோதரர்களுக்குள் நிகழ்ந்த மோதல்களே அதிகம். இன்றளவும் மலையக தமிழர்களின் நிலை என்ன புலிகளால் அழித்தொழிக்கப்பட்ட ஏனைய போராளிகளின் கதை அறியாததா என்ன.

    • Antony's avatar Antony சொல்கிறார்:

      I don’t understand how the misdeeds of LTTE with others would explain the atrocities of IPKF. (It is the way of answering by MK generally). However it is not fair to change the topic as the original intention of the post is not related to it. So, I will not drag the conversation hereafter.

  7. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    நாம் நம்மையும், நம் எல்லையையும் பாதுகாக்கும் கடுமையான பணியில் உள்ள ராணுவவீரர்களை எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. யுத்தம் வரும்போதுதான் நமக்கு இவர்களைப் பற்றியும், தேசபக்தி என்று ஒன்று உள்ளது என்றும் நினைவுக்கு வரும். இந்தக் கட்டுரை அந்த நினைவைத் தட்டி எழுப்பியது.

    ராணுவத்தில் உள்ள சிலர் (அல்லது பலர்), யுத்தகாலத்தில் தகுதிக்குறைவான செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கமுடியாது. கடுமையான ஒழுக்கம் என்பது பாராட்டக்கூடிய பண்பு. அது எல்லோரிடத்திலும் எதிர்பார்க்க இயலாது. இந்தக் குற்றம் உலகின் எல்லா ராணுவத்துக்கும் பொதுவானது. அட்டூழியம்தான், பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில். இது அப்பாவிகளை சந்தேகத்தின்பேரில் பலவருடங்களாக சிறைத் தண்டனையில் வைப்பது போன்றுதான். On a larger picture, we must appreciate ராணுவவீரர்களின் தன்னலமற்ற தியாகம். எல்லா மக்களுக்கும் இரக்க உணர்வு உண்டு. அதை வெளிப்படுத்த நிறையபேர் கூச்சப்படுவார்கள். யாராவது ஆரம்பித்தால், எல்லோரும் வந்து சேர்ந்துகொள்வார்கள். (உடுமலைப் பேட்டை சம்பவத்திலும், யாராவது ஒருவர் கட்டையைத் தூக்கி அந்த மூவரையும் கேள்வி கேட்டிருந்தால், அங்கிருந்த அனைத்துப் பொதுமக்களும் சேர்ந்துகொண்டிருப்பார்கள்)

  8. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

  9. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    My humble salutations to you, JAIHIND

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.