திருவாளர் ஜவடேகர்ஜி “ஜோக்”ஸ் –

இந்த புகைப்படத்திற்கும் இடுகைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. வெய்யில் கடுமையை குறைக்க அண்மையில் நான் "குல்மார்க்" சென்றபோது எடுத்த புகைப்படத்தை இங்கே போட்டிருக்கிறென் - அவ்வளவு தான்.....!!!

இந்த புகைப்படத்துக்கும் இடுகைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை…. வெய்யிலின் கடுமை … “குல்மார்க்” பனியைப் பார்த்தால் கொஞ்சம் குறையுமே என்று தான்…. (நான் அண்மையில் சென்றபோது எடுத்த படம்…!!!)

அண்மையில் திரு.ஜவடேகர்ஜி அவர்கள் கோவையிலும்,
அதன் சுற்றுப்புறங்களிலும் பாஜக வேட்பாளர்களை
ஆதரித்து பேசி இருக்கிறார்….

அவரது பேச்சுக்களில் கிடைத்த சில “ஜோக்ஸ்” –

– மோடி அரசு மீனவர் நலனில் கூடுதல் அக்கரை
செலுத்துவதால் தான் மீனவர்கள் கைது செய்யப்படுவது
தற்போது வெகுவாக குறைந்திருக்கிறது…!!!

– தமிழக அரசு மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும்
பாமாயிலை ரேஷன் கடையில் விற்பனை செய்து வருகிறது.
இதற்கு பதிலாக, தமிழக அரசு ரேஷன் கடையில்
தேங்காய் எண்ணெய் விற்பனை செய்தால் தென்னை
விவசாயிகள் பயன்பெறுவார்கள். நாங்கள் பதவிக்கு
வந்தால் அதைச் செயல்படுத்துவோம்….!

( பாமாலின் எண்ணை என்ன விலை – தேங்காய் எண்ணை
என்ன விலை என்றும், தமிழ் மக்கள் தே.எண்ணையை
சமையலுக்கு பயன்படுத்துவதில்லை என்பதும் கூட
இந்த வெண்ணைக்கு தெரியவில்லையே.. கடவுளே.. .!!!)

– அடுத்த தை பொங்கலுக்குள் நமது பாரம்பரிய
விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள்
மீதான தடை நீக்கப்படும்.

( அவ்வப்போது பேச்சை மாற்றிக் கொள்பவர்கள்
நாங்கள் அல்ல –
நீங்கள் எப்போது கேட்டாலும் இதையே தான்
சொல்வோம்….!!! )

– தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. பிரதமர்
நரேந்திரமோடி மின்சாரத்தை தருகிறேன் என்கிறார். ஆனால்
அதை தமிழக அரசு வாங்க மறுத்து வருகிறது.

———————————————————

நேற்று திரு அமீத் ஷா அவர்கள் திருச்சியில்
பேசியதைப் பற்றி – இவ்வாறு எழுதி இருந்தேன் –

//கர்நாடகாவில் ஊழல் மன்னர் திருவாளர் எட்டியூரப்பாவை,
பாஜக தலைவராக நியமித்து விட்டு, அந்த மை உலர்வதற்குள்
இங்கே வந்து ஊழலைப் பற்றி பேச என்ன அருகதை
இருக்கிறது இவருக்கு… ?
(திருவாளர் எட்டியூரப்பாவின் மீது இப்போதும்
இரண்டு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன…)//

இன்றைய ஆங்கில இந்து நாளிதழில், நடுப்பக்கத்தில் –
சுரேந்திரா அவர்களின் கார்ட்டூன் இதே கருத்தை தாங்கி
வெளிவந்துள்ளதை நண்பர்களின் கவனத்திற்கு
கொண்டு வர விரும்புகிறேன் –

hindu-surendra-cartoon

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திருவாளர் ஜவடேகர்ஜி “ஜோக்”ஸ் –

  1. CHANDRAA's avatar CHANDRAA சொல்கிறார்:

    Well mr ediurappa is back in news yes ofcourse for wrong reasons
    The new car which he is travelling to see the draught conditions
    costs minimum one crore…….
    The congress govt in karnataka is very keen to raise this
    car issue..
    All know that congress C M mr siddharamiah was the
    target of bjp for his fifty lacs wrist watch
    Well KM JI it seems that the tamilnadu politicians are a shade better than their counterparts in
    karnataka

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    ரேஷன் கடைகளை ஒட்டு மொத்தமாக மூடிவிட்டு மானியம் என்கிற பெயரில் ஒரு ” பிக்செட் ” தொகையை வங்கி கணக்குகளில் கேஸுக்கு செலுத்துவது போல செலுத்தும் நோக்கத்தில் இருக்கும் இவருடைய அரசு — பாமாயில் — தேங்காய் எண்ணெய் என்று பேசுவதெல்லாம் சும்மா ஒரு பேத்தல் — கொடுக்கிற காசுக்கு சமையல் எண்ணெய் வாங்க முடியாது என்பதால் — இவர்கள்” மொட்டையடிக்கும் ” தலைக்கு கொஞ்சமா தேங்காய் எண்ணெய் வாங்கி தடவிக்கிங்கோ — என்று கூறுகிறார் வேறு ஒன்றும் இல்லை — அதே போல ” மோடிஜி ” கொடுக்கும் மின்சாரத்தை வாங்க தமிழக அரசு ” ஏனம் ” [ பாத்திரம் ] எடுத்து வந்து வாங்க சொல்லி கூறுகிறாரோ என்னவோ — // எடியூரப்பா பயணிக்கும் ரூ.1 கோடி சொகுசு காரால் சர்ச்சை
    Read more at: http://tamil.oneindia.com/news/india/yeddyurappa-downplays-rs-1-crore-car-251404.html …இந்த செய்தியில் :– இதுகுறித்து இன்று விளக்கம் அளித்துள்ள எடியூரப்பா, முன்னாள் அமைச்சரும், தொழிலதிபருமான முருகேஷ் நிரானி, தனக்கு இந்த காரை பரிசாக கொடுத்துள்ளதாகவும், 2 வருடங்களில் தனது மாநில தலைவர் பதவி நிறைவடைந்ததும் அவர் காரை திரும்ப பெற்றுக்கொள்வார் எனவும் கூறியுள்ளார்….// எவ்வளவு ” யோக்கியமானவர் ..? ” அடுத்து கருணாநிதியின் தம்பி என்று கூறப்படும் ” எடியூரப்பா ” கூறுவது : — // ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.. சொல்வது கருணாநிதி தம்பி
    Read more at: http://tamil.oneindia.com/news/india/karunanidhi-s-brother-yeddyurappa-praise-jayalalitha-251372.html …// நல்லாத்தான் இருக்கு …. !!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      பாஜக தலைமை தந்திரமிக்கது…. நரிகள்…!

      ஒரேயடியாக ஜெ.யை பகைத்துக் கொள்ள
      பாஜக தலைமை துணியாது. மத்திய அரசுக்கு எதாவது ஒரு
      இக்கட்டான சமயத்தில் உதவி அவசியம் தேவைப்படும்.

      எனவே, இது தமிழ்நாட்டில் அவர்கள் பயன்படுத்திய மொழிகளை
      சமன் செய்ய ( to balance the damage done by their speakers
      in tamil nadu ) யெட்டியூரப்பாவை பேசச்செய்திருக்கிறார்கள்
      என்று நினைக்கிறேன்….
      இல்லையென்றால், திடீரென்று யெட்டி’யார் எங்கே வந்தார் …?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.