டெல்லி-திருச்சி-டெல்லி – தனி விமானத்தில் தலைவர் – எந்த தொழிலதிபர் ஏற்பாடு …?

Private-Jet-Plane-

டெல்லியிலிருந்து திருச்சி வந்து திரும்பவும் அதே நாளில்
டெல்லி போக வேண்டும். எட்டு மணி நேரம் திருச்சியில்
விமானம் காத்திருக்க வேண்டும். தனியார் விமானம் ஒன்று
ஏற்பாடு செய்தால், அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்….?
போக-வர “பறக்க” மற்றும் 8 மணி நேரம் “காத்திருக்க”….?

யார் அதை கொடுத்தார்கள் ….?
தொழிலதிபர் ஒருவரின் பெயர் அடிபடுகிறதே –
சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் கொடுப்பார்களா…?
இந்த கணக்கை தேர்தல் கமிஷனுக்கும் கொடுப்பார்களா ?
அல்லது கூடவே வந்த மத்திய மந்திரிகளின்
கணக்கில் போய் விடுமா…?

தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திருட்டு கட்சியாம்….
இங்கே எல்லாருமே கொள்ளைக்காரர்களாம்…
சரி – அது தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு தெரியுமா …?
அல்லது தன் வாழ்நாளில் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவையாக, தமிழ்நாட்டிற்கு “பறந்து” வந்துவிட்டு
செல்பவர்களுக்கு தெரியுமா …?

தமிழ்நாட்டு தலைவர்களை “திருடர்கள்” என்று சொல்வது யார்..?
யாராவது உத்தமத்தலைவரா …?
காந்திஜியா, படேலா, மொரார்ஜி தேசாய் அவர்களா …?
ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்று சொல்வது
கூட இங்கே பொருந்தாது….

“கொலைக்குற்றம்” சாட்டப்பட்டு, போலீஸ் மந்திரியாக
இருக்கும்போதே தலைமறைவாகப் போனவர்……!
மந்திரியாக இருந்தபோதே தலைமறைவாகி,
பின்னர் பிடிபட்டு, கொலைக்குற்றம் சாட்டப்பட்டு,
மூன்று மாதங்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்தவர்….!

சொந்த மாநிலத்தில் இருக்கவும்,
நுழையவுமே உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு,
இரண்டு வருடங்கள் எங்கோ “அஞ்ஞாத வாசம்” செய்தவர்…

சந்தர்ப்பவசத்தால், பலத்த காற்றடித்து, குப்பைக்காகிதம்
கோபுரத்தில் போய் ஒட்டிக் கொள்வது போல்,
முட்டாள் காங்கிரஸ் அரசு தொடர்ச்சியாக செய்த ஊழல்களால் –
உயர்வு பெற்று ஆளும் கட்சியின் உச்சத்தில் இருப்பவர்…


கர்நாடகாவில் ஊழல் மன்னர் திருவாளர் எட்டியூரப்பாவை,
பாஜக தலைவராக நியமித்து விட்டு, அந்த மை உலர்வதற்குள்
இங்கே வந்து ஊழலைப் பற்றி பேச என்ன அருகதை
இருக்கிறது இவருக்கு… ?

(திருவாளர் எட்டியூரப்பாவின் மீது இப்போதும்
இரண்டு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன…)

ஏன்- இவர் மீதே இருந்தனவே எத்தனையோ வழக்குகள்…
ரிடையர் ஆன பிறகும் கவர்னர் பதவிக்கு ஆசைப்பட்ட
ஒரு புண்ணியவானின் பலஹீனம் அல்லவா
இவரை விடுவித்தது… ?
இல்லையென்றால் – இவரும் நிலுவையில் உள்ள
ஒரு குற்றம் சாட்டப்பட்டவராகத்தானே இப்போதும் இருப்பார்…?

பேசுபவர் தன் தகுதியறிந்து பேச வேண்டும்…
இல்லையேல் அவமானப்பட நேரிடும்..

காவிரி பிரச்சினையை தீர்க்க என்ன செய்தீர்கள் என்றால் –
இத்தனை வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததே –
அவர்கள் என்ன செய்தார்கள் என்று திருப்பி கேட்கிறார்…

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்திடம்
வதைபடுகிறார்களே என்றால் – அவர்கள் தினம்
சுட்டுக் கொல்லப்படாமல்
இருப்பது எங்களால் தானே என்கிறார்…

புரிகிறது … நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம்
செய்வீர்கள் என்று புரிந்து தான் தமிழ் மக்கள் உங்களை
மிகத்தொலைவில் வைத்திருக்கிறார்கள்.

சந்தடி சாக்கில் கும்பலில் ஒளிந்திருந்த ப்யூஸ் மந்திரி
திரும்பவும் அதே உளறலைக் கூறுகிறார்….

முதல்வர் தான் சொன்னாரே – சென்ற அக்டோபர் மாதமே
விரிவான பதிலை மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும்,
மத்திய அரசிடமிருந்து இது வரை அதற்கான பதில் ஏதும்
வரவில்லை என்றும்….?

செய்தியாளர்களிடம் சொல்வதை விட
மாநில அரசுக்கு உரிய பதிலை அனுப்பி இருக்கலாமே –
ஏன் செய்யவில்லை ? எழுத்தில் மாட்டிக் கொண்டால்
பிறகு தப்புவது கடினம் – அது தானே காரணம்…?

உதய் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்டால்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணத்தை
மாற்ற / உயர்த்த வேண்டியிருக்கும் என்று தமிழக அரசு
சொன்னதற்கு ஏன் பதில் இல்லை …?

திரும்ப திரும்ப, மத்திய அரசு உதய் திட்டத்தின் மூலம்
தமிழக மக்களுக்கு உதவமுயன்றாலும், தமிழக அரசு
ஒத்துழைக்க மறுக்கிறது என்று சொல்கிறீர்களே –
நீங்கள் உதவ நினைப்பது தமிழக மக்களுக்கா,
தனியார் முதலாளிகளுக்கா …?

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில்
இங்கே இருக்கும் தமிழக தலைவர்களை விட
எங்கோ இருக்கும் உங்களுக்கு அக்கரை வழிகிறதோ …?

சென்னைக்கு வந்தால் மீடியாவை சந்திக்க
வேண்டியிருக்கும் என்கிற பயமா …?

செய்தியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் –
இவர்கள் எப்படியும் தேர்தலுக்கு முன்னர்
சென்னைக்கு வந்து தான் ஆக வேண்டும்..
செய்தியாளர்களை சந்திக்கும்போது தலைவரை
ஒரு கேள்வி கேட்க வேண்டும்… ஆங்கில மீடியத்தில்
படித்து B.Sc. பட்டம் பெற்ற உங்களுக்கு,
40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில்
ஈடுபட்டுள்ள உங்களுக்கு –

தமிழ் தெரியாது – ரொம்ப சரி.
ஆனால் ஆங்கிலமும் தெரியாதா ?
அதென்ன நாங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால்
இந்தியில் பதில் சொல்கிறீர்கள்…?
அந்த அளவிற்கு இந்தி வெறியா …?

தமிழ்நாட்டிலேயே போய் இந்தியில் பேசிவிட்டு வந்தேன்
என்று “அங்கே” போய் பீற்றிக்கொள்ள வேண்டுமா …?
அடுத்த உத்திர பிரதேச தேர்தலுக்காகவா ?

” எங்களுக்கு மொழி பெயர்ப்பாளர் தேவை இல்லை…
உங்களுக்கு தெரிந்த அளவு ஆங்கிலத்திலேயே
பதில் சொல்லுங்கள் – நாங்கள் புரிந்து கொள்வோம் ”
என்று சொல்ல வேண்டும்… நமது மீடியா தோழர்கள்
இதைச் செய்வார்கள் என்றே நம்புகிறேன்….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to டெல்லி-திருச்சி-டெல்லி – தனி விமானத்தில் தலைவர் – எந்த தொழிலதிபர் ஏற்பாடு …?

  1. CHANDRAA's avatar CHANDRAA சொல்கிறார்:

    My father a retired govt official tells that all retired govt officers?senior citizens
    face harassment in banks while submitting fifteen h returns
    Unlike previours years this year all senior citizens have to furnish
    more details apart from fifteen h returns
    They are instructed not to omitt any intertest they gained
    in the respective forms……..
    Well bjp finds sadistic pleasure in teasing senior citizens
    retired people………
    K M JI is perfectly right when he points about mr amith shaw jis talk in hindi language……
    GUJARATHIS are not conversant in english generally that is also a fact………

    • LVISS's avatar LVISS சொல்கிறார்:

      Mr Chandra sir, I am writing this with reference to SBI – The bank needs the following– CIF number (Customer Info File No ) and the deposits covered by it –You will not get the interest on deposits so soon –I am still to get it — I have filed without filling it up and was accepted — You will have problem if you have deposits with more than one bank –Many people do this to avoid paying tax – With the help of your PAN or AAdhar they can track and bring all the deposits under one roof/under one CIF –I think most banks have done this — This is what happened to me , deposits in two branches were brought under one CIF –this is a measure to keep track of accounts of a person has at any point of time —Form H is a form devised for IT purposes and banks have nothing to do with it –The onus is on the depositors to submit the form to avoid deduction of tax at source on interest —
      Is your father filing the form for the first time sir? The form H has not changed much —All the details had to be furnished in previous years also —-
      If you dont furnish the form TDS will be deducted —

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    திருவாளர் அமீத் ஷா வின் “சென்னை ஜோக்ஸ்” ……!!!
    Posted on திசெம்பர் 22, 2014 by vimarisanam – kavirimainthan …. // சென்னையில் அமீத் ஷா அவர்கள் பேசியதில் சில –
    – அடுத்து வரும் 2016 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில்
    குறைந்த பட்சம் 122 இடங்களில் ஜெயித்து, பாஜக ஆட்சியமைக்கும்.
    கூட்டணி இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி,
    பாஜக வைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர்.
    – தேர்தலுக்கு முன்னரே, முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து
    விடுவோம். முதலமைச்சர் பேரைச் சொல்லி விட்டுத்தான்
    ஓட்டுக் கேட்கவே போவோம்… ( அதற்குள்ளாக, விஜய்காந்த் பாஜக வில்
    சேர்ந்து விடுவார் என்கிற நம்பிக்கையா….?) // …என்று உளறி கொட்டியவர் மீண்டு சென்னை வந்து என்ன செய்ய போகிறார் … ? — அன்று உண்மையில் ” கிங் மேக்கரா ” இருந்தவரும் — காங்கிரசின் அகில இந்திய தேசிய தலைவராக இருந்தவரும் — பல ” பிரதமர்களை ” ஒரே வார்த்தையில் உருவாக்கியவரும் — எளிமையானவரும் — இறக்கும் போது வெறும் நூற்றுசொச்சம் ரூபாயின் சொந்தக்காரரும் — இந்த ” கோல் – மால்களை ” போல தனி விமான பயணம் வேறு ஒருவனின் ” காசில் ” பயணிக்க தெரியாதவரும் — இவர்களை போல ” பிழைக்க ” தெரியாதவரும் — வாழ்ந்த இந்த தமிழ்நாட்டுக்கு வந்து — இந்த பழைய கொலைக்குற்றவாளி ” உளறுவதை ” எவன் கேட்பது … ? மேலே குறிப்பிட்டுள்ள இடுக்கையில் உள்ளது போல் மீண்டும் இங்கே வந்து ” கிச்சு – கிச்சு ” மூட்டினால் இங்கே உள்ள பா.ஜ.க. மாநில தலைவரும் — அந்த கட்சியை சேர்ந்தவர்களும் வேண்டுமானால் — சிரிக்கலாம் — மக்களிடம் இவர்களின் கதை வேறு விதமாக சிரிப்பாய் — சிரிக்கிறது … என்பது தானே … உண்மை … !!!

    • ராகவேந்திரா's avatar ராகவேந்திரா சொல்கிறார்:

      Kavirimainthan Sir,

      // “கொலைக்குற்றம்” சாட்டப்பட்டு, போலீஸ் மந்திரியாக
      இருக்கும்போதே தலைமறைவாகப் போனவர்……!
      மந்திரியாக இருந்தபோதே தலைமறைவாகி,
      பின்னர் பிடிபட்டு, கொலைக்குற்றம் சாட்டப்பட்டு,
      மூன்று மாதங்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்தவர்….!

      சொந்த மாநிலத்தில் இருக்கவும்,
      நுழையவுமே உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு,
      இரண்டு வருடங்கள் எங்கோ “அஞ்ஞாத வாசம்” செய்தவர்…//

      //கர்நாடகாவில் ஊழல் மன்னர் திருவாளர் எட்டியூரப்பாவை,
      பாஜக தலைவராக நியமித்து விட்டு, அந்த மை உலர்வதற்குள்
      இங்கே வந்து ஊழலைப் பற்றி பேச என்ன அருகதை
      இருக்கிறது இவருக்கு… ?//

      //ரிடையர் ஆன பிறகும் கவர்னர் பதவிக்கு ஆசைப்பட்ட
      ஒரு புண்ணியவானின் பலஹீனம் அல்லவா
      இவரை விடுவித்தது… ?
      இல்லையென்றால் – இவரும் நிலுவையில் உள்ள
      ஒரு குற்றம் சாட்டப்பட்டவராகத்தானே இப்போதும் இருப்பார்…?//

      Excellent article.
      Wonderful punches.
      This is one of your recent bests.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      நீங்கள் அடிக்கடி இந்த மாதிரி தொடர்புகளை
      (links ) மிகப் பொருத்தமாக எடுத்துக் கொடுக்கிறீர்கள்.
      பல சமயங்களில் என் இடுகை எனக்கே புதிதாகத் தெரிகிறது…!
      இது எனக்கும், மற்ற நண்பர்களுக்கும்
      மிகவும் உதவியாக இருக்கிறது.
      மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல வைத்திருக்கிறீர்கள்.
      மிக்க நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    Until I read this article I had only a vague idea about the case invoiving Amit Shah –This article made me find out what it is all about —

  4. ராகவேந்திரா's avatar ராகவேந்திரா சொல்கிறார்:

    Mr.LVISS,

    What Mr.Kavirimainthan has written is not about
    this case alone. There were more cases

  5. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    Is this the plane in which Amit Shah came to Trichy and went back —

  6. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // 1 . தமிழகம் முழுவதும் வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவில் வெடித்தது கலகம்… கொந்தளிப்பில் தொண்டர்கள்

    2 .ஆம்பூர் தொகுதியை ம.ம.க.வுக்கு ஒதுக்கியதற்கு கண்டனம்- திமுகவினர் ஆர்ப்பாட்டம்

    ஒரத்தநாட்டில் நான் போட்டியிட மாட்டேன்… இப்படியும் திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த வேட்பாளர்
    ….
    4 . மைதீன்கானை மாற்றுங்கள்: கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் அணைக்கட்டு தி.மு.க. வேட்பாளர் — அந்த கட்சியினராலேயே — தாக்கப்பட்டார் — போன்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் போது — //

    நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய்விட்டது: கருணாநிதி வருத்தம் !
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-s-letter-his-cadres-251256.html ….// என்று ஒரு நீண்ட ” பசப்பு வார்த்தை ” ஜாலத்தில் கலைஞர் அறிக்கை விட்டு இருப்பது — யாரை … ஏமாற்ற … ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      ” தன் வினை தன்னைச் சுடும் ”
      -அதிமுக வில் வேட்பாளர்களை மாற்றியபோது,
      ஸ்டாலின் செய்த கிண்டல் கொஞ்சமா …?
      அதான் – அனுபவிக்கிறார்கள்… :- 🙂

      (அத்தனை லிங்க் -களை சிஸ்டம் ஏற்கவில்லை –
      அதனால், நீக்க வேண்டியதாயிற்று…)

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. ravi's avatar ravi சொல்கிறார்:

    //கர்நாடகாவில் ஊழல் மன்னர் திருவாளர் எட்டியூரப்பாவை,பாஜக தலைவராக நியமித்து விட்டு, அந்த மை உலர்வதற்குள் இங்கே வந்து ஊழலைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது இவருக்கு… ? (திருவாளர் எட்டியூரப்பாவின் மீது இப்போதும் இரண்டு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன…)//////

    ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிய தாத்தா, அம்மா, மாயா , லல்லு , முலாயம், மம்தா , பவார் அனைவரும் ஜெயித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. இவரும் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் ஜெயித்துவிடுவார்..

    அடுத்த , காவிரி பிரச்சனையில் ஜெ அவர்கள், இவரோடு தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டி இருக்கும் (அதற்குள் எடியூரப்ப முதல் ஆகி விடுவார்.. !! அவருக்கு ஒரு கோவிந்தசாமி, குப்புசாமி கிடைக்காமலா போய் விடுவார்கள்) ..
    !!!!!! ஜாக்கிரதை !!!!!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.