
“விமரிசனம்” வலைத்தளத்தின் சார்பாக,
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-காவிரிமைந்தன்
சித்திரை, 1

“விமரிசனம்” வலைத்தளத்தின் சார்பாக,
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-காவிரிமைந்தன்
சித்திரை, 1
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Wish you a happy new year KM.
நன்றி அந்தோனி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
happy new year
நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். உலகத்தைப் பார்ப்பதற்கு, தாத்தாவின் கண்ணாடி மூலமாகப் பார் (அனுபவத்தின்) என்று சொல்லாமல் சொல்கிறீர்களா? அல்லது குழந்தை மனத்துடன், மன மாச்சரியங்கள் இல்லாமல் (ஜாதி, மதம் போன்றவை), பெரியவர்களின் அனுபவத்துடன் பார்க்கவேண்டும் என்று சொல்கிறீர்களா?
😀 😀
I also bless you a very good health and long life and a happy tamil new year sir.
மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
happy tamil new year KM ji. Dhurmuki varudam ” Nalla Malai Irruku endru Panjaangam sollukirathu” Tamilagathiriku nallatchi vara vendum.
karthik
நன்றி கார்த்திக்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நல்ல மனதோடும் — நல்ல நாளில் — நல்ல ஒரு படத்தையும் பாருங்கள் [ குழந்தையும் — தெய்வமும் – குணத்தால் ஒன்று ] என்று வாழ்த்து சொன்ன திரு .கா.மை அவர்களுக்கும் — மற்ற நண்பர்களுக்கும் ” பாரம்பரிய தமிழ் ” புத்தாண்டு வாழ்த்துக்கள் … ! துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெருக்கும் — “து [ ர் ] ன் முகி ” ஆண்டை வரவேற்போம் — அதே வேளையில் சிரித்து மகிழ ஒரு ” தமாஷ் செய்தி ” : — // தற்போது மீண்டும் கருணாநிதியை அழகிரி சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது தமிழ்ப் புத்தாண்டான சித்திரை திருநாளில் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றதாக அவர் தெரிவித்திருக்கிறார்.// ….. அப்பாவுக்கு ஒரு தமிழ் புத்தாண்டு — மகனுக்கு ஒரு தமிழ் புத்தாண்டு … குடும்பத்திற்குள்ளேயே தமிழ் புத்தாண்டு பற்றி ஏன் இந்த குழப்பம் …. !
செல்வராஜன்,
சமாதானம் கைகூடி விட்டது போலிருக்கிறதே….!
ஆனால், இளவல் கடுப்படித்திருக்கிறாரே…!
terms & conditions of உடன்படிக்கை என்னவோ…!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
திரு KM சார், உங்கள், உங்கள் குடும்பம், மற்றும், அனைத்து வலைத்தள நண்பர்ஹளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மணி ராஜேந்திரன்
மணி ராஜேந்திரன்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து
ஒரு மடலை பார்க்கிறேன்….!
எப்படி இருக்கிறது அமெரிக்க தேர்தல் …?
என்ன இருந்தாலும் தமிழ் நாட்டு தேர்தலுக்கு
இணையாகுமா… 😀 😀
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
திரு KM சார்,
வணக்கம்! உங்கள் வலைதளத்தை தவராமல் படித்தாலும், வேலை பளுவின் காரணத்தால், அடிக்கடி தொடர்பு கொள்ள முடியவில்லை!
நீங்கள் US election பற்றி கேட்டுள்ளீர்ஹல் – I can tell you one thing – We are not missing Tamil Nadu Election at all!!!! I have seen elections since 1976, but this one, it has gone down so much. I will send you some of the links for you and readers to enjoy. When it comes to politics, I dont see any difference between TN or USA sir!
Best regards,
Mani Rajendran
அன்பின் காமை மற்றும் விமரிசனம் வந்து தமிழில் எழுதப்படுவதனைத்தையும் படிக்கும், விமர்சிக்கும்,
அனைத்தத்த்த்த்த்த்த்து
தமிழ்கூறும் நல்லுள்ளங்களுக்கும்,
நான் கூறவிழைவது என்னவென்றால்,
————————
தமிழக அரசு ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தைத்திருநாளே தமிழ் புத்தாண்டு – கருணாநிதி
——————–
இதில் தமிழக அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளாமல் போவதற்கும் என்ன இருக்கிறது, மக்கள் ஏற்கிறார்களா, வரலாறு ஏற்கிறதா என்பது தான் முக்கியம். அதைவிட முக்கியம் தன் துணைவி, இணைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்……., இன்னபிற கிளைகள், விழுதுகள் எல்லாரும் ஏற்றுக்கொள்ளுவார்களா?
இதை இட்லி என்று சொன்னால் சட்னியே நம்பாது என்கிற கதைதான் நினைவுக்கு வருகிறது. சரி, கொஞ்சம் சீரியஸாக:
———————————–
“திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து ” – (நெடுநல்வாடை 106-161 நக்கீரர்)
பொருள்: மேஷ ராசியை முதலாகக் கொண்டு வானமண்டலம் சுழல்கிறது எழுதிய பாடல் இது .
தீயுமிழ் திங்கள் நான்கு …
வானம் நீர்த்திரள் பனிக்கும் தூணி சொரிந்திட
திங்கள் நான்கு அவையும் நீங்க
பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ்வடைக்கு ஒல்கான்…. (சீவக சிந்தாமணி)
பொருள்: ஓராண்டு தவத்தை முதல் காலமான வேனிற்காலத்தில் சீவகன் துவங்கினான்.
60 ஆண்டுகள் முறை வானவியல் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் பட்டுள்ளது . வான் மண்டலத்தை வியாழன் ஒரு முறை சுற்றி வர 12 ஆண்டுகளாகும் . சனி ஒரு முறை சுற்றி வர 30 ஆண்டுகளாகும் இப்படி அனைத்து கிரகங்களும் அதே நிலைக்கு வர 60 ஆண்டுகளாகும், அதாவது வியாழன் ஐந்து முறையும் சனி 2 முறையும் சுற்றி வந்தால் 60 ஆண்டுகள். இது தமிழன் படைப்பான வியாழ மாலை என்னும் நூற்குறிப்பு.
9 ம் நூற்றாண்டின் செப்பு பட்டயங்கள், 10ம் நூற்றாண்டில் பிராமண , சத்திரிய , மற்றும் விஸ்வகர்மா உட்பட 98 ஜாதியினர் சித்திரை புத்தாண்டாக கொண்டாடிய கல்வெட்டுகள், 60 ஆண்டுகள் கணக்கீட்டை கூறும் சோழர்கள் கல்வெட்டுகள், கொங்கு பாண்டியர் கல்வெட்டுகள், இவை தவிர சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தொல்காப்பியமும் கூறும் சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பை.
நக்கீரர் முதல் நச்சினார்க்கினியர் வரை அனைவரும் முட்டாள்களா?
மறைமலை அடிகள் சொல்லாததை சொன்னதாகக்கூறி ஆதாரமே இல்லாமல் தைத் திங்கள் தான் தமிழர் திருநாள் என்று ஒரு பொய்யை கருணாநிதி திணித்து விட்டால், அதைப் பொய்யென்று புறந்தள்ள பகுத்தறியும் அறிவு உனக்கு இல்லையா தமிழா?
எல்லாவற்றும் முதலாக,
23 வருடங்களுக்கு முன்பு சன் டிவி ஏப்ரல் 14 இல் தொடங்கப்பட்டபோது “தமிழர்களின் புத்தாண்டில் தம்பி மாறன் அவர்களின் இப்படி ஒரு பொழுது போக்கான அம்சத்தை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று உரையாற்றினார் திருவாளர் முத்துவேல் கருணாநிதி.
———————————–
எனவே
என் இனிய விமரிசனம் மக்களே,
என் தாய்மொழியின் வழக்கப்படி
என் தாய்மண்ணின் கலாச்சாரப்படி
எனக்கு ஊட்டிவளர்த்த பகுத்தறிவு உணர்வின்படி
அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பிரணமாதம் நண்பரே….!!!
நன்றி. வணக்கம்…
(நேரம் – இரவு 11.52 ..)
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மிà®à¯à® நனà¯à®±à®¿
14/4/16 ஠னà¯à®±à¯, “வி à®® ரி ஠ன ம௠– à®à®¾à®µà®¿à®°à®¿à®®à¯à®¨à¯à®¤à®©à¯”
நண்ப செந்தில்நாதன்,
வாழ்த்துகிறீர்களா – திட்டுகிறீர்களா தெரியவில்லை.
ஒரே சஸ்பென்ஸாக இருக்கிறது…
தமிழிலேயே சொல்லி விடுங்களேன்…!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
காமைஜி,
அவர் தமிழில் முயற்சித்தான் இப்படி ஆகியிருக்கிறது. 🙂
ஆஙகிலத்திலாவது வாழ்த்தி விடுவார் என நினைக்கிறேன்.