அரிய கருப்பு வெள்ளை படங்கள் சில ….!!!

.

.

1896-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது…
இதில் இருப்பவர்கள் – சின்னஞ்சிறு பொடியனாக ஜவஹர்லால் நேரு, அவரது அன்னை ஸ்வரூபா ராணி,தந்தை மோதிலால் நேரு…

1896 -nehru with mother swaroopa rani

இது 1906-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஜவஹர்லால் நேரு, லண்டன் ஹாரோ ஸ்கூலில்…..

1906 - nehru at harrow school, england

இது 1953-ஆம் ஆண்டு…..
அடுத்த தலைமுறை திருமதி இந்திரா காந்தியும்,
அவரது பிள்ளைகள் ராஜீவ் காந்தியும், சஞ்சய் காந்தியும் –
லண்டனில் ஷாப்பிங் செய்கிறார்கள்….

1953 -indira shopping in london with raajiv and sanjay

இது 1960-களில் எடுக்கப்பட்ட படம்…
ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் நண்பர்களுடன் ….

1960s - rajiv and sonia

இது 1982-ஆம் ஆண்டு …..
அந்தப் பெண்மணி மட்டும் பக்கத்தில் இல்லையென்றால் –
இது யார் என்று தலையில் அடித்து சத்தியம் செய்து
சொன்னாலும் நம்ப மாட்டீர்கள் ……..
திருவாளர் லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி,
மற்றும் தன் வாரிசுகளுடன் ….!!!

1982- lalu with family

டெல்லி போயிருக்கிறீர்களா….?
அப்படியென்றால் அங்கே மிகவும் பிசியான கன்னாட் ப்ளேஸ்
அவசியம் பார்த்திருப்பீர்கள்….
கீழே இருப்பது அதே கன்னாட் ப்ளேஸ் தான் …
ஆனால் வருடம் 1950- எவ்வளவு நிம்மதியாக சைக்கிள்
ஓட்டிக்கொண்டு போகிற அளவிற்கு இருக்கிறது…..!

cannaught place 1950 - cycling

———————————

பின் குறிப்பு –

ஒவ்வொரு புகைப்படமும், ஒரு தலைமுறைக்கான கதைகளை
நினைவுபடுத்துகின்றன அல்லவா …?

தொடர்ந்து இடுகைகள் எழுதி என்னத்தை கண்டோம்….?
இப்படி எதையாவது செய்து கொண்டிருந்தால், குறைந்த பட்சம்
“மக்களின்” விரோதத்தையாவது சம்பாதித்துக் கொள்ளாமல்
இருக்கலாம்….!!!

பேசாமல் இதையே தொடரலாமா ? …!!! 🙂 😀

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to அரிய கருப்பு வெள்ளை படங்கள் சில ….!!!

  1. ஆவி's avatar ஆவி சொல்கிறார்:

    நல்ல முடிவு – தொடரலாமே! . பீப் பாடல்களை வெளியிடலாம். அந்த மாதிரிப் படங்களைக் கூட தரலாம். மக்களின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியதில்லையே! பாராட்டுகள் கொட்டும்.

    அறிவில்லையா- என்று பிரபலம் ஒன்று நாகரீமில்லாது கேட்டுவைத்தால் ,ஆமாம் பேசலாமே என்று வக்காலத்து வாங்கலாம். மொக்கைப் படங்களுக்கு குடும்பமே சென்று பார்க்கலாம் என்று விமர்சனம் செய்யலாம்.

    மவுசைப் பிடித்தவர்கள் எல்லாம் விமர்சனம் செய்யலாமா என்று யாராவது? கேட்டு வைத்தால் -மவுசைப் பிடிக்கமாட்டேன் தட்டச்சைப் பாவிக்கிறேன் என்று சொல்லிவிடலாம். சாமியார்கள் செய்வது எல்லாம்(??) கடவுளின் தொண்டு எனச் சொல்லலாம்.அரசியல்வாதிகள் செய்வதெல்லாம் மகேசன் தொண்டு என்றும் சொல்லி அவர்களின் பாராட்டையும் பெறலாம்.

    போஸ்டர்களுக்கு பாலாபிசேகம் செய்தால், நடிகர்கள் புனிதர்கள் இறை அவதாரம் என்று கன்னத்தில் போட்டு தோப்புக்கரணம் போட்டு, அதை நீங்களும் வணங்கலாம் என்று சொல்லலாம். இப்படி எவ்வளவு இருக்கிறது.

    விமர்சனங்களை ஏற்று மக்களுக்கு -இன்று மக்கள் என யாராவது இருந்தால்??- மக்கள் முன் நல்லதை நடுநிலையுடன் வைப்பவனே விமர்சகன்-மனிதன்.
    அத்துடன் வலைப்பதிவின் பெயரையும் மாற்றிவிடலாம்.
    பொறுக்கி போக்கிரி என்று வேண்டுமானால் பெயரை மாற்றலாம். இவை தப்பான வார்த்தைகள் இல்லை என தணிக்கைத் துறை சொல்லி விட்டதாமே!

    இப்படி எதையாவது செய்து கொண்டிருந்தால், குறைந்த பட்சம்
    மக்களின்??? விரோதத்தையாவது சம்பாதித்துக் கொள்ளாமல்
    இருக்கலாம்….!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப ஆவி,

      எனக்குத் தெரியாத, விஷயங்கள்
      இவ்வளவு இருக்கின்றனவா …????

      நானொரு முட்டாளுங்க, முட்டாளுங்க …. 🙂

      இவற்றில் எதையும் எழுத எனக்கு
      தகுதி இருப்பதாகத் தெரியவில்லையே…
      பயமுறுத்துகிறீர்களே நண்பரே …. 🙂 🙂

      உங்கள் கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது …..
      -நன்றியும், வாழ்த்துக்களும்,

      காவிரிமைந்தன்

      • ஆவி's avatar ஆவி சொல்கிறார்:

        //இவற்றில் எதையும் எழுத எனக்கு
        தகுதி இருப்பதாகத் தெரியவில்லையே…//

        அப்படியா? வேறு வழியில்லை ஐயா. முட்டாளாகவே இருந்து மக்களின்??? விரோதத்தை சம்பாதித்துக் கொண்டு இதுவரை வந்த வழியை தொடருவதை தவிர வேறு வழி இருப்பதாக இந்த முட்டாளாகிய எனக்குத் தெரியவில்லை.

  2. seshan's avatar seshan சொல்கிறார்:

    நல்ல முடிவு – தொடரலாம் ……

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப சேஷன்,

      நான் வாயை மூடிக்கொள்வதில் அவ்வளவு
      மகிழ்ச்சியா உங்களுக்கு…..!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. அரிய படங்களை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா – கில்லர்ஜி

  4. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    மோதிலாலுக்குத் தெரிந்திருக்குமா, தன் பையன் இந்தியாவின் ஒரு நூற்றாண்டை நிர்ணயக்கப் போகிறவன் என்று? அன்று இந்திராவுக்குத் தெரிந்திருக்குமா, தன் இரண்டு பையன்’களும் தன்னைப்போலவே அசந்தர்ப்ப மரணம் அடையப் போகிறார்கள் என்று? ஒவ்வொரு புகைப்படமும் காலத்தின் கண்ணாடிதான்.

  5. KuMaR.S's avatar KuMaR.S சொல்கிறார்:

    புகை படங்கள் அருமை
    நன்றி KM Sir..

  6. நடுநிலை's avatar நடுநிலை சொல்கிறார்:

    பல அறிய பழைய இந்திய புகைப்படங்கள். மற்றும் வருட, ஊர், பெயர் வாரியாக காண இந்த தளத்திற்கு செல்லுங்கள்…..

    oldindianphotos.in

    நண்றி

  7. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    If you change your present way of writing i will be the first to quit your site since everyday i used
    to see your only site and the comments in Tamil. Even now you are writing only a couple of days in a week about hot present day topics for quite some time. Only difference is i read your fresh article
    during 3pm when I am in India and during morning when abroad.The photos are not my area of
    interest

  8. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    Very interesting photos —
    Write both political as well as articles like this –Where is the question of “Virodham” It is just exchange of views —

  9. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    உங்கள் பதிவுகளின் பலமே அனைத்தையும் தொடுவதுதான். அனைத்தையும் தொடருங்கள்…

  10. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    I am respecting three people’s opinion only. Cho, KVM and Jeyamohan. Only sometimes I have to disagree with these people. so அனைத்தையும் தொடருங்கள்… But I want to know the names of friends of Annai Sonia.

  11. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Old is ever Gold! Black & White more so, either in pics or movies.

  12. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் —– // இவரல்லவோ ஹீரோ.. எழுந்து நின்று சல்யூட் செய்யுங்கள்! சென்னை: 73 வயதான விவசாயி ஒருவர் சென்னை வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 50,000 நன்கொடையாக அளித்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். என்ன விஷயம் என்றால் இவருக்கே விவசாயம் பாதித்து, ரூ. 25,000 அளவுக்கு கடன் உள்ளது என்பதுதான். கர்நாடகத்தைச் சேர்ந்தவர் இந்த விவசாயி. இவரது பெயர் லட்சுமண் ருக்மன்னே கட்டாம்ப்ளே என்பதாகும். பெல்காம் மாவட்டம் கடோலி கிராமத்தைச் சேர்ந்தவர். 73 வயதான இவர் விவசாயி ஆவார். இவருக்கு விவசாயத்தில் பெரும் நஷ்டம், ரூ. 25,000 வரை கடனும் உள்ளது. இந்த நிலையில் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக ரூ. 50,000 நிதியுதவி அளித்துள்ளார் கட்டாம்ப்ளே. ஏற்கனவே இவர் நேபாள நிலநடுக்க நிவாரண நிதிக்காக ரூ. 5000 கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக, தனது கிராமத்தில் எஸ்எஸ்எல்சி படிப்பில் முதலிடம் பெறும் மாணவருக்கு வருடா வருடம் ரூ. 1500 கொடுத்தும் வருகிறார். ஹீரோக்கள் வரிசையில் நிச்சயம் இவருக்கு முதல் இடத்தைத் தரலாம்…! //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/see-this-humble-farmer-huge-mind-242697.html …. ” நல்ல செய்தி ஒன்றை படித்த திருப்தி …. !!! “

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      பாமரன்,

      முழுவதுமாக ஏற்கிறேன்.

      கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி –
      லட்சுமண் ருக்மன்னே கட்டாம்ப்ளே – அவர்களுக்கு
      விமரிசனம் வலைத்தள நண்பர்கள் அனைவரின்
      சார்பாகவும் ஒரு ” Big Salute” – மற்றும் பாராட்டும்,
      நன்றியும்.
      இந்த செய்தியை இங்கு கவனத்திற்கு கொண்டு வந்த
      உங்களுக்கும் பாராட்டும் நன்றியும்….!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.