மீண்டு(ம்) வந்தார் துக்ளக் ஆசிரியர் “சோ” …..

cho-2

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓரளவு குணமடைந்து
மீண்டும் செயல்படத் துவங்கி இருக்கிறார் துக்ளக்
ஆசிரியர் “சோ” அவர்கள்…!!!

இன்றைய தினம் வெளியாகியுள்ள துக்ளக் வார இதழில்
தன்னுடைய கேள்வி-பதிலைத் துவக்கியதன் மூலம்
தனது அடுத்த இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார்.

விரைவில் முழுவதுமாக குணமடையவும்,
நோய்த்தொல்லை மீண்டும் அவரை அணுகாமல் இருக்கவும்
மனப்பூர்வமாக வேண்டுவோம்.

“சோ” அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின் அனைத்து
நண்பர்களின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

சோ அவர்களின் முதல் கேள்வி-பதில் கீழே –

cho-1

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மீண்டு(ம்) வந்தார் துக்ளக் ஆசிரியர் “சோ” …..

  1. jramanujam's avatar jramanujam சொல்கிறார்:

    ஓய்வுஎடுங்கள்! ஏழுமலையான் அருளால் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டுகிறேன்!

  2. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    எல்லாக் கட்சியினரும் (குறிப்பிடத்தக்க கட்சிகள்), சோ என்ன சொல்கிறார் என்று பார்ப்பார்கள். இதற்கு அவரது நடுனிலைமைதான் காரணம். அதுவும்தவிர எதிர்க்கருத்துக்கள் உள்ளவர்களை அவர் எதிரியாகப் பார்த்ததில்லை. அவர்களும் சோவை எதிரியாகப் பார்த்ததில்லை.

    அவர் நலமடைந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தச் சந்தர்ப்பத்தில், “ஆசிரியர் பதில்களுக்கு” அவர் ஒரு சரியான வாரிசு கண்டுபிடித்தால் இன்னும் மகிழ்ச்சி.

  3. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    Get well soon, GOD BLESS U.

  4. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    For many of us, Cho has become one of our extended family, and is also like a friend, philosopher and guide.I pray for his complete recovery from illness soon.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஆம் சந்திரமௌலி,

      “சோ”வை என் மூத்த சகோதரர் என்று சொல்லும் அளவிற்கு
      நேசிக்கிறேன். நான் பல தடவை அவருடன்
      சண்டை போட்டிருக்கிறேன். திட்டி இருக்கிறேன்.
      மூளையால் மட்டும் தான் யோசிக்கிறீர்கள்
      இரக்கமோ, மனிதாபிமானமோ சற்றும் கிடையாது
      என்றெல்லாம் பல விதங்களில் முரண் பட்டிருக்கிறேன்.
      இருந்தாலும் அவரை மிகவும் நேசிக்கிறேன்.
      மிக நேர்மையான மனிதர்…இந்த காலத்தில் வேறு யாரிடத்தும்
      காண முடியாத அரிதான நேர்மை….!
      இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை அருளட்டும்…

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.