.
.
பிறந்த நாளன்று மட்டுமே
கொண்டாடப்பட வேண்டியவன் அல்ல அவன்….
ரத்தத்தில் கலந்து விட்டவன் பாரதி.
பேரிடரில் சிக்கித் திணறி, உயிருக்கும்
உடைமைக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் –
” நாங்கள் இருக்கிறோம் – உங்களுக்கு உறுதுணையாக,
கவலைப்படாதீர்கள். விரைவிலேயே இந்தப் பேரிடலிருந்து
மீண்டு எழலாம்” – என்று கூறி –
கை கோர்த்து ஒன்றாக, ஒற்றுமையாக மக்களை மீட்டெடுக்க உழைக்க வேண்டிய அரசியல்வாதிகள் –
பதவி வெறிபிடித்து, தேர்தல் கண்ணோட்டத்துடன் –
ஒவ்வொரு வதந்தியாக கிளப்பி விட்டு,
கலவரத்தை தூண்டி விட்டு, குழப்பத்தை உண்டு பண்ணி –
தெருவில் எச்சில் இலைக்கு ஒன்றையொன்று
கடித்துக் குதறி, கத்திக் கொண்டிருக்கும் நாய்கள் போல் –
நடந்து கொள்வது –
மனதில் தாங்கவொண்ணா அதிர்ச்சியையும்.
கோபத்தையும் உண்டுபண்ணுகிறது.
இத்தகைய அவலங்கள், கொதிப்பூட்டும் நிகழ்வுகள் –
எது நிகழ்ந்தாலும் உடனே நினைவிற்கு வருபவன்
பாரதி தான்…
இதற்காகவா பாரதி நீ அத்தனை இன்னல்களையும்
மேற்கொண்டாய் என்று குமுறத்தோன்றுகிறது….
————–
இந்த மன நிலையில் – இன்று எனக்கு கேட்கத்தோன்றும்
சில பாரதி பாடல்கள் கீழே –
இந்த வேதனை என் நண்பர்களுக்கும் உண்டு
என்பதை நான் உணர்வேன்….
நெஞ்சு பொறுக்குதில்லையே …..
நல்லதோர் வீணை செய்தே …..
நின்னை சரணடைந்தேன் …..



நல்லதோர் வீணை செய்தே…– நான் வெகுவாக ரசித்தனுபவிக்கும் பாடல். சும்மா உருக்கிவிடும்.
இன்று தங்களிடமிருந்து இந்த பதிவை எதிர்பார்த்தேன் ஐயா காணொளிகள் நன்று
Thank u KM Sir..
Thank you KM Sir!. God bless you.
வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் இந்த நல்லதோர் வீணை செய்தே பாடல் மனமெல்லாம் இளகி , என்னடா கேவலமான உலகத்துல வாழ்க்கை என்பது போல் நினைக்கவைக்கும் ..
நன்றி கா .மை. ஐயா அவர்களே ஒரு முறை உடம்பை அப்படி சிலிர்க்க வைத்தமைக்கு….
வெள்ளையர்களை விரட்டிய வார்த்தை புரட்சி பாரதி அவர்களே. மீண்டும் இந்த இந்திய அரசியல் அந்நியர்களை விரட்ட நீ பிறந்து வா