
மேலே: பிபிசி வெதர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வரைபடப் பதிவு. | கீழே: டிச.7 மாலை 5.50 மணியளவில் பிபிசி வானிலை வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு.
—————
சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கி ஒரு மாத
காலம் ஆகிவிட்டது. மழையின் கோரத் தாண்டவத்திலிருந்து
தப்ப முடியுமா என்ற மன அவசத்தில் மக்கள் சிக்கித் தவித்து
வரும் நிலையில், அதிகாரபூர்வ வானிலை மைய
எச்சரிக்கைகள் தவிர, பிபிசி வானிலை முன்னறிவிப்பும் தன் பங்குக்கு மக்களிடையே கணிசமாக கவனத்தைப்
பெற்று வருகின்றன.
இந்நிலையில், வரும் புதன்கிழமை தொடங்கி சென்னையில் கனமழை மீண்டும் புரட்டியெடுக்கப்படவுள்ளதாக பிபிசி முன்னெச்சரிக்கையில் விளக்கப்படத்துடன், அதன்
அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்ட அந்த ட்வீட், தமிழக இணையவாசிகளிடையே பெரும் பீதியை
உண்டாக்கின.
இதையடுத்து, ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்ற பெயரில்
ஃபேஸ்புக் பக்கத்தை நடத்திவரும் பிரபல தமிழ் வானிலைப்
பதிவர், பிபிசி கணிப்புகளின் தற்காலிகத் தன்மையை
வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:
பிரிட்டனில் யுனைடெட் கிங்டம் வானிலை கணித மாதிரியைக் கடைபிடித்து முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
உலக வானிலை முன்னெச்சரிக்கை மையம் (GFS) மற்றும்
வானிலை முன்னறிவிப்புக்கான ஐரோப்பிய மையம்
((ECMWF) ஆகியவற்றுக்கு அடுத்த படியாக பிரிட்டன்
வானிலை மையம் 3-ம் நிலையில் உள்ளது.
பிரிட்டன் வானிலை மையத்திலிருந்து கணிப்புகள் ஒவ்வொரு 12 மணி நேரங்களுக்கும் வெளியிடப்படுகிறது. இதில்
ஒரு கணிப்பில் மழை பெய்யும் என்றும், அடுத்த கணிப்பில்
மழை இல்லை என்றும் காண்பிக்கப்படுகிறது. ஒரு பதிவில்
கனமழை என்பார்கள்; அடுத்த பதிவில் மிதமான
மழை என்பார்கள்.
இப்படியாக வரும் புதன்கிழமை முதல் கனமழை
(கடைசியாக சென்னையை அடித்து விளாசியதுபோல்) என்று
காண்பித்தது; ஆனால் தற்போது மிதமான மழை என்றே
காண்பிக்கிறது.
எனவே நாம் ஏன் பீதி கிளப்பும் முடிவுகளுக்கு வர வேண்டும்.
இந்நிலையில் இவர்கள் தேவையில்லாமல் ட்விட்டரில் வானிலை
எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
அனுபவமற்ற இவர்கள் லண்டனில் உட்கார்ந்து கொண்டு
நம் உள்ளூர் வானிலை நிலவரம், வெள்ளத்துக்குப் பிறகான
மக்களின் மனநிலை என்று எதுவும் அறியாமல் வானிலை
முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
அக்குவெதர் குறித்து நாம் பேசினால், அவர்கள் காட்டும்
காரணங்கள் சரியானதே. ஆனால், அது சென்னைக்கு மட்டும்
உரித்தான முன்னெச்சரிக்கை அல்ல. அவர்களால் மிதமான
மழையை கணிக்க முடியவில்லை. 17மிமீ மழை என்று
கூறுகின்றனர். ஆனால் இது அச்சுறுத்தும் மழையா? என்ற
கேள்வி எழுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, மேலடுக்கு ஆதரவின்றி
அதிக அளவில் வறண்ட காற்று நிலவி வருகிறது. எனவே
மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன் மற்றும்
வியாழக்கிழமைகளில் மிதமான மழை பெய்யவே வாய்ப்புள்ளது.
நாம் மோசமானதைப் பார்த்துவிட்டோம், எனவே பிபிசி அல்லது அக்குவெதர் முன்னெச்சரிக்கைகள் பற்றி கவலைப்படாமல்
நாம் நம் வேலையை கவனிப்போம்.
நம்மூர் ஊடகங்களும் இதற்கு பொறுப்பு. பிபிசி எச்சரிக்கைகளை
இவர்கள் உடனடியாக வெளியிட்டு அப்பாவி மக்களை பீதியில்
ஆழ்த்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேனை பொறுத்தவரையில், தமிழ் இணைய
உலகில் மிகவும் பிரபலமான வானிலை முன்னறிவிப்பு
வலைப்பதிவர். சமீப நாட்களில் இவரது முன்னறிவிப்புகள்
இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
இணைப்பு: https://www.facebook.com/tamilnaduweatherman
-நன்றி -தமிழ் இந்து நாளிதழ்



K.M. Sir,
This news item -I saw in “thatstamil”
news website –
I am reproducing it for the benefit of
our friends. thanks.
கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மக்களுக்கு தேவைப்படும் உணவுப் பொருட்கள் தேவைப்படுபவர்களுக்கு
கிடைக்காமல் பேராசைக்காரர்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் திருடப்படுகிறது என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் நடிகர் சித்தார்த்
ஆர். ஜே. பாலாஜி மற்றும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து
மக்களை மீட்டதுடன், நிவாரணப் பொருட்களும் வழங்கி
வருகிறார். மேலும் ட்விட்டர் மூலம் உதவி கேட்பவர்களையும் கண்டுபிடித்து நிவாரணப் பொருட்கள் அளிக்கிறார்.
தற்போது கடலூரில் நிவாரணப் பணிகளில் இருக்கும் சித்தார்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வெள்ளநீரை
வெளியேற்றிய பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை தான்
மின்வினியோகம் சீரானது.
சமூக வலைதளம் முதல்முறையாக இயற்கை பேரிடரின்போது பாதிக்கப்பட்டவர்களை விட அவர்களுக்கு உதவுவோர் அதிக
அளவில் உள்ளனர். இதற்கு காரணம் சமூக வலைதளங்கள்.
நிவாரணப் பணிகளில் சமூக வலைதளங்கள் வரமும்,
சாபமும் கூட. காரணம் யாராவது 5 ஆயிரம் தண்ணீர்
பாட்டில்கள் வேண்டும் என்று தெரிவித்த தகவல் 6 நாட்கள்
கழித்தும் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கும்.
அப்போது அவர்களுக்கு தண்ணீர் அல்ல மாறாக தண்ணீர்
பாட்டில்களை தூக்கிப் போட குப்பைத் தொட்டிகள்
தேவையாக இருக்கும்.
கடலூரில் நிலைமை மோசம் தான். ஆனால் சமூக
வலைதளங்களில் சொல்லும் அளவிற்கு மோசம் இல்லை.
உணவு தற்போது தேவைப்படுபவது பெரிய கன்டெய்னர்களில்
உணவு அல்ல. ஏனென்றால் உணவு ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை தேவைப்படுபவர்கள் அல்ல மாறாக
பேராசைக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் வழிமறித்து திருடுகிறார்கள். தற்போது படுக்கை, போர்வை,
கூடாரங்கள் தான் தேவை.
தமிழக அரசு தமிழக அரசு நிவாரணப் பணிகளை
மேற்கொள்ளும் விதத்தில் எந்த குறையும் இருப்பதாக
எனக்கு தெரியவில்லை.
நான் அரசுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை.
அருமையாக செயல்பட்டு 5 நாட்களில் அனைத்தையும்
சரி செய்ய வேறு எந்த மாநில அரசாலும் முடியாது
என்று நினைக்கிறேன்.
-http://tamil.oneindia.com/news/tamilnadu/
greedy-are-looting-the-food-meant-needy-
siddharth-241724.html
//கடலூரில் நிலைமை மோசம் தான். ஆனால் சமூக
வலைதளங்களில் சொல்லும் அளவிற்கு மோசம் இல்லை.//
இது மிகவும் தவறான கருத்து…
ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து பார்த்து,
வெட்கிப் போகும் “கஞ்ச” நாயகரிடையே,
சித்தார்த் ஒரு நிஜ நாயகன்.
WELL DONE SIDARTH.
சுமார் முப்பைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்வு. : ஸ்கைலேப் என்ற விண்கலம் ஏதோ காரணத்தால் திரும்பி வரும்போது பூமியில் விழும் என்ற அளவில் செய்திகள் வந்தபோது ஒரு அடையாளமாக அதன் பொதுவான சுற்றுப்பாதையில் தமிழ்நாடும் இருந்தது. பின் அது கட்டுப்பாடு மூலம் கடலில் விழச்செய்தனர். பத்திரிக்கைகளில் கண்ட ஒரு கோட்டின்படி இங்கு விழுந்து நாம் அழிவோம் என்று ஆடு மாடுகளை காசாக்கி கண்டதை அனுபவித்து , பின் கடனாளி ஆனது துன்பியல் .
நன்றி
தமிழக வெள்ள நிவாரணம்… ஆனந்த விகடன் ரூ 1 கோடி அறிவிப்பு!
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vikatan-announces-rs-1-cr-as-flood-relief-fund-241784.html ….. இந்த செய்தியின் ஒரு பகுதியில் : — //லாபவெறிக்காக நீர்நிலைகளைக் கொன்றொழிக்கும் அதிகார, அரசியல் வர்க்கத்தினரை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, மறுபக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பது என்ற இரட்டை நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் நலன் காக்கும், தமிழர்களின் சந்ததி காக்கும் இந்த நிரந்தரத் தீர்வுக்கான போரை வீரியத்துடன் முன்னெடுக்கக் களம் இறங்குகிறது நம் விகடன் குழுமம். இதன் முதல் கட்டமாக விகடன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி (1,00,00,000) ரூபாய் நிதியை வழங்குகிறோம். இது ஆரம்பம்தான். விவரங்கள் விரைவில்!” என்று குறிப்பிட்டுள்ளது…. //…. இதில் … // அதிகார, அரசியல் வர்க்கத்தினரை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.// என்று கூறியுள்ளதில் ” பாகுபாடு எதுவும் இருக்க ” கூடாது என்பதுதானே … அனைவரின் விருப்பம் ….?
ஏற்கெனவே இதேமாதிரி நாசா இதுபோன்று மழைவரும் என்று எச்சரித்தும் அரசு போதிய எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என ஒரு கும்பல் வீண் புரளியைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருந்தது. இப்போது பிபிசி யை வைத்து ஆரம்பித்துவிட்டார்கள் போல.
நாசா வானிலை எச்சரிக்கைகள் எல்லாம் வெளியிடுவதில்லையாம், வதந்திகளை நம்பவேண்டாமாம்…
ஆனால் நம்மூருல வதந்தியத்தான் முதல்ல நம்புவாய்ங்க..
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12360026_1536895569962907_4883734581089617580_n.jpg?oh=85f8f6c49013046e242590fbaa7301e8&oe=56E77180