இது எனக்கு மிகவும் முக்கியமான இடுகை ….!

.

.

கீழே உள்ள புகைப்படங்களை முதலில் பாருங்கள்…..

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
மண்டபத்தில், இஸ்லாமிய தோழர்கள் சமையல்
செய்து கொண்டிருக்கிறார்கள்…. மழை, வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களின் பசியைத் தீர்க்க ….

tavheet-2

வெள்ளம் புகுந்து விட்டபடியால் வீட்டில் சமையல் செய்ய
முடியாமல் தவிக்கும் பிராம்மண குடும்பம், தெருவில்
உணவு கொடுத்துக் கொண்டிருக்கும், இஸ்லாமியத் தோழர்களிடம்
வாங்கி பசியாறிக் கொண்டிருக்கிறார்கள்…..

tavheet -1

வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு போய்க் கொடுக்கும் இஸ்லாமிய இளைஞர்கள்….

tavheet-3

தவிப்பவர்களை மீட்கும் பணியில் இடுப்பளவு வெள்ள நீரில் – இஸ்லாமிய இளைஞர்கள்…..

tavheet-4

மனித நேயத்தை விட சிறந்த மதம் உலகில் எதுவுமில்லை
என்பதை நிஜத்தில் நிரூபித்துக் கொண்டிருக்கும் –
தவ்ஹீத் ஜமாஅத் -தமிழக முஸ்லிம் முன்னணி இயக்கத்தைச்
சேர்ந்த தோழர்களை இங்கே இந்த புகைப்படங்களில் பார்க்கிறோம்.

இவர்களை இந்த வழியில் பழக்கப்படுத்தி, நல் வழிகாட்டும்
நண்பர்களை நான் அறியேன்… விரைவில் தெரிந்து கொள்வேன்.
மிகச் சிறந்த உதாரணமாக இருக்கும் அவர்கள்
எல்லா நலமும் பெற்று வாழ்கவென்று வாழ்த்துவோம்.
வளர்க மனித நேயம்….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

34 Responses to இது எனக்கு மிகவும் முக்கியமான இடுகை ….!

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களே,

    இன்றைய தேவை இத்தகைய வழிகாட்டல்கள் தான்.

    இந்த இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழும்
    மூத்தவர்களைப் பற்றிய விவரங்கள் –
    தெரிந்தவர்கள் – தயவுசெய்து பின்னூட்டம் மூலம்
    தெரிவியுங்களேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Syedabthayar721's avatar Syedabthayar721 சொல்கிறார்:

      இது எங்கள் அண்ணலார் நபிகள் காட்டி தந்த வழி. சரியான நபிமொழிகளை ( புஸ்தகங்கள் ) வாங்கி தெரிந்துகொள்ளவும். மேலும் TNTJ. and TMMK தலைமை நிர்வாகிகள் கட்டளைகளை அச்சுமாறாமல் வழிநடக்கும் தொண்டர் படைகள் பற்றியும் தெரிந்துகொள்ள onlinepj.com OR TNTJ.net சென்று பார்க்கவும்.

      நன்றி

      M. செய்யது
      Dubai

  2. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    Like I commented in elsewhere future of our country is in safe hands of our young generation —

  3. ravi's avatar ravi சொல்கிறார்:

    http://www.eenaduindia.com/TamilNadu/ChennaiCity/2015/12/06181230/Chennai-flood-RSS-Muslim-unite-in-relief-works.vpf

    இந்த தகவலை கூட , வெளியூர்காரன் தான் சொல்ல வேண்டு போல

  4. karanthaijayakumar's avatar karanthaijayakumar சொல்கிறார்:

    மனித நேயம் தழைக்கட்டும்
    வாழ்த்துவோம் போற்றுவோம்

    • ravi's avatar ravi சொல்கிறார்:

      there is one bbc news rumour on rains .. the above link dispels that.. please pass on the info..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ரவி,

      நான் இதை தனியே பதிவாகவே போட்டு விடுகிறேன்.
      அதிக நண்பர்களுக்கு போய்ச்சேர அது உதவும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களுக்கு,

    நான் ஒரு நல்லெண்ணத்தோடு பதிவிட்ட இந்த இடுகையை,
    சிலர் குறுகிய கண்ணோட்டத்தோடு – தாக்குதல் நடத்திக் கொள்ள
    பயன்படுத்திக் கொள்வதைக் கண்டு வேதனை அடைகிறேன்.

    மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொள்கிறேன் –

    மத, இன – இணக்கங்களுக்கான இடுகைகளும், கருத்துக்களும்
    மட்டுமே இந்த வலைத்தளத்தில் இடம் பெறும்.

    ஒரு மதத்தை இன்னொரு மதத்தினர் சீண்டுவதோ,
    பதிலுக்கு அவர்கள் இவர்களை சீண்டுவதோ – அதற்கு இந்த
    வலைத்தளத்தை பயன்படுத்திக் கொள்வதே –
    எனக்கு வெறுப்பையும், வேதனையையும் அளிக்கிறது.

    சில பின்னூட்டங்களை நான் நீக்கி விட்டேன்.
    நண்பர்களே – தயவுசெய்து ஒத்துழையுங்கள்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  6. ஆவி's avatar ஆவி சொல்கிறார்:

    இன்று இணையத்தில் போலிப் படங்கள்,காணொளிகள் வருவதும் பேச்சை மாற்றி மறுப்பதும் அரசியல்,சினிமாவில் சகசமாகி விட்டது. தவ்ஹீத் ஜமாஅத் தைச் சேர்ந்த செய்னுல் அப்டீன்,அமீர்கான் போன்ற சிலர் அரசியல் பேசியிருந்தாலும் கூட, அவர்களின் ஊக்கமளிக்கும் பேச்சுத்தான் இஸ்லாமிய இளைஞர்களை தெருவுக்கு இறங்க வைத்து மனித நேயத்துடன் செயல்பட வைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது.

    ஜே யின் படங்களைப் போடுவது போல் விஜய் இரசிகர்கள் விஜயின் படங்களைப் போட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். நேற்று அரசின் நிவாரணம் ஓரளவிற்கு திருப்தி தருவதாகச் சொன்ன கருணானிதி இன்று அதற்கு மறாக தேர்தலுக்காக செய்வதாக கூறி குற்றம் சுமத்துகிறார். நானா சொன்னேன் என்று கேட்டு மன்னிப்புக் கேட்கிறார் கமலகாசன்.இவையெல்லாம் இன்று சாதாரணமாகி விட்டது.

    ஆனாலும் ஒரு சிலரின் சுயநல அரசியல் ஆதாயம் தேடும் செயல்களால், பல மனித நேயத்துடன் செயல்படும் நல்ல உள்ளங்களை நாம் புண்படுத்தி விடக்கூடாது.தங்கள் வேலைகளை குடும்பத்தை மறந்து களப்பணியாற்றும் அவர்களை கொச்சைப்படுத்தாது,
    கட்சி மத வேறுபாட்டுடன் கணைகளை தொடுக்காது ஒரு சிலரின் செயல்களுக்காக பலரின் சேவையை களங்கப்படுத்தாது கருத்துப் பரிமாற்றம் செய்தால் நன்றாக இருக்கும். நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்ததே சமூகம்.

    • புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

      மிக நல்ல பதிவு. சிலருக்கு எல்லாவற்றையும் குறுகிய கண்ணோட்டம் கொண்டே பார்ப்பார்கள். இன்று மக்களுக்கு மக்கள் செய்யும் உதவி. ஜாதி, மதம், அரசியல் கடந்தது. மக்கள் வாழ வேண்டும், மனிதம் வாழ வேண்டும்.

  7. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    இந்தப் புகைப்படங்களிலிருந்து மனித நேயத்தை மட்டும் பார்த்துப் புரிந்துகொள்வோம். Spontaneous ஆகச் செய்யும் இத்தகைய உதவிகள்தான் மனிதனாகப் பிறந்ததன் பயனை அடைய வைக்கும். Calamity always unite us. However, we should not wait only for such occasion. எத்தனையோ மனிதப் புனிதர்களை இந்த மழை நமக்கு இனம் காட்டியுள்ளது (புல்லுருவிகளைப் பற்றிப் பேசிப் பயனில்லை. அரசியல்வியாதிகளைப் பற்றிச் சிந்திப்பதும் வீண்)

  8. S.Raman's avatar S.Raman சொல்கிறார்:

    எங்கே சார் நான் போட்ட பின்னூட்டம்? உங்களின் மனசாட்சியின் உறுத்தலால் அகற்றி விட்டீர்களா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப ராமன்,

      நீங்கள் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். உங்கள்
      பின்னூட்டங்களுக்கு பின்னணி இருக்கிறது என்பதை
      நான் அறிவேன்.

      ————–
      // நான் ஒரு நல்லெண்ணத்தோடு பதிவிட்ட இந்த
      இடுகையை, சிலர் குறுகிய கண்ணோட்டத்தோடு –
      தாக்குதல் நடத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்வதைக்
      கண்டு வேதனை அடைகிறேன்.

      மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொள்கிறேன் –

      மத, இன – இணக்கங்களுக்கான இடுகைகளும்,
      கருத்துக்களும் மட்டுமே இந்த வலைத்தளத்தில்
      இடம் பெறும். இந்த வலைத்தளத்தை, மத பிணக்கங்களை
      உண்டு பண்ணவோ, பெரிது படுத்தவோ நண்பர்கள்
      யாரும் முயற்சிக்க வேண்டாம் //

      —————–

      – என்று நான் முனைந்து, பின்னூட்டத்தில் வேண்டுகோள்
      வைத்த பிறகும் நீங்கள் அந்த பின்னூட்டத்தை எழுதியது
      எந்த விதத்தில் சரி… ?

      உங்களுக்கு, கட்சிக் கண்ணோட்டத்திற்கு வெளியே –
      தனியே மனசாட்சி என்று ஒன்று இருந்தால் நீங்கள்
      எழுதியது சரியா என்று நீங்களே மறுபரிசீலனை
      செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

      கோடி ரூபாய் கொடுத்தாலும் –
      நீங்கள் நினைப்பது போன்ற கருத்துக்களுக்கு
      என் நெஞ்சில் இடம் கிடையாது – கிடைக்காது
      என்பதை இனியாவது நீங்கள் உணர்ந்து கொண்டால்
      மகிழ்ச்சி அடைவேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  9. S.Raman's avatar S.Raman சொல்கிறார்:

    ஆமாம் சார். நான் ஒரு கட்சியைச் சேர்ந்தவன் தான். அதனால் நான் என் கட்சியின் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் பின்னூட்டம் இடுவேன். ஆனால் நடுநிலைமை என்று சொல்லிக் கொண்டு ஒருவரை உயர்த்தியும் அவர்களின் அராஜகத்தை கண்டுகொள்ளாமலும் மற்றவரை தாழ்த்தியும் எழுத மாட்டேன். நீங்கள் நடுநிலைமை என்று சொல்லிக் கொள்ளாமல் அதிமுக, பாஜக ஆதரவாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டால் பின்னூட்டத்திற்கான தேவையே கிடையாது. காவிக் கூட்டம் இஸ்லாமியர்களை வெறி கொண்டு தாக்குகிறது. உங்கள் பதிவோ அவர்கள் இப்போதுதான் நல்வழியில் நடப்பதாகச் சொல்லி, நீங்கள் சொல்ல நினைப்பதையும் காண்பிக்கிறது. மனசாட்சியுடன் செயல்பட வேண்டியது யார்?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப ராமன்,

      என்னைப் பற்றி கடுமையான வார்த்தைகளை
      பயன்படுத்தும் முன்னர், என் இடுகைககள்
      சிலவற்றையாவது தொடர்ந்து படித்து,

      என் பார்வையை, பின்னணியை, நோக்கங்களை –
      ஓரளவாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
      அதைச் செய்யும் அளவிற்கு பொறுமையும்
      முயற்சியும் இல்லாத ஒரு அவசரக்குடுக்கை என்பதை
      நீங்களாகவே இப்போது முரசொலித்துக்
      கொண்டிருக்கிறீர்கள்…

      பெரிய தொழிற்சங்கவாதியென்று
      சொல்லிக்கொண்டு திரிகிறீர்களே….

      காம்ரேடு கே.அனந்தன் நம்பியாரைப் பற்றி
      கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

      தோழர் கல்யாண சுந்தரத்தின்
      புகைப்படத்தையாவது பார்த்திருக்கிறீர்களா ?

      நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே –
      நான் அவர்களோடு இணைந்து பணியாற்றியவன் –
      இதை சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக இங்கே
      சொல்லவில்லை. முதலில் பண்பாடு என்றால் என்ன,
      யாரிடம் எப்படி பேசுவது – எழுதுவது
      என்று கொஞ்சம் தெரிந்து கொண்டு
      பிறகு இந்த வலைத்தளத்தில்
      பின்னூட்டம் போட வாருங்கள்.

      இந்த வலைத்தளத்தை தொடங்கிய தினத்திலிருந்தே –
      தொடர்ந்து மத நல்லிணக்கம் பற்றி எழுதி வருபவன் நான்.
      கொஞ்சம் பின்னால் போய்ப்பாருங்கள் –
      நான் எவ்வளவு எழுதி இருக்கிறேன் என்பது தெரிய வரும்.

      என் நோக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்ப உங்களுக்கு
      என்ன தகுதி இருக்கிறது …?

      —–

      பாஜக ஆதரவாளர் என்கிற குற்றச்சாட்டு –

      என் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு
      தெரியும். நான் மோடிஜியையும், பாஜக வையும் எந்த
      அளவிற்கு கடுமையாகச் சாடி இதே வலைத்தளத்தில்
      எழுதி இருக்கிறேன் என்பது. என்னைப் போய்
      பாஜக ஆதரவாளர் என்று நீங்கள் கூறுவதைப் பார்த்து
      இந்த வலைத்தள நண்பர்களில் எவ்வளவு பேர்
      விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

      அதிமுக ஆதரவாளர் என்கிற குற்றச்சாட்டு –

      நான் அதிமுகவுக்காக எழுத வேண்டுமென்று நினைத்தால்
      என்னை நீங்கள் தடுக்க முடியாது. நீங்கள் எதிர்பார்ப்பதை
      எல்லாம் எழுதுவதற்காக நான் இங்கு இல்லை.
      நீங்கள் நினைப்பதை எல்லாம் உங்கள் தளத்தில்
      எழுதிக் கொள்ளுங்கள்…

      மீண்டும் இங்கே அரைகுறை என்கிற சொல்லை
      பயன்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை –

      நான் இதே வலைத்தளத்தில் பலமுறை கூறி விட்டேன்.
      இப்போது உங்களுக்காக மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் –

      இந்த வலைத்தள விமரிசனங்களில்
      அதிமுக என் priority அல்ல – என்பதை.
      திமுக மீண்டும் அரியணை ஏறக்கூடாது
      என்பதே என் நோக்கம்.
      எனவே இப்போதைக்கு என் முதல் டார்கெட் திமுக தான்.
      என் எழுத்தை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இது
      நன்றாகவே புரியும்….

      உங்களைப் போல் நான் என் வாழ்நாளில் எந்த கட்சிக்கும்
      அடிமையாக இருக்க மாட்டேன். ஒவ்வொரு தேர்தலின்போதும்
      ஒவ்வொரு கட்சியுடன் கூட்டு சேர்ந்து அவர்கள்
      அடிக்கிற கூத்துக்கு எல்லாம் ஜால்ரா அடிக்க வேண்டிய
      அவசியம் எனக்கில்லை.

      ஆமாம் – திரு.விஜய்காந்த் அவர்களை நீங்கள் ஏன் விமரிசனம்
      செய்வதில்லை….? அவர் அடிக்கும் கூத்துக்களை எல்லாம்
      ஏற்றுக் கொள்கிறீர்களா ..? தேர்தலுக்கு முன்னர் எப்போது
      வேண்டுமானாலும் அவர் உங்கள் கூட்டணியில்
      சேரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு தானே உங்கள் வாயை
      அடைத்து வைத்திருக்கிறது….?
      அப்புறம் நீங்கள் என்ன பெரிய லட்சியவாதி….?
      ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொருவருக்கு ஜால்ரா.

      நண்பர் டுடேஅண்ட்மீ பின்னூட்டத்தில் சொன்னது போல்
      2006-ல் அய்யாவுக்கு…
      2011-ல் அம்மாவுக்கு –
      2016-ல் வந்து விட்டால் விஜய்காந்த்துக்கு …?
      வராவிட்டால் யாருக்கு என்று இன்னமும் யோசிப்பு….

      நான் இப்படி எல்லாம் எழுதக்கூடியவன் அல்ல.
      நான் இவ்வளவு காரமாக எழுத வேண்டிய அவசியத்தை
      உண்டு பண்ணியது என் அடிப்படையையே
      சந்தேகித்து பின்னூட்டத்தில் நீங்கள் வெளிப்படுத்திய
      உங்கள் விகார எண்ணங்கள் தான்.

      கொதிப்புடன் இருந்தாலும் –
      சொல்ல வேண்டியதை எல்லாம்
      மனம் திறந்து சொல்லி விட்டேன் –
      இனி உணர்வதும், உணராமல் போவதும் உங்கள் பாடு.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

        காமைஜி,…கூல் ஜி….

        இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
        அதையே கொடுத்து அவர்களை வெற்றிச்சிரிப்பு சிரிக்க வைக்காதீர்கள்.

        இந்த அற்பர்களுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிப்பதை விட இன்னொரு பதிவு ராமன் அவர்களைப் பற்றியும் அவர்கள் இயக்கத்தைப் பற்றியும் போட்டுவிட்டால் போயிற்று. அவ்வளவுதானே. 🙂

        அப்புறம்,
        நண்பர் ராமன் அவர்களே,
        நீங்கள் காமையை கைப்புள்ள ரேஞ்சுக்குப் புலம்ப வைத்துவிட்டதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

        ஏதோ உங்களுக்கெல்லாம் பதில் எழுதுகிறேன் பேர்வழி என்று
        தன்னைப் பற்றி கொஞ்சூண்டாவது சொன்னாரே என்று சந்தோஷப்படுகிறேன். அதற்கு நீங்கள் காரணமாக இருந்ததற்காக உங்களை வாழ்த்துகிறேன். 😀

        • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

          ஒரு விசயம் சொல்ல விட்டுவிட்டேன்.

          இதுபோல பின்னூட்டங்களின் நோக்கம் எல்லாம் உண்மையில் உங்களை அவமரியாதைப்படுத்தவேண்டும் என்பது அல்ல… நீங்களும் அவ்வாறு எடுத்துக்கொண்டு பதிலுக்கு பதில்அளித்து நேரத்தையும் உங்கள் கோபத்தையும் விரயம் பண்ணவேண்டாம்.

          நீங்கள் பதிவுகளை எழுதக்கூடாது என்பதுதான் இவற்றின் உள்நோக்கம்.
          எனவே
          தாங்கள் மிகுந்த சிரமமெடுத்து, நேரமெடுத்து கோபத்தையும் துணைக்கழைத்து இன்னும் பல பதிவுகளை எழுத வேணுமாய் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

      • Sampathkumar.K.'s avatar Sampathkumar.K. சொல்கிறார்:

        We are with you.

        • Sampathkumar.K.'s avatar Sampathkumar.K. சொல்கிறார்:

          K.M.sir,

          I am excited to see your powerful retort
          and on knowing something fresh
          about your past. My salutes.

          Only fools will say that you are a BJP supporter
          or communalist. If Mr.Raman wants to join
          their list, let him join. Why should we worry ?
          Probably he is a DMK man with fake communist id.

          Please go ahead as usual with full power
          and vigour.
          We, are with you always.

          • S.Raman's avatar S.Raman சொல்கிறார்:

            திரு சம்பத்குமார் அவர்களே, எனது வலைப்பக்கத்திற்கு வந்து பாருங்கள். நான் என் முகத்தை மூடிக் கொள்ளாமல் என் புகைப்படத்தோடுதான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். போலி ஐ.டி நானல்ல.

  10. S.Raman's avatar S.Raman சொல்கிறார்:

    திரு காவிரிமைந்தன் அவர்களுக்கும் அவரது உற்ற நண்பராக உள்ள டுடே அவர்களுக்கும்,

    தேசத்தின் இன்றைய மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிற சகிப்பின்மை உங்களுக்கும் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புகிற காவிக் கூட்டத்தின் பாணியையே நீங்களும் உங்களின் உற்ற நண்பரும் கையாள்கிறீர்கள்.

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிற காரணத்தால்தான், இந்த
    பதிவின் தொனி சரியல்ல என்ற என் விமர்சனத்தை முன்வைத்தேன். எந்த இடத்திலும் நாகரீகக்குறைவான வார்த்தையை பயன்படுத்தவில்லை. உங்கள் நிலைப்பாட்டின் முரணை சுட்டிக்காட்டியதால், வார்த்தைகளை அள்ளிக் கொட்டி உங்களைப் பற்றி பலர் செய்து வரும் விமர்சனங்கள் சரி என்பதை நிரூபித்து விட்டீர்கள். நன்றி.

    உங்கள் நண்பர் டுடே அவர்களுக்கும் நன்றி (அவர் உங்களது ஃபேக் ஐடி அல்ல என்ற நம்பிக்கையோடு)

    • ravi's avatar ravi சொல்கிறார்:

      தோழர் …
      //
      தேசத்தின் இன்றைய மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிற சகிப்பின்மை உங்களுக்கும் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புகிற காவிக் கூட்டத்தின் பாணியையே நீங்களும் உங்களின் உற்ற நண்பரும் கையாள்கிறீர்கள்.///
      //////
      இதற்கு பேர் தான் அடிச்சு விடறது …
      காவி என்றால் தீவிரவாதி … அப்போது மற்ற மத அமைப்புகள் எல்லாம் ???
      இந்த விஷயம் மதானி உடன் கூட்டணி சேரும்போது தெரியாதா ??
      சி.பி.எம் ஆட்களால் நடத்தப்பட்ட மரிச்சபி கலவரம் எப்படி மறக்கடிக்கப்பட்டது என்று பலருக்கும் தெரிவதில்லை ..
      இ.கா.ப . அதிகாரி ஒருவரை, சி.பி.எம் குண்டர்கள் கல்கத்தா துறைமுக பகுதியில் வெட்டி கொன்றார்கள் ..
      இ.ஆ.ப அதிகாரியை கொன்ற லாலுவின் கட்சிக்கு நீங்கள் ஆதரவு …
      ஆனந்த மார்கி அமைப்புகளை வேட்டையாடியவர்கள் .. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்றார் திரு . ஜோதிபாசு ..
      நந்திகிராம் கொலைகள் .. கேரளா கண்ணூர் பகுதியில் நீங்களும் ,காவிகளும் என்ன கொஞ்சி கொண்டா இருந்தீர்கள் ??
      உங்கள் கட்சியின் திருவாளர் மணி, கொலைகள் தப்பில்லை என்றார் ..
      R.S.P கட்சியின் தலைவரை சி.பி.எம் ஆட்கள் போட்டு தள்ளினார்கள் ..
      தமிழ் நாட்டில் , தோழர் லீலாவதி அவர்களை கொன்ற கூட்டத்தோடு நீங்கள் கூட்டணி வைத்தீர்கள் …
      கேடி பிரதர்ஸ் , மன்னார்குடி கூட்டம் இவர்களுக்கு முட்டு கொடுத்தீர்கள் ..
      சிக்கிமில் , காவி கூட்டத்தோடு கூட்டணி வைத்தீர்கள் ..
      அப்புறம் கேட்டால் சகிப்பின்மை .. உண்மை தான் . தோழர் லீலாவதி அவர்களை கொன்றவர்களோடு கூட்டணி வைத்தால் கண்டிப்பாக சகிப்பின்மை தான் ..
      கேள்வி கேட்டால் காவிகள் மட்டுமா பம்முகிறார்கள் … தோழர்கள் இதில் கெட்டி ஆகி விட்டார்கள் ..
      மதவாதத்தை ஒழிக்க ,ஊழலை ஒழிக்க ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டியது தான் ..

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      உங்கள் நண்பர் டுடே அவர்களுக்கும் நன்றி (அவர் உங்களது ஃபேக் ஐடி அல்ல என்ற நம்பிக்கையோடு)

      உங்கள் நம்பிக்கை உண்மைதான். உங்கள் நன்றியை நான் இன்று நன்றியோடு பெற்றுக்கொள்ளுகிறேன் நண்ப ராமன்.

      நான் கா.மை.அல்ல. அவர் நானும் அல்ல. இருவரும் வேறு வேறு.

  11. S.Raman's avatar S.Raman சொல்கிறார்:

    மதிப்பிற்குரிய காவிரிமைந்தன் அவர்களே,

    நான் ஒருபெரிய தொழிற்சங்கவாதி என்று எந்த இடத்தில் சொல்லிக் கொண்டு திரிகிறேன் என்று உங்களால் காண்பிக்க முடியுமா? ஒரு தொழிற்சங்க ஊழியன் என்றுதான் என்னை கருதிக் கொண்டிருக்கிறேன்.

    தொழிற்சங்க இயக்கத்தில் நான் கண்ட ஒரு அனுபவத்தை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    எங்களது கோட்டத்திற்கு மாற்றலில் வருகிற சில உயரதிகாரிகள், நான் சுந்தரத்திற்கு நண்பன், கோவிந்தராஜனோடு ஒன்றாக இருந்தவன், ராஜப்பாவும் நானும் அவ்வளவு நெருக்கம், ஏ.ஆர்.கே யின் மாணவன் நான் என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டவர்கள் எல்லாம் மோசமான, ஊழியர் விரோத குணம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதே எனது அனுபவம்

  12. ஆவி's avatar ஆவி சொல்கிறார்:

    பின்னூட்டங்களை நீக்குவது நாகரீகமல்ல, விமர்சனங்களை எதிர்நோக்குவதே சிறந்தது என்பதை மீண்டும் இங்கே எனது கருத்தாக உரத்துக் கூறிக் கொண்டு……………….

    ஒரு பதிவர் பதிவு சார்ந்த கருத்துகள் விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் தருவது நன்று. தனிப்பட்ட விமர்சனங்களைக் கண்டு கொள்ளாது விட்டு விடுவதே மேலானதாகும்.

    இந்த தனிப்பட்ட கருத்து மோதல் சமயத்தில் எனக்கு பாரதிதாசன் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

    ……………..போற்றுவோர் போற்றட்டும் இல்லை புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்
    தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால், நில்லேன் அஞ்சேன்…………………

    அவர் தாக்குதல்களை எதிர்கொண்டார். விமர்சனங்கள் கருத்துகளை ஏற்று தனது கருத்தை மக்கள் முன் வைத்து பயணிப்பவனே சிறந்த பதிவாளன்.
    தெருவில் தெருநாய் ஒன்று குரைத்தால் நாம் அதைப் பார்த்து குரைப்பதில்லை.

    ஏற்பதோ நிராகரிப்பதோ உங்கள் சுதந்திரம்.

  13. S.Raman's avatar S.Raman சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் திரு காவிரிமைந்தன், உங்களுக்கென்று ஒரு கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறீர்கள். ஒரு விமர்சனத்தை முன்வைத்தால் இப்படி பாய்ந்து கொண்டு வருகிறார்களே! மீண்டும் வாழ்த்துக்கள்

    • ravi's avatar ravi சொல்கிறார்:

      தமிழ் நாட்டில் , தோழர் லீலாவதி அவர்களை கொன்ற கூட்டத்தோடு நீங்கள் கூட்டணி வைத்தீர்கள் …
      கேடி பிரதர்ஸ் , மன்னார்குடி கூட்டம் இவர்களுக்கு முட்டு கொடுத்தீர்கள் ..///

      One Minute !! whats your Opinion Mr.Raman on this issue??

  14. B.Venkatasubramanian's avatar B.Venkatasubramanian சொல்கிறார்:

    Mr.Raman,

    நான்கு வருடங்களுக்கும் மேலாக பார்த்து வருகிறேன்.
    காவிரிமைந்தன் எப்போதும் தன் மனதில் உள்ளதை
    அப்படியே எழுதுகிறார். அவர் தன் கருத்துக்களை யாருக்காகவும்
    கம்ப்ரமைஸ் செய்துக் கொண்டு நான் பார்த்ததில்லை. அதனாலேயே
    பல பாஜகவினர் அவர் மீது கோபம் கொண்டு இதெ இடத்தில்
    எழுதி இருக்கிறார்கள்.அவருக்கு
    நம்பிக்கை இல்லாத, எதையும் அவர் எழுதுவதில்லை.
    மதங்களைப் பற்றியும், சர்வமத ஒற்றுமையைப் பற்றியும்
    அவர் எழுதியதை எல்லாம் நீங்கள் படிக்காமலே
    கண்மூடித்தனமாக அவர் மீது கம்யூனலிஸ்ட் என்று
    குற்றம் சாட்டியது நீங்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை
    அல்லது வேண்டுமென்றே விஷமத்தனமாக எழுதினீர்கள்
    என்ரு தான் அர்த்தம்.
    அவருக்கு ஆதரவாக இத்தனை நண்பர் கூட்டம் இருப்பதற்கு
    காரணமே அவரது உண்மையான எழுத்துக்கள் தான்.
    தவறியது நீங்கள் தான். அவரது கடந்த ஆறு மாத கால
    ப்ளாக் எல்லாம் படித்துப்பாருங்கள். நீங்கள் செய்த தவறு
    உங்களுக்கே புரியும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.