உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது …..

BRIGHT SUNNY DAY

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக உதவியுள்ள பல
நல்ல உள்ளங்கள் –

திரைத்துறை கலைஞர்கள் –

ராகவா லாரன்ஸ் ( ஒரு கோடி ரூபாய் உதவி )
சித்தார்த், & ஆர்.ஜே. பாலாஜி (நேரடி உதவி, பொருட்கள் உதவி )
விஷ்ணு – (நேரடி உதவி, பொருட்கள் உதவி )

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் -25 லட்சம்,
ஜூனியர் என்.டி.ஆர் 10 லட்சம்
பிரபாஸ் – 15 லட்சம்
மம்முட்டி – ( சென்னையில் உள்ள தனது வீடு மற்றும்
தனது உறவினர் வீடுகள் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில்

மக்கள் தங்க அவர் வழிவகை செய்திருக்கிறார் )
மலையாள நடிகை மஞ்சு வாரியர் ( ஒரு லட்சம் )
திருமதி ஷாலினி, அஜீத் – (நேரடியாகவும், மறைமுகமாகவும்
பலவிதங்களிலும் உதவி )

கர்நாடகா, பீகார், ஒடிஷா – மாநில அரசுகள் –
தலா ஐந்து கோடி ரூபாய் உதவி….

தவுஹீத் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் –
( படகு மூலம் நூற்றுக்கணக்கானோர் மீட்பு
மற்றும் அத்தியாவசிய உதவிப்பொருட்கள்….)

திருப்பூரிலிருந்து பெண்கள் குழுவினர் –
( இரண்டு லட்சம் சப்பாத்திகள் மற்றும் உதவிப் பொருட்கள் )

ஈரோட்டிலிருந்து மக்கள் உதவிக் குழுவினர் –
சுமார் 200 மூங்கில் மீட்பு உதவிப்படகுகள் மற்றும்
பல்வேறு உதவிப் பொருட்கள் –

நான் இங்கு சேர்க்கத்தவறிய – இன்னும் எத்தனை
எத்தனையோ உதவிக் குழுக்கள்,
ஆயிரக்கணக்கான தனி நபர்கள் – இவர்கள் அனைவரும்
சென்னை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

யார் இவர்களை கூப்பிட்டது…..?
யார் இவர்களை கட்டளையிட்டது ….?
யார் இவர்களை உதவிக்கு வரத் தூண்டியது…?

அவரவர் உள்ளங்கள் மட்டுமே ….
அவர்களின் மனசாட்சி விடுத்த அறைகூவல்கள் அவர்கள்
அத்தனை பேரையும் தானாகவே முன்வந்து இந்த பணிகளில்
ஈடுபட வைத்தன –

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது ” –
என்கிறபடி, யாரும் அழைக்காமல் –

“நான் கொடுத்த வரிப்பணம் என்ன ஆனது –
என்னை ஏன் உதவி செய்யச் சொல்கிறீர்கள்” என்று

கேள்விகளை அடுக்காமல் தாமாகவே முன்வந்து
அற்புதமான பணிகளைச் செய்து கொண்டிருக்கும் இந்த
நல்ல உள்ளங்களை ( இன்னும் நான் இங்கு சொல்லத் தவறிய
அத்தனை பேர்களையும் சேர்த்து )

-இந்த வலைத்தள நண்பர்களின் சார்பில் மனமாரப்
பாராட்டுகிறேன். அவர்கள் எத்தகையை பிரதிபலனையும்,
எதிர்பார்க்காமல் தொடர்ந்து இதே போல் தொண்டு புரிய
வேண்டும் என்று வேண்டுகிறேன்.

——

கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் சென்னையில் மட்டும்
நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்…

சுமார் 11 லட்சத்து 53 ஆயிரம் பேர் ஆபத்தான இடங்களிலிருந்து
பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கிறார்கள்….

வெள்ளத்தில் சிக்கிய சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் –
படகுகளின் மூலமும், ஹெலிகாப்டர்களின் மூலம்,
மனித உதவியுடனும் (escort ) காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்…

சுமார் 56 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்
பட்டிருக்கின்றன.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 1200 பேர்,
தமிழ் நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் –
தீயணைப்புத் துறையினர்,
coast guards –
காவல்துறையினர் –
தமிழ் நாடு அரசின் அனைத்துத்துறையையும் சேர்ந்த
சுமார் 45,000 ஊழியர்கள் – அதிகாரிகள், துறைச் செயலாளர்கள்….
சென்னை மாநகராட்சியின் ஆயிரக்கணக்கான நிரந்தர
மற்றும் தற்காலிக ஊழியர்கள் –
தமிழ் நாடு மின்சார போர்டின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் –

நான் இங்கு சேர்க்கத்தவறிய இன்னும் எத்தனை
எத்தனையோ ஆயிரம் அரசு, மாநகராட்சி, மின் துறை ஊழியர்கள்
அத்தனை பேரையும் –

கொஞ்சமும் அசராமல், பசி, உறக்கம் பார்க்காமல் –
தங்கள், வேலை நேரத்தை நினைவிலேயே கொண்டுவராமல் –
தொடர்ந்து இத்தனை நாட்களாக – முழுமனதோடு,
தங்கள் பணியில் ஈடுபட்டிருப்பதற்காக

-இந்த வலைத்தள நண்பர்களின் சார்பில்
மனதார பாராட்டுவதோடு – அவலத்தில் இருக்கும் மக்களுக்கு
நீங்கள் செய்யும் இந்த தொண்டு – உங்களை ஆண்டவனுக்கு
மிக அருகில் கொண்டு சேர்க்கும் என்று வாழ்த்துகிறேன்.

இத்தனை அவதியிலிருந்தும் – தமிழகமும், தமிழ் நாட்டு மக்களும்
விரைவில் மீண்டு வருவார்கள் என்று உறுதியாக நம்புவோம்.
அதற்கான சக்தியையும், மனோவலிமையையும் –
இயற்கையும், இறைவனும் நமக்கு அளிக்க வேண்டுவோம்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது …..

  1. இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    நானும் என் உளமார்ந்த கைகூப்பிய நன்றியையும் நல்வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

  2. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    Nandri,Nandri,Nandri

  3. Thiruvengadam (@veluran)'s avatar Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

    How much it is true that TN Govt not accepted 5 Cr from Karnataka ? ( Saw in Vikatan News)

    • Thiruvengadam (@veluran)'s avatar Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

      Thank god for current update in Vikatan ; ” இந்நிலையில் தங்களது நிதியுதவியை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக கர்நாடக அரசின் தலைமைச் செயலர் கவுசிக் முகர்ஜி இன்று பிற்பகல் கர்நாடக பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.”

  4. Kamal's avatar Kamal சொல்கிறார்:

    Really proud of the mindset of general public.. At the same time feel sorry for such illiterate activities of politicians showing their personal ego in accepting help and trying to get benefits from Other People’s Money..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கமல்,

      கனடாவில் இருந்து கொண்டு, திருவாளர்கள் ஸ்டாலின் மற்றும்
      தயாநிதி மாறன் ஆகியோர் விலைக்கு வாங்கி விட்ட விகடனில்
      வந்திருக்கும் ஒரு கதையை நீங்கள் சுட்டிக் காட்டி இருக்கும்
      நண்பர் மறுபதிவு செய்திருக்கிறார்…
      அதை நிஜமென்று நம்பி நீங்களும் பின்னூட்டத்தில்
      வருத்தம் தெரிவிக்கிறீர்கள்…

      விகடன் புகைப்பட நிருபரை உடன் வைத்துக் கொண்டு,
      நிஜமாகவே அதிமுகவினர் யாரும் அத்தகைய
      செயல்களில் ஈடுபட வாய்ப்பில்லை ….!!!

      நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது.
      விகடனில் வெளியான செய்தியின் விளைவாக
      கீழ்க்கண்ட சுற்றறிக்கையை தமிழக காவல்துறையும்,
      அதிமுக தலைமையகமும் வெளியிட்டிருக்கின்றன –

      விகடனில் சொல்லப்பட்ட செய்தி நிஜமாக இருந்தாலும் சரி –
      உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் சரி –
      இந்த நடவடிக்கை போதுமானது என்றே நான் நினைக்கிறேன்…

      ————————

      வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்
      நிவாரணப் பொருட்களை பறித்து முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
      எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை
      விடுத்துள்ளது.

      நிவாரணப்பொருட்களை தடுத்து நிறுத்துபவர்கள் பற்றி
      நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு 9551555501
      என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும்
      தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர்,
      காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால்
      பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் மீது
      முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டச்சொல்வதாக
      எழுந்த புகாரை அடுத்து காவல்துறையினர்
      இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

      http://tamil.oneindia.com/news/tamilnadu/
      aiadmk-vows-take-action-against-partymen-
      harassing-volunteers-241554.html

      சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தன்னார்வலர்கள் கொண்டு வரும்
      நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு,
      அதில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. புகைப்படங்களுடன் இது தொடர்பான செய்தி
      வெளியானது.

      இதனையடுத்து, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும்
      இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு
      புகார் அளிக்கலாம் என அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

      மேலும், அதிமுகவினர் இடையூறு செய்யும் ஆடியோ,
      வீடியோ பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு
      அனுப்பலாம் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை
      எடுக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

      மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்
      பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு
      அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால்
      உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம்.
      044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில்
      தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
      இதுதவிர info@aiadmk.com என்ற மின்னஞ்சல்
      வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.
      அல்லது @aiadmkofficial என்ற ட்விட்டர் பக்கத்தின்
      வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம்” என்றும்
      அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

      http://tamil.oneindia.com/news/tamilnadu/
      aiadmk-vows-take-action-against-partymen-
      harassing-volunteers-241554.html

  5. karanthaijayakumar's avatar karanthaijayakumar சொல்கிறார்:

    கொஞ்சமும் அசராமல், பசி, உறக்கம் பார்க்காமல் –
    தங்கள், வேலை நேரத்தை நினைவிலேயே கொண்டுவராமல் –
    தொடர்ந்து இத்தனை நாட்களாக – முழுமனதோடு,
    தங்கள் பணியில் ஈடுபட்டிருப்பதற்காக
    மனதார பாராட்டுவோம்

  6. visu's avatar visu சொல்கிறார்:

    you should also mention fishermen

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர் விசு,

      சொல்ல விடுபட்டவர்களில் முக்கியமானவர்கள்
      சென்னை / காசிமேடு மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த
      மீனவ நண்பர்கள். தங்கள் படகுகளையும் எடுத்துக் கொண்டு
      வந்து அவர்கள் மேற்கொண்ட மீட்புப்பணி அற்புதம்.

      தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரெல்லாம் வருவதற்கு
      முன்னரே, முதன் முதலாக அங்கே பணியில்
      ஈடுபட்டவர்கள் இந்த மீனவ நண்பர்களே…
      அவர்களுக்கு நமது நன்றியும் வாழ்த்துக்களும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    மக்கள் துயர் துடைக்கும் மாநில அரசின் நிவாரண நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்வது புண்ணியமான செயலாகக் கருதி, இரக்க குணம் மற்றும் மனம் கொண்ட பலரும் பொருள் உதவியும், செயல் உதவியும் செய்கிறார்கள்……
    மனிதாபிமானத்தோடு உதவும் பலரும் —- அதை சிறப்புடன் பலரும் அறியும்வண்ணம் இடுக்கை பதிவிட்ட நீங்களும் வாழும் இந்நாட்டில் தான் —- கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், குறை சொல்லிக்கொண்டு — எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுரிவிகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன …. ” இன்னொருவர் வேதனை இவர்களுக்கு — வேடிக்கை …. இதயம் அற்ற மனிதருக்கோ இதெல்லாம் —– வாடிக்கை ” என்று அந்த கழிசடைகளை பற்றிய நினைவை ஓரம் கட்டிவிட்டு — நம்மாலான உதவிகளை தொடர்வோம் ….!!!

  8. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    இந்த பணியில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்ட அனைவரும்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

  9. ravi's avatar ravi சொல்கிறார்:

    from chennai..
    RSS and sewabharati , Ramakrishna Mission..
    seems nobody mentions them.. they dont publicise their actions…

  10. ravi's avatar ravi சொல்கிறார்:

    also.. jain samaj organisations, amirthanandamayi, sathyasai groups
    almost all the religious institutions are helping in one way or other..
    Temples have been opened for people to stay.. there are rumours that temples have been closed…

  11. ravi's avatar ravi சொல்கிறார்:

    there are news itesm that crocodiles esaped from crocodile park.. All Rumours… checked it

  12. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    May the Almighty give you more energy ang long life
    to continue the task you have assiduously been performing
    for many years.

  13. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுளின் பிரதினிதிகள். மனித நேயத்தைக் காண்பிப்பவர்கள் மிகச் சுலபமாக கடவுளின் அருகே சென்றுவிடுகிறார்கள், அவர்கள் அதனை எதிர்பார்க்காதபோதும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை”, இத்தனை நல்லவர்கள் இருக்கும்போது என் செய்யும்? உதவி செய்வதற்கு, பணம் தேவையில்லை. மனம்தான் தேவை. அவர்கள் வாழ்க. அவர்களுக்கு ஒரு ஆபத்தும் நேராதவாறு இறைவன் துணை இருக்கட்டும்.

  14. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Heard that many mosques have been opened for all people, irrespective of their religions. Also, that Vijay Actor was waiting to hand over Rs. 5 Crore to the Government. By the way, just read the weather forecast in Google. Seems the worst is over. Showers on 9th, 10th and 11th Dec Rest of the days in Dec are cloudy or even sunny from 18th. Hopefully the city will be back on its feet sooner than later. People have suffered enough and hopefully, lessons would have been learnt to align our lives with the nature.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.