ஜூ.வி.சர்வே, “பொர்க்கி” சாமியின் திமிர்…..!!!

.

.

முதலில் – சென்னையிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும்,
இயற்கையின் வேகத்தை மனோதிடத்துடன் சமாளிக்க முயற்சித்துக்
கொண்டிருக்கும் நம் மக்களுக்கு மனமார்ந்த ஆதரவை
தெரிவித்துக் கொள்வோம்….. சமாளிக்க முடியாத அளவிற்கு
நிலைமை போகாது என்று நம்பிக்கை கொள்வோம்….
நாம் செய்த தவறுகளுக்காக இயற்கையிடம் மன்னிப்புக்
கோருவோம்.
இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தாக்குப் பிடிக்க வேண்டும் –
மனோதிடத்துடன் சங்கடங்களை சமாளிப்போம்.ஒருவருக்கொருவர்
இயன்ற வரையில் உதவிக்கொள்வோம்…

நேற்றிரவு (01/11/2015) முதலே வீட்டில் மின்சாரம் இல்லை.
இடையில் சிறிது நேரம் வந்தது … பிறகு போய் விட்டது.
நள்ளிரவு முதல் இண்டர்நெட் தொடர்பும் போய் விட்டது.
தரை தொலைபேசியும் செயல்படுவது நின்று விட்டது.
செல்போனில் – அவசிய சர்வீஸ்கள் மட்டுமே தொடர்பில்
கிடைக்கும் என்று டிஸ்ப்ளே வருகிறது….

பரவாயில்லை…. சமாளிப்போம். ஆயிரக்கணக்கான மக்கள்
இதைவிட மிக மிக மோசமான நிலையில் தவித்து வருகிறார்கள்..

அவர்களுக்கு முதலில் உதவிகள் போய்ச்சேரட்டும்….
நம்முடைய சங்கடங்கள் பொறுத்துக்கொள்ளக்கூடியவை தான்.

இடையில், எப்போது இண்டர்னெட் தொடர்பு கிடைத்தாலும்-
இரண்டு நிமிடங்கள் கூட கிடைத்தாலும் போதும் –
பதிவேற்றி விடலாம் என்ற எண்ணத்துடன் யுபிஎஸ் உதவியுடன்
இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்போது வெளியானாலும் சரி…

——————————————————–

இரண்டு தனித்தனி – ஆனால் முக்கிய விஷயங்கள் ….

முதலில் ஜூனியர் விகடன் சர்வே –

விவரங்கள் வலையில் நேற்று படித்ததை வைத்துக் கொண்டு
எழுதுகிறேன். புள்ளி விவரங்கள் கைவசம் இல்லை….

அபத்தமான யோசனை.
இது பராசக்தி, சுகம் எங்கே, வேலைக்காரி காலங்களில்
தோன்றக்கூடிய ஒரு யோசனை. எனவே இது
யார் மண்டையில் உதித்திருக்கும் என்பதை யாரும்
சுலபமாக யூகித்துக் கொள்ளலாம்.

அதிமுக வை விட மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே
திமுக பெறக்கூடிய ஓட்டு சதவீதம் இருக்கும் என்று மற்ற
இளிச்சவாயன் கட்சிகளை (அப்படி எதாவது ஒன்று இருந்தால்…! )
நம்ப வைத்து, அவர்களை திமுகவுடன் கூட்டணி சேர
போடப்படும் தூண்டில் இது. சாதாரண மக்களே சுலபமாகப்
புரிந்து கொள்ளக்கூடிய இந்த விஷயத்தை கூட
புரிந்து கொள்ள முடியாத நிலையில் தமிழகத்தில்
இன்று எந்த கட்சித்தலைவரும் இல்லை…..

எனவே – கூட்டணிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் திமுகவின்
அடுத்த முயற்சி இது என்பதைத்தவிர இதைப்பற்றி
சீரியசாக எடுத்துக் கொள்ளகூற வேறு ஒன்றும் இல்லை
என்றே நினைக்கிறேன்….. (இவர்களின் அவசர, அபத்த ஆசையில் –
காங்கிரசை விட அதிக ஓட்டு சதவீதம் பெறக்கூடிய தமிழ் மாநில
காங்கிரசை மறந்தே விட்டார்கள்….! )

அடுத்து – “பொர்க்கி” சாமியின் திமிர் உளறல்கள்….!

சாதாரணமாக நான் யாரையும், எந்த அளவிற்கு எதிர்த்து
எழுதினாலும் – அவர்களை தரக்குறைவாக விளிப்பதில்லை
என்று ஒரு பழக்கம் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த
சூடு சுரணையற்ற ஒரு சுயநலவாதியை எப்படி அழைப்பது
என்றே புரியவில்லை.
எனவே, அவரை, அவரே கண்டுபிடித்த இந்த பெயர் கொண்டு
அடையாளப்படுத்துவதே பொருத்தமாக இருக்குமென்று
நம்புகிறேன்.

தமிழக மக்களுக்கு எதிராக,
தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக
இப்படி எல்லாம் ஒருவர் தமிழகத்தின் தலைநகரில்
நின்றுகொண்டே பேசிவிட்டு போவது –
எந்தவிதத்திலும் அவரது துணிச்சலை உறுதி செய்யாது.
துணையாக கமாண்டோக்களும்,
மத்தியில் ஆளும் கட்சியும் இருக்கின்றனர் என்கிற திமிரில்
தான் அவர் இப்படியெல்லாம் பேசக்காரணம்
என்பதையே உறுதிப்படுத்தும்.

தமிழ்நாட்டில் எதாவது ஒரு திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் –
(உள் அரங்க நிகழ்ச்சியில் அல்ல….) அவர் இதைப் பேசி
இருந்தால், அவரது துணிவைப் பாராட்டலாம்.
மற்றபடி தமிழ் மக்களைப் பொருத்த வரை
ஒரு “பொர்க்கி” பேசுகிறது என்று நினைத்து இந்த ஜந்துவை
ஒதுக்கி விடுவதே சரியான வழி என்று தோன்றுகிறது….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to ஜூ.வி.சர்வே, “பொர்க்கி” சாமியின் திமிர்…..!!!

  1. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    இவ்வாறு ஒரு ” சர்வேயை ” போட எப்படி ஜூ. வி ….. க்கு மனது வந்தது …. ? இதிலும் உள் அர்த்தம் ஏதாவது இருக்குமோ … ? தி. மு. க . — தே.மு.தி.க … வுடனோ அல்லது வேறு கட்சியுடனோ கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக — அ தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் அமையாது என்பதை மற்ற கட்சிகளுக்கு புரிய வைத்து —- தி.மு.க.கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் தந்திரமா …. ? அடுத்து நம் தமிழ்நாட்டு செய்தி ; — ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் // தமிழகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்ககூடாது: சு.சுவாமி திமிர் பேட்டி!! //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/subramanian-swamy-opposes-central-fund-tn-241258.html …. அய்யா … இரு செய்திகளையும் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது …. ? என்று நான் தங்களிடம் டிசம்பர் 1 — ம் தேதியன்று பின்னூட்டத்தில் கேட்டிருந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டது …. நன்றி …. மழையின் பாதிப்பு நிற்க கூட்டு பிரார்த்தனை ஒன்றே தற்போதைய ஒரே வழி …. நம் நண்பர்கள் அனைவரும் இப்பொழுது முதல் இறைவனையிடம் வேண்டிக்கொள்வோம் ….. !!!

  2. Peppin's avatar Peppin சொல்கிறார்:

    Your devotion to Amma is incredible!!! Vaazhga ungal pani…! Amma is the one and only leader in the entire world free of any corruptions…Dedicated her life ONLY for the betterment of downtrodden people…!

    Most importantly, I get goosepumps thinking of your purely unbiased views !!!

  3. Sivakumar's avatar Sivakumar சொல்கிறார்:

    Mr.Peppin, dont you know? she is the best administrator! So, we can even prick our eyes with that golden needle!

    • Ns raman's avatar Ns raman சொல்கிறார்:

      Her administration skills are now visible to the whole world how she is managing flood situation without stepping out of car !!!! and the only dept functions at 24×7 is tasmacc !!!! During summer people ready to fight for water with Karnataka and calling for dam damalision etc. We are deserved for such leaders for throwing out Kamaraj.

  4. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    மேலே இடுகையில் அம்மாவை ஆதரித்து ஒரு வரி கூட
    எழுதப்படாத நிலையில் நீங்கள் மூவரும் இப்படி எம்பி எம்பி குதிப்பது ஏன் ?
    யாருக்காக ?

    யார் தான் ஆட்சிக்கு வர வேண்டுமென்று தகுந்த காரணங்களுடன்
    நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்க்கலாம்.

    • Ns raman's avatar Ns raman சொல்கிறார்:

      If you remember swamy even in this flood situation but what is wrong in mention about administration of the State who is
      partly blamed for this situation.

      • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

        Ns raman,

        நான் என்ன கேட்டேன் – நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

        நான் கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலென்ன ?
        உங்களை கேள்வி கேட்டது நான் தான் . கே.எம்.சார் அல்ல.
        என் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்.

        // மேலே இடுகையில் அம்மாவை ஆதரித்து ஒரு வரி கூட
        எழுதப்படாத நிலையில் நீங்கள் மூவரும் இப்படி எம்பி எம்பி குதிப்பது ஏன் ?
        யாருக்காக ? //

        // யார் தான் ஆட்சிக்கு வர வேண்டுமென்று தகுந்த காரணங்களுடன்
        நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்க்கலாம்.//

        இப்போது தெரிகிறது – “பொர்க்கி சாமி” ஆதரவாளரா ?

        • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

          வெட்கமாக இருக்கிறதா அல்லது பயமாக இருக்கிறதா-
          “பொர்க்கி சாமி”யின் ஆதரவாளர் என்று வெளிப்படையாகச் சொல்ல ?

          • Ns raman's avatar Ns raman சொல்கிறார்:

            I am not a lawyer for Swamy and also not a “Poes Garden” Slaves like you

          • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

            Ns raman,

            இப்போதும் என் கேள்விகளுக்கு பதில் இல்லை.
            வெத்து உளரல் தான்.
            நான் போயஸ் கார்டனுக்கு ஆதரவாளன் அல்ல.
            “பொர்க்கி சாமி”யின் பக்தனுமல்ல.
            திரு.காவிரிமைந்தனின் எழுத்துக்களையும்,
            அணுகுமுறைகளையும் பாராட்டுபவன். எப்போதும்,
            அவருக்கு ஆதரவாக, இருக்க வேண்டுமென்று நினைப்பவன்.

  5. manudan's avatar manudan சொல்கிறார்:

    “………………இடையில், எப்போது இண்டர்னெட் தொடர்பு கிடைத்தாலும்-
    இரண்டு நிமிடங்கள் கூட கிடைத்தாலும் போதும் –
    பதிவேற்றி விடலாம் என்ற எண்ணத்துடன் யுபிஎஸ் உதவியுடன்
    இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்போது வெளியானாலும் சரி…” இவ்வளவு நெருக்கடிக்கு இடையில், இந்த மாதிரி ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு,ஜூ வி துணையுடன் திமுக ஒரு கூட்டணி அமைத்துவிட முயல்வதை முறியடிக்க பதிவெழுதும் உங்களைப் போன்றவர்களை நினைத்து பிரமிக்கிறேன்.இந்த நெஞ்சுரம் இருக்கிறதே …..சொல்ல வார்த்தையே இல்லை போங்கோ !

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      உங்கள் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக
      சொல்லத் துணிவில்லாத நீங்களெல்லாம்
      மானுடன் என்று சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவர்கள்.

      ஒருவேளை நீங்களே இப்படிச் சொல்லிக்கொண்டால் தான் நீங்கள் மானுடன் என்று தெரியும் நிலையோ ?

      • மானுடன்'s avatar மானுடன் சொல்கிறார்:

        அது சரி. எல்லாவற்றையும் தெளிவா சொல்லணும் போல? சென்னை மொத்தமா மிதக்குது மின்சாரம் இல்ல, பால்150 ருபாய்க்கு விக்குதாம், 3 நாளா தூங்காம மக்கள் தவிக்கிற நேரத்துல எதிர்கட்சி காரன் கூட்டணி அமைச்சுடுவானொன்னு கவலைப்பட்டு அந்த ‘பொல்லாத சதியை’ தகர்க்க பதிவெழுதுற உங்களை மாதிரி ஆளுங்களுக்கும் நீரோ மன்னனுக்கும் என்னங்க வித்தியாசம்? அது என்னங்க பதிவெழுதுற கே எஸ் சார்வாள் ‘டீசண்டா’ ஒதுங்கி நிற்கிறார், பதிலெல்லாம் நீங்க எழுதறிங்க? நீங்க என்ன அவருக்கு சொந்தமா அல்லது கொ ப செ வா? இல்ல மாறுவேஷமா?

        • இரா.பழனிகுமார்.'s avatar இரா.பழனிகுமார். சொல்கிறார்:

          அவருக்கு நிறைய ஜிங் ஜக்குகள் இருக்கின்றன,உங்களுக்கு தெரியாதா? இல்லை,அம்மா கூட்டத்துக்கு பினாமி இருக்கும்போது அவரது ஜால்ரா கா.மை .போன்றோரின் இடுகைகளுக்கு பினாமி இருக்கக் கூடாதா?

          • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

            நான் கேட்ட கேள்விகளுக்கு இது வரை பதில் இல்லை. விஷயத்தை திசை மாற்றவே முயற்சிக்கிறீர்கள்.
            ஊரையே கொள்ளையடித்த கருணாநிதி குடும்பத்துக்கு வக்காலத்து வாங்க
            உங்களைப் போன்ற ஜிங், ஜக்குகள் இருக்கலாம்.
            பொர்க்கி சாமிக்கு வக்காலத்து வாங்கவும் ஜிங் ஜக்குகள் இருக்கலாம்.

            கே.எம். சாருக்கு ஜிங் ஜக்காக இருப்பதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் எழுத்துக்களையும், அவர் எடுக்கும் நிலைகளையும்
            பார்த்து, பிடித்துப் போய்த்தானே இங்கு பின்னூட்டம்
            போடுகிறோம்.
            உங்களைப் போல் பினாமி பெயரில் ஒத்தை பின்னூட்டம் போட்டு விட்டு
            ஓடி ஒளியும் ஆசாமி நானல்ல. நான்கு வருடங்களாக
            கே.எம். சாரை படித்து வருபவன். நான் இப்படி இருப்பதில் பெருமைப்
            படுகிறேன்.
            எல்லாம் சரி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் வழியை
            பாருங்கள் பினாமிகளா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.