இது தமிழக பாஜக அக்காவுக்கு சமர்ப்பணம் …..!!! பிரதமர் வழியில்…பாஜக முதல்வர்கள்…..!!!

.

தமிழகத்தில் பண்பாடும், கலாச்சாரமும் அதல பாதாளத்திற்கு
சென்று விட்டதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்து தான்
பண்பாட்டை மீட்கப் போவதாகவும்
வாய் வலிக்க / தொண்ட வீங்க மேடைக்கு மேடை பேசி வரும்
தமிழக பாஜக அக்காவுக்கு –

கீழ்க்கண்ட செய்தியை சமர்ப்பிக்கிறோம் …..இது
தமிழக பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை
தயாரிக்கும்போது மறந்து விடாமல் இதையும்
சேர்த்துக் கொள்ள உதவும்…..

இன்றைய செய்தி
—————

Beer-Toast

மஹாராஷ்டிராவில் இரவு வாழ்க்கைக்கு புத்துணர்வு
கொடுக்கும் வகையில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
பல முடிவுகளை எடுத்திருக்கிறார்… அதில் ஒன்று –

வயதுக்கு வந்து விட்டாலும், இளைஞர்கள் முந்தைய அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக 25 வயது வரை குடிக்க முடியவில்லையே
என்று வருந்துவதால் –

குடிகாரர்களின் அனுமதிக்கப்பட்ட வயதை –
தற்போதைய 25- லிருந்து 21-ஆக குறைப்பது என்று
முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

—————————

தாமதமாக வந்த முக்கிய தகவல் –

கூடவே இந்த செய்தி புகைப்படமும் சமர்ப்பிக்கப்படுகிறது.
அடுத்த தமிழக பாஜக முதல்வருக்கு முன்மாதிரியாக –

சத்திஸ்கர் பாஜக முதல்வர் ராமன் சிங்
மேடையிலேயே பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் செல்பி
எடுத்துக் கொள்ளும் அதி உன்னத காட்சி….

raman singh selfie with karina

ஆஹா …. பாஜக பிரதமர் எவ்வழியோ –
அதே வழியில் பாஜக முதல்வர்களும்…
பாதை தவறாமல் பயணிக்கிறார்களே……!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to இது தமிழக பாஜக அக்காவுக்கு சமர்ப்பணம் …..!!! பிரதமர் வழியில்…பாஜக முதல்வர்கள்…..!!!

  1. ravi's avatar ravi சொல்கிறார்:

    k.m .. whats the fuss.
    I saw school kids in uniform buying liquor in tamilnadu(i dont want to mention the place)
    This is far more serious than 21 year old people buying liquor.
    my only issue is after drinking, they shouldn’t disturb common people/drunken driving etc..
    Infact, wineshops are built near schools ( hardly 100 mtrs ) , near temples, commercial shopping areas.
    in spite of courts passing strictures , the government gives a damn to those !!

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      திரு.ரவி,

      கே.எம். சார் பாஜகவை சாடும்போதெல்லாம் நீங்கள் குறுக்கே புகுந்து திசை திருப்புகிறீர்களே ஏன் ? நேரடியாகவே திரு.எல்விஸ்
      மாதிரி எழுத வெண்டியது தானே ? பள்ளிக்குழந்தைகள் எல்லாம்
      யூனிபாரமோடு பாட்டில் வாங்குவதாக கதைக்கிறீர்களே:
      அது எந்த நாட்டில் ? நாங்களும் இங்கே தான் சார் இருக்கிறோம். அந்தக்கதை
      எல்லாம் வேறு எங்கேயாவது போய் விடுங்கள்.
      தமிழ்நாட்டில் டாஸ்மாக் பற்றி அவ்வளவு ஆவேசமாகப் பேசும் “அக்கா”வின் கட்சி ஆட்சி நடத்தும் மாநிலத்தில் நிலைமை எப்படி
      என்று தான் இங்கே கேட்கப்படுகிறது. பாஜக இரட்டை வேடம், முட்டை வேடம் எல்லாம் போடுவது எப்படி என்று தான் இங்கே
      விவாதம். நீங்கள் பாஜகவுக்கு ஜகா வாங்க வேறு பக்கத்தில் இழுத்துக் கொண்டு போக வேண்டாம்.

      • ravi's avatar ravi சொல்கிறார்:

        நீங்க எப்படி சார் .. அம்மாவின் கொ.பா.சாவா .. சாதாரண கேள்விக்கு கூட பதில் இல்லை .. கொஞ்சம் என் கமெண்டுகளை படியுங்கள்…
        உங்களை போல நான் அம்மாவின் கொ.ப.ச வும் கிடையாது LVIS போல பா.ஜா.கா அல்லகையும் கிடையாது ..

        I saw school kids in uniform buying liquor in tamilnadu(i dont want to mention the place),நான் இருப்பது தமிழ் நாட்டில் . ஒரு சிறு நகரத்தில்.. இந்த சம்பவம் நடந்தது , மதுரை அருகில்… போதுமா சாமி.. வேற என்ன சாமி …

        பாஜகவின் மதவாத செயல்பாடுகளை என்றுமே வெறுப்பவன் நான் … உங்களுடைய சர்டிபிகட் எனக்கு தேவை இல்லை,.
        அதெப்படி சார் , மிடாஸ்,மணல் கொள்ளை விஷயம் எல்லாம் உங்கள் கண்களில் படுவதே இல்லை !!!

        • ravi's avatar ravi சொல்கிறார்:

          I saw school kids in uniform buying liquor in tamilnadu(i dont want to mention the place),–> சரியாக சொன்னால் விடலைகள் … 15 -18 வயது

          • ravi's avatar ravi சொல்கிறார்:

            இங்கே பிரச்னை .. குடி அல்ல. .. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அரசு எதோ ஒரு வகையில் சாராயத்தை தன கட்டுக்குள் வைத்து இருக்கும்(குஜராத் உட்பட .. பெர்மிட் உண்டு ) ..
            பள்ளிக்கூடம் திறப்பது போல , ஊருக்கு ஊர்,சிறு கிராமங்களில் எதற்கு டாஸ்மாக் ???
            நான்கு வருடம் ஊருக்கு ஊர் டாஸ்மாக் திறந்து விட்டு கடைசி வருடம் சில கடைகளை மூடி விட்டால் உடனே நல்லவர் ஆகி விடுவார்களா ..

          • ஆவி's avatar ஆவி சொல்கிறார்:

            தினகரனில் இந்த ஆண்டு தொடக்கத்தில் படங்கள் வந்தன. டாஸ்மாக்கில் வாங்கியது மட்டுமல்ல,அவர்கள் குடித்து விட்டு டாஸ்மாக் முன்னால் தெரு ஓரத்தில் சீருடையுடன் வீழ்ந்து கிடந்ததையும் படம் பிடித்து போட்டிருந்தனர்.

      • Seetharaman's avatar Seetharaman சொல்கிறார்:

        In Tamil Nadu we have more no of tasmac than medical shops. It is selling like a hot tea. This is definitely not a case in Maharashtra. Please come out of your home and see before writing. KM got all rights to criticize BJP but it should be constructive and analytical.

  2. Sundar's avatar Sundar சொல்கிறார்:

    Rethink and evaluate the politicians…. do we have any alternate in our system….we have to change our attitude to vote to select the correct person…… i dont think so it is easy…..since our culture system are changed and we are giving more importance to MONEY….Please go thro Chanakya’s Arthasasthram……Every educated are doing like that then what we do…….Soothum Vathum Padithavan Seithal AYYOVENDRU POVAN……… BHARATHI

  3. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    There was lot of demand for lowering the agefor drinking from many quarters —This is not agood thing to do but probably the Maha govt was also having revenue aspect in mind –

    Kareena Kapoor is there in the event as UNICEF India Celebrity Advocate and Raman Singh was the chief guest —
    Perhaps if kareena Kapoor was not from the filmy world this would not have become an issue at all –Why do we treat those from filmdom as different —
    Every one is caught in this selfie craze —

  4. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    தினமலர் முதல் பக்கம் அரசியல் செய்தி
    பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015,00:00
    // சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். ‘இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் இருந்து உதவி பெறுவதில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது’ என, அவர்கள் புகார் தெரிவித்தனர்.// ……..
    இந்த மத்திய இணை அமைச்சர்களின் பேட்டியும் — புகாரும் ஏற்கத்தக்கதா ….? ஜெயலலிதா மதிய அரசிடம் வைத்த கோரிக்கை ” வெள்ள சேதங்களை பார்வையிட்டு — மதிப்பீடு செய்ய மத்திய நிபுணர் குழுவை ” அனுப்ப சொல்லி —- ஆனால் நிபுணர் குழுவுக்கு பதிலாக இணை அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு —- இங்கே உள்ள அதிகாரிகளையும் — நிதியையும் வைத்து செய்து முடித்த — செய்துகொண்டு இருக்கின்ற செயல்களை குறை கூறி பேட்டியை தமிழக அரசின் மீது புகார் போல கூறுவது — அரசியல் ஆதாயம் தேடத்தானே …. ? பிணங்களின் மீதும் நின்றுகொண்டு வோட்டு பொறுக்க நினைக்கும் … இவர்களை பற்றி …? சில நாட்களுக்கு முன் இதே ” பொன்.ரா. ” தமிழக அரசு சிறப்பாக நிவாரண பணிகளை செய்து வருகிறது என்று சொன்ன வார்த்தை — தமிழிசை அருகில் இருக்கும் போது மாறி ஒலிப்பதின்….. மர்மம் என்ன …. ? முன்பு மத்திய காங்கிரஸ் அரசு எப்படி பழிவாங்கியதோ — அதைவிட தற்போதைய பா.ஜ.க அரசு ஒருபடி மேலே சென்றுதமிழகத்தை பழிவாங்கி என்ன சாதிக்க நினைக்கிறார்கள் ….? இதுவரை நாட்டுக்கே பிரதம மந்திரியானவர் — ” ஒரே ஒரு அறிக்கை தமிழ வெள்ளம் பற்றி ” வெளியாடதது ஏன் …. ?

    • ravi's avatar ravi சொல்கிறார்:

      பாமரன், இங்கே எல்லா பயலும் அரசியல்வாதிகள் தான் .. இதே பி.ஜே.பி மும்பையில் மழை வடிகால் பிரச்சனையில் என்ன கிழித்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும் !!!
      ஆனால் ,
      1990 முதல் , திமுக – 10 வருடம்..அதிமுக கிட்ட தட்ட 15 வருடம் – தமிழ் நாட்டில் ஆட்சி செய்கின்றனர் .
      இன்று வரை இந்த மழை வடிகால் பிரச்னை சரி செய்ய முடியவில்லை என்றால் , சொல்வதற்கு ஒன்றும் இல்லை …
      சிறு ஊர்களில், கண்மாய் , எரி கரைகளை உடைத்து விடுவார்கள் ..சிறந்த உதாரணம் கடலூர் .. வீராணம் தூர் வாரி பல மாமாங்கம் ஆகி விட்டது .. என் ஊரில் வாய்கால் தூர் வாரி கிட்ட தட்ட 20 வருடம் மேல் ஆகி விட்டது எங்கள் தோட்டத்தில் 300 அடி போர்கிணறு சர்வ சாதாரணம் ..வைகை ஆணை, திருவைகுண்டம் தடுப்பணை,நொய்யல் ஆறு , ஓரத்துபாளையம் அணை, போரூர் எரி .. சொல்லவே வேண்டாம் ..
      மாநகராட்சி கழிவுகள் பகிரங்கமாக காவிரி , வைகை , தாமிரபரணி நதியில் கொட்ட படுகிறது . ஆலை கழிவு நீர் , சாக்கடை , காவிரி , வைகையில் சேர்க்கிறது .. சென்னை தவிர்த்து பிற ஊர்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு என்பது கானல் நீர் தான் ..நீர் நிலைகள் மேல் மக்களும் , அரசாங்கமும் காட்டும் அலட்சியம் பயமுறுத்துகிறது ..ஆந்திராவில் , கிருஷ்ணா , கோதாவரி இணைப்பு முடிந்து விட்டது … தமிழ் நாட்டில் காவிரியும் , தாமிரபரணியும் எப்போது இணையும் ??…
      இந்த பிரச்சனைகளை எல்லாம் , மத்திய அரசின் மேல் போட்டு தப்பிப்பது வெறும் அரசியல் மட்டுமே ..நிவாரணம் குடுத்து நாம் பிரச்சனையை தள்ளி போடுகிறோம் ..அவ்வளவு தான் ..

      • Seetharaman's avatar Seetharaman சொல்கிறார்:

        Ravi

        Mumbai drainages and maintanence are 100 times better than Chennai. Infact chennai rain less than half of mumbai. Only with high tide and hevay rain combination causing delugue like 2005. BJP CONG in Mumbai any time better than DMK. ADMK in this aspect. Rest of the problems are common throughout India.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.