
பீகார் முடிவுகளை அடுத்து மானமிகு அய்யா வீரமணி
அவர்கள் விடுத்துள்ள செய்தி கீழே –
———————
பிகார் தேர்தல் முடிவுகளிலிருந்து தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஊழலா, மதவெறியா என்பதிலிருந்து எதற்கு முன்னுரிமை அளிக்கப் போகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.
ஜனநாயகம், மதசார்பின்மை, சமூகநீதி காத்திட நிதீஷ், லாலு,
சோனியா ஆகியோர் சரியான நேரத்தில் அமைத்த மகா கூட்டணி,
மதவாத பாஜக கூட்டணியை வீழ்த்தியுள்ளது.
எனவே, தமிழக எதிர்க் கட்சிகள் தன்முனைப்பு, விருப்பு,
வெறுப்புகளைக் கைவிட்டு விட்டு, எந்த ஆயுதம் கூர்மையானது
என்று கண்டு, அந்த ஆயுதத்தைக் கையில் ஏந்தாமல்,
அட்டைக் கத்தி தெருக் கூத்து ராஜாக்களைப் போல வேடம் கட்டி ஆடினால், கூத்து சுவைக்கலாம்.
பொது நோக்கங்களான ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூகநீதி
ஆகிய முப்பெரும் லட்சியங்களைக் கொண்ட எதிர்க்கட்சிகள், அணி அணியாக போட்டியிட்டால் ஒரு போதும் ஆட்சியை தர முடியாது. ஆட்சிக்குப் பதில் காட்சிதான் காண முடிவும்.
எனவே தமிழக தலைவர்கள் சரியான பேருந்து எது என்று
கண்டறிந்து பயணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?
N=154664
———————————————-
அய்யா வீரமணி அவர்களுக்கு
இதற்கெல்லாம் எதற்கு பேருந்து பயணம் என்று யோசிக்கும் –
வீரமணி அளவுக்கு அறிவு தெளிவில்லாத ஒருவனின் கேள்வி ….
அய்யா வீரமணி அவர்களுக்கு தெரியாதா என்ன –
அட்டைக்கத்தியை தமிழ்நாட்டில்
எதிர்க்கட்சிகள் மட்டும் தானா சுழற்றுகின்றன ?
கலைஞர் சுழற்றவில்லையா என்ன ?
ஆலோசனை என்றால் – அது கலைஞர் கருணாநிதிக்கும்
சேர்த்ததாக தானே இருக்க வேண்டும்…? அதெப்படி
எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் ? ….
-என்று எதிர்க்கட்சிகள்
கேள்வி எழுப்பும் என்பது மகா புத்திசாலியான வீரமணி அவர்களுக்கு தெரியாதா என்ன …?
எனவே, அவர்கள் கேட்கும் முன்னரே, அய்யா வீரமணி அவர்கள் கலைஞர் கருணாநிதியிடமும் –
ஸ்டாலின் என்கிற அட்டைக்கத்தியை
மட்டும் சுழற்றாமல் –
தன் முனைப்பு, விருப்பு, வெறுப்புகளைக் கைவிட்டு விட்டு,
எந்த ஆயுதம் கூர்மையானது? – என்று கண்டு,
லாலு, நிதிஷ், சோனியா ஆகியோர் தேர்தலில் வென்றால்,
ஒன்றாகச் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று
முடிவு செய்தது போன்று,
தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் –
தேர்தலில் ஜெயித்தால் கூட்டணி ஆட்சி உறுதி –
என்று உத்தரவாதம் கொடுத்து கூட்டணி அமைப்பாரா …?
என்று கேட்டால் தீர்ந்தது விஷயம் ……!!!
எனவே, வீரமணி அவர்களது அடுத்த அறிக்கை
கலைஞருக்கான கேள்வியாக இருக்கும்
என்றே நம்புவோம்……!



அரசியல்வாதிகளும் காட்சிக்கு தகுந்தாற்போல் நடிக்கின்றார்கள்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தவிர்த்து ஏனைய கட்சிகள் அனைத்தும் ஈகோ பார்க்காமல் ஓரணியில் திரண்டால் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தைப் பிடித்திருந்த சாபத்துக்கு நிச்சயம் விமோச்சனம் கிடைக்கும். இதை கட்சி சார்பற்ற நடுநிலை மக்கள் உறுதியாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இவர்களுக்கு வேண்டும்.
//எனவே, வீரமணி அவர்களது அடுத்த அறிக்கை
கலைஞருக்கான கேள்வியாக இருக்கும்
என்றே நம்புவோம்……!//
நிச்சயம் கேட்க மாட்டார். வீரமணி கருணானிதியின் கைத்தடி என்பதால், கைத்தடி பேசாது. கைத்தடி வைத்திருப்பவர் தான் கையை சுழற்றி கைத்தடியை பேச வைப்பார்.
\\\ பொது நோக்கங்களான ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூகநீதி
ஆகிய முப்பெரும் லட்சியங்களைக் கொண்ட எதிர்க்கட்சிகள், அணி அணியாக போட்டியிட்டால் ஒரு போதும் ஆட்சியை தர முடியாது. ஆட்சிக்குப் பதில் காட்சிதான் காண முடிவும்.
எனவே தமிழக தலைவர்கள் ” சரியான பேருந்து எது என்று
கண்டறிந்து பயணம் செய்ய வேண்டும் ”என வலியுறுத்தியுள்ளார்./////
அவரின் எண்ணப்படி சரியான பேருந்து தி . மு . க தான் என்பது வாதம். மற்ற கட்சிகள் எல்லாம் திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருக்கும் ஆனால் ஆட்சியில் பங்கு கிடையாது என்பது ஸ்டாலினின் அதிக ஆசை என்பது முக வுக்கும் தெரியும். திமுக மற்ற கட்சிகளை கூட்டு சேர்க்கவில்லை என்றால் அதிமுகவை வீழ்த்துவது கடினம் இதை அணைத்து தலைவர்களும் முக உள்பட யோசிக்கவேண்டும். செய்வார்களா ?
M. செய்யது
Dubai
// அட்டைக் கத்தி தெருக் கூத்து ராஜாக்களைப் போல வேடம் கட்டி ஆடினால், கூத்து சுவைக்கலாம்./// இந்தவரிகளை படித்தவுடன் : தற்போது அவ்வாறு கிளம்பி புது – புது வேடங்களிலும் —- உடைகளிலும் கூத்து ஆடும் ” ஸ்டாலினின் ” நினைவு கண்டிப்பாக வந்தே தீரும் தானே ….? // எனவே தமிழக தலைவர்கள் சரியான பேருந்து எது என்று
கண்டறிந்து பயணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.// அது சரி மெட்ரோ ரயிலில் “அரை ” வாங்கிய அன்பர் போல — மற்றவர்களையும் ஸ்டாலின் & கோ பேருந்தில் ஏறி { மக்களிடம் } யார் உதை வாங்குவது …? வீரமணிக்கு ரொம்ப குசும்பு அதிகம் தானே …? என்னதான் இருந்தாலும் ஸ்டாலின் கோயிலுக்கு சென்றதற்கு மறுப்பு எதுவம் தெரிவிக்காத ” மானமிகு ? வுக்கு ” இதை கூற அருகதை இருக்கா என்பது கேள்வியாக ஏற்படுவது சரிதானே … அய்யா …. ?
“தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஊழலா, மதவெறியா என்பதிலிருந்து எதற்கு முன்னுரிமை அளிக்கப் போகின்றன”—
தி மு க வை ஆதரித்தால் ஊழல், அ தி மு க வை ஆதரித்தால் மதவாதம் என்பது அர்த்தமா? அப்படி என்றால் இவர் சொந்தமாகவே அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார் என்றுதான் அர்த்தம்.