.
.
பாரா க்ளைடிங் நமக்கு பழக்கமான ஒன்று தான்.
தரையிலேயே, கடற்கரை போன்ற, நல்ல காற்று வீசும் இடங்களாகப் பார்த்து தரையிலிருந்தே லான்ச் செய்வார்கள். அண்மையில் சென்னை கடற்கரையில் கூட இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதிலேயே இன்னொரு வகை – பள்ளத்தாக்கை ஒட்டிய,
உயரமான, மலைப்பிரதேசங்களில் கையாளப்படுவது. ஹிமாசல்
பிரதேசத்தில் கடந்த மாதம் பல நாடுகளிலிருந்து வீரர்கள்
பங்கு கொண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் உயரமான இடத்திலிருந்து, சிறிது தூரம் ஓடிவந்து உயரே கிளம்பி விடுவார்கள்.
பின்னர் பாரசூட்டின் உதவியால், காற்றின் போக்கிற்கேற்ப பயணம் செய்து, கீழே அருகிலுள்ள சமவெளியில் இறங்கி விடுவார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஹிமாசல் சென்றிருந்தபோது – இதை நான் வெகு அருகிலிருந்து இயங்கும் விதங்களை எல்லாம் பார்க்க முடிந்தது.
இப்போது பிரபலமாகி வருவது விங் சூட் (Wing Suit ) சாகசம். கீழே புகைப்படத்தில் பார்க்கலாம்.
இதில் டைவர்களால், பறக்கும் கோணத்தையும்,
கீழே இறங்கும் வேகத்தையும்
கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறது. இரண்டு கைகளுக்கிடையேயும், கால்களுக்கிடையேயும் தனித்தனியே
inflatable pressurised nylon cells, பயன்படுத்தி, இந்த
விங் சூட் தயாரிக்கப்படுகிறது. இந்த சூட்டை அணிந்துகொண்டு
பறக்கும்போது, பறக்கும் கோணத்தையும் ( நேராக அல்லது பக்கவாட்டில்), கீழே இறங்கும் வேகத்தையும் டைவரால் -கட்டுப்படுத்த முடிகிறது.
சாதாரணமாக பாராசூட்டிலிருந்து குதித்தால் தரையிரங்கும்
நேரத்தை விட, 80 % அளவிற்கு கூடுதலான நேரம் பறக்கலாம்.
(குறைந்த பட்ச வேகம் – மணிக்கு 25 மைல்..)
அதே போல், தங்கள் கை,கால்களை தகுந்தவாறு அசைப்பதன் மூலம் காற்றில் நேராகவும், பக்கவாட்டிலும் பறக்கலாம். (நேராக பறக்கும்போது வேகம் அதிகம் – மணிக்கு 220 மைல் வரை…! ) இவற்றிற்கு முறையான பயிற்சி பெறுவது அவசியம்… !
அண்மை காலங்களில் பிரபலமாகி வரும் இந்த விளையாட்டை நம் நண்பர்களும், முக்கியமாக அவர்கள்
இல்லத்தில் இருக்கும் சிறுவர், சிறுமிகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பி, கீழே இரண்டு வீடியோக்களை இணைத்திருக்கிறேன். (சிலர் ஏற்கெனவே பார்த்திருக்கலாம்…! )
அதில் ஒன்று, கலிபோர்னியாவில் 12 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஸ்கை டைவ் வீரர்கள் 61 பேர் ஒரு குழுவாக இணைந்து, செய்த சாகசம். இதில் 3 பறக்கும் விமானங்களிலிருந்து கொத்து கொத்தாக வெளியே குதிக்கும் வீரர்கள் சிறிது தூரம் பறந்து, தங்கள் பறக்கும் கோணங்கள், வேகத்தை – சமப்படுத்திக் கொண்டு, ஒன்று சேருவதை பார்க்கலாம்.






it is really fantastic and scary. Thanks Mr.KM
Amazing&Thrilling,
Mr.K.M.
Wonderful experience.
Earlier I have seen some pictures like this and
I was thinking about para-gliding only.
I was not aware of this fantastic wing suit. Thank you.
It is a real “vaarathirku vaaram vithiyaasam”.
These adventure sports as they are called carry a lot of risk –Whenever I see such pictures I am reminded of a woman whose parachute did not open and fell on the ground and died while her husband was watching — –It happened in salem or Vellore I am not sure —In most of the European countries the weather is cold almost throughout the year -You have to be there to experience what that cold really means – — They have these new sports like bungy jumping and the sports mentioned above to indulge in during brief summers — My opinion is that sports should be for enjoyment —