படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜஸ்டிஸ் ஜெயின் கமிஷனுக்கு நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை…
கொலையில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட
சிலரைக் குறித்த டாப் சீக்ரட் பைல்கள் அன்றைய பிரதமர்
நரசிம்மராவ் ஆணைப்படி அழிக்கப்பட்டன – என்றால்
அதற்கு என்ன பொருள்….?
ஒன்றல்ல, இரண்டல்ல – மொத்தம் இதுவரை
3 விசாரணை கமிஷன்கள் நியமிக்கப்பட்டு விட்டன….
எவ்வளவோ விசாரணைகள் நடந்தன….
எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன ….
ஜெயின் கமிஷன் மத்திய அரசிடம் சில முக்கிய விவரங்களையும் அது சம்பந்தப்பட்ட கோப்புகளையும் கேட்டது. முடிந்த வரை இதை தவிர்க்கப்பார்த்த நரசிம்மராவ் அவர்கள் – வேறு வழியே இல்லை என்கிற நிலை வந்தபோது,
கேபினட் செயலகத்திலிருந்து மிக முக்கிய பொறுப்பிலிருந்த
ஒரு உயர் அதிகாரியிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்…
சம்பந்தப்பட்ட அத்தனை பைல்களையும் 3 வகைகளாகப்
பிரிக்க வேண்டும்…..
1) எந்தவித பிரச்சினையையும் உண்டு பண்ணாது என்று
உறுதியாகத் தெரியும் பைல்கள்…ஜெயின் கமிஷனிடம்
கொடுக்கப்படக்கூடியவை.
2) சில சங்கடமான விஷயங்களை உள்ளடக்கிய பைல்கள்,
classified என்று மதிப்பிடப்பட்டு, நிறுத்தி வைத்துக்
கொள்ளப்பட வேண்டிய பைல்கள்…தவிர்க்க முடியாமல் போனால், கடைசியில் கமிஷனிடம் கொடுத்துக் கொள்ளலாம்.
3) மிக மிக முக்கியமான, ரகசிய தகவல்களை உள்ளடக்கிய பைல்கள்… இதில் வெளிநாடுகளிலிருந்து சு.சாமிக்கும், ச.சாமிக்கும் நிகழ்ந்த சம்பாஷனைகள், நுண்ணுணர்வு-புலனாய்வு பிரிவுகளால் இடைமறித்து கேட்கப்பட்டவை, மற்றும் கொலை நிகழ்ந்த இரவு, சு.சா. மற்றும் ச.சா. எங்கெங்கு இருந்தார்கள்…
என்னென்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பன போன்ற
விவரங்களை உள்ளடக்கியவை.
இந்த மூன்றாவது வகை பைல்கள் வேறு யார் பார்வையிலும் படாமல் அழிக்கப்பட்டன அதாவது வேண்டுமென்றே ஒழிக்கப்பட்டன.
இவை எல்லாம் நான் சேகரித்த தகவல்கள் அல்ல…
என்னால் முடியக்கூடிய காரியமா அது….?
பழைய ஆவணங்களை எல்லாம் தோண்டி எடுத்து, தேடியபோது கிடைத்தவை.
எவ்வளவு தூரத்திற்கு நம்பகமான செய்திகள் இவை …?
“அவுட்லுக்” ஆங்கில ஏடு ( 24.11.1999 இதழ் ) இந்த விவரங்களை
எல்லாம் பிரசுரித்திருக்கிறது. “outlook” ஐ நம்பலாம் என்றால்
இந்த செய்திகளை நம்பலாம்.
அப்படிக் காணாமல் போன அல்லது அழிக்கப்பட்ட
கோப்புகளின் பட்டியலை ஆதாரங்களுடன் ‘அவுட் லுக்’ ஆங்கில ஏடு பட்டியலிட்டுக் காட்டி இருக்கிறது.
‘அவுட் லுக்’ தந்துள்ள விவரங்கள் கீழே –
———————–
File containing intercepted messages from foreign
intelligence agencies, said to be
addressed to Chandraswami and Janata Party president
Subramanian Swamy, destroyed by senior officials in the PMO.
File on IB’s assessment of the role played by Zail Singh
and Chandraswami in 1987
to topple Rajiv Gandhi missing.
File with records of official briefings by intelligence
agencies on the assassination to Rao’s home minister
S.B. Chavan missing. The former minister confirms
he wasbriefed orally.
File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings
of bureaucrats regarding security
arrangements for Rajiv Gandhi from November ’89—
was lost from the PMO in ’91.
Later, it was doctored and reconstructed by the
Narasimha Rao government before
it was submitted to the Jain Commission.
File No. 1/12014/5/91-IAS/DIII reported missing
since 1995. It pertained to the terms of reference of
the Verma and Jain commissions of inquiry.
The April 20, 1991, wireless intercept with the leading
question— should Rajiv be
killed in Delhi or Madras?—missing.
———————-
1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு (8-1-WR/JSS/90/volIII) பிரதமர் அலுவலகத்திலிருந்து
1991 ஆம் ஆண்டே காணாமல் போய் விட்டது.
ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது இந்த கோப்பு
கிடைக்கவில்லை…… பிறகு, இருக்கும் தகவல்களை வைத்து, ஒட்டு வேலைகள் செய்து புதிதாக ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள்.
இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே. இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி, கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய குறிப்புகள் இடம் பெறவில்லை; இவை திருத்தப் பட்டவை என்றார்.
அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர்,
திரு. ப. சிதம்பரம் அவர்கள்…. !!
கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணையம் உள்துறை அமைச்சகத்தை அழைத்துக் கேட்டது. திரு.ப.சிதம்பரம் கூண்டில் ஏறி, ‘ஆம், ஒரிஜினல் கோப்புகளை எவ்வளவு தேடியும் கிடைக்காததால், இருக்கின்ற தகவல்களை வைத்துக்கொண்டு கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்..
அதே போல், சந்திரசாமி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது, உளவுத்துறையால் இடைமறித்துக் கேட்கப்பட்ட உரையாடல்களைப் பதிவு செய்த கோப்பை பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர்.
இந்த தகவல், ஆதார அழிப்புகளுக்கு – என்ன காரணம் …..?
சந்திராசாமி வெறும் ஜோசியம் கூறும் சாமியார் மட்டுமல்ல…
தாந்த்ரீக வேலைகளுடன் அவர் நின்று விடவில்லை….
அவருடைய தொடர்புகள் வெறும் அரசியல்வாதிகளோடும்
நின்று விடவில்லை.
அகில உலக அளவில், நேரிடையாகவும், கள்ளத்தனமாகவும் கூட
ஆயுத பேர, வியாபாரங்களில் ஈடுபட்ட மிகப்பெரிய புள்ளிகளான
அட்னன் கஷொகி (Adnan Khashoggi) மற்றும்
என்ரி மில்லர் (Ernie Miller)
ஆகியோருடன் வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு –
கள்ள ஆயுத பேரங்களில் ஈடுபட்டிருந்தார். ( இந்த விஷயம்
பிற்பாடு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு எட்டு கோடி ரூபாய் அபராதம்
விதிக்கப்பட ஒரு காரணமாகவும் இருந்தது. )
அப்போதைய பிரதமரான நரசிம்ம ராவுக்கு இவர் குரு.
பல முக்கியமான விஷயங்களில் நம்பிக்கையான ஆலோசகர்…!
இருவருக்கும் 25 ஆண்டுக்கால நெருங்கிய பழக்கம்.
சந்திராசாமியின் வியாபாரங்களில் திருவாளர் சுப்ரமணியன் சுவாமிக்கு என்ன பங்கு, எந்த அளவிற்கு தொடர்பு – என்பது நமக்குத் தெரியாது.
ஆனால் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது
அனைவருக்கும் தெரிந்த உண்மை.
1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா என்பவர் ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி ‘Beyond the Tigers’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்திற்கு ராஜீவ் கொலை நடந்தபோது மத்திய புலனாய்வுத்துறையின் இயக்குனராக இருந்த விஜய்கரன் என்ற அதிகாரியே முன்னுரை எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, இதில் கூறப்படும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது..
அவர் தனது முன்னுரையில், இந்த புத்தகம் ஒரு
போலீஸ் டைரியைப் போல் இருப்பதாக குறிப்பிடுகிறார்.
போலீஸ் டைரியைப்போல் என்பதைவிட, போலீஸ் டைரியிலிருந்தே பல செய்திகள் அப்படியே பிரதி எடுக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது
என்று இந்த புத்தகத்தைப் பற்றிய விமரிசனங்கள் கூறுகின்றன.
எனவே, புலனாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியே
இந்த புத்தகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டிருப்பார்
என்றும் தோன்றுகிறது. இந்த புத்தகத்திற்கு பின் இணைப்புகளாக
தரப்பட்டுள்ள ஆவணங்கள் புலனாய்வுத் துறை
தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன….
இந்தப் புத்தகத்தின் முக்கிய கருத்து எப்படிப் போகிறது ……?
ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று
இந்த புத்தகம் கூறுகிறது. ஆனால், அந்தக் கொலைக்குப் பின்னால், சில சர்வதேச சக்திகள் இருந்தன.
அந்த சர்வதேச சக்திகளுக்காக
விடுதலைப் புலிகள் இந்தக் கொலையை செய்து முடித்துவிட்டு,
அதற்கு பிரதிபலன்களாக சக்தி வாய்ந்த கப்பல்களையும்
ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.
ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகுதான் புலிகளுக்கு
கப்பல்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வரத் தொடங்கின.
எனவே, இதனைச் செய்து முடித்தால், பெரிய அளவிலான
ஆயுத சப்ளைகள் செய்வதாகக்கூறி சில வெளிசக்திகள்
விடுதலைப் புலிகளை இதில் செயல்பட வைத்திருக்கின்றன
என்பதே இந்த புத்தகத்தின் மையக்கருத்து…!!
அந்த சர்வதேச சக்திகள் எவை …..?
சந்திராசாமிக்கு அதில் என்ன பங்கு ….?
ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த சமயத்தில், மத்தியில் பிரதமராக
ஆட்சி புரிந்தவர் சந்திரசேகர். அவரது அரசில், சட்ட அமைச்சராக
இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர் திரு.சுப்ரமணியன்சுவாமி.
கொலை நிகழ்ந்த நாளில், திருவாளர்கள் சந்திராசாமி,
சுப்ரமணியன் சுவாமி இருவரும் சென்னையில் தான் இருந்தார்கள்
என்று ஜெயின் கமிஷன் முன்பாக சாட்சியம் கூறப்படுகிறது…
ஆனால், இந்த விஷயங்களை மறைக்க பெரும் முயற்சிகள்
செய்யப்பட்டிருக்கின்றன.
(இந்த விவரங்கள் பின்னால் வருகின்றன…)
” File containing intercepted messages from foreign
intelligence agencies, said to be addressed to
Chandraswami and Janata Party president Subramanian
Swamy, destroyed by senior officials in the PMO. ”
எனவே, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணியன் சுவாமி
சம்பந்தப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டன என்று ‘அவுட் லுக்’
இதழ் ஆதாரங்களுடன் கூறுவது இந்த வழக்கை
எங்கே கொண்டு போய் விடுகிறது …..?
இது விஷயத்தில் தீவிரமாகத் தோண்ட ஆரம்பித்த ஜெயின் கமிஷனை முடக்குவதற்கான அனைத்து வேலைகளிலும் ராவ் அரசு இறங்கியது….
முதலில், நரசிம்ம ராவ் ஆசியுடன் முஷ்டாக் அஹ்மத் என்கிற
அட்ரஸ் இல்லாத வக்கீல் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில், ஜெயின் கமிஷனைக் கலைக்க வேண்டும் என்று ஒரு பெட்டிஷன் போட்டார். இது கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டவுடன் –
மத்திய அரசு வெளிப்படையாக சுப்ரீம் கோர்ட்டில் இதே விஷயத்திற்காக, ஒரு special leave petition (SLP) தாக்கல் செய்தது…..
(தொடருகிறது – பகுதி -4-ல் )
——————————————-
முந்தைய பகுதிகளுக்கு போக –
மோசடி மன்னர் …! ஆனால் தேசிய தலைவர் – பகுதி-1
மோசடி மன்னர் …! ஆனால் தேசிய தலைவர் – பகுதி-2
அடுத்து – பகுதி -4-ல் தொடர –





இன்றைய இடுகையிலிருந்து ஒரு ஸ்கூப் : ஹார்வார்டு பல்கலை முன் னாள் மாணவரை வழக்கில் சிக்கவைக்க முடிந்த அளவு முயன்றுவரும் புரபொசர் தாமதமாகவேணும் ராஜிவ் மரண விஷயத்தில் மாணவர் சாட்சியத்துக்கு ( தூசு தட்டப்பட்டால் ?) அஞ்சும் சூழ்நிலை.
அய்யா – இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லலாமே
நண்பர் திருவேங்கடம்,
உங்கள் பெரும்பாலான பின்னூட்டங்களில் ஒரு குழப்பத்தை
காண முடிகிறது. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை
சுலபமாக, எளிதாக மற்றவர்களுக்கு புரியும்படி சொல்லுவதில்லை.
வித்தியாசமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு நீங்கள்
எழுதுவது பெரும்பாலானோருக்கு புரிவதே இல்லை.
இந்த பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் சொல்ல வரும் செய்தி
எதாவது இருந்தால், அதை தெளிவாகச் சொல்லவும்.
அல்லது – உங்களுக்கு ஏதோ விஷயம் தெரியும் – ஆனால், அதை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை என்றால் –
அதைப்பற்றி இங்கு எழுதவேண்டிய அவசியமே இல்லை.
தயவுசெய்து ஒத்துழையுங்கள்…
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அய்யா … திருவேங்கடம் அவர்களே ….. நீங்கள் ஸ்கூப் : என்று கூறுவது ஹார்வார்டு பல்கலை முன் னாள் மாணவரை { அதாவது ப.சிதம்பரம் அவர்களை } வழக்கில் சிக்கவைக்க முடிந்த அளவு முயன்றுவரும் ப. சிதம்பரத்தின் புரபொசர் { சுப்ரமண்யன் சுவாமி அவர்கள் }தாமதமாகவேணும் ராஜிவ் மரண விஷயத்தில் மாணவர் சாட்சியத்துக்கு —-ப.சிதம்பரம் அவர்கள் சாட்சியம் சொன்னால் ( தூசு தட்டப்பட்டால் ?) சு.சுவாமி அவர்கள் { பயப்படும் சூழல் அதிகம் } அஞ்சும் சூழ்நிலை…. என்று தானே கூற வருகிறீர்கள் ….. ? ஏன் தலையை சுற்றி மூக்கை தொட முயற்சிக்கிறீர்கள் ….?
Thank u for catching the point. Only those who have earlier matters easy to understand.
Mr.Thiruvengadam,
//ஏன் தலையை சுற்றி மூக்கை தொட முயற்சிக்கிறீர்கள் ….?//
-Paamaran
//வித்தியாசமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு நீங்கள்
எழுதுவது பெரும்பாலானோருக்கு புரிவதே இல்லை.//
-k.m.
//அய்யா – இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லலாமே//
-Sampathkumar.K.
– Hope you understand these words also.
then why not you please acknowledge ?
// உயர் நீதிமன்றத்துக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிக்க உத்தரவு — சென்னை,
First Published : 31 October 2015 12:43 AM ஈஸ்ட் தினமணி செய்தி // ….. நீதி மன்றங்களுக்கும் — நீதிபதிகளுக்கும் ” மக்களால் எந்த அச்சுறுத்தலும் ” இல்லாத போது — மக்கள் பணம் மாதத்திற்கு இரண்டே முக்கால் கோடி செலவு என்பது ஏற்புடையதா ….? தற்போது தமிழகத்தில் சிலகாலமாக ஒரு புது ” டிரெண்ட் ” உருவாகியுள்ளது — அதாவது மேல்மட்ட அதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை ” தற்கொலை ” செய்துகொள்வதும் — முயற்சி செய்வதும் பெருகி வருகிறது — இதற்கு அவர்கள் எழுதி வைப்பதும் — வாட்ஸ்அப்பில் செய்தி பதிவு பண்ணுவதும் ஒரே குறிகோளாக ” மேலதிகாரிகளின் அழுத்தம் — டிரான்ஸ்பர் கொடுத்துவிட்டார்கள் — மற்றும் வேலை பளு ” என்றும் காரணம் கூறுவதை ஊடகங்கள் அரசின்மீது காரணம் காட்டி பிரபல படுத்தி முக்கிய செய்தியாகவும் — விவாதமாகவும் நடத்தி — மேலதிகாரிகள் கீழே உள்ளவர்களை வேலை வாங்க பயந்து — வேலைகள் முடங்கிபோக — என்ன காரணம் ….. ? காசுகொடுத்து சீட்வாங்கி படிக்கும் பலரும் — தகுதியில்லாமல் வேலையில் சேர்ந்த பலரும் செய்கின்ற ” கேலி கூத்தா ” இது ……? அய்யா … இதற்கு ஒருவிளக்கம் அளிப்பிர்களா …. ?
Dear Mr. Pamaran : while I was drafting my expressions in joining you, came across a FB posting , of course an old one, but has relevance even now. ( may be not related to your point ) Pl see : http://www.facebook.com/photo.php?fbid=253321914872154&set=a.119568094914204.1073741828.100005830423282&type=3&fref=nf. We as Tamilain need to feel sorry. The current situation in my opinion has 2 stages : In all Govt Offices which have finance dealings – the older people CONSIDER kickbacks are their Right. The Youngsters ( even if not willing ) either to.HARVEST the money which they paid for Appoinment OR to meet thei monthly mamools to their Higher ups enroute to political persons.By the by we should also note the feeling of some Legal professionals act in such a way that they are above the law of the land.
திரு காவிரிமைநதன் நீங்களும் சவுக்கு வழியில் உங்கள் பதிவுகளை விருப்பமுள்ளவர் களின் மின் அஞ்சலுக்கு அனுப்பலாமே
நண்ப klc mani,
ஒருமுறை நீங்கள் வேர்ட்ப்ரஸ் ப்ளாக்கில் follow கொடுத்துவிட்டீர்களானால், ஆட்டோமேடிக்காக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே புதுப்பதிவுகளையும், அதன் பின்னூட்டங்களையும் பெற்றுக்கொள்ள இயலுமே. தங்களுக்கு விருப்பமான ப்ளாக்கை தொடரவேண்டியவர்களுக்காக உள்ள வசதி இது.
மீண்டும் ஏன் பதிவர், விருப்பமில்லாத மற்றவர்களுக்கு அனுப்பவேண்டும்.? தங்கள் பின்னூட்டத்தின் கருத்து புரியவில்லை. இது எனக்கு மட்டும்தானா?
முக்கிய கட்டுரை கே.எம் ..
foot நோட்ஸ் இருந்தால் , அதாவது , செய்திகள் எந்த தளம் அல்லது புத்தகம் போன்ற தகவல்கள் இருந்தால் , மின் புத்தகமாக வெளி வரும் போது நன்றாக இருக்கும்