இன்று காலை – மோடிஜி தொலைகாட்சியில் – அமெரிக்காவில் –
( San Jose, California )
18,000 பேர் கொண்ட இந்திய சமூகத்திடையே இந்தியில்
உரையாடிக் கொண்டிருந்தார்….
முக்காலே மூணு வீசம் பேர் “இந்தி”யர்கள்.
அவர்களின் இடையிடையே ஆர்எஸ்எஸ்- பாஜக ஒருங்கிணைப்பாளர்
ராம் மாதவ்வால் பார்த்து பார்த்து – நாற்று நடப்பட்ட – பாஜகவினர்.
இரண்டு – மூன்று நிமிடத்திற்கு ஒருதடவை “மோதி”, “மோதி” என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
தலைவர் உச்சஸ்தாயியில் குரல் எழுப்புகிறார்…
” இவ்வளவு நாட்களாக இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருந்தது
என்பது உங்களுக்கு தெரியும்…
யாருடைய மகனோ- 100 கோடி, யாருடைய மகளோ -500 கோடி
யாருடைய மருமகனோ -1000 கோடி –
என்று கோடி கோடியாக பணம் பண்ணினார்கள்.”
நான் ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றன.
உங்கள் மத்தியில் நின்று கொண்டு கேட்கிறேன்….
” ஒரு ஊழல் புகார் உண்டா என் மீது…. ? ”
“Today I am in your midst,
is there any allegation of
corruption against me,”
he asked to wildly cheering
Indian community members.
– ராஜஸ்தானில் திருமதி வசுந்தரா ராஜே மீது,
அவரது புத்திர ரத்தினத்தின் மீது,
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் மீது,
மத்திய பிரதேச முதலமைச்சர் சௌஹான் மீது,
சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் மீது, …..
– கடந்த 3 மாதங்களாக எத்தனை புகார்கள் கூறப்பட்டன….
பாராளுமன்றமே ஸ்தம்பித்தது.
மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் பாழானது.
மோடிஜி வந்து பாராளுமன்றத்தில் இந்த ஊழல்களைப் பற்றி
விளக்கம் அளிக்க வேண்டுமென்று – எதிர்க்கட்சிகள் ரகளை செய்தன.
தலைவர் எட்டிக்கூட பார்க்கவில்லை.
வாயே திறக்கவில்லை.
( தேர்தல் பேரணிகளிலும், வெளிநாட்டு இந்தியர்களின் மத்தியிலும்
மட்டும் தான் பேசுவது என்று யார் மீதாவது சத்தியம் பண்ணி இருக்கிறார் போலிருக்கிறது….)
எந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாமல் ஒரு முழு
பாராளுமன்ற கூட்டமும் ஊழல் புகாரிலேயே வீணாகப் போனது.
ஆனால்- தலைவர் அமெரிக்காவில் -கலிபோர்னியாவில்
நின்று கொண்டு சவால் விட்டுக் கேட்கிறார் –
// நான் ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றன.
உங்கள் மத்தியில் நின்று கொண்டு கேட்கிறேன்….
” ஒரு ஊழல் புகார் உண்டா என் மீது…. ? “//
ஒரு பழமொழி நினைவிற்கு வந்தது –
” கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு
மதி வேண்டாவா ? “
ஆனால் – இங்கே அது applicable ஆகாது…..
தலைவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ….
தேர்ந்தெடுத்த அமெரிக்க ஆடியன்ஸ் தானே….?
ராம் மாதவ் தேர்ந்தெடுத்த ஆட்கள் இருக்கையில்
இவர் எதைச்சொன்னாலும் “மோதி” “மோதி” தான் பதில்….
என்பது இவருக்குத் தெரியாதா என்ன …?
நடத்துங்கள் மோடிஜி…….
இப்போதைக்கு உங்கள் காட்டில் மழை…அடைமழை……. பேய் மழை…..!
– பேய்க்கும் பேய்க்கும் சண்டை வரும் வரை …..!!! 🙂 🙂 🙂




A suitable analysis available in the current posting : http://www.facebook.com/voiceofsubash?fref=nf
பிங்குபாக்: அமெரிக்காவில் மோடிஜி ….. கேழ்வரகில் நெய் வடிகிறது ….!!! கேள்வி கேட்க யாருமில்லை …..! | Classic Tamil
அமெரிக்காவிலும் பிரியாணிக்குக் கூட்டம் சேர்க்கலாமா?
அங்கேயும் இந்தியர்கள் இருக்கிறார்கள்தானே நண்ப ஜோஹன்.
நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்… தெரியாத சில ரகசியங்கள்! : — இது இன்றைய தினமலர் செய்தியின் ஒரு பகுதி —— உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் ‘இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ” அவருக்கு ஒரு விஷயத்தை பற்றி மக்களிடம் எப்படி செய்தி சேர வேண்டும் என்பதில் தெளிந்த அறிவு உண்டு. ” // இளம் வயது முதலே ஊர் ஊராக பயணம் மேற்கொள்வதில் மோடிக்கு மிகுந்த ஆர்வம். எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே மோடியின் பயணம் அமைந்திருக்குமாம். அப்படி ராஜ்கோட் முதல் இமயமலை வரை மோடியின் இளம் வயது பயணம் அமைந்திருக்கிறது. சில காலம் இமயமலையில் சந்நியாசி வாழ்க்கை கூட மோடி வாழ்ந்திருக்கிறார். மோடி வெளிநாடுகளுக்கு ஏன் அடிக்கடி பறக்கிறார் என்பதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறதா? // —– ஓ … முன்பு இந்தியாவை சுற்றிவந்தார் …. இப்போது மக்கள் பணத்தில் உலகை சுற்றுகிறார் …. அவர் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது …. ஆனாலும் நமது ஊடகங்கள் 30 — வருடத்திற்கு பிறகு மோடிஜி தான் இங்கே செல்லும் பிரதமர் என்று பறை சாற்றுகின்றன …! // இந்தி பேச்செல்லாம் சரித்தான்.. ஆனால் எல்லா இந்தியர்களுக்கும் புரியும் என ஏன் நினைக்கிறார் மோடி?Read more at: http://tamil.oneindia.com/news/international/modi-takes-hindi-us-236591.html // என்று மற்றொரு பத்திரிக்கை கேள்வி கேட்கிறது …. அதில் ஒரு பகுதி : — சான்ஜோஸ்: பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் சரி, இன்று சாப் மையத்தில் இந்தியர்களிடையே உரையாற்றியபோதும் சரி முழுக்க முழுக்க இந்தியிலேயே பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் இந்திய மொழியில்தான் பேசினார். அதில் தவறே இல்லை. அழகாகவும் பேசினார், உருக்கமாகவும் பேசினார், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசினார். ஆனால் ஒரு விஷயம்தான் இடித்தது. அவரது கூட்டத்தில் ஐடி துறையைச் சேர்ந்த இந்தியர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். ஆனால் அத்தனை பேருக்கும் இந்தி தெரியும் என்று எப்படி முடிவு செய்தார் மோடி என்பதுதான் புரியவில்லை. இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள் என்று மோடி நினைத்து விட்டாரா? அப்படி நினைத்திருந்தால் அது சரியாக இருக்காதே.. காரணம், ஐடி துறையில் பணியாற்றுபவர்களில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள்தான் பெரும்பான்மையினர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அனைவருக்கும் பொதுவான மொழியில் அவர் பேசாமல் தனக்குத் தெரிந்த இந்தியில் மட்டும் அவர் பேசியது “இந்திய” என்ற வார்த்தைத்குப் பொருத்தமானதா என்றுதான் புரியவில்லை // . என்றும் தெரிவித்துள்ளது … !! அப்புறம் அய்யா … கூறியுள்ளதை போல கூச்சல் போட்டு வாழ்த்தாமல் வேறு என்ன செய்வார்கள் …. ? அதைவிட இவரது ஆட்சியில் செய்த திட்டங்களை பற்றி அடுக்கியது தான் ” ஹை லைட் ” நாமும் இந்த இந்தியாவில் தான் இருக்கிறோம் — நமக்கு ஒண்ணுமே தெரியல — அவர் நிறைவேற்றிய திட்டங்கள் பற்றி …. பாவமல்லவா நாம் ….?
Be patience……we have to wait for 5 years…. no other go…. why we are crying after we select on our own.
திரு .கா. மை . அவர்களே ….. ! தமிழ்நாட்டுல …… ” இருட்டுக்கடை அல்வா — வில்லிபுத்தூர் பால்கோவா — மதுரை ஜில் …. ஜில் ஜிகர்தண்டா — செக்கம்பட்டி ராமர் கடை டீ — சாப்பிடுவது — மழையில் நடந்து செல்வது — ஆட்டோ புட் போர்டில் நின்று செல்வது — சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டி காட்டுவது …. நூல் சுற்றுவது ….. மரத்தடியில் பஞ்சாயத்து போல உட்கார்ந்து பேசுவது —- மாணவர்கள் — விவசாயிகள் …… நெசவாளர்கள் போன்றவர்களோடு உரையாடுவது — மாணவர்களின் கேள்விக்கு அரசியல் பேச வரவில்லை என்று கோபத்துடன் கூறுவது ….. பென்னிக் குயிக் நினைவிடத்திற்கு செல்வது ” —- போன்ற என்னென்னவோ ” நமக்கு — நாமே ” என்று சொல்லி கொண்டு ஒருவர் தமிழ்நாட்டில் வலம் வருகிறார் போல தெரிகிறதே … அதை பற்றி … ?
நண்ப பாமரன்,
…. இன்னும் கொஞ்சம் முற்றட்டுமே…!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
aamama namma vazhkkam pola ADMK mattum Jalra adippom…
stalin too jalra to ADMK…. 🙂
ref: siddhardh abhimanyu’s comment and reference.
😀
but I like you, Jalra itself putting jalra to Anti-ADMK. !!!
அதைப்பற்றி இன்னும் சில நாட்களில் தகப்பனார் செக்வைப்பார், அல்லது லண்டன் சென்றிக்கும் தமையன் திரும்பி வந்து செக்வைப்பார் அதுவும் இல்லையென்றால் அட்டாக் ஏதாவது அட்டாக் வைக்கக்கூடும். ஓரிருநாட்களில் கத்தரி்க்காய் முற்றி சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
🙂 😀
நண்பர் டு டே அண்டு மி …! திரு .கா. மை. அவர்கள் கூறுவதை பார்த்தால் பாதிக்கும் மேலே முற்றிவிட்டது போல தெரிகிறது …நீங்கள் // ஓரிருநாட்களில் கத்தரி்க்காய் முற்றி சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். // என்று கூறியுள்ளிர்கள் ….. சந்தைக்கு வந்தபின் என்ன ஆகும் …. போணியாகுமா … இல்லை போண்டியாகுமா … ?
climax aha mukavaiye bondiyakkivida
oru thittam vaithiruppathaa
thanayan tharappililurunthu seithigal…
parppom
இப்போதே முற்றி விட்டது.
இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி சாலையில் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டபோது,
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மகளிர் சுய உதவிக்குழு பயிற்சியாளர்களுக்கு செல்போன் வழங்குவது பற்றிய அறிவிப்பு வெளியானது.
அறிவிப்பை கேள்விப்பட்டு கோபமான ஸ்டாலின்,
கூடி இருந்தவர்களிடம் கீழ்க்கண்ட கேள்விகளை
கேட்டிருக்கிறார் –
செல்போன் இல்லாதவர்கள் யாராவது
இப்போது உள்ளார்களா?
செல்போன் தயாரித்து வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா ஆட்சியில் நோக்கியா மூடப்பட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் தவிக்கின்றனர்.
செல்போன் கொடுக்கிறாரே, அதை சார்ஜ் செய்வதற்கு
மின்சாரம் கிடைக்கிறதா ?
இப்போது அறிவித்துள்ள இலவச செல்போன் திட்டத்தால் ஊழல் செய்ய வாய்ப்பு உள்ளது.
செல்போன் வழங்கும் ஜெயலலிதா தமது கைபேசி எண்ணையும் வழங்க வேண்டும்.
ரேஷன் பொருள் இல்லாதது உள்பட குறையை பெண்கள் தெரிவிக்க ஜெயலலிதா எண் தர வேண்டும்
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=151983
good. stalin-ukku tension eruvathuthaan avarathu tholviyin velippadu.
இதோ இன்னும் கொஞ்சம் –
முந்தைய ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ
சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம்
தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.dinamani.com/tamilnadu/2015/09/27
தெரிந்தோ, தெரியாமலோ—vaa.
ithanai varudangal avar coma-vilaa irunthaar.
– பேய்க்கும் பேய்க்கும் சண்டை வரும் வரை …..!!! ஹஹ்ஹா…… என்றைக்கு சு.ச களமிரங்கப்போகிறாரோ!!!!!!!!!
கே.எம்.சார்,
உங்களின் ” பேய்க்கும் பேய்க்கும் சண்டை ”
சூப்பர் கேட்ச் சார். எப்படித்தான் பிடித்தீர்களோ.
நினைக்கும்போதெல்லாம் சிரிப்பு வருகிறது.
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ராமானுஜரை தரிசித்தார்… ! ராமனுஜரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள ஆர்வம் – ஸ்டாலின்…? என்னமா நடிக்கிராருங்கோ … அப்பா ராமானுஜர் வாழ்க்கையை சீரியலாக கதை வசனம் எழுதி கலைஞர் டி .வி. யில் ஓலி பரப்புகிறார் ….. ஸ்டாலின் மனைவி கோவில் — கோவிலாக சென்று நேற்று பழனியாண்டவர் என்று சுற்றுகிறார் … என்னதான் ஆச்சு இந்த ” கலைஞர் குடும்பத்துக்கு ” …. ? பகுத்தறிவு — நாத்திகம் எல்லாம் பரணில் போடபட்டுவிட்டதா …? வீரமணி என்ன சொல்ல போகிறார் …? ஏன் இந்த மக்களை ஏமாற்றும் போக்கு … ? இந்த மாதிரியான செயல்களால் மக்கள் பழசை மறந்து விட்டு இவர்களை நம்புவார்கள் என்று நம்புகிறார்களா … ?
இரண்டாண்டுகள் முன்பு ஸ்டாலின் புட்டபர்த்தி சாய்பாபாவிடம் ஆசிவாங்கிய புகைப்படம்
இந்த வலைதளத்தில் வந்ததை பலர் பார்த்திருக்கலாம் .
Dear Dr.KGP,
Who? stalin.
Many photos are to release.
I am waiting to a posting on ‘stalin’ by KMJi.
😀
Reblogged this on chandhan.
மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.