சிதம்பரம்ஜி எப்போதுமே புத்திசாலிதான்-ஜி – ஆனால் நீங்கள் நழுவாமல் பதிலைச் சொல்லுங்கள் ரவிசங்கர்ஜி….!!!

p.c.interview

இரண்டு நாட்கள் முன்னதாக -லலித் மோடி விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர்
ப.சிதம்பரம் அவர்கள் எசகுபிசகான 7 கேள்விகளை எழுப்பி –
அதற்கான பதிலைச்சொல்லுமாறு மத்திய அரசை
கேட்டுக் கொண்டார். அவை –

1. இந்திய குடிமகனான லலித் மோடிக்கு இந்திய பாஸ்போர்ட்
இல்லாத நிலையில், அவர் இந்தியா திரும்ப அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறு மத்திய அரசு ஏன் அவரை
அறிவுறுத்தவில்லை?

2. மனிதாபிமான முறையில் ஒரு இந்தியரை பாதுகாக்க
வேண்டும் என நினைக்கும் மத்திய அரசு அவருக்கு தற்காலிக இந்திய பாஸ்போர்ட் வழங்க முன்வராமல் பிரிட்டன் பாஸ்போர்ட் பெற்றுத் தர முயற்சித்தது ஏன்?

3. பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள அவரை
இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை எடுத்த
நடவடிக்கைகள் என்ன?

4. பாஸ்போர்ட் முடக்கம் தொடர்பான வழக்கில் டில்லி உயர்
நீதிமன்றம் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லாதது ஏன்?
உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டாம் என்று
முடிவெடுத்தது யார் …?

5. ‘லலித் மோடிக்கு எதிராக சதி செய்தோம்’ என எங்கள் மீது
குற்றம்சாட்டப்படும் நிலையில் பிரிட்டன் அமைச்சருடன்
நான் நடத்திய கடித விவரங்களை வெளியிட மத்திய அரசு
தயக்கம் காட்டுவது ஏன்?

6. குற்றச்சாட்டுக்கு உள்ளான தனிநபரை காப்பாற்ற மத்திய அரசு விதிமீறி சலுகை காட்ட காரணம் என்ன?

7. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் மோடியின் பதில் என்ன?

அதற்குப் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை மத்திய
அமைச்சர் ரவிசங்கர்ஜி சந்தித்தபோது, செய்தியாளர்கள் –
சிதம்பரம் அவர்கள் எழுப்பிய கேள்விகள் குறித்து ரவிசங்கரின்
விளக்கத்தை கேட்டனர்.

பதில் சொல்ல முடியாமல் திணறிய ரவிசங்கர்ஜி –
“பதவி போன பிறகு சிதம்பரம்ஜி புத்திசாலி யாகி விட்டார்” என்று நக்கலடித்துவிட்டு பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.

ரவிசங்கர்ஜி’க்கு நாம் சொல்ல விரும்புவது-

சிதம்பரம்ஜி என்றுமே நிச்சயமாக உங்கள்
எல்லாரையும் விட புத்திசாலிதான்.

( அதை அவர் எப்போது, எப்படி, யாருக்கு –
சாதகமாக அல்லது பாதகமாக பயன்படுத்துகிறார்
என்பது தனி விஷயம் …!!)
அதைச் சொல்லி விட்டு, நீங்கள் தப்பி ஓட முயற்சிக்காதீர்கள். இன்றில்லா விட்டாலும், நாளை பாராளுமன்றத்தில் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டியிருக்கும்….!!!

அதற்குள்ளாக இன்னும் சில விவகாரங்கள் கூட
வெளிவந்து விட்டன –

lalit and raje

– ராஜஸ்தான் முதல்வர் திருமதி வசுந்தரா ராஜே –
லலித் மோடி லண்டனில் குடியேற – ஆதரவாக ரகசிய
பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது…..

– ஐபிஎல் போட்டிகளின்போது, மும்பையில்,
லலித் மோடியின் செலவில், 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியது.

– லலித் மோடியின் மனைவி சிகித்சை பெற்ற போர்ச்சுக்கல் மருத்துவ மனைக்கு, ராஜஸ்தானில் – மருத்துவமனை ஒன்றை துவங்க, எக்கச்சக்கமாக சலுகையில் நிலம் கொடுத்திருப்பது.

– திருமதி வசுந்தராவின் மகன், பாஜக பாராளுமன்ற உறுப்பினர் –
துஷ்யந்த் சிங்குக்கு, லலித் மோடியிடமிருந்து
11.5 கோடி ரூபாய் கருப்புப்பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பது.

——

2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நாடு முழுதும்
நடைபெற்ற 400 பேரணிகளில் கலந்து கொண்டபோது
நமது தலைவர் – மோடிஜி – மக்கள் முன்வைத்த
முக்கியமான ஒரு “மந்திரம்”

( இந்தியில் ) – ” நா காவூங்கா – நா கானே தூங்கா “

இதன் அர்த்தம் –

“நானும் சாப்பிட மாட்டேன் – மற்றவர்களையும்
சாப்பிட விட மாட்டேன் “

இப்போது ஏற்பட்டிருக்கும் அனுபவங்களின் அடிப்படையில்
இதில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது…..
எப்படி மாற்றலாம் ….?
நீங்கள் தான் சொல்லுங்களேன் நண்பர்களே…..!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to சிதம்பரம்ஜி எப்போதுமே புத்திசாலிதான்-ஜி – ஆனால் நீங்கள் நழுவாமல் பதிலைச் சொல்லுங்கள் ரவிசங்கர்ஜி….!!!

  1. Thiruvengadam (@veluran)'s avatar Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

    Octopus fear make the people run away to respond. The Episode will end only after the expected roaring (?) from the Lion .

  2. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    // நா காவூங்கா – நா கானே தூங்கா//

    உல்லல்லாயிக்குச் சொன்னது. சீரியஸ்னு நம்பிட்டீங்களே நண்பர்களே… 🙂

    பனைமரத்தில் பனங்காய்தான் காய்க்கும்.

    இந்த அரசமைப்பில் (அதிகார + ஆளும் வர்க்கக் கூட்டணி) (Government Workers + Party representatives) இது இப்படித்தான் நிகழும்.

    I would not say a “Party” is a representation of “People”. So we can not say they are People representatives.

  3. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    //The Episode will end only after the expected roaring (?) from the Lion .//
    அருணாச்சலம் படப் பாடல் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது!!

  4. வானரம்.'s avatar வானரம். சொல்கிறார்:

    நானும் பேச மாட்டேன் –

    மற்றவர்களையும் கண்(டு)டிக்க மாட்டேன் .

  5. சங்கர்லால்'s avatar சங்கர்லால் சொல்கிறார்:

    அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஒண்ணு கிடக்க ஒண்ணு உளறி ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்ளுவது கலைஞர் ஸ்டைல். வாராவாரம் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பேன் என்று சும்மாங்காட்டி சொல்லிவிட்டு அந்த பக்கமே திரும்பாத ஸ்டைல் புரட்சித்தலைவி ஸ்டைல். “எம்புட்டு நாளைக்கு கத்துவாங்க, ஒருநாள் ஓஞ்சிதானே போகனும்” என்று அம்மா நினைக்கிறார் போல. இந்த அம்மா ஸ்டைலைத்தான் காப்பி அடிக்கிறார் பாரத பிரதமர், இதையே ரவிசங்கர் பாபாவும் ஃபாலோ பண்ணுகிறார் போலிருக்கிறது.. இவர்களுக்கெல்லாம் ஒரு குரு இருந்தார் அவர்தான் நரசிம்மராவ்காரு. குருவே சரணம்!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் சங்கர்லால்,

      நல்ல ரசனை உங்களுக்கு….!
      நரசிம்ம ராவை சரியான நேரத்தில் நினைவுபடுத்தினீர்கள்…!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. Madhavan's avatar Madhavan சொல்கிறார்:

    நா காவூங்கா – நா Dekh-hoon-gha

  7. பிங்குபாக்: சிதம்பரம்ஜி எப்போதுமே புத்திசாலிதான்-ஜி – ஆனால் நீங்கள் நழுவாமல் பதிலைச் சொல்லுங்கள் ரவிசங்

  8. பிங்குபாக்: சிதம்பரம்ஜி எப்போதுமே புத்திசாலிதான்-ஜி – ஆனால் நீங்கள் நழுவாமல் பதிலைச் சொல்லுங்கள் ரவிசங்

  9. ravi's avatar ravi சொல்கிறார்:

    சிதம்பரம் ஜி .. எதற்கு வீண் வம்பு ..
    அடுத்து சஷி தரூர் , ராஜீவ் சுக்ல , ராகுல் , சோனியா , நளினி சிதம்பரம் என்று எதாவது கிளம்பும்…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ரவி,

      இருக்கட்டும்ஜி.
      அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொடுப்பதன் மூலமாவது
      நமக்கு நிறைய மர்மங்கள் தெரிய வருமல்லவா…?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  10. ravi's avatar ravi சொல்கிறார்:

    கே.எம் .. .. சாக்கடையை கிளறினால் ,, நாற்றம் தான் வரும் … ஆகவே கண்டிப்பாக அடங்கிவிடும் அல்லது அடக்கப்படும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.