“தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ?

sushma and modi in ipl

“தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால்
என்ன தவறு ? – என்று அடுத்து யாராவது கேட்டாலும்
கேட்கக்கூடும்…?

Enforcement Directorate -ன் அறிக்கையின்படி-
திருவாளர் லலித் குமார் மோடி அவர்களின் மீது 425 கோடி ரூபாய்
அந்நியச் செலாவணி மோசடிக் குற்றத்திற்கான விசாரணை
ஒன்று நிலுவையில் இருக்கிறது.

2009 ஐபிஎல் போட்டிகளின்போது நடைபெற்ற 90 கோடி ரூபாய்க்கான முறைகேடான ஒரு பணபரிவர்த்தனை பற்றி விசாரணை நடத்த அலுவலகத்திற்கு வருமாறு லலித் மோடிக்கு ED
கொடுத்த சம்மன் இன்னும் நிறைவேற்றப்படாமலே இருக்கிறது.

லலித் மோடி – எப்போது இந்தியாவிற்குள் நுழைந்தாலும்
கைது செய்யப்படுவார் என்று ED அதிகாரிகள்
தெரிவித்திருக்கின்றனர்.

லலித் மோடியின் இந்திய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு
விட்ட நிலை..

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ED விடுத்த பல
அழைப்புகளுக்கும் லலித் மோடி ஒத்துழைக்கவில்லை.

அவருக்கு எதிராக, இந்திய அரசின் முந்தைய
வேண்டுகோளின்படி, Interpol நிறுவனத்தால் blue corner notice
விடுவிக்கப்பட்டிருக்கிறது.

“இப்பேற்பட்ட தகுதிகள்” உடைய ஒருவருக்கு
போர்ச்சுக்கல் நாட்டிற்கு பயணிக்க விசா வழங்க உதவுமாறு
இந்திய கேபினட் அமைச்சர் ஒருவர் இங்கிலாந்து அரசுக்கு
பரிந்துரை செய்ய முடியுமானால் –

“தாவூத் இப்ராஹிம்” -க்கு விசா வழங்கி உதவிட வேண்டும்
என்று நாளையோ, மறுதினமோ – மத்திய அமைச்சர் யாராவது
வேண்டுகோள் விடுவித்தால் – அதில் அதிசயப்பட என்ன இருக்கிறது..?

– வெளியுறவுத்துறை அமைச்சரின் கணவர் – லலித் மோடியின்
வழக்குரைஞராக 22 ஆண்டுகளாக பணி புரிகிறார்.

அமைச்சரின் மகள், கடந்த 7 ஆண்டுகளாக – லலித் மோடியின்
வழக்குகளில், ஆஜராகி வாதாடி வருகிறார்
என்பதெல்லாம் உப காரணங்களாக இருக்கலாம்.

ஆனால் – மூல காரணம் என்ன …?
யாராவது சொல்வார்களா …?

——————–

பின் குறிப்பு –

ஆண்டவனைப்பற்றி சொல்வார்கள்…..
“கண்டவர்” விண்டதில்லை ( சொன்னதில்லை…)
“விண்டவர்” ( சொன்னவர் ) கண்டதில்லை – என்று.

உண்மைக் காரணம் என்னவென்று – ஒருவேளை
திரு.அருண் ஜெட்லி அவர்கள் வாயைத்திறந்தால்
தெரிய வரலாம்…!!!
ஆனால் – அவர் மோடிஜிக்கு எதிராக ( நான் நரேந்திர மோடிஜியைச் சொல்கிறேன் ….!!! ) வாயைத்திறக்க மாட்டாரே…..!!!

—————————————————————

பின் சேர்க்கை –

எப்பேற்பட்ட துக்கத்தில் இருக்கிறார்
மனிதாபிமான உதவி பெற்ற மனிதர் ….!!!

மனைவிக்கு கேன்சர் என்பதால், மனிதாபிமான
அடிப்படையில் உதவி செய்யப்பட்டதாக கூறப்பட்ட மனிதர்
நடிகைகளுடன், மாடல்களுடன் – பாரிஸ் ஹில்டனுடன் ஹோட்டலில் கூத்தடித்துக் கொண்டிருக்கும் சித்திரம் – லண்டன் செய்தித்தாள்களில் வெளிவந்திருக்கிறது –

lalit modi celebrating -1

lalit modi celebrating-2

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to “தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ?

  1. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. அவரவர்களுக்கு வேண்டப்படவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவார்கள். அதானி வரிசையில் இப்போது லலித் மோடி…
    இதற்கு சப்பைக்கட்டு பதில் வேறு…நாங்க ஆண்டெர்சன், குவாத்ரோச்சிக்கு செய்தது மாதிரியா செய்தோம் என்று. சாமானிய மக்கள்தான் மீண்டும் மீண்டும் ஏமாற்றபடுகிறார்கள்.

  2. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    The governments may change but the actions will remain the same for
    today, tomorrow and for ever in our beloved nation.
    That is NOT the bane of our country.
    It is because the leaders of our political parties are all alike .
    UTTERLY SELFISH

  3. Ramachandran. R.'s avatar Ramachandran. R. சொல்கிறார்:

    கே.எம்.சார்,
    வணக்கம்.

    அப்போ கீர்த்தி ஆஜாத் சொல்ற பாம்பு சமாச்சாரம்
    அருண் ஜெட்லி தானா ?

    மோடிஜி ஏன் இன்னும் வாயையே தெறக்கல்லைன்னு
    இப்ப தான் புரியுது.

    காங்கிரசுக்கு கொட்டராச்சி எங்களுக்கு லலித் மோடின்னு
    பாஜக காரங்களே ஒத்துக்கிட்டாங்க போல இருக்கே.

    எல்லாருமே திருடங்க தான். காங்கிரசுக்கும் பாஜக வுக்கும்
    எந்த வித்தியாசமும் இல்லை.

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    “இந்த போட்டோக்கள் லலித் மனைவிக்கு கேன்சர் வருவதற்கு முன் எடுக்கப்பட்டது” என்று ஒரு பின்னூட்டம் இன்னும் ஏன் வரவில்லை என்றுதான் எனக்கு புரியவில்லை!..ஒருத்தன் கொட்டங்கச்சி திருடன் என்றால் இன்னொருத்தன் தேங்காய திருடன்

    • R.Palanikumar's avatar R.Palanikumar சொல்கிறார்:

      ஒரு வேளை இப்படியும் வரலாம்..-“பாவமுங்க,லலித் மோடி.மனைவிக்கு கேன்சர் வராமல் இருந்திருந்தால்,இப்படி கண்ட அழகிகளோடு ஏன் கூத்தடிக்கப் போகிறார்?”

  5. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    Mr Ganpath,
    This hapless poor man is relaxing after the help on humanitarian
    grounds from the kind hearted benovelont government.
    After all the fugitives are lucky – they have the right people
    in right places like government and seven star hotels.

  6. பிங்குபாக்: “தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ? | Classic Tamil

  7. Taru's avatar Taru சொல்கிறார்:

    Afsalguru விற்கு செம்பு தூக்கிய வர்கள் பதிவு எழுதுவது வேடிக்கை. நாட்டை காட்டி கொடுத்த அவனை விட lalithmodi மனிதனே.

  8. Ramachandran. R.'s avatar Ramachandran. R. சொல்கிறார்:

    கண்பத் சார்,

    ஒரு நாய் நீண்ட நாட்களாக குலைக்காமல்
    இருந்தது. நீங்கள் சவுண்டு
    கொடுத்ததும் குரைக்க ஆரம்பித்து விட்டது.

    கே.எம்.சார்,

    கபோதிகள் போடும் பின்னூட்டங்களை
    எல்லாம் நீங்கள் ஏன் அனுமதிக்கிறீர்கள் ?
    இந்த ஆசாமியின் பின்னூட்டத்தை அனுமதிப்பதாக
    இருந்தால் எனக்கும் அதே மொழியில்
    எழுத அனுமதி கொடுங்கள்.

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      இங்கு சிலர் ஒரு விசித்திரமான மனப்பாங்குடன் பின்னூட்டம் இடுகிறார்கள்.மோடி செயல்களை விமரிசித்தால் நம்மை காங் ஆதரவாளர்கள் என்று முடிவு செய்கிறார்கள்.சோனியா மோடி இருவருமே நமது பாரதம் என்கிற காரின் டிரைவர்கள்.சோனியா ஓட்டுவது சரியில்லை என்று அவரை வேலைநீக்கம் செய்து மோடியை நியமித்தத்து நாம்.இப்போ அவர் ஓட்டுவதும் சற்று ஆபத்தாக இருக்கிறது என்றால் சோனியா இதைவிட மோசமாக ஒட்டவில்லையா என்றால் எப்படி?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ராமச்சந்திரன்,

      “டாரு” என்னைத்தானே தாக்குகிறார்….
      அவரால் நம் கருத்துக்களுக்கு
      பதில் சொல்ல முடியவில்லையே …
      விடுங்கள் ….
      அவரது தரம் ( ! ) எல்லாருக்கும் தெரியட்டும்…!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  9. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கொள்வது மனிதாபிமானம் இல்லையா?

    http://www.huffingtonpost.in/2015/06/14/read-the-emails-in-the-su_n_7579614.html

    சுனாமி பாஜகவின்
    பினாமி காங்கிரஸ்

  10. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    ஐயா சின்ன திருத்தம்.
    அவர் கூத்தடித்தது பாரிஸ் ஹில்டன் ஹோட்டலில் அல்ல. பாரிஸ் ஹில்டனுடன் ஹோட்டலில்.

    https://en.wikipedia.org/wiki/Paris_Hilton

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி எழில்…

      பிழை …..திருத்தப்பட்டு விட்டது…!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  11. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    முந்தைய ஆட்சியாளர்களின் ரகசியங்களை வெளியிடுவேன் என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக எனது தரப்பு கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன்……இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், சசி தரூர், முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பார்க்க வேண்டும்.
    சுஷ்மா ஸ்வராஜை பதவி விலகுமாறு கேட்கிறார்கள். ஆனால், இந்தச் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பலர் பதவி விலக நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்…. இது இன்றைய செய்தி ….. சரியான போட்டி ! எப்படியெல்லாம் மிரட்டி தப்பிக்க பார்க்கிறார் —- எங்கப்பன் குதிருக்குள் இல்லை — என்பதை போல — தானே வந்து சிக்க போகும் பல விஷயங்களை மக்கள் கண்டு —- ஜாலியா பொழுதை கழிப்பார்கள் !! வேறென்ன செய்ய போகிறார்கள் ?இதையெல்லாம்பார்க்கும்போது — ஜனநாயகம் பண முதலைகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மட்டும் சொந்தமல்ல என்று ஹிலாரி கிளிண்டன்…. கூறுவது ஏற்புடையதா ?

  12. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    ‘நம் பாரத நாடு லலித் மோடி, சசிதரூர் போன்றவர்களால் நிரம்பப்பெற்றது. லலித்துக்கு இந்த வயதில் எப்படி தொழிலதிபர் ஆகும் அளவு பணம் வந்தது என்பதைப்பார்த்தால் ஒரு ஆச்சரியமும் வராது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.