.
தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் இடுகை போட்டு
கட்டுப்படியாகவில்லை.
எனவே சில தலைப்புகளை ஒன்று சேர்த்து போடுகிறேன்…
எல்லாமே மோடிஜி ஆட்சிக்கு
பெருமை தரும் விஷயங்கள் தான் என்பதால்….!!!
புதிய தேர்தல் கமிஷனர் –
முன்னால் இருந்தவர்கள் ஓய்வு பெற்றதால் –
இரண்டு மத்திய தேர்தல் கமிஷனர் இடங்கள் காலி ஆகின.
ஒரு தேர்தல் கமிஷனர் இப்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
(இன்னொருவரும் விரைவில் நியமிக்கப்படுவார்- இதே தகுதிகளுடன் ஆளைத்
தேடிக்கொண்டிருக்கிறார்களாம் )
இப்போது நியமிக்கப்பட்டிருக்கிற திரு அசல் குமார் ஜ்யோதி –
அவர்களின் தகுதி –
இதற்கு முன்னால் , குஜராத்தில் மோடிஜி அவர்கள் முதலமைச்சராக
இருந்த போது, குஜராத் அரசின் தலைமைச்செயலாளராகவும்,
சர்தார் சரோவர் நர்மதா நிகாம் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டராகவும் –
2013-ல் பதவி ஓய்வு பெறும் வரை மோடிஜியின் நேரடித்தொடர்பில்
பணியாற்றி இருக்கிறார்.
———————–
குஜராத்தில் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் குடிநீர் தொட்டிகள்
கட்டி, சுவிட்ச் போட்டவுடன் தண்ணீர் வருகிற மாதிரியெல்லாம்
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பாராளுமன்ற தேர்தல் சமயத்தில்
பல செய்திகள் வந்தன….
11 வருட மோடிஜியின் ஆட்சிக்குப் பிறகு, தற்போது குஜராத்தில்
குடிநீர் தேடி அலைவோரின் சில புகைப்படங்கள் கீழே –
நேபாளத்திற்கு மோடிஜி அவர்களின் நேரடி மேற்பார்வை, மற்றும்
உத்திரவுகளின் பேரில் அற்புதமான உதவிகள் செய்யப்பட்டன
என்று பாஜகவினர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்….
தேவையான உதவிகள், சரியான நேரத்தில் போய்ச்சேர்ந்தன
என்பது உண்மை தான்.
ஆனால், குடம் பாலில் துளி விஷம் கலந்தது போல் –
சில அசிங்கங்கள் நிகழ்ந்து, அவை நேபாளத்தில் பத்திரிகைகளில்
பெரிய அளவில் செய்தியாக வெளியாகியுள்ளன –
அனுப்பப்பட்ட 1000 பாக்கெட் கோதுமை ப்ரெட்’டும்,
1000 கிலோ பராத்தா ( கோதுமை ரொட்டி ) வும் நாசமாகி
இருந்ததால், காட்மாண்டு விமான நிலையத்திலேயே அழிக்கப்பட்டனவாம்.
ப்ரெட் பாக்கெட்டுகள், இந்தியாவிலிருந்து அனுப்பும்போதே –
expiry date – ஐ தாண்டி இருந்தனவாம். அதே போல் பராத்தாக்கள்
பூஞ்சை பிடித்திருந்தனவாம்.
(இவற்றிற்கெல்லாம் மோடிஜியை குறை கூறுவது அபத்தம் –
அந்தச் செயலை நான் செய்ய மாட்டேன் – ஆனால்,
அவரது நிர்வாகத்திலும் அதிகாரிகள் எந்த அளவிற்கு பொறுப்புடன்
செயல்படுகிறார்கள் என்பதைத்தான் இங்கு சுட்டிக் காட்டுகிறேன் )







குஜராத் மக்கள் எப்படி இவருக்கு தொடர்ந்து வாக்கு அளித்தார்கள்.
இந்த உதவியை செய்யாமலேயே இருந்திருக்கலாம் கேட்டால் இந்தியாவின் பெயரைக் கெடுப்பதற்காக எதிர்க்கட்சிகளின் சதி செயல் என்பார்கள்.
நம் அதிகாரிகள் கட்சி சாயம் பூசி வெகு யுகங்களாகின்றன. அதனால்தான் சிலர் காங்கிரஸ் என்றும் சிலர் அதற்கு எதிரி என்றும் இனம் பிரிக்க முடிகிறது. காவிரிக்கும் தெரியும் நீரா ராடியா டேப்பில் வரும் தமிழ் அதிகாரியை. இதனை காங்கிரஸ் அனுதாபி அதிகாரி செய்திருக்கலாம். அல்லது வெட்டி அதிகாரி தன் வேலையைச் செய்யாமலிருந்திருக்கலாம். நேரப்படி அலுவலகத்துக்கு வரச் சொன்னதால், தில்லி அதிகார வர்க்கம் பாஜாகவுக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தது நினைவிலிருக்கலாம். தமிழகத்தில் அதே கதி ஜெவுக்கும் நிகழ்ந்தது.
பிங்குபாக்: உங்களுக்கு தெரியுமா – ஊசிப்போன பண்டங்களை நேபாளத்திற்கு அனுப்பியது ….? புதிய தேர்தல் கமிஷனரை ..?
காய்ச்சலுக்கு மாத்திரை, புண்ணுக்கு களிம்பு, காயத்திற்கு மருந்து என்று அவ்வப்போது கொடுத்து ஜனநாயகத்தை இன்னும் “உயிரோடு” வைத்திருக்கிறோம். உயிரோடு இருக்கிறதே தவிர, எழுந்து நிற்பதற்கு, அவ்வளவு ஏன் , பேசுவதற்கு கூட உடம்பில் தெம்பு இல்லை.
இதுதான் இப்போதைய இந்திய ஜனநாயகத்தின் நிலை.
மேற்புற புண்ணுக்கு களிம்பு கொடுத்து ( temporary treatment ) சரிசெய்கிறோமே தவிர, உள்ளிருக்கும் அடிப்படை நோய்களை சரி செய்யவில்லை.
இருக்கும் நோய்களை விரட்டவும், இனி நோய் வராமலிருக்கவும் ஒரேயொரு தடுப்பூசி தேவை. அதை, ( ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல ) சர்வதிகாரம் அல்லது மன்னராட்சி -யால் மட்டுமே வழங்க முடியும். இது போன்ற “ஒற்றை ஆட்சியாளர்” முறை ஒன்றும் நமக்கு புதிதல்ல, ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை நாம் அதில்தான் ஊறிக்கிடந்தோம். இப்பொழுதும் நம் உள்மனம் (நம்மையறியாமலே) அதைத்தான் விரும்புகிறது. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மோடி, MGR , NTR ,JJ , தற்போது அர்விந்த் கேஜ்ரிவால் இந்த வரிசையில் வந்தவர்கள்.
இவர்களெல்லாம் எதாவது செய்து இந்த அரசியலமைப்பை சரி செய்து விடுவார்கள் என்று நம்பித்தான், இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். இவர்களும் முடிந்தவரை சரி செய்தார்கள். ஆனால், மக்கள் எதிர் பார்த்த “பெரும் மாற்றத்தை” இவர்களால் கொடுக்க இயலவில்லை. அப்படிசெய்ய, இவர்களொன்றும் சர்வதிகாரி அல்லவே.
எல்லாம் சரி, அனால் தடுப்பூசி ஒழுங்காக வேலை செய்யாமல், இன்னும் மோசமாக்கி விட்டால் என்ன செய்வது? என்று நீங்கள் கேட்க கூடும்.
இதுவரை அப்படி நடந்ததை எல்லாம் (உதா., முசோலினி, இடி அமீன், போல் பாட் ) எப்படி மாற்றினார்களோ , அதே போல தடுப்பூசி ஒழுங்காக வேலை செய்யும் வரை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். வேறு வழி எனக்கு தெரியவில்லை
கே.எம் , இந்த படங்கள் , கிட்ட தட்ட 10 வருடங்களுக்கு முற்பட்டது. மேலும் கடைசி படம் , தில்லி நகரத்தின் பகுதி என்று வேறு தளத்தில் பார்த்ததாக நினைவு ..
http://phys.org/news/2013-03-india-million-states-drought.html
Dear KMji,
Happy to see the judgement in the most eagerly anticipated case, not because the
accused are released but there has to be a stricter and more inclusive law to apprehend
all the big sharks in the country for similar trials.