.
அண்மைக்காலங்களில் சில நண்பர்கள் – விமரிசனம் வலைத்தளத்தில்
வரும் செய்திகள் /இடுகைகள், அதிக அளவு மக்களுக்கு போய்ச்சேர
முயற்சிகள் செய்ய வேண்டும் என்று யோசனை கூறினார்கள்.
நண்பர் டுடேஅண்ட்மீ – இன்னும் ஒரு படி மேலே போய்,
ஒரு “மாதிரி நூல்” செய்தும் காட்டினார்.
விமரிசனம் தளத்தில் பல தரப்பட்ட இடுகைகள் வெளிவருகின்றன.
சில – அப்போதைய அரசியல் சூழ்நிலைகளை பிரதிபலித்து
எழுதப்படுபவை. அவற்றிற்கு ஆயுள் குறைவு.
ஆனால், சில இடுகைகள் – நிரந்தரமாக வைத்து படிக்கவும்,
பலருக்கு சென்று சேரக்கூடிய அளவில் செய்திகளும், தகவல்களும்
நிறைந்ததாகவும் இருக்கும். இதன் முக்கிய அம்சமே –
அந்த இடுகைகளுக்கு வாசக நண்பர்கள் எழுதிய “பின்னூட்டங்கள்” தான்.,
பல சமயங்களில், இடுகையைவிட, பின்னூட்டங்களில்
அதிக சாரமும், விருவிருப்பும், உயிரோட்டமும் நிறைந்திருக்கும்..
எனவே, இத்தகைய விருவிருப்பான பின்னூட்டங்களுடன் கூடிய,
சில முக்கியமான இடுகைகளை சில தலைப்புகளின் கீழ் தொகுத்து
மின்-நூலாக வெளியிடலாம் என்று தோன்றியது.
எனக்குள்ள கம்ப்யூட்டர் அறிவைப்பற்றி உங்களிடம் ஏற்கெனவே
நிறைய தடவை சொல்லி விட்டேன். இருந்தாலும், ஆர்வ மிகுதி
காரணமாக, அவ்வப்போது பலரை ஆலோசனை கேட்டு,
ஒரு வழியாக முதல் மின் நூலைத் தயாரித்து விட்டேன்.
பின்னர் freetamilebooks வலைத்தள நண்பர் ஸ்ரீநிவாசன் குழுவினரின் உதவியுடன் முதல் மின் நூல் நேற்று வெளியாகியும் விட்டது.
” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் “
இது தான் நூலின் தலைப்பு –
http://freetamilebooks.com/ebooks/innumthaniyavillaisughandirathagam/
தளத்திற்கு போனால், இலவசமாக தரவிறக்கம் செய்ய
முடிகிறது.
இப்படி உருப்படியாக சில வேலைகள் செய்வது மனதுக்கு நிறைவாக
இருக்கிறது. ( முதல் நன்றி – நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களுக்கு )
இனி – மேற்கொண்டு நூல்கள் வருவது உங்கள் அபிப்பிராயங்களைப்
பொறுத்து இருக்கிறது.
மேற்படி தளத்திற்குச் சென்று மின்-நூலை
பார்த்து / படித்து விட்டு, உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
அளிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.
நன்றியுடனும்,
வாழ்த்துக்களுடனும்,
காவிரிமைந்தன்
21 ஏப்ரல், 2015




link is not working .
Error code 500.
Check
நன்றி நண்பரே,
வெவ்வேறு விதங்களில் முயன்று கொண்டிருக்கிறேன்.
இப்போதைக்கு link ஐ எடுத்து விட்டேன்.
free tamil e book தளத்திற்கு
தனியே தான் சென்று பார்க்க வேண்டும்.
உங்களுக்கு எதாவது யோசனை தெரிந்தால் சொல்லுங்களேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
The link should be
http://freetamilebooks.com/ebooks/innumthaniyavillaisughandirathagam/
நண்பர் டுடேஅண்ட்மீ,
பதிவில் link ஐ மாற்றி விட்டேன்.
இப்போது நண்பர்கள் நேரடியாக தளத்திற்கு செல்ல உதவியாக இருக்கும்.
உங்கள் உதவிக்கு மிக மிக நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
வாழ்த்துக்கள் காவிரி மைந்தன் ஸார்! பதிவிறக்கம் செய்துகொண்டு படித்துப் பார்க்கிறேன்.
பதிவிறக்கி படித்தேன். நன்றாக இருக்கிறது.நன்றி.
மிக நல்ல முயற்சி, வாழ்த்துகள்.
Very good effort There are many readables in the website Youn spend the whole day I suppose – You can open the site by typing freetamilebooks.com It opens nicely –
ஆகா!… ஆகா!… அருமை ஐயா! கண்டிப்பாக இது பல காலத்துக்கும் பலருக்கும் பயன்படும் நடவடிக்கை. ஆனால், ஒரு சிறு கருத்து வேறுபாடு!
நீங்கள் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய பதிவுகளை மட்டும்தான் தொகுக்க எண்ணுகிறீர்கள். ஆனால், அவ்வப்பொழுதைய அரசியல், நாட்டு நடப்புப் பற்றிய பதிவுகளும் பயனுள்ளவையே. பிற்காலத்திய அரசியல் மாறுதல்களின்பொழுது அவற்றை நீங்கள் முன்கூட்டியே கூறியிருப்பது இதனால் அறியப்படும்; அதற்கேற்ப பயனுள்ள மாறுதல்கள் ஏற்படலாம் என்பது சிறுவனின் பணிவன்பான கருத்து. கண்டிப்பாக இன்றே தரவிறக்கிக் கொள்கிறேன்! இந்த நூலாக்க வெளியீடுகள் தொடரட்டும்! நன்றி!
Good job! Still we have to do something as to reach this to non-internet readers! Congratulations and good luck!
மிக்க மகிழ்ச்சி கா.மைஜி. என் பங்கு என்பது இதில் உங்களை மோட்டிவேட் செய்தது மட்டுமே. மற்றபடி தாங்கள் நன்றி கூறும்அளவுக்கு இன்னும் ஒன்றும் செய்யவில்லை என்பது என் கருத்து. இன்னமும்கூட நண்பர் சிவா சொல்லுவதுபோல நான்-இன்டர்நெட் மக்களைச் சென்றடையும் வழி என்ன என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் முன்னர் ஒருமுறை கூறியபடி தரவிறக்குபவர்கள் ஒரு பிரிண்ட்அவுட் ஆக எடுத்துவைத்துக்கொண்டு தான் படித்துவிட்டு வீட்டில் உள்ள மற்றவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ கொடுக்கலாம். இன்னும் என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளன என்று யோசிக்கலாம்.
நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் –
இந்த மின் நூலைப் பொருத்த வரையில் –
– நான் விளம்பரத்திற்கு ஆசைப்படவில்லை….
ஆனால், அதே நேரத்தில் –
இந்த நூலிலுள்ள செய்திகள் அதிக அளவு மக்களைச்சென்று
சேர வேண்டும் என்று விரும்புகிறேன்….. மற்ற சில நண்பர்களும்
இதே கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.
எனவே, தயவுசெய்து, நீங்கள் சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள்,
முகநூல் பக்கங்கள், கூகுள் + தளங்கள் எதுவாக இருந்தாலும் சரி,
இந்த நூல் பற்றியும், அதை இலவசமாக டவுன்லோடு செய்ய
http://freetamilebooks.com/ebooks/innumthaniyavillaisughandirathagam/
வலைத்தளத்தில் வசதிகள் இருப்பது பற்றியும் ஒரு குறிப்பு
கொடுங்களேன். இது செய்திகள் பரவ உதவியாக இருக்கும்.
நன்றி.
வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Nice work
மிகவும் அருமையாக வந்துள்ளது.காவிரிமைந்தன் &today.and.me க்கு மனமார்ந்த நன்றி + வாழ்த்துக்கள்.உங்கள் இருவரின் சிரத்தையும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.God Bless!.