.
” பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க
வேண்டாமென்று நான் பிரதமர் மோடிஜிக்கு சொல்லி இருக்கிறேன்.
“வேறு அழுத்தங்கள்” காரணமாக, அவர் வாங்குவதாக
முடிவு செய்தால் – நான் கோர்ட்டுக்குப் போக வேண்டி இருக்கும்”
– என்று சவால் விட்டார் சு.சுவாமி.
பாஜக தரப்பிலிருந்து யாரும் கண்டு கொள்ளவே இல்லை.
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பயங்கரமாக சு.சுவாமியை –
கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே ? ஏன் தயக்கம் ?
“பயந்தாங்குள்ளி” – மோடியை எதிர்க்கத் திராணி இல்லாதவர்
என்றெல்லாம் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.
இதிலிருந்து தப்ப அடுத்த கதையாக சு.சுவாமி சொல்கிறார் –
இவர் விமானம் வாங்குவது குறித்த பொது நல “வழக்கு மனு”வின்
வரைவு தயார் ஆனதும் –
அதை பாஜக தலைவர் அமீத் ஷாவிற்க்கு அனுப்புவாராம்…..
அவர் ஒப்புதல் கிடைத்ததும் மேற்கொண்டு தொடர்வாராம்….!!!
அதாவது, பாஜக பிரதமர் எடுத்த முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு
போக இவர் பாஜக தலைவர் அமீத் ஷா விடமே அனுமதி கேட்பாராம். அவர் கொடுத்ததும், இவர் கோர்ட்டுக்கு போவாராம்….!!!

ஒருவழியாக, கோர்ட்டுக்கு போகாமல் இருக்க
ஒரு வழி கண்டு பிடித்து விட்டார்…சு.சுவாமி. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக –
” எங்க அத்தைக்கு மீசை முளைத்ததும் நிச்சயம்
அவரை சித்தப்பா என்று தான் கூப்பிடுவேன்” என்கிறார்.
“சுவாமி” ன்னா – சுவாமி தான் …அவரை “பீட்” பண்ண
யார் இருக்கிறார்கள் ….!!! நம்ம கவுண்டமணி சாரை யாராவது replace பண்ண முடியுமா என்ன ..???




அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா….
modi rocks!
இதைத்தவிற வேறு என்னத்த சொல்ல!
வெள்ளிதிரையில நம்ம கவுண்டமணிய யாராலும் நெருங்க முடியாதுப்போய்…
பார்த்தா இன்னைக்கும் சிரிப்புல வரும். தென்னகத்தின் திரைவுலக சின்னங்கய்யா, ராமராஜனும் & கவுண்டமணியும்.
விதவிதமா எத்தன படம் (ஒரு ஆச்சரியகுறி போட்டுகிறேன்) !
ஐயா தலைப்புடன் நிறுத்திக் கொண்டு விட்டார். வேறு சிலவற்றையும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ ஒழிப்பது.அதை நடைமுறைப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப் போவதாக……………..
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ராமர் கோயில் பிரச்னையைக் கையில் எடுக்க உள்ளதாக…………
இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்துவதற்காக விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற புதிய இந்துமதவாத அமைப்பை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி தொடங்கியுள்ளார்.
இந்து பாரம்பரியத்தை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம்களுக்கும் இந்த அமைப்பில் இடம் உண்டு.(அதாவது மதமாற்றம்) இது விரைவில் செயல்பட உள்ளதாக…………..
சமீபத்தில் அறிவித்துள்ளார்.
………….
இது தவிர முஸ்லீம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்ற பங்காளிக் கட்சி சொன்னதற்கு பாஜக தலைமை கண்டிக்கவில்லை.
முஸ்லீம்-கிறிஸ்தவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடும்,இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற பங்காளிக் கட்சியின் பேச்சை கண்டிக்கவில்லை தலைமை.
…………..
எங்கே இந்தியா செல்கிறது என்று புரியவில்லை.
நேற்றைய கருத்தில் சொல்ல மறந்ததை………………
today and me அடிக்கடி குறிப்பிடுவது போல் வயது பற்றி மெல்லச் சொல்லி இருந்தாரோ என்ற சந்தேகம்? தமிழ் புது வருடம் -மறைமலை அடிகள் பற்றி சொல்லும் போது மறைமலை அடிகளுக்கு முந்தியவன் என்று குறிப்பிட்டிருந்தார். மறைமலை அடிகள்+கி ஆ பே +திருவிக போன்ற அறிஞர்களின் ஆய்வு மாநாடு 1921 இல் பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது. அப்போது ஐயா அவர்கள் பிறந்திருக்க முடியாது.
தயவு செய்து இனிமேல் வேண்டாம் இந்த வயதுப் பிரச்சனை. வேண்டவே வேண்டாம்.
முதல் கால் நூற்றாண்டை முடித்துக் கொண்ட என் வயதில் இருப்பதாக எண்ணித் தொடரவும். உடலுக்கு மட்டுமே வயது. சிந்தனைக்குக் கிடையாது.
நண்பர் சக்தி,
வயது பற்றி ……தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.
நான் சொல்ல வந்தது என் வயது பற்றி அல்ல.
புது வருடப்பிறப்பு பற்றிய என் கருத்து குறித்தது.
– புது வருடம் பிறப்பது சித்திரையில் அல்ல –
தை முதல் நாள் தான் என்பது குறித்து பெரியவர்கள்
முடிவெடுத்தார்களே – 1921-ல்…..
நான் அதற்கு முன் நிலவிய சிந்தனையில் உள்ளவன்
என்று சொல்ல வந்தேன்… அவ்வளவே…!
கிடக்கிறது விடுங்கள்.
நீங்கள் சொல்லிய மற்ற கருத்துக்கள் குறித்து –
இன்றைய இடுகையே அது குறித்து தான்….
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
//நம்ம கவுண்டமணி சாரை யாராவது replace பண்ண முடியுமா என்ன ..???//
இது கவுண்டமணி ரசிகர்களுக்காக:
போதுண்டா சாமி, ரீலு அந்து போச்சு
இப்புடிஒரு சம்பவம் நடந்ததையோ இதுல நா கேசு போடுரேன்னு சொன்னதையோ நீங்களும் மறந்துடுங்க. நானும் மறந்துடுறேன்.
Many a times Dr Swamy’s words are not taken seriously by majority
of the readers. Hence it may be prudent not to give too much
Importance and publicity to his cameo utterings. His actions behind
the scenes are more dangerous than his words.
Dr.KGP,
I agree with you. We are to worry seriously
about his dangerous actions – more than what he utters…
with best wishes,
Kavirimainthan
Dear sir,
You are wrong. Susa has many fans in north India. These fans believe him 100000%.
அவருடைய ட்வீட் நல்ல நோக்கத்தில் செய்யப்பட்டதல்ல. அதுவும் தலை வெளினாட்டில் இருக்கும்போது. இதற்கு ஏதாகிலும் காரணம் இருக்கும். சுவாமியின் ‘நோக்கமும் பெரும்பாலான செயல்களின் காரணமும் சந்தேகத்திற்கு உரியவை.
நம் பிரதமரோ “செப்பு மொழி பதினெட்டுடையாள் ஆயின் சிந்தனை ஒன்றுடையாள்!” என்று இருக்கிறார். 😉
சுவாமி தீடடிய மரத்சுதிலேயே கூர் பார்க்க நினைப்பது