.
ஆந்திராவில் மரம்வெட்டச் சென்ற 20 கூலித்தொழிலாளர்களை
“என்கவுண்டர்” என்று சொல்லி சுட்டுக்கொன்ற படுபாதகம்
நடைபெற்ற பின்னணிகளைப் பற்றி நிறைய தகவல்கள்
வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆந்திராவின் புகழ்பெற்ற “செம்மர கடத்தல் மாபியா” தலைவன்
கெங்காரெட்டியின் குழுவினரால் –
தன் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்னும்
அச்சத்தால், நாயுடுகாரு – காவல் துறை அதிகாரி ராவ்காரு-வுக்கு
கொடுத்த உத்திரவு தான் இந்த 20 தமிழர்களின் படுகொலைக்கு
அடிப்படையான காரணம் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
இறந்தவர்களின் உடல்களை குளோசப் புகைப்படங்களில்
பார்த்தால் – உடலின் சில பாகங்களில் தீயிட்டு கருக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
ஏற்கெனவே போலீஸ் கஸ்டடியில் எடுத்து, அவர்களைச்
சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றிருப்பது வெளிப்படையாகவே
தெரிய வருகிறது.
காட்டில் வேட்டையாடப்பட்ட மிருகங்களை, மரக்கட்டைகளில்
கட்டித் தூக்கி வருவது போல் – அப்பாவித் தமிழர்களை கட்டி,
தூக்கி வரும் காட்சிகளை புகைப்படங்களில் பார்க்கும்போதே
கொதிக்கிறது.
அதிக கூலிக்கு ஆசைப்பட்டு – போகக்கூடாத இடத்திற்கு போய்
மரம் வெட்டினார்கள் என்பதைத்தவிர வேறு என்ன பாவம்
செய்தார்கள் இவர்கள்…? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா ?
கடத்தல் மாபியா தலைவர்களையும், பெரும்பணம் ஈட்டிய
போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளையும் சுதந்திரமாகத் திரிய
விட்டு விட்டு-
கூலித்தொழிலாளர்களை வேட்டையாடுவது எந்த விதத்தில்
நியாயம் ? இதுவும் ஒரு ஜனநாயக நாடா ?
இது வரை, நாயுடுகாருவோ, ஆந்திர அரசோ எந்தவித
வருத்தமும் தெரிவிக்கவில்லை. மாறாக அனைத்து விதங்களிலும்
கொலையை நியாயப்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மத்திய அரசு – ரிப்போர்ட் கேட்டதைத்தவிர வேறு
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – எடுக்காது….
கூட்டாளி ஆயிற்றே…!
மனித உரிமை அமைப்புகள் தீவிரமாகவும், தொடர்ந்தும்
இந்த படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணங்கள்
கிடைக்கவும் செயல்பட வேண்டும்.
பொது மக்கள் – தொடர்ந்து இந்த விஷயத்தில் அழுத்தம்
கொடுத்து நியாயம் கிடைக்கப் போராட வேண்டும்.










Very sad to read this news!
Reblogged this on மழைத்துளி!!!!! and commented:
நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?
நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?
again my why? question sir.
yogi
இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் ஆந்திர சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். இதுவரை 28 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் நிலங்கள் பறிக்கப்பட்டன. வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.
சென்னைக்கு 160 கி.மீ. தொலைவில் நடைபெறும் இச்சம்பவங்களை தடுக்க முடியாமலோ, போதிய தீவிரம் காட்டாமலோ தமிழகம் இருப்பதற்குக் காரணம் என்ன?
ஏழைக் கூலிகள் என்பதாலா?
சிங்கங்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள ஆடுகள் ஆயுதங்களையேந்த வேண்டிய நிலையில் இருக்கிறோமோ?
பதிவுக்குத் தொடர்பில்லாத கேள்வி:
காவிரிமைந்தன் ஐயா! எனக்கும் மேற்படி நிகழ்ச்சியைப் பார்த்ததும் வயிறு எரிந்தது, குருதி கொந்தளித்தது. ஆனால், ஒரு விதயம் நீதிமன்றத்தில் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டால், அதன் பிறகு அதைப் பற்றிப் பொதுவெளியில் பேசக்கூடாது, கருத்துத் தெரிவிக்கக்கூடாது எனவெல்லாம் கூறப்படுவதால் இப்படிப்பட்ட விதயங்களை எழுதக் கொஞ்சம் தயக்கமாக உள்ளது. ஆனால், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் எழுதாலாமா? எனில், எப்படி எழுத வேண்டும்? இது பற்றித் தாங்கள் வழிகாட்டல் பதிவு ஒன்றை எழுதினால், என்னைப் போன்ற ஏராளமானோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதவுவீர்களா?
நண்பர் .ஞானப்பிரகாசன்,
சிக்கலான கேள்வியைக் கேட்கிறீர்களே ..! இந்த குறிப்பிட்ட
இடுகையில் அப்படிப்பட்ட ‘விவகாரங்கள்’ எதுவுமில்லை.
ஆனாலும், சில சமயங்களில் நாம் சொல்ல விரும்புவதையும்
சொல்ல வேண்டும் ஆனால் சட்ட வரம்பையும் மீறக்கூடாது
என்கிற சூழ்நிலைகள் வரத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட
சமயங்களில், உள்ளே நுழையும்போதே, தப்பிப்பதற்கான
பொந்துகளை பார்த்துக்கொண்டு அல்லது உருவாக்கிக் கொண்டு
தான் நுழைய வேண்டும்.
இது அனுபவத்தால் தான் கைகூடும். சொல்லிக்கொடுப்பது
சுலபமல்ல. எனக்கு அந்த அளவு திறன் போதாது. வேண்டாம் –
நீங்கள் எப்போதும் போலவே எழுதுங்களேன்….
இன்னும் அனுபவம் கைகூடட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஆகட்டும் ஐயா! நன்றி!
//இந்த குறிப்பிட்ட இடுகையில் அப்படிப்பட்ட ‘விவகாரங்கள்’ எதுவுமில்லை// – இது தொடர்பான வழக்கு ஒன்று ஆந்திர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நடந்த இந்தக் கொடுமைக்கு நீதி கோரி ‘நாம் தமிழர்’ தலைவர் சீமான் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதாகவும் தொலைக்காட்சியில் பார்த்தேன் ஐயா! அதனால்தான் கேட்டேன்.
தெரிந்தவரையில்,
எப்பொழுதும் மேற்கோள் காட்டி எழுதுவது அவருக்கு கைவந்த கலை. குறிப்பாக தன்னுடைய கண்ணோட்டத்தை தீங்கின்றி கலப்பது.
புரிந்தவரையில்,
இப்பொழுது கொஞ்சம் எடுத்துக் கொடுத்த மாதிரி இருந்தாலும், கடைசியில் நன்மையில் தான் முடியும்.
நண்பரே (divmee ),
இப்படி யாருக்கும் புரியாதபடி எழுதுவது உங்களுக்கே
நன்றாக இருக்கிறதா ? இன்னும் கொஞ்சம் விளக்கமாக
எழுத முயற்சி பண்ணுங்களேன்..!
(என்னை திட்ட வேண்டுமென்று நினைத்தால்
கூடப் பரவாயில்லை. என்ன சொல்லித் திட்டுகிறீர்கள்
என்று எனக்கு புரிய வேண்டுமல்லவா ..!)
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
வேதனையாக இருக்கிறது.